Pages

Thursday, August 19, 2010

ஆறு...!ஒரு கலைக்கப்பட்ட உறக்கத்தின்...
எச்சத்தில்மிதந்து கொண்டிருந்த...
கனவில் கடக்கப்படாத ஆற்றின்..
தூரத்தை அளந்து....அளந்து
மொத்தமாய் விழித்ததில்...
மரித்துப் போனது சொச்ச உறக்கமும்!

வெறுமையில் கிளைத்த எண்ணங்களில்...
நிறைந்து இருந்தது கடந்து போயிருந்த
நாளில் நாம் தொலைத்த காதல்....!
வேண்டமென்று நீ சொன்னதும்...
அது சரிதானென்று என் மனது சொன்னதும்...
ஒன்றாய் சங்கமித்த நொடிகளில்...
உடைந்து போனது கண்ணாடி காதல்...!

விளக்க முடியாத உணர்வாய்...
பிரிதலில் பீறிட்டு கிளம்பிய
காதலின் உணர்வுகள் பிம்பங்களற்று
பிழிந்தெடுத்த உணர்ச்சிகளின்
வெளிப்பாடு காதலை எனக்குள்...ஊற்றியதில்
மிரட்சியாய் எங்கோ வெறித்த...
என் நினைவுகளோடு நகர்ந்து கொண்டிருந்தது
அந்த கெட்டியான இரவு....!

பெற்றாலும்,இழந்தாலும் தொடரும்...
காதலின் அவஸ்தைகளை புறம்தள்ளி...
மீண்டும் தொடர நினைத்த உறக்கத்தில்..
வரப்போகும் ...ஏதோ ஒரு கனவில்...
மீண்டும் வரவழைக்க நினைத்தேன்...
நான் கடக்க முடியாத ஆற்றின்..தூரங்களை...!

ஒரு கனவில் பொய்த்தது...
மறு கனவில் ஜெயிப்பதில் மறைந்திருக்கும்
வாழ்வியல் சூட்சுமத்தை கற்றுக் கொடுக்கும்
ஆசையில்... காத்திருந்த நித்திரையொடு..
கலந்த கணத்தில் உயிர்த்தது....
உருவமில்லா ஒரு காதலும்...கரை தொடப் போகும்
என் காட்டாற்று கனவும்...!


ஒரு காதல் தொலைகிறது....மறு காதல் துளிர்க்கிறது என்ற வாழ்வியல் நியதிதான் கவிதையின் கரு. மிரட்சியாய் இருக்கும் ஏமாற்றங்களை உற்று நோக்கும் தருணங்களில் ஆச்சர்யமாய் திறக்கப்படுகிறது வாழ்க்கையின் அடுத்த கதவு. காதலென்று ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு கவிதையில் பேசியிருந்தாலும்...எல்லா ஏமாற்றங்களின் முடிவிலும் காத்திருக்கும் வாழ்வின் அடுத்த பயணத்துக்கான வாகனம்.

மிரட்சியில் வாகனம் தொலைத்துவிடாமல்...தேடலில் தொடருவோம் பயணத்தை.....! எந்த தோல்விகளும் அல்லது இழப்புகளும் இன்னும் உக்கிரமாய் தெளிவாய் பயணிக்க வைக்கும்.... நம்மை புரிதல் கொண்ட மானுடனாய்.....!தேவா. S

51 comments:

சௌந்தர் said...

அந்த கெட்டியான இரவு...///அன்று இரவு தூக்கும் வரலை போல

vinthaimanithan said...

சுமக்கவியலாக் கனவுகளின் உள்ளிருந்து உக்கிரமாய் உயிர்த்தெழுந்து நம் குருதிப்பலி கேட்கும் தாய்த்தெய்வங்களின் கண்களில் வழியும் மறக்கருணையின் குரூரத்தில் சுடரிழந்து போகும் விழிகளின் நீர் ஒரு நதியாய்ப் பெருகையில் அதை எங்ஙனம் கடப்பேன் நான்?

சௌந்தர் said...

என் காட்டாற்று கனவும்...!///

அண்ணா இது கனவு இல்லை நல்ல கண் விழித்து பாருங்கள்....


வாகனம் தொலைத்துவிடாமல்// அதுக்கு தான் காப்பீடு இருக்கே பரவயில்லை

ஜீவன்பென்னி said...

நகரும் ஒரு விளைவை அல்லது ஒரு உணர்வை அல்லது ஒன்றின் முடிவிலே தொடங்கும் மற்றொன்றை என்று இந்த வரிகள் எல்லா இடங்களிலும் பொருந்திப்போகின்றது.

Anonymous said...

//மிரட்சியாய் இருக்கும் ஏமாற்றங்களை உற்று நோக்கும் தருணங்களில் ஆச்சர்யமாய் திறக்கப்படுகிறது வாழ்க்கையின் அடுத்த கதவு.//
//மிரட்சியில் வாகனம் தொலைத்துவிடாமல்...தேடலில் தொடருவோம் பயணத்தை.....! எந்த தோல்விகளும் அல்லது இழப்புகளும் இன்னும் உக்கிரமாய் தெளிவாய் பயணிக்க வைக்கும்.... நம்மை புரிதல் கொண்ட மானுடனாய்.....! //
நம்பிக்கை வரிகள்!

//விளக்க முடியாத உணர்வாய்...
பிரிதலில் பீறிட்டு கிளம்பிய
காதலின் உணர்வுகள் பிம்பங்களற்று
பிழிந்தெடுத்த உணர்ச்சிகளின்
வெளிப்பாடும் காதலை எனக்குள்//

அருமையான வரிகள் அண்ணா!
வழக்கம் போல் சிந்தனையை பல வழிகளில் பயணிக்க வைக்கும் உங்கள் எழுத்து!

ஜில்தண்ணி said...

தொலைந்த ஒரு காதல் துளிர்க்கும் மற்றொறு காதல் , ஒரு தோல்வியைத் தாண்டிய மற்றொறு வெற்றி
இவையெல்லாம் நம் வாழ்க்கையின் அன்றாடத்தின் நியதி தானே

ரசித்தேன் :)

சௌந்தர் said...
This comment has been removed by the author.
செல்வா said...

நிச்சயம் காதல் மட்டும் அல்ல , மனிதனின் வாழ்கை இந்தப் பயணத்தில்தான் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது ..//ஒரு காதல் தொலைகிறது....மறு காதல் துளிர்க்கிறது என்ற வாழ்வியல் /// இதுதான் உண்மை..
//எந்த தோல்விகளும் அல்லது இழப்புகளும் இன்னும் உக்கிரமாய் தெளிவாய் பயணிக்க வைக்கும்.... நம்மை புரிதல் கொண்ட மானுடனாய்.....!//
நிச்சயம் தோல்விகள் தான் நம்மை வெற்றியின் மீதான ஒரு விருப்பத்தை ஏற்ப்படுத்துகிறது ...

ஜீவன்பென்னி said...

//சவுந்தர்@ அந்த கெட்டியான இரவு...///அன்று இரவு தூக்கும் வரலை போல

என் காட்டாற்று கனவும்...!///

அண்ணா இது கனவு இல்லை நல்ல கண் விழித்து பாருங்கள்....
ஏதோ ஒரு கனவில்...
மீண்டும் வரவழைக்க நினைத்தேன்...//


நம் நினைக்கும் போது அந்த கனவு வாரது அண்ணா //

வாகனம் தொலைத்துவிடாமல்// அதுக்கு தான் காப்பீடு இருக்கே பரவயில்லை //

யாராச்சும் ஆட்டோ அனுப்பினா பரவாயில்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Its nice and good

சௌந்தர் said...

ஏதோ ஒரு கனவில்...
மீண்டும் வரவழைக்க நினைத்தேன்...//


நம் நினைக்கும் போது அந்த கனவு வராது அண்ணா

அருண் பிரசாத் said...

கலக்கல் அண்ணே!

dheva said...

எல்லோரும் ஓ.கே....!

சரி... செளந்தர் தம்பிக்கு என்னாச்சு...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

க.பாலாசி said...

எக்ஸ்பிரஸன்ல கலக்குறீங்க தலைவரே...
படிக்கப்படிக்க மலைப்பு.

//வெறுமையில் கிளைத்த எண்ணங்களில்...
நிறைந்து இருந்தது கடந்து போயிருந்த
நாளில் நாம் தொலைத்த காதல்....!
வேண்டமென்று நீ சொன்னதும்...
அது சரிதானென்று என் மனது சொன்னதும்...
ஒன்றாய் சங்கமித்த நொடிகளில்...
உடைந்து போனது கண்ணாடி காதல்...!//

இந்த கோர்வையும் வடிவமும் அருமை...

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Its nice and good
அருண் பிரசாத் said...
கலக்கல் அண்ணே!//

ரெண்டுபேரும் என் கையில சிக்குனீங்க சட்னிதாண்டி...முழுசாப் படிச்சீங்களா, புரிஞ்சுதா...அதென்ன ’nice’, ’கலக்கல்’.

நானும் கலையிலேர்ந்து படிச்சி... படிச்சி..., பாதி முடி காமம போனதுதான் மிச்சம்...

கவிதை எழுதுர ஜில்தண்ணி பயபுள்ள ஒரு கமெண்ட் போட்ருக்கு...சரியாத்தான் இருக்கும்.

தேவா ஜில்தண்ணியோட கமெண்டை என்னோடதாவும் எடுத்துக்குங்க.

நோ..நோ... இது என்ன கெட்டப்பழக்கம்...கையில அயுதமெல்லாம் தூக்கக்கூடாது...எதா இருந்தாலும் பேசித்தீத்துக்கலாம்... ஒன்னுக்குள்ள ஒன்னா பலகிட்டு...

dheva said...

ஜெய்.....@


சிரிச்சு சிரிச்சு...மாளல..கண்ணுல தண்ணி வந்துடுச்சு...! நான் தான் சொன்னென்ல... நைட் 11 மணிக்குள்ள உங்களுக்கு புரிஞ்சுதுடுச்சுனா...உங்களுக்கு ஒரு கிஃப்ட் ஆம்பர் பரிசு........!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு.....! பி கேர் புல்.... நான் ஜெய்கிட்ட சொன்னேன்...ஹா..ஹா..ஹா..!

dheva said...

ஜில்தண்ணி...@

போட்டுக்குடுக்குற ரூட்ல நீ ஆட்டோ ஓட்டுவேன்னு பாத்த....ரோடு ரோலர்ல ஓட்டுற...ஹா..ஹா..ஹா..!

dheva said...

பாலசி....@ உங்க கிட்ட பாடம்தான்... பாலாசி.....பூவை பத்தி சொல்லி என்னமா விளையாடி இருந்தீங்க...!

dheva said...

ஜீவன் பென்னி...@ ஆட்டோ எப்படி அனுப்பறது...

ஒரு ஒட்டகம் பார்சல்........திருவொற்றியூருக்கு...! செளந்தர்.. அடிச்சி சாப்பிட்டுடாதிங்கப்பு....ஒட்டகத்தை...!

dheva said...

செல்வு......@ தம்பி மட்டும்தான் ரொம்ப சீரியசா படிச்சு புரிஞ்சு இருக்கான்...ஏம்பா...!

dheva said...

பாலஜி சரவணா...@ நன்றி தம்பி....பதிவு போட்ட லிங்க் அனுப்புங்கப்பு....!

dheva said...

சிரிப்பு போலிஸ் தான் ப்ரமோசன் கொடுத்தாச்சே ஜெய்... இப்போ அவன் அவசர போலிஸ் 100 (100 பதிவு போட்டு 100வது பதிவுல போட்டான் பாருங்க லத்தி சார்ஜ்....மறக்கவே முடியாது)

dheva said...

அருண் பிரசாத்...@ எப்ப தம்பி..ஊருக்கு வர்ற? மொரிஷியஸ்லயே செட்டிலா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிரிப்பு போலிஸ் தான் ப்ரமோசன் கொடுத்தாச்சே ஜெய்... இப்போ அவன் அவசர போலிஸ் 100 (100 பதிவு போட்டு 100வது பதிவுல போட்டான் பாருங்க லத்தி சார்ஜ்....மறக்கவே முடியாது) //

thanks brother.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரெண்டுபேரும் என் கையில சிக்குனீங்க சட்னிதாண்டி...முழுசாப் படிச்சீங்களா, புரிஞ்சுதா...அதென்ன ’nice’, ’கலக்கல்’.

நானும் கலையிலேர்ந்து படிச்சி... படிச்சி..., பாதி முடி காமம போனதுதான் மிச்சம்...//

puththisaalinkalukku puriyum

அருண் பிரசாத் said...

அண்ணா, விட்டுருங்க பேசி தீர்த்துகலாம். நீங்க இந்தியா போகாத நேரமா பாத்து வந்துட்டு ஓடிடுறேன்.

Equator - கோட்டை தாண்டி நீங்க வரக்கூடாது நானும் வர மாட்டேன்.

VELU.G said...

//ஒரு காதல் தொலைகிறது....மறு காதல் துளிர்க்கிறது என்ற வாழ்வியல் நியதிதான் கவிதையின் கரு.
//

கொடுத்து வைத்தவரய்யா நீர். ஒரு காதல் கல்யாணத்தில் தொலைந்தவுடன் மறுகாதலைத் துளிர்க்க வைக்கிறீர்களா.

//
வெறுமையில் கிளைத்த எண்ணங்களில்...
நிறைந்து இருந்தது கடந்து போயிருந்த
நாளில் நாம் தொலைத்த காதல்....!
வேண்டமென்று நீ சொன்னதும்...
அது சரிதானென்று என் மனது சொன்னதும்..
//

கலக்கலான வரிகள்

dheva said...

அருண் பிரசாத்...@ எப்ப தம்பி..ஊருக்கு வர்ற? மொரிஷியஸ்லயே செட்டிலா?

dheva said...

விந்தை மனிதன்....@ தம்பியோவ்.........என்ன சொல்றவோ...!

dheva said...

வேலு....@ வீட்ல மாட்டி விட்றாதிங்கண்ணோவ்....!

விஜய் said...

எங்கேயோ துளைத்த காதலையும், காதலியும் தேடிக்கொண்டு இருக்கும் வேளையில், எனக்கான மனைவியை உறுதியே செய்துவிட்டது இயற்கை, இயற்கை தரும் இதயங்களை தாண்டியும் இன்னொமொரு நாளில் புதிது புதிதாய் காதல் , பார்க்கும் அழகிய பொருட்களில் எல்லாம், காதல் தீரும்வரை காதலிப்போம் உடல்களை தாண்டிய இயற்கையின் புரிதலை...

அண்ணா உங்க இந்த கவிதையை புரிந்துகொள்ள பல நிமிடங்கள் பிடித்தது, அதற்கான அனுபவம் இல்லையோ?, உங்களின் எழுத்தை புரிந்து கொள்ளும் திறமை இல்லையோ என்று தெரியவில்லை, இருப்பினும் கவிதையை உணர்ந்த தருணத்தில் இனிக்கிறது ..

சௌந்தர் said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

தொலைவதை தேடுவதிலும், தேடுவதில் தொலைவதும் போல தான் ஒரு காதல் தொலைகிறது....மறு காதல் துளிர்க்கிறத..

ஆனால் வாழ்வில் தேடல்களும் முடிவதில்லை, தொலைதல்களும் முடிவதில்லை..

அருண் பிரசாத் said...

அண்ணா, விட்டுருங்க பேசி தீர்த்துகலாம். நீங்க இந்தியா போகாத நேரமா பாத்து வந்துட்டு ஓடிடுறேன்.

Equator - கோட்டை தாண்டி நீங்க வரக்கூடாது நானும் வர மாட்டேன்.

அன்புடன் நான் said...

காலமெல்லாம் காதலோடு வாழ்க!!

கவிதை நல்லயிருக்கு..... பாராட்டுக்கள்.

உசிலை மணி said...

// Jey said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Its nice and good
அருண் பிரசாத் said...
கலக்கல் அண்ணே!//

ரெண்டுபேரும் என் கையில சிக்குனீங்க சட்னிதாண்டி...முழுசாப் படிச்சீங்களா, புரிஞ்சுதா...அதென்ன ’nice’, ’கலக்கல்’.

நானும் கலையிலேர்ந்து படிச்சி... படிச்சி..., பாதி முடி காமம போனதுதான் மிச்சம்...//

ஜெய் அண்ணே, உங்கள் பின்னூட்டங்களில் மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறீர்கள்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Jey

//ரெண்டுபேரும் என் கையில சிக்குனீங்க சட்னிதாண்டி...முழுசாப் படிச்சீங்களா, புரிஞ்சுதா...அதென்ன ’nice’, ’கலக்கல்’.

நானும் கலையிலேர்ந்து படிச்சி... படிச்சி..., பாதி முடி காமம போனதுதான் மிச்சம்...///

ஹா ஹா ஹா.. முடியல... jey :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஒரு கனவில் பொய்த்தது...
மறு கனவில் ஜெயிப்பதில் மறைந்திருக்கும்
வாழ்வியல் சூட்சுமத்தை கற்றுக் கொடுக்கும்
ஆசையில்...///

கவிதை அருமை..
இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.. தேவா..!!
ஒன்றில் தோற்றால், மற்றொன்றில் ஜெயிப்பது வாழ்வியல் சூட்சுமம்...என்பதை அழகா எழுதி இருக்கீங்க..

ஜெய்லானி said...

@@@Jey --//நானும் கலையிலேர்ந்து படிச்சி... படிச்சி..., பாதி முடி காமம போனதுதான் மிச்சம்...//

யோவ் ஜே..உனக்காவது முடிதான் கொட்டுச்சி நா இன்னும் அழுதுகிட்டு இருக்கேன் சத்தியமா ஒன்னுமே பிரியல ..அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

மாம்ஸ் கட்டுரை சூப்பர்...

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--//
This post has been removed by the author. //


அண்ணே..!!!எது இருந்தாலும் வெளியே சொல்லிடுங்க..தேவா ரெம்ப நல்லவரு..!! இப்பிடி நீங்க தனியா மனசுக்குள்ள அழறது சரியில்ல...ஹி..ஹி...

dheva said...

ஜெய்லானி....வாங்க மாப்ள....கட்டுரை சூப்பரா.....

மாப்ளைக்கு கண்ணும் டொக்கா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மண்டைய நல்ல பிச்சுக்கோங்க.. ஏற்கனவே.. நிறைய போயிருச்சு அப்பு...!

ஜெய்....@ பாஸ் நீங்க சொன்னீங்கள்ள..அதே மாறி சொல்லி மாட்டிகிட்டாரு ஜெய்லானி.... நீங்க ஜெயிச்சுட்டீங்க...!

dheva said...

ஜெய்லானி....@ நீ துபாய் பக்கம் வாடி!...உனக்கு இருக்கு ஆப்பு...ஹா..ஹா..ஹா...!

dheva said...

ஜெய்லானி....@ சும்மாயிருக்குற தம்பிய உசுப்பேத்தி விடாதீங்கா..மாப்பு.........


சரி சரி நாளைக்கு லீவுதானே..ட்யூசனுக்கு வந்துடுங்க...!

ஹேமா said...

ஒரு கனவில் பொய்த்தால்....
மறு கனவில் ஜெயிக்கும் இந்தக் காதல்.
அவஸ்தையை தூர நின்று அழகு பார்க்கும்
ராட்சதக் காதல் !

dheva said...

ஹேமா...@ ராட்சசக் காதல்...சரியாதான் சொல்லியிருக்கீங்க........!

ஜெய்லானி said...

//மாப்ளைக்கு கண்ணும் டொக்கா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

அச்சோ..நீங்கே ஏன் அழறீங்க அதான் நா அழுதுகிட்டு இருக்கேனே..அவ்வ்வ்வ்

//மண்டைய நல்ல பிச்சுக்கோங்க.. ஏற்கனவே.. நிறைய போயிருச்சு அப்பு...! //

அப்ப இது கட்டுரை இல்லையா....? நாந்தான் ஏமாந்துட்டேனா..? ஓஹ் அப்ப கதை சூப்பருஊஊ ( வடிவேல் பாணியில் படிங்க)


//ஜெய்லானி....@ நீ துபாய் பக்கம் வாடி!...உனக்கு இருக்கு ஆப்பு...ஹா..ஹா..ஹா...! //

துபாயா அது எங்கே இருக்கு..? நம்ம ஈரோடு பக்கமா..ஹி..ஹி..

sakthi said...

விளக்க முடியாத உணர்வாய்...
பிரிதலில் பீறிட்டு கிளம்பிய
காதலின் உணர்வுகள் பிம்பங்களற்று
பிழிந்தெடுத்த உணர்ச்சிகளின்
வெளிப்பாடு காதலை எனக்குள்

வாவ் அருமை தேவ்!!!

Dr. Srjith. said...

அருமை நண்பரே

Chitra said...

பெற்றாலும்,இழந்தாலும் தொடரும்...
காதலின் அவஸ்தைகளை புறம்தள்ளி...
மீண்டும் தொடர நினைத்த உறக்கத்தில்..
வரப்போகும் ...ஏதோ ஒரு கனவில்...
மீண்டும் வரவழைக்க நினைத்தேன்...
நான் கடக்க முடியாத ஆற்றின்..தூரங்களை...!


...... wow! simply superb! தெளிந்த நீரோடையாய் தெரியும் கவிதை ஆற்றின் உள் பொதிந்து இருக்கும் மன நிலையையும் உணர்வுகளையும் அர்த்தங்களையும் கண்டு கொள்கிறேன். அருமை!

Mohamed Faaique said...

".எல்லா ஏமாற்றங்களின் முடிவிலும் காத்திருக்கும் வாழ்வின் அடுத்த பயணத்துக்கான வாகனம்."

intha vari romba pudichchirukku...