Pages

Tuesday, August 3, 2010

கனவு காணுங்கள்....!எந்த கணமும் தாக்குதல் நடத்தப்படலாம்,உடலின் எங்கே வேண்டுமனாலும் அம்புகள் தைக்கலாம், எதிரியின் வாள் வீச்சில் எப்போது வேண்டுமானாலும் கழுத்தறு படலாம், உறக்கத்தையும் பசியையும், உறவுகளையும் கடந்து...இரவையும், பகலையும், வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது எந்நேரமும் வாள் வீசிக் கொண்டு இருப்பவன் தான் போராளி.....

கூச்சலுக்கும்,அலறலுக்கும் சுற்றி கிடக்கும் பிணங்களுக்கும் நடுவே..இருப்பவனுக்குத் தெரிவதெல்லாம் ஒன்றேதான் லட்சியம்....! தம்முடைய சோர்வு தமது சகாக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று எப்போதும் தன்னை முன்னிறுத்தி.....முன்னேறி.. முன்னேறி தனது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் சுற்றியுள்ள தோழர்களுக்கு பரவச் செய்கிறானே...அவனின் புத்தியில் வேறு என்ன இருந்து விடப் போகிறது....?

கொள்கையும் லட்சியமும்தானே?

வாள்களின் வீச்சு..
கேட்டு… கேட்டு மரத்துப் போயின
எமது செவிகள்!
சோர்ந்து போன எதிரிகளின்
யுத்திகள் எல்லாம்...
எம்மை அழிக்கு உ பாயம் அறியாது...
கலங்கச் செய்கின்றன..புத்திகளை!
பட்ட இடமெல்லாம்...
பரவும் நெருப்பினை தோட்டாக்களும்
அம்புகளும் வாள்களும்...
என்னதான் செய்ய முடியும்?
ஒன்று நீர் நெருப்பாய் மாற வேண்டும்
அல்லயேல்... நீர் நீராய்...மாறி...
எம்மை குளிர்விக்க வேண்டும்...
குளிர்விக்கும் உபாயம்..அறிந்திலீர்;
வாரும் நெருப்பாய் மாறூம்...
எம் உக்கிரத்தினை ...
கற்று.. திக்கெட்டும் பரவி...
கொடுமைகளை..எரித்துப் போடும்!

ஒரு டாக்டர் தொழில் நடத்தி வாழத்தெரியாதவரா சேகுவாரா....? மூன்று வேளை உண்டு,பொருள் தேடிச் சேர்த்து, பிள்ளை குட்டிகளுடன் சுகவாசியாய் வாழ்ந்து மரிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

பிறகு எதில் செளகரியம் அவருக்கு வீட்டை விட்டும்,பிள்ளைகளை விட்டும் பிரிந்து செல்ல அவரை உந்தியது எது? அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவிற்காக அவர் போராடவேண்டிய அவசியம் என்ன? ஒரு நாட்டின் தொழில்துறை அமைச்சராய் இருந்து சுக போகங்களை அனுபவிக்கத்தெரியாதவரா சே....?

கியூபாவிற்கு பிறகு, காங்கோ, பொலிவியா என்று அந்த மனிதன் நகர்ந்து கொண்டே இருந்த நோக்கம்தான் என்ன? உள்ளே எரிந்த “ தீ ” தானே? அத்தனை பெரிய தீ எரியாவிட்டாலும் கூட பரவாயில்லை தோழர்களே..வாழ்வின் போக்கு போகிற போக்கில் இயன்றதை செய்வோம் என்ற நெருப்பு ஏன் நம்மிடம் இல்லை?

இன்னும் ஒற்றை ஓட்டுக்கு கையில் பணம் திணிக்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வாங்கும் நிலையில் வைத்திருப்பதால்தான் கொடுக்கமுடியுமென்ற மிகப்பெரிய சதிதானே ஓட்டரசியல்? சகித்து சகித்து எப்படி தோழா வாழ்வது...? பேசிப் பேசி தீர்த்துவிட முடியுமா எல்லா பிரச்சினைகளையும்!

" தெருவோர குப்பைகளைக் கூட மதித்து ஒரு குப்பைத்தொட்டி கட்டிவிடுகிறார்கள். குடியிருக்க வீடில்லாதா எம்மக்களை எப்படி ரோட்டோரம் விட்டு வைத்தார்கள்? "

முடியுமா? சாத்தியமா? நடக்குமா என்று கோடிகுரல்கள் கேட்கின்றனவே...ஐயகோ! கேட்கின்ற குரல்கள் எல்லாம் உரக்க சப்தம் செய்தல் கோட்டை கொத்தளங்கள் எல்லாம் பொடிப்பொடியாய் ஆகதா? மேலும் மேலும் எம்மக்களை ஆட்டு மந்தைகளாக்கி சுய நல சேற்றில் தள்ளிவிட்டு சுகம் காணும் அதிகார வர்க்கங்கள் தூள் தூள் ஆக வேண்டாமா?


சாலையோரத்தில் சிறு நீர் கழித்துக்கொள்ளுங்கள், தெருவெங்கும் காறி உமிழுங்கள், குப்பை கூளங்கள் போடுங்கள்.ஒத்த பிள்ளைக்கு உடையில்லாவிட்டாலும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுங்கள், சண்டையிடுங்கள், சாதியாய் பிரிந்து நில்லுங்கள், மதமாய் மாய்த்துக் கொள்ளுங்கள். அரசு அதிகாரங்களுக்கு அதுதானே வேண்டும்...! நாம் எல்லோரும் வெற்று வயிறோடு பசி.....பசி என்று கத்திக் கொண்டே.....வாக்குகள் அழித்து விட்டு துரைமார்களைப் பார்த்து தலைவா…… என்று கும்பிட்டுக் கொண்டே இருப்போம்....அவர்களும் வெள்ளை வேட்டி சட்டையோடு அம்பாஸிடர் கார்களில் பவனி வரட்டும்!

தேர்தலில் இதைச் செய்கிறேன் அதைச்செய்கிறேன் என்று சொல்வது பார்த்தும், செய்து விட்டேன் எமது இதுதான் சாதனைப் பட்டியல் என்று பல்லிளித்துக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் எப்போது நமக்கு ஆத்திரம் வருமோ அந்த ஒரு நாள் தான் இந்தியாவின் ஒரு உண்மையான சுதந்திர நாள்.. ஏகாதிபத்தியம் மனதளவில் ஒழியும் நாள்....

" நீவீர் ஆட்சிக்கு வந்தால் எம்மக்களுக்கு செய்துதான் ஆகவேண்டும்...அது உமது பணி ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து எமது பிரதி நிதியாகத்தானே நீங்கள் செல்கிறீகள்...? ஒட்டு மொத்த மக்களாகிய நாங்கள் வரமுடியாது...என்று எமது பிரச்சினைகளை பிரதிபலிக்கும் எமது கோரிக்கைகளை கோட்டையில் சொல்லும் பிரதி நிதிகள் நீங்கள், அதற்காகத்தான் வாக்களித்து உம்மை தேர்ந்தெடுத்தோம்...!

மக்களை அதிகாரம் செய்ய அல்ல அரசு, அது மக்களையும் மக்களின் பிரச்சினைகளையும் நிர்வாகம் செய்ய.....! இங்கே எப்படி வந்தது முதாலாளித்துவமும், கூளைக் கும்பிடுகளும்? கேள்விகளை நமக்குள்ளேயே கேட்டு கேட்டு ......வெறுமனே மண்ணில் அடிமைகளாய் அழுகிபோவாதா எமது மூளைகள்....?இப்போது சொல்லுங்கள் போர் எங்கே நடக்க வேண்டும் என்று...?

ஒரு தெருவிளக்கு விடியல் தாண்டியும் எரிகிறதென்றால்....அங்கே நமது வரிப்பணம் விரயமாகிறதென்ற எண்ணம் ஏன் நமக்கு உதிப்பதில்லை? இலவசாமாய் நாம் பெறும் பொருளெல்லாம் கொடுப்பவர்களின் சொத்திலிருந்தா கொடுக்கப்படுகிறது.....வள்ளல் பட்டம் எதற்கு...? விருத்திக்கு வரும் தொழிற்சாலைகளையும் வேலை வாய்ப்புகளையும் கேட்க மறந்து கலர்பெட்டிகளின் மீது ஆசைப்பட்டதில் என்ன தோழா நியாயம் இருக்கிறது....?


மாறாக வேளாண்மை செய்யும் உரத்தின் விளையை குறைத்திருக்கலாம்....எல்லா பிள்ளைகளின் கல்லூரி வரையான கல்வியை இலவசமாக்கியிருக்கலாம்.ம்ம்ம்ம்ம்ம் அறிவு விருத்தி வேண்டாமென்று தானே எம்மக்களை அழிவு விருத்திக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்...?

சமூக பிரஞ்ஞை எல்லாம் யாரோ ஒரு அரசியல் கட்சி தலைவனுக்கும், ஒரு நடிகனுக்கும், அல்லது பத்திரிக்கையாளனுக்கும், தொலைக்காட்சி வைத்திருப்பவருக்கும் மட்டும் வரட்டும்....மீதியுள்ள ஜனங்கள் எல்லாம் வாய் பிளந்து காத்திருக்கட்டும்....

கடவுள் என்று ஒருவர் வருவார்... பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பாரென்று…!

கடவுள் இதுவரை வந்ததில்லை இனியும் வரப்போவது இல்லை செயல்படவேண்டியது எல்லாம் மனிதர்களாகிய நாம்தான்…

இதை யார் உணர்வார்? (இந்தக் கேள்வியைக் கூட மாற்றிதான் கேட்க வேண்டும்)

யார் உணர்த்துவார்?(யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருப்போம் ஜனநாயக அடிமைகளாக......)

மேலே உள்ள புகைப்படம் சினிமா சூட்டிங் அல்ல இந்திய வீதிகளில் எடுக்கப்பட்டதுதான்...!


தேவா. S

38 comments:

கலாநேசன் said...

//சமூக பிரஞ்ஞை எல்லாம் யாரோ ஒரு அரசியல் கட்சி தலைவனுக்கும், ஒரு நடிகனுக்கும், அல்லது பத்திரிக்கையாளனுக்கும், தொலைக்காட்சி வைத்திருப்பவருக்கும் மட்டும் வரட்டும்....மீதியுள்ள ஜனங்கள் எல்லாம் வாய் பிளந்து காத்திருக்கட்டும்....//

நச்......

இராமசாமி கண்ணண் said...

அண்ணே நாந்தான் பஸ்ட்...

இராமசாமி கண்ணண் said...

//முடியுமா? சாத்தியமா? நடக்குமா என்று கோடிகுரல்கள் கேட்கின்றனவே...ஐயகோ.. கேட்கின்ற குரல்கள் எல்லாம் உரக்க சப்தம் செய்தல் கோட்டை கொத்தளங்கள் எல்லாம் பொடிப்பொடியாய் ஆகதா?//
வொய் இந்த மர்டர் வெறி....

இராமசாமி கண்ணண் said...

ஐயகோ நான் பஸ்ட் இல்லையா...

இராமசாமி கண்ணண் said...

//ஒரு தெருவிளக்கு விடியல் தாண்டியும் எரிகிறதென்றால்....அங்கே நமது வரிப்பணம் விரயமாகிறதென்ற எண்ணம் ஏன் நமக்கு உதிப்பதில்லை? //
லைட்ட ஒடச்சு நம்ம எதிர்ப்ப காட்டலாமன்னே

இராமசாமி கண்ணண் said...

//அரசு அதிகாரங்களுக்கு அதுதானே வேண்டும்...!
//
ஐயாம் சாரிண்ணே. இது அரசியல்வா(வியா)தீங்களுக்கு இருந்தா நல்லா இருக்கும்

இராமசாமி கண்ணண் said...

jokes apart.. ரொம்ப நல்ல பதிவு.. மக்களே உண்ரலீன்னா ஒன்னும் பன்ன முடியாது...

விடுத‌லைவீரா said...

இந்த கட்டுரை படித்த பிறகாவது நாம் மனிதர்களாக வாழ முயற்சி செய்வோம். எப்போதும் குடும்பம் உறவு என்று சுருங்கிய வட்டத்துக்கு இருந்த நாம் இனி தொலை நோக்கு பார்வையுடன் சிந்திப்போம். வாழும் நாட்களில் நம்மால் முடிந்த உதவியை செய்துவிட்டு போவோம். எதை கொண்டுவந்தோம் இழப்பதற்கு. இருப்பதை அனைவருடன் பகிர்ந்து சந்தோசமாய் வாழ்வோம்.. மிகவும் என்னை பாதித்த கட்டுரை இது.நான் உணர்ந்த வலி உங்களுக்கும் ஏற்பட்டு இருக்குமாயின் இதை எழுதிய தோழர் தேவா அவர்கள் தன் எழுத்தின் மூலம் சிகரத்தை தொட்டுவிட்டார். நன்று என்று பின்னூட்டம் எழுதுவதை விட உங்களுக்கு ஏற்பட்ட மற்றத்தை பதிவு செய்யுங்கள். அதுவே அவருக்கு மிக பெரிய உந்து சக்தியாக இருக்கும்...இன்னும் தொடரும்

ஜெய்லானி said...

என் கனவில் அனுஷ்கா வராங்களே என்ன செய்ய..டாக்டர்..?


ஓஹ்..சாரி நா தலைப்ப பாத்துட்டு டாகடர் தேவான்னு நினைச்சிகிட்டு உள்ளே வந்துட்டேன் .

ஆ...இது நம்ம மாப்பி தேவா அப்ப...பதிவு சூப்பர் ...!!

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு தேவா! கை கட்டி போட்டிருக்கு. அரசியல்/அரசு இயந்திரம் பத்தி ஒன்னும் சொல்ல முடியாம. ஆமாம் நான் ‘சே’ இல்லையே:(. படத்தில இருக்கிற பையன மாதிரி கவலையில்லாம ஒரு பை தூக்கிட்டு போற மனப்பக்குவமும் இல்லையே.:(. எல்லாம் விட கண்ணுக்கு முன்ன ஒரு மாயமான் இருக்கு. அதெல்லாம் உங்களுக்கு தெரியுதில்லையே. எனக்குத் தெரிஞ்சும் சொல்ல முடியலையே.:(

கே.ஆர்.பி.செந்தில் said...

சுயநலம் மிக்கவனே இப்பூமியில் சந்தோசமாக வாழ்கிறான்..

நசரேயன் said...

//யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருப்போம் ஜனநாயக அடிமைகளாக......//

நான்தானே அது

அருண் பிரசாத் said...

தமிலிஷ்ல ஓட்டு போட முடியல, Error வருது அப்புறம் போடுறேன்.

வழக்கம் போல பதிவு கலக்கல்

இராமசாமி கண்ணண் said...

//நசரேயன் said...

//யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருப்போம் ஜனநாயக அடிமைகளாக......//

நான்தானே அது //

என்னாது.. அவர் யாருன்னு இங்க போய் பாருங்க..

http://satturmaikan.blogspot.com/2010/03/blog-post_18.html

இராமசாமி கண்ணண் said...

//கஅருண் பிரசாத் said...

தமிலிஷ்ல ஓட்டு போட முடியல, Error வருது அப்புறம் போடுறேன்.

வழக்கம் போல பதிவு கலக்கல்
//
அவரு என்னா பீலிங்ஸோட எழுதிருக்க்காரு.. எப்படி எழுதிரூக்காருன்னு ஒன்னும் சொல்லாம தமிழிஷ், இங்கிலிஷ்னுட்டு..

dheva said...

நன்றி கலா நேசன்...!

dheva said...

இராமசாமி கண்ணன்...@ நீதான் பர்ஸ்ட்டு நினைச்சேன்.... நண்பர் கலா நேசன் அதுக்கு முன்னால இருக்காரு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

dheva said...

இராமசாமி கண்ணன்...@ ஏன் இந்த கொலை வெறி உனக் குதம்பி...இத்தனை கமெண்ட்..


1) தெருவிளக்க குறி பாத்து உடைச்சிருக்கியா...அங்கயும் இதான் பண்றியா?


2) உனக்கு கூரியர்ல கார்ன்ஸ் பஜ்ஜி அண்ணிகிட்ட சொல்லி அனுப்பிவைக்கிறேன்...உன் அடம் தாங்கலையேப்பா...

dheva said...

வீரா....@ உணர்வுக்கு நன்றி தோழர்!

dheva said...

ஜெய்லானி......@ மாப்பு....சார்ஜால கரண்ட் போற ஒரு ராத்திரி வர்றேன்....அரிவளோட...மின்வெட்டு நேரத்தில உங்களுக்கு வெட்டு நிச்சயம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Anonymous said...

உருப்படியாக நம்மால் என்செய்து விட இயலும்?

dheva said...

வானம்பாடிகள் பாலா @

அண்ணா...உங்களின் உணர்வும், புரிதலும் என்னால் உணர முடிகிறது...! கருத்துப் பகிர்வுகு நன்றி அண்ணா...!

dheva said...

அருண் பிரசாத்...@ மிக்க நன்றி தம்பி...!

dheva said...

நசரேயன்....@ நன்றி தோழர்

ஜீவன்பென்னி said...

அண்ணே உங்கள் கோபம் நியாயமானது. நிறைய பேரின் மனதிலே இருக்கக்கூடிய ஆதங்கம் தான் இது. என்னிலே இருக்கக்கூடியதும் . ஆனா கையாலாகாத கோபமா இருக்கு. நாம இங்க தனியா நின்னு போராட முடியாதே. சுயநலம் பெரிதாகிவிட்ட காலத்துல அத அரசியல் வாதிகள் தங்களுக்கு சாதகமா வளர்த்து மங்காம பார்த்துக்கொள்றாங்க. உங்களுக்குள்ள இருக்குற நெருப்பு எனக்குள்ளையும் இருக்கு. ஆனா அது புரயோசனபடுமாங்குறதுக்கு பதில் இல்ல.

நானோ இல்ல நீங்களோ இல்ல மூனாவதா ஒருத்தரோ தன்னலவுல மாறனும்,அப்படிமாறும் போது அது ஒரு கூட்டமா உருமாறும். இந்த மாதிரி ஒரு வலைபின்னல் சாத்தியமாச்சுன்னா, தூங்கிக்கிட்டு இருக்குறவங்கள எழுப்ப முயற்சி செய்யலாம்.

இதற்கான சாத்தியம் ரொம்ப இல்ல இருக்கான்னே தெரியல.

மதுரை சரவணன் said...

//" தெருவோர குப்பைகளைக் கூட மதித்து ஒரு குப்பைத்தொட்டி கட்டிவிடுகிறார்கள். குடியிருக்க வீடில்லாதா எம்மக்களை எப்படி ரோட்டோரம் விட்டு வைத்தார்கள்? "///
\
\வரிகள் வலிக்கிறது.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Chitra said...

தேர்தலில் இதைச் செய்கிறேன் அதைச்செய்கிறேன் என்று சொல்வது பார்த்தும், செய்து விட்டேன் எமது இதுதான் சாதனைப் பட்டியல் என்று பல்லிளித்துக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் எப்போது நமக்கு ஆத்திரம் வருமோ அந்த ஒரு நாள் தான் இந்தியாவின் ஒரு உண்மையான சுதந்திர நாள்.. ஏகாதிபத்தியம் மனதளவில் ஒழியும் நாள்....

.....உண்மை. வெள்ளையரிடம் இருந்து சுதந்திரம் வாங்கி விட்டோம், இனி இந்த அரசியல் கொள்ளையர்களிடம் இருந்து விடுதலை எப்பொழுது? அல்லது, யாருக்காகவது அடிமையாக இருக்கவே, காலம் காலமாக பழகி விட்டதா?

மக்களை சிந்திக்கச் செய்யும் பதிவு.

jothi said...

இன்றைய நம் சமுதாய நிலையை மிக தெளிவாய் போட்டுருக்கீங்க , வாழ்க சமுதாய புரட்சி ............தீ பொறி பரவட்டும் .................

Karthick Chidambaram said...

அருமையான பதிவு தேவா! ஆனால் இங்கே புரட்சி எல்லாம் வெடிக்காது.
யாரும் நாளையை பற்றி கவலை படவில்லை. தன்னையும் இன்றையும் பற்றியே கவலை.

வெறும்பய said...

அருமையான பதிவு தேவா அண்ணா..

வெள்ளையனிடமிருந்து வாங்கிய சுதந்திரத்தை இன்று வெள்ளை வெட்டி சட்டைகளிடம் பறி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்,,

LK said...

சாட்டையடி தேவா. மேலும் சுழலட்டும் உங்கள் வாழும் சாட்டையும்.. மக்களிடம் இதை கொண்டு சேர்ப்போம்

சௌந்தர் said...

தெருவோர குப்பைகளைக் கூட மதித்து ஒரு குப்பைத்தொட்டி கட்டிவிடுகிறார்கள். குடியிருக்க வீடில்லாதா எம்மக்களை எப்படி ரோட்டோரம் விட்டு வைத்தார்கள்?///

அனைத்திற்கும் சுயநலம் தான் காரணம், வீடு கட்டி கொடுத்தால் அவர்கள் அந்த வீட்டுக்கு போவது இல்லை அதை சில ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விடுகிறார்கள் மறு படி குடிசை போட்டு தங்குகிறார்கள்...

mkr said...

தனி நபராய் நாம் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் அவரவர் தங்களுடைய வேலையை பார்த்து செல்கின்றனார்.

ஆனால் ஒன்று நிச்சயமாக உணர்த்துவதற்கு யாரும் வரபோவதில்லை.வந்தாஅலும் நாம் உணர போவதில்லை.முதலில் நாம் மாறுவோம்

LK said...

//உங்கள் வாழும் //

வாளும் . மாற்றிக் கொள்ளவும்

அமைதிச்சாரல் said...

//நீவீர் ஆட்சிக்கு வந்தால் எம்மக்களுக்கு செய்துதான் ஆகவேண்டும்...அது உமது பணி ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து எமது பிரதி நிதியாகத்தானே நீங்கள் செல்கிறீகள்...? ஒட்டு மொத்த மக்களாகிய நாங்கள் வரமுடியாது...என்று எமது பிரச்சினைகளை பிரதிபலிக்கும் எமது கோரிக்கைகளை கோட்டையில் சொல்லும் பிரதி நிதிகள் நீங்கள், அதற்காகத்தான் வாக்களித்து உம்மை தேர்ந்தெடுத்தோம்...//

இலவசங்களைத்தாண்டி மக்கள் என்னிக்கு சிந்திக்கிறாங்களோ, அன்னிக்கு கட்டாயம் இந்தக்கேள்வியை கேப்பாங்க..

Jay said...

அற்புதமான படைப்பு.

//" தெருவோர குப்பைகளைக் கூட மதித்து ஒரு குப்பைத்தொட்டி கட்டிவிடுகிறார்கள். குடியிருக்க வீடில்லாதா எம்மக்களை எப்படி ரோட்டோரம் விட்டு வைத்தார்கள்? "//

அருமையான வரிகள்.

இன்று காலை ஆளுங்கட்சி பேரணி நடத்தியது அதனால் நான் அலுவலகம் சென்று சேர ஒரு மணி நேரம் தாமதமானது.

அப்பொழுது என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.

ப.செல்வக்குமார் said...

///சாலையோரத்தில் சிறு நீர் கழித்துக்கொள்ளுங்கள், தெருவெங்கும் காறி உமிழுங்கள், குப்பை கூளங்கள் போடுங்கள்.ஒத்த பிள்ளைக்கு உடையில்லாவிட்டாலும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுங்கள், சண்டையிடுங்கள், சாதியாய் பிரிந்து நில்லுங்கள், மதமாய் மாய்த்துக் கொள்ளுங்கள். அரசு அதிகாரங்களுக்கு அதுதானே வேண்டும்...! நாம் எல்லோரும் வெற்று வயிறோடு பசி.....பசி என்று கத்திக் கொண்டே.....வாக்குகள் அழித்து விட்டு துரைமார்களைப் பார்த்து தலைவா…… என்று கும்பிட்டுக் கொண்டே இருப்போம்....அவர்களும் வெள்ளை வேட்டி சட்டையோடு அம்பாஸிடர் கார்களில் பவனி வரட்டும்!////

அருமை அண்ணா ..!! நமக்குள் விழிப்புணர்வு வரும் வரை இப்படித்தான் ..!!
இலவச மோகம் நம்மை விட்டொழிய வேண்டும் .. அதை விட மக்களுக்குள் முறையாக எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் .. ஏனெனில் உதாரணத்திற்கு உங்களுக்கு வாகனம் ஓட்ட தெரியாது அல்லது உங்களுக்கு நேரம் இல்லை என்பதற்காக நீங்கள் ஒருவரிடம் பணம் கொடுத்து ஓட்டுனர் உரிமம் பேர நினைக்கிறீர்கள் என்றாள் தவறு உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கிறது .. ஒவ்வொருவரும் தமது தவறினை உணர வேண்டும் ..!!

வில்சன் said...

அரசியல் சாக்கடையில் புரளும் பன்றிகள் மத்தியில் யார் இறங்கி சுத்தம் செய்வது? பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது போல ... சரி விடு . . . வா ... நாம் கனவு காண்போம்