Pages

Wednesday, August 4, 2010

சீத்தாங்கல்...!கொஞ்ச நேரம் தத்துவங்களையும், விவாதங்களையும், ஆராய்ச்சிகளையும், எல்லா வியாக்கியனங்களையும் விட்டுவிடப் போகிறேன்.....ஆமாம் இந்த கட்டுரையில் கருத்து தேடாதீர்கள், இந்த கட்டுரையில் கடவுளையும் தேடாதீர்கள்!எதுவுமற்று ஒரு நாள் வெறுமனே... நமக்கு பிடித்த செயலைச் செய்வோம் சரியா? அதாவது குளத்தில் பானை ஓட்டை சில்லாக்கி எறிவோமே, அதை "சீத்தாங்கல்" என்று சொல்வோம். எறிந்த அந்த ஒட்டு சில்லு தண்ணீரின் மீது தட்டி தட்டி குதித்து குதித்து போய் ஒரு இடத்தில் தண்ணீருக்குள் மூழும்ம்...அந்த செயலில் அர்த்தம் இல்லை ஆனால் அது தத்தி தத்தி போவதை பார்ப்பதில் ஒரு மலர்ச்சி மகிழ்ச்சி இருக்கும்..

அப்படி ஒரு சீத்தாங்கல்தான் இந்தக் கட்டுரை....

என்னிடம் ஏன் ரஜினியைப் பிடிக்கிறது என்று கேட்டு விடாதீர்கள்...? ரஜினியால் என்ன பலன் ரஜினி? ஒரு சுய நலவாதி என்று ஆயிரம் உதாரணம் காட்டி விடாதீர்கள்....என்னைப் போல ஆட்கள் இருப்பதால்தான் தமிழ் நாடு உருப்படவில்லை என்று சொல்லி விடாதீர்கள்....ஏனென்றால்....

ஏன் ரஜினியைப் பிடிக்கும் என்று என்னால் பட்டியலிட முடியாது...காரணம் எனக்கே தெரியாது. ரஜினி பிடிக்கும்...அவ்ளோதான்....எனக்குள் தோன்றும் உணர்வு அது....? குளிர் எப்படி இருக்கும்? எனக்குத் சொல்லத்தெரியாது அது போல ...ரஜினி பிடிக்கும் இதற்கு பின்னால் எந்த விளக்கமும் இல்லை.

" ரஜினி "

மூன்றெழுத்து மந்திரமா? இல்லை என் மனது செய்யும் தந்திரமா? விபரம் தெரிந்ததில் இருந்து இந்த முகம் பார்த்த உடன் எனக்குள் ஒரு ரசாயான மாற்றம் ஏற்படுகிறதே அது எப்படி? எத்தனை படம் வரட்டும் எத்தனையோ நடிகர்கள் வரட்டும்...ரஜினி படத்தின் பாட்டு ரிலீஸ் ஆகி அதன் வரிகளை கேட்கும் போதே உடலில் இருந்து இரத்தம் ஜிவ்வென்று தலைக்குப் போய் முகம் முழுது ஒரு குறு குறுப்பு பரவி காதுகள் சூடாகி....ஒரு உற்சாகம் பிறக்கிறதே....? ஏன்?

எந்திரன் பாட்டு ரிலீஸ் ஆகும் முதல் நாளே சூரியன் எப்.எம்மில் போட்டதாக சொல்லி செளந்தர் தம்பி எனக்கு மெயிலில் இரண்டு பாடல்களை அனுப்பி வைத்தான். இரவு 9:30 மணிக்கு (இரவு 11மணி இந்திய நேரத்துக்கும் நான் கேட்டு விட்டேனே என்று பொறுமையாக அதை அனுப்பி வைத்த தம்பிக்கு நன்றி) மெயிலில் வந்த எந்திரனை என் காதுகளுக்குள் கொண்டு சேர்க்கும் முன் ஏன் எனக்கு கைகள் ஆடத்தொடங்கி..ஒரு வித பரபரப்பு பற்றத்தொடங்கியது....?

ரஜினி...60தைத் தாண்டியும் உனக்குள் இருக்கும் (ஒருமையில் ஒரு நடைக்காக எழுதுகிறேன்...) ஒரு வேகமும்....இன்னும் உச்சத்தில் உன்னை வைத்திருக்கும் வசீகரத்தின் பிண்னனியும் என்ன? கண்டக்டராய் இருந்து...30+ க்கு பிறகு உன்னால் உச்சம் போகவும்...எத்தனையோ ரசிகர்களின் நெஞ்சம் போகவும் காரணம் உனது உழைப்பா? இல்லை அதிர்ஷ்டமா? இல்லை உனக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற வெறியா?

" இவன் பேரைச் சொன்னதும்,
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைதட்டும்
இவன் உலகம் தாண்டிய ..
உயரம் கொண்டதில்
நிலவும் நிலவும் தலைதட்டும்
அடி அழகே உலகே!
இந்த எந்திரன் என்பவன்..
படைப்பின் உச்சம்

என்ந்த்த்த்த்த்த்த்....................திதிதிதிராரா "

வைரமுத்துவிற்கு வார்தைகளில் விளையாடச் சொல்லித் தரவா வேண்டும்? வார்த்தைகள் ஹெட்போன் வழியாக என் செவிகளுக்குள் ஊடுறுவி மூளைக்குள் சென்று வரிகளோடு ஏற்கெனவே என்னுடைய நினைவுப்பகுதியில் இருந்த ரஜினி என்ற பிம்பத்தொடு தொடர்புபடுத்தி அதற்கு பின்னே இருந்த ரஜினியின் துடிப்பையும் எங்கிருந்தோ...எங்கோ...அவர் சென்ற ஒரு உயரத்தை தொடர்புபடுத்தி ஒரு ரஜினியால் சாதிக்க முடியுமென்றால், உச்சத்தை தொடமுடியுமென்றால்....ஏன் நானும் சாதிக்ககூடாது....? அப்படிப்பட்ட சாதனையைச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டு...அதற்கு பதிலாய்..கடுமையான உழைப்பும், சுறு சுறுப்பும் வேகமும் எல்லாவற்றிலும் ஒரு இன்னோவேசனும் வேண்டும் என்பதை பதிலாய்ப் பெற்று....

எனக்குள் மோட்டிவேசனல் பேக்டர் நன்றாக வேலை செய்யத்தொடங்கி...எல்லாமே கண நேரத்தில்..... நடந்து விட.....மீண்டும்....


"என்ந்த்த்த்த்த்த்த்....................திதிதிதிராரா "

மீண்டும் மீண்டும் உந்தியது.....உயரத்திற்கு.... அந்த வரிகளும் ரஜினி பற்றிய நினைவுகளும்....!


பிண்ணனியில் இசைத்த பிரமாண்ட இசைக்குப் பின்னால் ஏ.ஆர் ரகுமானினி உயரம் தெரியவும் எனக்குள் இருந்த உந்து சக்தி இரண்டானது.....பிரமாண்டங்களின் அணிவகுப்பு அப்போது நடந்தது...! திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டால்... வாழ்கை முடிந்து போய்விட்டதாக எண்ணும் 30+களே....சாதிக்க முடியும்... நம்மால்...உலகம் திரும்பிப் பார்க்கும் ஒரு மனிதராக மாற முடியும்...இக்கணமே..இப்பொழுதே தொடங்கட்டும் நமது இலக்கு நோக்கிய பயணம்.


ரஜினி ஒரு ....லெஜண்ட்...வெற்றிகளின் நாயகன்.....வெற்றி என்பது மட்டுமின்றி எப்படி வெற்றி பெறுவது என்று கற்று வைத்திருக்கும் சூத்திரதாரி. அதே நேரத்தில்.ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்......

"ஏன் அதிக இடைவெளி கொடுத்து படத்தில் நடிக்கிறீர்கள்" இது கேள்வி...இதற்கு ரஜினி சொல்லுவார்

"ஜெயிச்சுட்டு இருக்கும் போதெ... அதாவது பிசியா இருக்கும் போதே எப்படி சும்மா இருக்குறதுன்னு படிச்சுகிறேன் ஏன்னா ஒரு நாளைக்கு வேலை இல்லாம ச்சும்மா இருக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்ல அதான்......"

என்று சொல்வர் உச்சத்தில் இருக்கும் போதே எதார்த்ததை பற்றி சொல்லியிருப்பார். அதே நேரத்தில் வெற்றியும் தோல்வியும் பாதிக்கும் மனோ நிலையை எல்லாம் கடந்து வந்து விட்டாலும்...இன்று தலைமுறைகள் தாண்டியும் ஒரு எந்திரனாய் எல்லோரையும் மிரட்டிக் கொண்டு இருக்கிறார் என்றால்...

ஒரு மனிதனின் சக்தி எவ்வளவு பாருங்கள்....? உலகில் இருந்து ஆயிரம் உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம் என்றாலும் கண் முன்னே நான் பிரமித்துப் போனது இந்த மனிதனிடம் தான்.....

அரசியல் தலைவனாக பார்க்காமல்...ஆன்மீக குருவாக பார்க்காமல்.... நடிப்பில் சிறந்த ஒரு கலைஞனாக பார்க்காமல்....ஒரு மனிதனாய்.....எங்கே இருந்து எங்கே.......அவர் பயணித்திருகிறார்.....இந்த பிரமிப்புதான் ஒரு வேளை அவர் மீது உள்ள ஈர்ப்பின் காரணமோ...?

"சீத்தாங்கல்" விட்ட சந்தோசம்...எந்திரன் பாட்டு கேட்ட பின்..அடுத்த சீத்தாங்கல் விடுவேன்...படம் ரிலீசான முதல் நாள்....!


தேவா. S

32 comments:

சௌந்தர் said...

நான் தான் முதல் டிக்கெட்

ப.செல்வக்குமார் said...

ஆனா நான் கமல்ஹாசன் ரசிகர் அண்ணா ..!!
உங்களுக்கு ரஜினி மேல் வரும் உணர்வுகள் எனக்கு கமல் மேல் வருகிறது ..!!

சௌந்தர் said...

செளந்தர் தம்பி எனக்கு மெயிலில் இரண்டு பாடல்களை அனுப்பி வைத்தான். இரவு 9:30 மணிக்கு (இரவு 11மணி இந்திய நேரத்துக்கும் நான் கேட்டு விட்டேனே என்று பொறுமையாக அதை அனுப்பி வைத்த தம்பிக்கு நன்றி)

பாடல் வெளி வருவதற்கு முன்னால் கொடுத்து விட்டேன்....
அது மட்டும் இல்லாமல் படத்தின் அனைத்து பாடல் டவன் லோட் லிங்க் கொடுத்தும் நான் தான்.....பாடல்கள் பூம் பூம் ரோபோ, Kadal Anukkal சூப்பர்.........

வெறும்பய said...

அண்ணா நீங்களுமா..

எனக்கும் சிறு வயதிலிருந்தே ரஜினியை பிடிக்கும்.. எப்படி எதற்கு என்று தெரியாது..ஆனால் பிடிக்கும்.. அதிலும் அந்த மனிதனின் ஸ்டைல் என்றால் ஒரு ஈர்ப்பு...

அந்த ஈர்ப்பு சிறு வயது முதல் இன்று வரை கொஞ்சம் கூட குறையாமல் இருக்கிறது..

வெறும்பய said...

அண்ணா நீங்களுமா..

எனக்கும் சிறு வயதிலிருந்தே ரஜினியை பிடிக்கும்.. எப்படி எதற்கு என்று தெரியாது..ஆனால் பிடிக்கும்.. அதிலும் அந்த மனிதனின் ஸ்டைல் என்றால் ஒரு ஈர்ப்பு...

அந்த ஈர்ப்பு சிறு வயது முதல் இன்று வரை கொஞ்சம் கூட குறையாமல் இருக்கிறது..

வெறும்பய said...

சௌந்தர் said...
பாடல் வெளி வருவதற்கு முன்னால் கொடுத்து விட்டேன்....
அது மட்டும் இல்லாமல் படத்தின் அனைத்து பாடல் டவன் லோட் லிங்க் கொடுத்தும் நான் தான்.....பாடல்கள் பூம் பூம் ரோபோ, Kadal Anukkal சூப்பர்.........

///

அடப்பாவிகளா நீங்கெல்லாம் இப்படி டவுன்லோட் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி அவங்க போட்டா காச எடுப்பாங்க..

(சரி சரி எனக்கும் அந்த லிங்க் அனுப்பி குடு நண்பா..)

அருண் பிரசாத் said...

சும்மா அதிருதுல்ல....

வில்சன் said...

இரும்பிலே ஒரு இருதயம் . . . பாட்டு எனது ஃபேவரைட் பாட்டு.

ஜீவன்பென்னி said...

yes u r correct. எனக்கும் தெரியாது ரஜினி பாடம் ஏன் உடிக்குதுன்னு.

காதால் அண்ணுக்கள்..... என் பேவரைட்..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

தலைவாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

அவருக்கு நிகர் அவரே

எனக்கு பிடித்த பாடல்கள் எல்லாமே :)

S Maharajan said...

//ஏன் ரஜினியைப் பிடிக்கும்//

நானும் கிட்டதட்ட இதே கேள்வியை தான் நண்பா 22வருடமாக என்னுள்ளே கேட்டு
கொண்டேஇருக்கிறேன்,கேள்விஎழும் நேரேம் ஏதவாது தலைவர் பாடல் வந்துவிட்டால் போதும் உடனே கத்துவேன்
தலைவா நீ வாழ்க நூறுஆண்டு என்று.

இராமசாமி கண்ணண் said...

என்ன வேனா சொல்லுங்க... எந்திரன் மியுசீக் ரிலிஸ்ல ஒரு வார்த்த சொன்னாரு பாருங்க ஜஸ்ட் 150 கோடின்னு.. 150 கோடி ஜஸ்ட்டாம்.. கேட்டு நொந்து போனேன்..

இராமசாமி கண்ணண் said...

வெறும்பய said...

சௌந்தர் said...
பாடல் வெளி வருவதற்கு முன்னால் கொடுத்து விட்டேன்....
அது மட்டும் இல்லாமல் படத்தின் அனைத்து பாடல் டவன் லோட் லிங்க் கொடுத்தும் நான் தான்.....பாடல்கள் பூம் பூம் ரோபோ, Kadal Anukkal சூப்பர்.........

///

அடப்பாவிகளா நீங்கெல்லாம் இப்படி டவுன்லோட் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி அவங்க போட்டா காச எடுப்பாங்க..

(சரி சரி எனக்கும் அந்த லிங்க் அனுப்பி குடு நண்பா..)
--
boss அவங்களுக்கு 150 கோடியே ஜஸ்ட்தான்.. அதுனால இதுல எதுவும் ஆகாது அவங்களுக்கு...

cheena (சீனா) said...

அன்பின் தேவா

ரஜனியைப் பற்றிய உண்மையான ரசிகனின் இடுகை. நன்று நன்று. பிடிக்கும் என்பதற்குக் காரணங்கள் தேவை இல்லை.

நல்வாழ்த்துகள்ள் தேவா
நட்புடன் சீனா

Ananth said...

Super star patri Super varthaigal.

ஹேமா said...

ரஜனியைப் பிடிக்காதுன்னு சொன்னாலும் அவரில ஒரு பிடிப்பு இருக்குத்தான்.அவரது பழைய படங்கள் புவனா ஒரு கேள்விக்குறி,எங்கேயோ கேட்ட குரல் மிகவும் பிடிக்கும்.எனக்கும் ரஜனியைப் பிடிக்கும்!

Chitra said...

ரஜினி ......... ரஜினி........ ரஜினி...................
CHARMING!!!!!!!!

Chitra said...

சாரி, 150 வது trailer பாத்துக்கிட்டு இருக்கேன்... கமென்ட்ஸ் போட நேரம் இல்லை... Blogkku leavu!

ஜெயந்தி said...

எனக்கும் ரஜினி ரொம்ப பிடிக்கும். பழைய ரஜினி படங்களை இப்போது பார்த்தீங்கன்னா அந்தப் படத்துல அவரோட நடிப்பு, உழைப்பு, அந்த அர்ப்பணிப்பு எல்லாம் தெரியும். அதுதான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இப்போதும் அவர் ஷுட்டிங்குக்கு வந்தால் எளியாக எல்லோரிடமும் பழகுவதாக சக கலைஞர்கள் சொல்வதைக் கேட்கும் போது அவரின் உயர்வின் காரணம் புரிகிறது.

அன்புடன்-மணிகண்டன் said...

தேவா.. இடுகையும் அட்டகாசம்.. தலைவரைப் போலவே...

கே.ஆர்.பி.செந்தில் said...

//"ஜெயிச்சுட்டு இருக்கும் போதெ... அதாவது பிசியா இருக்கும் போதே எப்படி சும்மா இருக்குறதுன்னு படிச்சுகிறேன் ஏன்னா ஒரு நாளைக்கு வேலை இல்லாம ச்சும்மா இருக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்ல அதான்......"//

this is rajni But I like 70's rajni..

சே.குமார் said...

அது சரி...
எந்திரன் உலா ஆரம்பமாயாச்சா?
இனி வலைக்குள் ரஜினி மட்டுமா?

ஜெய்லானி said...

//கொஞ்ச நேரம் தத்துவங்களையும், விவாதங்களையும், ஆராய்ச்சிகளையும், எல்லா வியாக்கியனங்களையும் விட்டுவிடப் போகிறேன்.....,//

அடப்பாவி அப்ப இத்தனை நாள் எழுதியது சீரியசாவா ..? நா ஜோக்குன்னுல்ல நினைச்சிகிட்டு இருக்கேன் ஹி..ஹி..

//ஆமாம் இந்த கட்டுரையில் கருத்து தேடாதீர்கள்//


நா எப்பங்க தேடி இருக்கேன் இப்ப தேட க்கி..க்கி...

MANO said...

SUPERB BOSS...

EXCELLENT WRITING STYLE.. AND NICE POST...

MANO

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

LK said...

அவரை ஒரு மனிதராக பாருங்கள். சாதாரண நடத்துனராக இருந்து இன்று இவ்வளவு உயரத்தில் இருந்தும் அவரிடம் பணிவு விலகவில்லை. இது நாம் அவரிடம் இருந்து கற்க வேண்டியது. ஒரு கவுன்சிலர் ஆனாலே அலம்பல் பண்ணுகின்ற நபர்கள் இருக்கின்றனர். இவர் என்றும் சூப்பர் ஸ்டார் தான்

Karthick Chidambaram said...

Rajini is Rajini.

விஜய் said...

நானும் இன்னமும் புரியாமல் தான் அண்ணா நிற்கிறேன், அவரை பற்றிய அனைத்தையும் விட்டுத்தள்ளுங்கள்..எங்கோ இருந்த மனிதனின் வளர்ச்சி எங்கே பயணித்துள்ளது பாருங்கள் ...எந்த ஒரு செயலிலும் தனக்கென ஒரு ஸ்டைல் இருந்தா பொழுதும், இந்த உலகத்தோட கவனத்தை ஒரு நொடியாவது நம்மை நோக்க வைத்துவிடலாம் என புரியவைத்து இருக்கிறார்...

அருமையனா யாதார்த்த பதிவு அண்ணா ....
நீங்க கலக்குங்க அண்ணா ..

விக்னேஷ்வரி said...

:)

ARAN said...

குளிர் எப்படி இருக்கும்? எனக்குத் சொல்லத்தெரியாது அது போல ...ரஜினி பிடிக்கும்
சத்யமான வார்த்தைகள் அருமையான பதிவு நன்றி

ARAN said...

அப்புறம் தலைவர் பற்றிய உங்கள் பதிவுத்தொடர் ரொம்ப நாளா தொங்கிட்டு இருக்கு என்ன ஆச்சு?

R.Gopi said...

ரஜினி... என்கிற மூன்றெழுத்து மந்திரம்...

இதை உச்சரிக்காதோர் மிக குறைவு...

ஆயிரம் நடிகர்கள் வந்தாலும், ரஜினி ரஜினி தான்... அவரின் புகழையும், உயரத்தையும் இன்னொருவர் அடைவதற்கு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டடடடடடட நாட்கள் ஆகும்........

அடக்கம், எளிமை, பணிவு, உதவி செய்யும் நற்குணம் என்று பல்வேறு முகங்கள் காட்டிடும் எளிய மனிதன் ரஜினியை நான் நேசிக்க ஆரம்பித்தது மிகவும் சிறிய வயதிலேயே....

எந்திரன் பாடல்கள் பட்டையை கிளப்புகிறது... சிவாஜி படத்திற்கு பின், முழுமையாக பாடல்கள் ஹிட்டானதும், சேல்ஸ் ஆன பட ஆல்பமும் எந்திரன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....