Skip to main content

வாய்மை...!



















மேகங்கள் தொலைந்து போயிருந்த அந்த பளீர் வானத்தில் சூரியன் ஏதேச்சதிகாரம் செய்து கொண்டிருந்தபோது காலை மணி 10:30. நிழல் தேடி என்னுடைய பைக்கை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்த போது வழக்கமான பரபரப்போடு இருந்தது அந்த வட்டாட்சியர் அலுவலகம்.

வெளியே மிகைப்பட்ட கிராமத்து மக்களும் வெள்ளை வேஷ்டி சட்டை பெரியவர்களும் காம்பவுண்ட் முக்கில் இருந்த டீக்கடையின் வியாபரத்துக்கு பெரிதும் உதவிக் கொண்டிருந்தனர். மெல்ல திரும்பி நான் பார்க்க என்னை விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்யணுமா என்ற ரீதியில் தரையில் சிறு மேசை வைத்து இருந்த ஒரு மத்திம வயது மீசைக்காரர் மடக்கி விடப்பட்ட முழுக்கை சட்டையின் மடிப்பை சரி செய்து கொண்டே பார்த்தார். நான் அவரையும் மரங்களில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த காகங்களையும் சட்டை செய்யாமல் அலுவலத்துக்குள் நுழைந்தேன்.

ரேசன் கார்டில் முகவரி மாற்றம் செய்து வாங்க வேண்டி வந்திருந்த என்னை விடுங்கள் எனது பக்கதில் காத்திருந்த அந்த பெரியவரை கவனியுங்கள்....! வாழ்க்கையின் ஒட்டத்தில் எத்தனையோ முகங்களை நாம் பார்த்தாலும் ஒரு விவசாயியின் முகத்தை நாம் எளிதாக அடையாளம் காண முடியும்.

இயற்கையோடு பழகி பழகி ஒரு வித மரியாதையும், நன்றி நவிழலும் சாந்தமும் இயல்பாகவே வந்து விடுகிறது. அதே போலத்தான் சீற்றமும்...இயற்கையின் சீறலைப் போல் நிலை கொள்ள முடியாத அளவிற்கு வெளிப்பட்டு விடுகிறது. பயிர் பச்சைகளை நேசிப்பது போலத்தான் மனிதர்களையும் நேசிக்கிறார்கள்.

உலகிற்கே பசியாற்றக்கூடிய தானியங்களை விளைவிக்கிற விவசாயி தான் செய்யும் தொழில் பற்றி எப்போதும், எங்கேயும் யாரிடமும் அகந்தையாய் பேசியதும் கிடையாது கர்வம் கொண்டதும் கிடையாது. மாறாக தான் விளைவிக்கும் நெல்லுக்கும் புல்லுக்கு யாரையோ விலை நிர்ணயம் செய்யச்சொல்லிவிட்டு குடவுனில், அல்லது வியாபாரியிடம் விற்று விட்டு ஒரு ஓரமாய் ஒதுங்கிக் கொள்ளும் சகாப்த புருஷர்கள் அவர்கள்...

சாந்தமாய் என் பக்கத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவரின் தோளும் சட்டை சுறுக்கங்களும் எதில் சுருக்கம் அதிகம் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன. காலவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது போக மீதி இருந்த முடிக்கும் முறையாய் எண்ணெயிட்டு இருந்தார்....ஆனால் அது கலைந்து போயிருந்ததில் தான் அழகும் அலட்சியமும் இருந்தது. வெகு நேரமாய் பெஞ்ச் விட்டு எழுவதும் இரண்டடி முன்னால் போவதும் பின் வேஷ்டியை சரி செய்து கொண்டு பின்னால் வருவதும் பின் அமருவதுமாக இருந்தவரிடம் ஏதோ ஒரு தயக்கமும் கையில் ஒரு பிளாஸ்டிக் பையும் இருந்தது ஆனால் காலில் செருப்பில்லை

கோணத்தை கொஞ்சம் மாற்றி அதே அறையில் எதிரில் இருக்கும்
மேசையில் இருப்பவரைப் பாருங்கள். நெற்றியில் பட்டை இட்டு இருந்த அவர் வாயில் வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்தார். மடித்து மேலெற்ற பட்ட சட்டை...மூக்கின் நுனியில் குடியிருந்த கண்ணாடி....ஒரு அலட்சிய பார்வை கால் மேல் கால் இட்டு, சுற்றி குப்பையாய் குடியிருந்த ஓராயிரம் பைல்கள், மேசை முழுதும் குவிக்கப்பட்டு இருந்த தாள்கள்....பக்கவாட்டு பரணில் இருந்த லெட்ஜர்கள்....பக்கத்தில் இருந்த மேசைகளுக்கு 11 மணியாகியும் வராதாத சக அலுவலர்கள் என்று எல்லாவற்றுக்கும் மத்தியில் 100% அரசு அலுவலர்தான் என்று நிரூபித்தபடி அமர்ந்திருந்த அவர் என்ன பொறுப்பு வகிக்கிறார் என்று ஊகிக்க முடியவில்லை.

ஒரு அதட்டலாய் " என்னய்யா வேணும் உனக்கு.....? என்ற ஒரு உரத்த கேள்விக்கு பயந்தவராய் திடுக்கிட்டு எழுந்த பெரியவர் " புள்ளக்கி கண்ணாலம் ஆயி தனிவூட்டுக்கு போயிட்டாங்க...அதுக்கு தனி ரேசன் கார்டு கேட்டு இருந்த்தோம்யா....எல்லா பேப்பரும் ரெடி ஆயிட்டுது இன்னைக்கி வந்து கடுதாசிய வாங்கிட்டு போன்னு ஐயா சொன்னருங்க....என்று சொல்லிவிட்டு பக்கதில் இருந்த காலி டேபிளை காட்டினார் பெரியவர். ம்ம்ம்ம் தனி ரேசங்காட...சரி... எங்க உம்புள்ள? என்று கேட்ட அரசு அதிகாரிக்குத் தெரியாது வயக்காட்டில் நிற்கும் பெரியவரின் மகனைப்பற்றி......"ஐயா அவன் வெள்ளாமக்காட்டில இருக்காங்க.... நான் கையெழுத்து போட்ட பேப்பர வாங்க வந்தேனுங்க... என்று கம்மிய குரலில் சொன்னார் பெரியவர்.....

சரி..சரி....போய்ட்டு ஒரு ரெண்டு மூணு நாளு கழிச்சு வா...பக்கதுல இருக்கிற ஐயா மெட்டாராஸ் போயிருக்காரு வந்தவுடனே....வந்து பாருங்க.... என்ற ஒரு அலட்சிய பதிலை கேட்டவுடன்.....மாதங்களாய் நடந்து ஊர் தலையாரி, ஆர். ஐ...அவரு இவுரு அந்த அத்தாட்சி இந்த அத்தாட்சி என்று அலைந்து திரிந்த பெரியவரின் விரக்தி குரல்..ஐயா எப்போ வருவாருங்க....? என்றூ கேட்ட கேள்விக்கு...."யோவ் அது எல்லாம் தெரியாது....போய்ட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சி வான்னா வாய்யா....எங்களுக்கு எம்புட்டு வேலை இருக்கு....ஒரு தடவ சொன்னா வெளங்காது உனக்கு என்று காதில் பேப்பரை விட்டு குடைந்த படி வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினார் அந்த அதிகாரி....

ஏய்யா அவரு இல்லேன்னா நீங்க உதவி செய்யுங்க..இல்லேன்னா வேற யார பாக்கணும்னு சொல்லுங்க...எதுக்கு வையுறீங்கன்னு பெரியவர் கெஞ்சவும்.....ஆங் அப்டின்னா.... மறுபடியும் விண்ணப்பம் பூர்த்தி பண்ணிட்டு வி.ஏ.ஓ, ஆர்.ஐ எல்லோரு கிட்டயும் சான்றிதழ் வாங்கிட்டு உன் மகனோட கல்யாணபத்திரிக்கை, அதை பதிவு செஞ்ச சான்றிதழ் எல்லாம் கொண்டுட்டு வா..என்று சொல்லிவிட்டு...ஏதோ முக்கிய வேலை இருப்பதை போல சீட்டை விட்டு எழுந்து தன்னுடைய வேஷ்டியை சரி பண்ணி விட்டு மீண்டும் சீட்டில் அமர்ந்தவரின் முன்னாலேயெ "அவசரம்" என்று பிரிக்கப்பட்ட கோப்பு ஒன்றரை மணி நேரமாய்...அவரிடம் அல்லாடிக்கொண்டிருந்தது.

பெரியவர் சூடாகி கத்த தொடங்கினார்....ஏய்யா என்ன எங்கள பாத்த இளக்காரமா இருக்கா....எம்புட்டு நாள அலைஞ்சு இன்னைக்கு வாங்க வரச்சொன்னதாலதான்யா வந்தேன்...காலைல ஒரு ட்ரிப்...அப்புறம் சாங்காலம் 5 மணிக்குன்னு ரெண்டு தடவதா பஸ் வருது .....வயக்காட்டு வேலய எல்லாம் விட்டுப்புட்டு ....அவருடைய கூச்சலில் அவர் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது உணர முடிந்தது.

அவர் பேச்சுக்கு பின்...எழுந்து நின்று கத்தினார் அந்த அதிகாரி....யோவ்...எனக்கு ஒண்ணும் தெரியாது வெளில போய்யா என்று அடிக்க வருபவர் போல கிட்ட வந்து பெரியவரின் நெஞ்சில் கை வைத்து தள்ள..தடுமாறிய பெரியவர்...மெல்ல சுதாரித்து...கோபத்தில் அந்த அதிகாரியை நோக்கிப் பாய... அதற்குள் அந்த அதிகாரி...சரேலென்று வெளியே...போனார்....இரு இரு வர்றேன்னு.... ! ஒரே சப்தம் பக்கத்து அறையில் இருந்த சில அலுவலர்கள் வந்த்து எட்டிப் பார்த்து விட்டு சென்றனர்....

வெளியே போய்விட்டு திரும்ப வந்த அந்த அரசு அலுவலர்....வேகமாய் உள்ளே வந்தார்....இருய்யா இரு...இப்ப வருவாய்ங்க... அவய்ங்க கிட காமின்னு சொல்லிட்டு...மீண்டும் வெளியே வேகமா போனார்....

"தம்பி....இவிய்ங்க அநியாயம் தாங்க முடியலைப்பான்னு" முதன் முதலாக என்னிடம்
பேசினார் அந்த பெரியவர்.....சட்டென்று நிறுத்தினார்....வெளியே போயிருந்த அரசாங்கம் ஒரு 30 நிமிடம் கழித்து துணைக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிளோடு வந்ததில் வட்டாட்சியர் அலுவலகத்தின் பக்கதிலேயே தான் போலீஸ் ஸ்டேசன் என்பதை உணர முடிந்தது.

ஆபிஸ்லயா வந்து கலாட்டா பண்ற? என்று கழுத்தை பிடித்து இழுக்காத குறையாக பெரியவரையும்....முறைப்பாய் என்னையும் வாங்க தம்பி ஸ்டேசனுக்கு...என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்கன்னு அழைத்தது காவல்துறை. எனக்கு தெரிந்த வரை இந்திய நீதித்துறையின் வேரே சாட்சிகள்தான்......50 பேர் பொய் சாட்சி சொல்லிட்டா...அந்த கேஸ்....ஜெயிச்சுடும்ன்றது எல்லா இந்திய குடிமகன்களுக்கும் தெரியும்.....! பெரியவரும் தம்பி.. ஒரு எட்டு வாங்க தம்பி....திட்டுனதும் இல்லாம, வந்த வேலயும் முடியாம...போலிசு கிட்ட வேற கம்ப்ளெய்ன் பண்ணி இருக்காரு தம்பினு கலங்கி போய் சொன்னதில் அவருடைய வறுமையும் இயலாமையும் வெளியே வந்து வழுக்கி விழுந்ததை உணர முடிந்தது.

கவலைப்படாதீங்க...ஐயான்னு அவரின் தோள் தொட்டு நானும் பெரியவரும் போலிஸ்காரருடன் போய்க்கொண்டு இருந்தோம் அரசாங்க அதிகாரி யாரோ ஐயாவிடம் சொல்லிட்டு வர்றேன்னு சொன்னதை காவல் துறை உடனே அனுமதித்தது.

காவல்துறை.....அலுவலகத்திற்கு சென்றவர்களுக்குத் தெரியும் வெள்ளை வேட்டிகளுக்கு என்ன மரியாதை....பேண்ட் சட்டைகளுக்கு என்ன மரியாதை , கசங்கிய சட்டைகளுக்கு என்ன மரியாதை என்று...........பெரியவரை அதட்டலோடு ஒரு ஒரமாய் அமரச் சொன்னார்கள்....வரப்போகும் காவல்துறை ஐயாவிற்காக நானும் காத்திருந்தேன்...ஒரு ஓரமாய் ஒற்றைக்காலை சுவற்றில் சாய்த்து ஒற்றைக்காலில் தரையில் பதித்து....

ஒரு சிறிய சலனத்திற்கு பிறகு வந்த ஐயா..முறைப்பாய் போய் தன் இருக்கையில் அமர்ந்தார்.....! அதட்டாலாய் என்னயா கேஷு என்று கான்ஸடபிளிடம் கேட்க...விவரம் சொன்னார் சின்ன ஐயா....! யோவ் இங்க வாங்கய்யா...என்று என்னையும் சேர்த்து காக்கவேண்டிய தெய்வம் அதட்டலாய் கூப்பிடாது...." அரசு அதிகாரிகிட்ட அலுவலகத்திலேயே பிரச்சினை பண்றியா....என்ன திமிருய்யா உனக்கு...." பெரியவர் தெளிவாய் எல்லாம் சொல்லி முடித்தவுடன்....கவருமெண்டுனா அப்படித்தான் முன்ன பின்ன இருக்கும்ம்ம் அதுக்காக கத்துவிய்யா..? அடிக்க போனியா...ம்ம்ம் அதட்டலுக்குப் பின் பெரியவர் என்னை கை காட்டினார்... தம்பிகிட்ட வேணும்னா கேளுங்கய்யா....

என்னய்யா நடந்துச்சு....? என் பக்கம் கேள்வியை திருப்பினார் காவல்துறை அதிகாரி.... " ஆக்சுவலி வாட் கேப்பன்ட் சார்.... இவரு வந்து.... என்று மிகைப்பட்ட ஆங்கில வார்த்தை கலந்து பேச வைத்து விட்டது என்னுடைய நான்கு நட்சத்திர ஹொட்டலின் ஃப்ரண்ட் ஆஃபிஸ் உத்தியோகத்தின் பழக்கம்...!

அவ்வுளவுதான் ....மீசை துடிக்க என்னிடம் கேட்டர்....அந்த அதிகாரி..." தம்பி வெளிநாடுங்களா...? என்றார் .... நான் சொன்னனேன் இல்ல சார்....என்றேன்.....அப்புறம் அதிகமா ஆங்கிலம் பேசுறீங்க... தமிழ்ல சொல்லுய்யா என்று அதட்டினார்.....தமிழ்லதானே பேசினோம்....னு யோசிச்ச என் மரமண்டை...இடையில் ஆங்கிலம் புகுத்தி பேசியதை உணராமல் இருந்தது. " சாரி சார்" என்று மீண்டும் ஆரம்பித்து....(மறுபடியும் ஆன்கிலமா..அடங்கொன்னியா..!!!) பெரியவர் மீதிருந்த நியாயத்தை சொல்லி முடிப்பதற்குள்....போலிஸ் அதிகாரியே சொல்லிவிட்டார் பெரியவர் மீதுதான் தப்பு என்று.....

சரி... அரசு அதிகாரியை அடிக்க முயற்சித்ததா கேஸ் போடவா....? என்று அதட்டினார்... எனக்கு நிஜமாவே பெரியவர் மீது பாவமும் மனதுக்குள் பயமும் வந்தது....! சார்....ஒரு நிமிசம் நான் வெளில போய்ட்டு வர்றேன்...(அப்பாகிட்ட போன் பண்ணி பேசுவோம்....என்ற எண்ணத்தில்) என்று சொன்னவுடன்...முகம் சிவந்தது காவல்துறைக்கு....தம்பி ...வெளில போய்...அவரு..இவருன்னு யார்கிட்டயாச்சும் சொல்லி போன் வந்துச்சு...... அப்புறம்...உன்னையும் ஐயாவோட சேத்தி உள்ள வைக்க வேண்டும் என்று என் எண்ணத்தை உடைத்தார்...!

அட என்னடா இது கொடுமை என்று எண்ணிக் கொண்டிருந்த போது வயிற்றில் அமிலங்கள் சுரக்க ஆரம்பித்ததை உணர முடிந்தது....மணிக்கட்டை திருப்பி மணி பார்த்த போது மதியம் 2:30ஐ காட்டியது....அதே நேரத்தில்....காலையில் சண்டையிட்ட அரசு அலுவலர் உள்ளே வருவதை கவனித்தேன்...!

போலீஸ்காரர்கள் கொடுத்த மரியாதையிலும் பேச்சிலும் அவர்களின் உறவும்...அந்த அதிகாரிக்குப் பின் ஏதோ ஒரு கரை வேட்டி இருக்கிறது என்பது ஆணவத்திலும்...சொல்லாமலேயே உணர முடிந்தது....! பஞ்சாயத்து பேசி பெரியவர்....அந்த அரசு அலுவலரிடம்..மன்னிப்பு கேட்டார்....மேலும் கேஸ் போடாமல் இருப்பதற்காக கேட்கப்பட்ட சில காந்தி படம் போட்ட விவசாயியின் வேர்வைத்துளிகள்....கை மாறின.....வெளிறிப் போன முகத்துடன்...வெளியே... வருவதற்கு முன்...போய்ட்டு வர்றேன் ஐயா என்று இன்ஸ்பெக்டரை பார்த்து சொன்ன பெரியவரை பார்த்து எனக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது......

ஒரு இறுக்கத்துடன் வெளியே வந்தோம்...!பெரியவர்....கைகளை பிடித்துக் கொண்டு...அழுகாத குறையாக அந்த இறுக்கத்திலும் நன்றி கூறியது....அவரின் உள் இருந்த பிரமாண்டமான மனித நேயத்தைக் காட்டியது.....! மெல்லிய குரலில்... நீங்க ஒரு ரெண்டு நாளு கழிச்சு வந்து பாருங்கய்யா.... அந்த அதிகாரி வந்தவுடன் உங்க பேப்பர்ஸ் வாங்கிக்கிடுங்க..என்று சொன்னேன்....!

சராசரி ஒரு இந்திய இளைஞன்... வேறு என்னதான் சொல்லமுடியும்....?

பெரியவரை..என்னுடைய பைக்கிலேயே கொண்டு போய்... பஸ்ஸ்டாண்டில் விட்டேன்.... ! எந்த ஒரு முடிவும் எட்டாமல் ....கையிலிருந்த காசும் போய்....... நின்ற பெரியவரிடம்..கேட்டேன்...! பஸ் சுக்கு காசு இருக்குங்களா ஐயா....? அதை காதில் வாங்கதவராய்....தம்பி.. ஒரு டீ சாப்பிட்டுட்டு போ தம்பி என்று நன்றி சொல்ல முயன்றார்.....! இல்லங்கய்யா... பரவாயில்லை என்று சொன்னவுடன்.. பக்கத்து கிராமமான தனது ஊரின் பெயரைச் சொல்லி சாப்பிடாறப்புல வாங்கய்யா.ன்னு என்னுள் பாசத்தைக் கொட்டினார்....

கையை அவர் அழுந்த பிடித்திருந்தார்.....! அன்பு அவரிடம் இருந்து என்னிடம் அந்த அழுத்ததின் மூலம் பாய்ந்து கொண்டிருந்தது. ஐயா.. ஒரு மூணு நாள் கழிச்சு வந்து பாருங்கய்யா.... உங்க கடிதாசிய அந்த ஆபிசர் கிட்டயே வாங்கிக்குங்க....மீண்டும் சொன்னதையே திரும்ப சொன்னேன்! கும்பிட்டார்.... பெரியவர்..... 5 மணி நேர அனுபவத்திற்கு பிறகு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன் நான்.....காற்று எதிர் திசையில் இருந்து முகம் கிழித்தது....மனம் சுருண்டு போய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது..........

அரசு அலுவலகங்களில்....வாடிக்கையாளர் சேவை என்றால் என்ன என்று இதுவரை யாருக்கு சரியாக பயிற்றுவிக்கப்படவில்லை அல்லது யாரும் சரியாக பயிலவில்லை.....! அரசாங்க அதிகாரிகள் எல்லாம் பொதுமக்களின் சேவையாளர்கள்...என்ற மனப்பாங்கு மாறியது எப்போது? அல்லது ஏன்?

காவல்துறை முதல் அத்தனை அரசு சார் அலுவலகங்களும் பொதுமக்களிடம் எதிர்பார்ப்பது என்ன? விவாசாயம் செய்து பயிர் பச்சையோடு பழகிய வெகுளி மனிதர்களுக்கு சேவை செய்யத்தானே நீங்களும் உங்கள் கல்வியும்? இல்லை உங்களின் ஜம்பத்தை காட்டவா?

ஒரு வீட்டைக் காக்க செக்கியூரிட்டி..அந்த செக்கியூரிட்டிக்கு வீட்டு முதலாளிதான் சம்பளம் கொடுக்கிறார். நேரிடயான தொடர்பு என்பதால் அங்கே முதலாளிக்கு மரியாதை கொடுக்கும் செக்க்யூரிட்டி... தன்னுடைய பணியில் கவனமாகவும் இருக்கிறார்....இல்லை என்றால் வேலை போய்விடும் என்ற பயம் இருக்கிறது.....

ஆனால்...

காவல்துறையாகட்டும்...அல்லது மற்ற அரசு சேவை நிறுவனங்களாகட்டும் இவர்களுக்குக் மறைமுகமாய் சம்பளம் கொடுப்பது யார்? நாம்தானே.....ஏன் அவர்களுக்கு பயம் இல்லை....அரசு என்பது மக்கள் சாரா ஒன்றா?

தனியார் பேருந்து, தனியார் பள்ளிகள், இன்னும் எல்லா தனியார் நிறுவனங்களும் பொறுப்பாய் இருக்கும் போது.....அரசு சார் நிறுவனங்களில் எல்லாம் ஏன் பொது மக்களை மதிப்பதே இல்லை?

ஊருக்குப் போன அலுவலர் திரும்ப எப்போ வருவார்? என்று கேட்டது அந்த பெரியவரின் குற்றமா? இல்லை...அலட்சியமாய் கால் மேல் கால் போட்டு மாட்று வழி சொல்லாமல் திமராய் பதில் சொன்ன அந்த அரசு அலுவலரின் குற்றமா? இல்லை அரசு அலுவலரை தாக்குவது தவறு என்ற நியதியை விசாரிக்காமல் உபோகித்த காவல்துறையின் குற்றமா? தீர்வு சொல்வதற்கு நமது நாட்டில் ஆட்களும் சட்டமும் இல்லவே இல்லையா?

குப்பையாய் கிடக்கிறதே உங்கள் அலுவலகம்....தூசு படிந்த கோப்புகள் மலை மலையாய்.... , இல்லாத டேபிள்களுக்கு மின் குழலும், மின் விசிறியும் ஓடுகிறதே......? அரசு அலுவல தொலைபேசிகளின் கட்டணங்கள் சரிபார்க்கப்படுகிறதா? ம்ம்ம்ம்ம்...போய்ப்பாருங்கள் தோழர்களே....ஏதாவது ஒரு அரசு அலுவலகத்துக்கு.......? ஏன் நாமும் நம் நாடும் முடங்கிக் கிடக்கிறோம் என்று அப்பட்டமாய்த் தெரிய வரும்........

......
......

வீட்டில் பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டேன்....! வாசலிலேயே...அப்பா வழி மறித்தார். என்ன ஆச்சு? ரேசன் கார்டில் அட்ரஸ் சேஞ்ச் பண்ண கையெழுத்து வாங்கிட்டியா....? கோபமாய் கேட்டார்....! இல்லப்பா....என்று சொல்லி முடிவதற்குள்...வெட்டிப் பயடா... நீ உன்னைய நம்பி ஒரு வேலை கொடுத்தேன் பாரு.... எங்க போய் சுத்திட்டு வர்ற....? நானே போய் நாளைக்கு வாங்கிக்கிறேன்....என்று சொன்னவர்....போ ...போ...போய் சாப்பிடு ...அதயாச்சும் ஒழுங்கா செய்....விலகி வாசலுக்கு வழி விட்டார்.... நான் சொல்வதற்கு என்ன இருக்கு...? மெளனமாய் வீட்டிற்குள் சென்றேன்......


பக்கத்து அறையில் ....தம்பி படித்து கொண்டிருந்தான்......

" சத்ய மேவ ஜெயதே... என்றால்...வாய்மையே வெல்லும்.....! எப்போதும் உண்மையும் சத்தியமும் பேச வேண்டும்....அதுவே நமது அரசாங்கத்தின் முக்கிய கொள்கை....இதைத்தான்....வள்ளுவர்....

வாய்மை எனப்படுவது யதெனில்........"

எனக்கு ஒரே குழப்பம்...இவன் படிப்பதும் உணர்வதும்...... நாளை இவனை கெடுக்குமா....இல்லை நல்வழிப்படுத்துமா?..........ம்ம்ம்ம்ம்ம்

" தம்பி சாப்பிட வாப்பா" அம்மாவின் குரல் என்னை கலைத்தது........... இதோ குளிச்சுட்டு வந்துர்றேன்மா......குளியலறைக் கதவை ஓங்கி சாத்தினேன்......கோபமாய்...!

வேறு என்னதான் செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள்....


பின்குறிப்பு: மிகைப்பட்ட அரசு அலுவலர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும், நடந்து கொண்டுதானிருக்கிறார்கள் ஆனல் புரையோடிப் போயிருக்கும் ஒரு சிலரைப் பற்றிதான் கட்டுரை விவரிக்கிறது. ஒட்டு மொத்த அரசு அலுவலர்களையும் தவறாக எண்ணக் கூடாது என்ற எண்ணத் தெளிவையும்....விளக்கத்தையும் பதியவிழைகிறேன்!

தேவா. S

Comments

க ரா said…
பேசாம ஸ்கூல் புத்தகத்துலேயே லஞ்சம் எப்படி கொடுக்க்றது, வாங்கறதுன்னு மாத்திரலாம் இல்லையான்னா :)
தனியார் அலுவலகங்களில் கட்டாயம் வாடிக்கையாளரை திருப்தி செய்ய வேண்டும், இல்லாவிடில் அவர்கள் வியாபாரம் நடக்காது. வேண்டுமானால் ஒரு மாற்றம் செய்து பாருங்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்று ? இங்கயும் இவ்வாறுதான் நடக்கும்
ஒவ்வொரு வரியும், வார்த்தைகளும் உயிரை உரிஞ்சி எடுக்கிறது. என்னை உங்கள் இடத்தில் நிறுத்தி படித்தேன், ஒரு ஆற்றாமையும், வெறுமையும் வந்து விட்டது. இன்னும் அதே சிந்தனையில் ஒருவித வலியோடு உட்கார்ந்து இருக்கிறேன்.

இந்தியா இப்படித்தான் இருக்கும் என என் மனதை தேற்ற சில மணி நேரம் ஆகும் போல
அர‌சு அலுவ‌ல‌க‌த்தில் இப்ப‌டியெல்லாம் ந‌ட‌க்க‌ல‌ன்னாதான்
ஆச்ச‌ர்ய‌ம்
விஜய் said…
தேவா அண்ணா

ஐயோ, எப்படி சொல்றது அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் அவலங்களை செதுக்கி இருக்கிறீர்கள்,நான் ரசித்த மிக சிறந்த பதிவு .ரசிச்சதோட போக முடியலைங்க அண்ணா , இந்த அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்க வேலை கொடுக்கும்பொழுது, கோபத்தையும், திமுறையும் சேர்த்து கொடுத்துடுறாங்க போல,

இவுனுங்க போயி இப்ப இருக்குற இளைய சமுதாயம் அந்த இடத்த நிரப்பும் பொழுது நிச்சயம் ஒரு தீர்வு வரும்னு நினைக்கிறேன் ,

அப்பொழுதும் தீருலைன்னு வைங்க, ஒரு ராஜகுருவாவோ, ஒரு பகத்சிங்காவோ,ஒரு சுகதேவாவோ மாற தயாரா இருக்கும் இளம் ரத்தம் சொட்டும் என் தேசத்து இளைஞர்களை (நான் தயாரா இருக்கேன் ) ஒன்று திரட்டி இந்த மாதிரி திமிரு பிடிச்ச நாய்களை போட்டுத்தள்ரத விட வேற வழி இல்லைங்க அண்ணா .அடிச்சா தான் வலிக்கும், பயம் இருக்கும் .

இந்த தேசத்து இளைஞர்கள் கொதித்து எழுந்தால் என்ன ஆகும்னு நிஜமா யாருக்கும் தெரியலை...

எதோ எழுத்துக்காக எழுதுகிறேன் என்று நினைக்கவேண்டாம், நிச்சயமா உண்மைங்க, நான் பார்த்து இருக்கேன் இளைஞர்கள் கோபபட்டால் என்ன ஆகும்னு நான் என்னுடைய பதிவுல நான் பார்த்தத சொல்கிறேன் விரைவில்...
நான் பாஸ்போர்ட் வாங்குன கதையும் இதே மாதிரிதான். அந்த போலிஸ்காரர் பண்ணின வேலைய நினைச்சா, ரொம்ப கேவலமா இருக்கு. 200 காசுக்காக என்ன ஒரு வாரம் அலையவிட்டாங்க. அத வாங்கியபின்னாடியும் மறுபடியும் கையக்கொடுக்குறேன் கையத் தடவுனது. சீ அப்போ ரொம்ப அறுவருப்பா உணர்ந்தேன்.
//க‌ரிச‌ல்கார‌ன்--//அர‌சு அலுவ‌ல‌க‌த்தில் இப்ப‌டியெல்லாம் ந‌ட‌க்க‌ல‌ன்னாதான் ஆச்ச‌ர்ய‌ம் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்
vasu balaji said…
:).சரிதான் தேவா.
அரசு அலுவலகம் என்றால் அப்படித்தான் இருக்கும். உமக்கும் எமக்கும் ஒரே வேலை தான். ஆனால் அவங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை!!!! மன்னர்களெல்லாம் அரசு ஊழியர்களுக்கும், மந்திரிகளுக்கும் பயந்து நடப்பது தான் ஜனநாயகம்.
உயிரை குடிக்கும் நோய் போன்றுதான் நண்பரே இதுவும் . இந்த நோய் விரலில் வந்தாலும் . இதயத்தில் வந்தாலும் மரணம் என்பது உறுதிதான் இதில் எதற்கு பாகுபாடு . இன்னும் திருந்தாத பல ஜென்மங்கள் அப்படிதான் இருக்கிறார்கள் பல அரசு துறைகளில் .சிறந்த சமூக அக்கறையுடன் கூடிய நல்ல பதிவு தொடரட்டும் . வாழ்த்துக்கள்
அர‌சு அலுவ‌ல‌க‌த்தில் இப்ப‌டியெல்லாம் ந‌ட‌க்க‌ல‌ன்னாதான் ஆச்ச‌ர்ய‌ம் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்
நீண்ட ஒரு இடைவேளைக்கு பிறகு உங்கள் கட்டுரை படிக்கிறேன்.காரணம் வேலை பளுதான். இந்தியா வல்லரசு நாடாக போகிறதாம்? யார் சொல்கிறார்கள் நாட்டை விற்று வியபாரம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். உண்மைதான் வல்லரசு ஆனாது அவர்களது குடும்பம்தான். ஒவ்வொரு இளைஞனும் படிக்கும் காலத்திலேயே லஞ்சம் கொடுத்து படிக்க வேண்டி இருக்கிறது. படிக்க அளவுக்கு அதிகமான பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. பின்பு அவருக்கு வேலை கிடைக்கும் வரை நம் நாட்டில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. சில நேர்மையான அரசு அதிகாரிகளும் உள்ளார்கள் தான். அவர்களுக்கு தலைவணங்கிறேன். தவறு செய்வதற்கு காரணமே இந்த அரசியல்வாதிகள்தான் என்பது உண்மை. படிக்க தொடங்கும் காலம் முதல் வேலை கிடைக்கும்வரை லஞ்சம் லஞ்சம். அரசியல்வாதிகளின் ஆதரவால் அரசு அதிகாரியாக ஆனபின் அவர்களுக்கு யார் மீதும் ஒரு பயம் இல்லாமல் போய்விடுகிறது. ஆகையினால்தான் வேலை செய்யக்கூட கூலி நாம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பொறுக்கி தின்னும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எப்போது திருந்துவார்களோ அப்போது நம் நாடு வல்லரசாகும் என்பது மட்டும் உண்மை.. வாழ்த்துக்கள் தேவா இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு உறுதுணையாக...
Chitra said…
இயற்கையோடு பழகி பழகி ஒரு வித மரியாதையும், நன்றி நவிழலும் சாந்தமும் இயல்பாகவே வந்து விடுகிறது. அதே போலத்தான் சீற்றமும்...இயற்கையின் சீறலைப் போல் நிலை கொள்ள முடியாத அளவிற்கு வெளிப்பட்டு விடுகிறது. பயிர் பச்சைகளை நேசிப்பது போலத்தான் மனிதர்களையும் நேசிக்கிறார்கள்.

..... அழகிய உண்மை.
Chitra said…
" சத்ய மேவ ஜெயதே... என்றால்...வாய்மையே வெல்லும்.....! எப்போதும் உண்மையும் சத்தியமும் பேச வேண்டும்....அதுவே நமது அரசாங்கத்தின் முக்கிய கொள்கை....இதைத்தான்....வள்ளுவர்....

வாய்மை எனப்படுவது யதெனில்........"

எனக்கு ஒரே குழப்பம்...இவன் படிப்பதும் உணர்வதும்...... நாளை இவனை கெடுக்குமா....இல்லை நல்வழிப்படுத்துமா?..........ம்ம்ம்ம்ம்ம்


...... கசப்பான உண்மை.
Anonymous said…
அந்த அன்பான பெரியவரை கஷ்டப்படுத்தி இந்தியா வல்லரசு ஆகி என்ன பயன்.அது சரி தேவா பாய் இப்படி நடந்தால் ஆச்ச்ர்ய படுவதற்கு ஒன்னுமில்லை.ஒரு சாரசரி இளைனனால் என்ன செய்ய முடியும் என்ற வார்த்தைகள் வெறுமை காட்டுகிறது.
அரசு அலுவலகங்களில்....வாடிக்கையாளர் சேவை என்றால் என்ன என்று இதுவரை யாருக்கு சரியாக பயிற்றுவிக்கப்படவில்லை அல்லது யாரும் சரியாக பயிலவில்லை.....! அரசாங்க அதிகாரிகள் எல்லாம் பொதுமக்களின் சேவையாளர்கள்...என்ற மனப்பாங்கு மாறியது எப்போது? அல்லது ஏன்?
//
ரொம்ப தெளிவான பகிர்வு .. புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி தேவா அற்புதமா எழுதி இருக்கீங்க..
///தோளும் சட்டை சுறுக்கங்களும் எதில் சுருக்கம் அதிகம் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன///
அருமையான வரிகள் அண்ணா ..!!
//பெரியவர் மீதிருந்த நியாயத்தை சொல்லி முடிப்பதற்குள்....போலிஸ் அதிகாரியே சொல்லிவிட்டார் பெரியவர் மீதுதான் தப்பு என்று....///
ஹய்யோ ...
//மேலும் கேஸ் போடாமல் இருப்பதற்காக கேட்கப்பட்ட சில காந்தி படம் போட்ட விவசாயியின் வேர்வைத்துளிகள்....கை மாறின.....வெளிறிப் போன முகத்துடன்...வெளியே... வருவதற்கு முன்...போய்ட்டு வர்றேன் ஐயா என்று இன்ஸ்பெக்டரை பார்த்து சொன்ன பெரியவரை பார்த்து எனக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது......///
உண்மையாவே எனக்கும் அழுகையும் ஆத்திரமும் வருது அண்ணா ..!!
//பின்குறிப்பு: மிகைப்பட்ட அரசு அலுவலர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும், நடந்து கொண்டுதானிருக்கிறார்கள் ஆனல் புரையோடிப் போயிருக்கும் ஒரு சிலரைப் பற்றிதான் கட்டுரை விவரிக்கிறது. ஒட்டு மொத்த அரசு அலுவலர்களையும் தவறாக எண்ணக் கூடாது என்ற எண்ணத் தெளிவையும்....விளக்கத்தையும் பதியவிழைகிறேன்!
///
உண்மை தான் அண்ணா ..
அனால் நிச்சயம் இந்த கட்டுரை ...!! என்னால என்னை சொல்லுறதுனே தெரியலை.. அவ்வளவு அருமையாக இருக்கிறது ..
நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா எப்போது தான் திருந்த போகிறார்களோ
Unknown said…
முன்னெலாம் நான் சண்டைபோட்டுகிட்டு இருந்தேன்.. இப்ப லஞ்சம் கொடுக்க பழகிட்டேன்...
நடைமுறையில் பார்த்தால் பெரும்பாலான அரசு அதிகாரிகள் இன்னும் இப்படித்தான் இருக்கிறார்கள்... இதில் மிகையில்லை நண்பரே...
உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
//சராசரி ஒரு இந்திய இளைஞன்... வேறு என்னதான் சொல்லமுடியும்....?//

ஹ்ம்ம்.. ரொம்ப மனதைத் தொடும் வண்ணம் உங்க விவரிப்பு இருந்தது தேவா..
அந்த பெரியவரை நினைத்து, ரொம்ப பாவமா இருக்குங்க.. கண்ணெதிர்-ல கொடும நடந்தாலும் பாத்துட்டு வாய மூடிட்டு இருக்க வேண்டியதா இருக்கு... :(
என்ன சொல்லன்னே தெரியல...
இந்த மாதிரி சூழலிலும், பெரியவர் உங்களை சாப்பிட வீட்டுக்கு வர சொன்னது... நெகிழ்ச்சி..
நீங்க பஸ்-க்கு காசு இருக்கா ஐயா-இன்னு கேட்டது... உங்க மனச காட்டுது.. (உள்ளே கோவம் வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாத நிலையில் நீங்க)

அருமையான.. பதிவு.. நன்றி..
Jay said…
//பின்குறிப்பு: மிகைப்பட்ட அரசு அலுவலர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும், நடந்து கொண்டுதானிருக்கிறார்கள் ஆனல் புரையோடிப் போயிருக்கும் ஒரு சிலரைப் பற்றிதான் கட்டுரை விவரிக்கிறது. ஒட்டு மொத்த அரசு அலுவலர்களையும் தவறாக எண்ணக் கூடாது என்ற எண்ணத் தெளிவையும்....விளக்கத்தையும் பதியவிழைகிறேன்!//

ஏனிந்த பயம்?

மிகைப்பட்ட அரசு அலுவலர்கள் நேர்மையாக இருப்பதில்லை. ஒரு சில அரசு அலுவலர்கள் தான் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்கிறார்கள்.
dheva said…
ஹா...ஹா...ஹா.....

நன்றி ஜெய்....... ! பயத்தினால் நான் மிகைப்பட்டவர்கள் என்றூ போடவில்லை அப்படியிருந்தால் கட்டுரை எப்படி எழுதுவேன்.

நிறைவு செய்யும் போது எதிர்மறையான எண்ணத்தோடு வாசகர்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் செல்லக்கூடாது என்று நினைத்தேன். மேலும் எதிர் மறை எண்ணங்களை விதைப்பதும், அவலங்களை எடுத்துக்காட்டும் அளவில் நிற்பது ஒரு வித சுயவிளம்பரம் என்பது எனது ஒரு அபிப்ராயம்..... ஒரு தீர்வினை எட்டவேண்டும் என்று நினைப்பது உண்மையான சமூக அக்கறை.....

IF WE ARE NOT PART OF SOLUTION, THEN....WE ARE THE PROBLEM!

நன்றி ஜெய்!
Anonymous said…
//குப்பையாய் கிடக்கிறதே உங்கள் அலுவலகம்...//

ஓட்டு மொத்த உங்களின் ஆதங்கத்தை கோபமாய் அதே நேரம் மாற்றம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்பிலும் எழுதப்பட்ட ஒரு பதிவாக எனக்கு தெரிகிறது...பலருக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் அல்லது பிறரின் அனுபவத்தை கேட்டு வருத்தப்பட்டு இருப்பார்கள்...நம்மால் வருத்த பட மட்டும் தான் முடிகிறது என்பது நமது இயலாமை.

சகோதரர் விஜய் சொன்னது போல் இளைஞர்கள் வெகுண்டு எழவேண்டும்...!!? புதிய பாரதம் படைக்க வேண்டும்.

//அவலங்களை எடுத்துக்காட்டும் அளவில் நிற்பது ஒரு வித சுயவிளம்பரம் என்பது எனது ஒரு அபிப்ராயம்.//

எவ்வளவு அருமையான எண்ணம் ! பிரமிக்கிறேன் உங்களின் ஆழமான உள்ளம் கண்டு... குறைகளை மட்டுமே முன் நிறுத்தி பெயர் வாங்கும் பலருக்கு உங்களின் இந்த பின்னூட்டம் ஒரு பாடம்.

ரசிகை

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த