Skip to main content

ஆடுவோம்...பாடுவோம்...கொண்டாடுவோம்!





















எல்லா ஆர்ப்பாட்டங்களும், கூச்சல்களும், சந்தோசங்களும்....ஒழிந்த பின் கிடைக்கும் வெறுமை அசாத்தியமனது. நிறைய கூடி, நிறைய கழித்து அந்த ஆர்ப்பாட்டம் அடங்கும் தருணங்களில் சுவைக்கும் நிசப்தத்தையும் அமைதியையும் சுவைத்து பார்த்து இருக்கிறீர்களா?

வெறுமனே இருக்கும் பொழுதுகளை விட கொண்டாட்டங்கள் மிக முக்கியம் வாய்ந்தன. நமது கலாச்சாரத்தில்... நமது கலாச்சாரம் என்று மட்டுப்படுத்துவது கூட அறிவீனம்தான்...ஒட்டு மொத்த மனித இனத்திற்குமே கொண்டாட்டங்களும், கூத்தும் கேளிக்கைகளும் அத்யாவசியமானதின் அவசியமென்ன? விருந்தினர்களால் நிரம்பி இருக்கும்
நமது வீடு அவர்கள் எல்லாம் கிளம்பிப் போனபின் எப்படியிருக்கும்.....வெறுமையாய் இருக்குமல்லவா?

பல நேரங்களில் கொண்ட்டாங்கள் பற்றிய கற்பனையிலேயே அந்த வெற்றிடத்தை சுவைக்க மறந்திருப்போம்...சரியா? ஒரு விருந்து, ஒரு விழா...ஒரு கூட்டம், ஒரு கேளிக்கை, நடந்து முடிந்த கிடைக்கு அமைதிதான் முதற்பொருளாய் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த முதற் பொருளின் பொருட்டுதான் எல்லா மனித அவசியங்களும் ஏற்பட்டிருக்க வேண்டும். இங்கே மிகைப்பட்ட பேரை நட்பாயும் உறாவாயும் கொண்டவர்களுக்கு....பிரிவு ஒன்று வந்துதானே ஆக வேண்டும்....?

காலமெல்லாம், பிரிவையும் இறப்பையும், இழத்தலையும் அடுத்த நிகழ்வின் தொடக்கமாய் கொள்ளாமல் அவற்றை கடந்த காலத்தோடு தொடர்பு படுத்தி அந்த நினைவுகளிலேயே அந்த, அந்த தருணங்களின் சந்தோசங்கள் மனிதனால் காலமெல்லாம் தொலைக்கப்பட்டு வந்து இருக்கின்றன. ஓ...அப்படியானால் கடந்த காலத்தை பற்றி நினைக்கவே கூடாதா என்று யாரோ கேட்பது எனக்கும் கேட்கிறது....! ஒரு வேளை உங்களின் நிகழ்காலத்தோடு கடந்த காலம் தொடர்புடையது என்றால் கடந்த காலத்தை நினைவில் கொண்டு வருவதில் தப்பேதும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

மனிதமனம் மீண்டும் மீண்டும் கேளிக்கைகளையும், சந்தோசத்தையும் கூட்டத்தையும் விரும்புவதற்கு உண்மையான காரணம் அதற்கு பிறகு கிடைக்கும் வெறுமையை சுவைக்கத்தான். ஆனால் ஏன் நிகழ்கிறது....? ஒவ்வொரு நிகழ்விற்கும் பிறகு அந்த நிசப்தத்தை யாரும் கவனிப்பதில்லை. மீண்டும் அந்த சந்தோசம், மகிழ்ச்சி நோக்கி பயணிக்கவே விரும்புகிறார்கள்....ஆனால் அந்த விருப்பம் அடுத்த முறையாவது அந்த கேளிக்கைகளுக்குப் பிறகு... கிடைக்கும் நிசப்தத்தையும் அமைதியையும் சுவைக்க முடியுமா என்ற மறைமுக விருப்பம்தான்.

ஒரு மதிய நேரத்தூக்கத்திற்கு பிறகு ஒரு நாள் மாலை 4 மணிக்கு எழுந்தேன். ஏதோ ஒன்றுமே இல்லாதது போல ஒரு உணர்வு இருந்தது மெல்லிய சோகம் ஒன்று என்னுள் குடி கொண்டிருந்தது போல உணர்ந்தேன். அதை இடைவிடாது தொடர்ந்து கவனிக்க கவனிக்க அது சோகம்....!எல்லாவற்றிலும் இருந்து பகல் நேரத்தில் விடுபட்டிருந்த மனம் சட்டென்று இயங்கமுடியாமால் என்னையே பார்த்துக் கொண்டு இருந்ததை உணர்ந்தேன்.......

நான் மனதைப் பார்க்க, மனம் என்னைப் பார்க்க...மூன்றாவது ஒரு விசயம் ஏதும் இன்றி ஒரு வித சோம்பலோடு கூடிய நிசப்தம் இருந்தது. அது மனதோடு பழக்கப்படாததாய் இருந்ததால்....எப்போதும் வேறு ஒன்றின் தொடர்பிலேயே இருந்து பழக்கப்பட்டு இருந்ததால்..அதனை சோகம் என்றும், யாருமில்லை உன்னோடு என்றும் என்னிடம் விவரித்த மனம் அந்த சூழலின் அர்த்தம் விளங்காமல் மெல்லிய சோகத்தை படரவிட்டு என்னை ஏமாற்றியதைக் கண்டறிந்தேன்.

மனதின் குரலை சட்டை செய்யாமல் அந்த நேரத்தை நீட்டித்து நீட்டித்து....அந்த நான் மட்டும் இருந்த நிலையை...அணு அணுவாய் பருகத்தொடங்கினேன்.....ரசித்து ரசித்து.....சுவைத்து சுவைத்து நீண்டு கொண்டிருந்த நிமிடங்கள் மணி ஆனது. அப்படிப்பட்ட தருணங்களை விட்டு வெளிவரும் போது .....மூன்றாவது விசயத்தோடு, பொருளோடு, அல்லது மனித மனதோடு தொடர்பு கொள்ளும் தருணஙகலில் மனம் மிகவும் உற்சாகமாயும், வேகமாயும் புரிதலோடும், இன்னும் நேர்த்தியாகவும் தொடர்பு கொள்ளும் விசயத்தையும் கவனித்தேன். எங்கே இருந்து கிடைத்தது....இந்த துள்லலும் உற்சாகமும்....? அந்த வெறுமையில் இருந்து..... எங்கே இருந்து கிடைத்தது வெறுமை....? கூடிக் களித்ததில் இருந்து......

"உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்''

வள்ளுவனின் வாக்கின்படி உள்ளப் பிரிதலில் ஒரு சுகம் இருந்திருக்க வெண்டும் அதனால் தான் கற்றறிந்த (கல்வி - அனுபவக்கல்வி அல்லது இறக்கும் வரை படிக்கும் பாடங்கள்) புலவர்கள் உவப்ப, உவப்ப தலைகூடி விட்டு அதாவாது முதலில் சொன்னேனே....அந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனக் களித்துவிட்டு..... நிறைய பேறை சந்தித்து மகிழ்ந்து பின் ............அந்த நினைவுகளை நெஞ்சில் தேக்கி.....வெறுமையை உணரத்தான்...உள்ளப் பிரிகிறார்.....

வாழ்க்கையை ....ஆடுவோம்.....பாடுவோம்...கொண்டாடுவோம்...........கொண்டாடி திளைத்து....அதன் எச்சமாய் இறுதியில் கிடைக்கும் நிறைவென்னும் வெறுமையையும் சுவைத்து சுவைத்து... நிசப்தமாக தொடரட்டும் கொண்டாட்டம்... தொடர்ந்து தொடர்ந்து...தொடர்ந்து கொண்டிருக்கும் பேரமைதியின் இரைச்சலில் கரைத்துக் கொள்வோம்..............!


தேவா. S

Comments

கூடிக்களித்த பின் வரக்கூடிய நிசப்தத்தை நானும் உணர்ந்திருக்கேன். அந்த அனுபவத்த மனசு ஏத்துக்காது. திடீர்னு எதுவுமே இல்லாம போன மாதிரி இருக்கும். ஆனா அதுக்குள்ள புகுந்து வெளிவர்ரத இப்போதான் பாக்குறேன்.
நினைவுகளை நெஞ்சில் தேக்கி வாழ்க்கையை ....ஆடுவோம்.....பாடுவோம்...கொண்டாடுவோம்....
மனிதமனம் மீண்டும் மீண்டும் கேளிக்கைகளையும், சந்தோசத்தையும் கூட்டத்தையும் விரும்புவதற்கு உண்மையான காரணம் அதற்கு பிறகு கிடைக்கும் வெறுமையை சுவைக்கத்தான்//

உண்மைதான் அண்ணா

வாழ்க்கையை ....ஆடுவோம்.....பாடுவோம்...கொண்டாடுவோம்...........
வாழ்க்கை வளம் படுத்தும் கருத்துக்கள் கலக்கல்.
//வாழ்க்கையை ஆடுவோம்.....பாடுவோம்...கொண்டாடுவோம்.......//

அருமையான வரிகள்.
எப்படி மாம்சு இப்பல்லாம் உங்களால எழுத முடியுது.

ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிந்து அதற்கு பின் ஏற்படும் வெறுமை எனக்கு சுத்தமாக பிடிக்காது. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல என்பதை நமக்கும் சொல்லும் ஒரு நிகழ்வாகவே எனக்கு தோன்றுகிறது. இதனாலேயே அதிக சந்தோசம், அதிக துக்கம் இர்ண்டையும் ஒரேமாதிரியாக பார்க்கிறேன்.
வாழ்க்கை வளம் படுத்தும் கருத்துக்கள்.
vasu balaji said…
நல்ல பகுந்தாய்வு:)
உண்மை தேவா அண்ணா! அமைதியும் ஒரு சுகம்தான், கொண்டாட்டங்களிலும் சோகத்திலும் கூட...
கொண்டாட்டம் கொண்டாட்டம்னு சொல்றீங்களே அது அர்ஜுன் நடிச்ச படம்தான...
Ramesh said…
வித்தியாசமாய் நல்லதொர ஆய்வு. அருமை.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.....
Jey said…
ரொம்ப யோசிக்கிறேங்க, தேவா :)

நாம எல்லொரும் கடந்துவந்த ஒரு நிகழ்வை அழகா வெளிபடுத்தியிருகீங்க.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...நச் கொண்டாட்டம்
தோல்வியிலும் சந்தோசம் கான்பவனாகவும் இருக்கவேண்டும்...அபோழுதே எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம் வரும்....நல்ல பதிவு வாழ்த்துகள்
அருமையான கட்டுரைங்க... படிக்கப்படிக்க இழுத்துச்செல்லும் கைப்பக்குவம் உங்களிடம் காண்கிறேன். வெறுமையை ரசிக்கப்பழகவேண்டும், அந்த உன்னதம் பரவ கொஞ்ச காலம் பிடிக்கும். பிறகு எல்லாமே வெறுமையாயின் அதன் உமிழ்வு சுவையாக மாறிவிடும். அசைபோடும் தருணங்களும் அதுபோலவே.
எப்படி எழுதறீங்க. எனக்குள் மெல்லிய பொறாமை.
///நமது கலாச்சாரம் என்று மட்டுப்படுத்துவது கூட அறிவீனம்தான்...ஒட்டு மொத்த மனித இனத்திற்குமே கொண்டாட்டங்களும்,///
சரியா சொன்னீங்க ..
///ஆனால் அந்த விருப்பம் அடுத்த முறையாவது அந்த கேளிக்கைகளுக்குப் பிறகு... கிடைக்கும் நிசப்தத்தையும் அமைதியையும் சுவைக்க முடியுமா என்ற மறைமுக விருப்பம்தான்.///
கண்டுபிடிப்போ .. ??
//நான் மனதைப் பார்க்க, மனம் என்னைப் பார்க்க..//
பக்கத்துல உட்கார்ந்திருந்ததா ..?
//மனதின் குரலை சட்டை செய்யாமல் அந்த நேரத்தை நீட்டித்து நீட்டித்து//
நீங்க உண்மையிலேயே ஒரு மனோ தத்துவ நிபுணரோ ...?
நல்ல பதிவு... ஆழ்ந்து உணர்ந்து கருத்து போல... நல்லா சொன்னீங்க... //அனுபவக்கல்வி அல்லது இறக்கும் வரை படிக்கும் பாடங்கள்// quote பண்ணி வெச்சுக்க வேண்டிய வரிகள்... சூப்பர்
இந்தப் பையனுக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்... :-)))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...