Pages

Sunday, September 5, 2010

இரவு...!


சுருண்டு கொண்ட புலன்களில்
மடிந்து போன புற இயக்கத்தின்
எச்சதில் மீந்திருக்கும்....
அடர்த்தியான மெளனத்தில்
புலன்கள் தீட்டிய ஓவியங்களின்
வர்ணங்கள் காற்றில் மிதக்கும்
கனவுகளாய் வழிந்தோட
சுவாசத்தின் துணையோடு
ஆக்சிஜன் சேமிக்கும்...
மூளைகளுக்குள் எப்போதாவது...
நான் இருப்பேன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...

இமை கவிழும் நேரத்தில்
கருமையாய் எனைச் சூழும்
மெய்மையை பொய்மை என்று
கட்டியங்கூறும் விடியலில்
புறம் பாயும் புலன்களின்
கூட எழும் அகங்காரங்களில்
எப்போதும் மறந்து போகிறது
சவமாய் நான் கிடந்த....
முந்தைய இராத்திரி.....!


ஒவ்வொரு இரவின் உறக்கத்தையும் தப்பாமல் மறந்து விடுகிறோம். உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா? அப்படி பார்க்கும் தருணத்தில் தெரியும் வெளிச்சம் என்பது பொய்.... கருமையான இருள் எனது மெய்யென்று.

மாற்றி மாற்றிப் பழக்கம் கொண்டதாலேயே...... எதார்த்தமான உண்மைகளை எப்போதும் ஒதுக்கியே வைத்து வேண்டுமென்று மறக்கிறோம். உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...!


தேவா. S

26 comments:

வெறும்பய said...

உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...!

//

True Lines

விந்தைமனிதன் said...

அநியாயத்துக்கு சாமியார் கணக்கா போய்கிட்டே இருக்கீங்க. வீட்டுக்கு போனவொடனே அண்ணிகிட்ட ஃபோன் பண்ணி கொடுங்க... நான் பேசினாத் தான் சரிப்படும்.

ganesh said...

உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?\\\\

உண்மையில் இல்லைதான்....அருமையான வரிகள்..

விந்தைமனிதன் said...

//உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?//

நான் பாத்திருக்கேனே! ஆனா ஒண்ணு... அப்டியே தூங்கிடுவேன்

dheva said...

விந்தை மனிதன்..@ தம்மி..ஹா...ஹா...ஹா...


அண்ணிகிட்ட எதுக்கு சொல்லிகிட்டு... நாமளே தீத்துக்குவோம்....மேலிடத்துக்கு பிரச்சினை போச்சுனா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பத்மா said...

புலன்கள் தீட்டிய ஓவியங்களின்
வர்ணங்கள்,
காற்றில் மிதக்கும்
கனவுகளாய் ..வழிந்தோட

கலர் கனவுகள் ..

உறக்கம் போலும் சாக்காடு ...
ஆம் அது ஒன்று தான் நிலையானது

Mohamed Faaique said...

எப்பொழுதும் தனிமை, உறக்கம், கனவு, இரவு என பேய் சுத்துற எரியாலையே சுத்துறீங்க... எனக்கும் விந்தை மனிதன் சொன்னதுதான் சரியாப்ப் படுது...

சௌந்தர் said...

உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?///

எதற்க்கு பார்க்க வேண்டும். உறக்கம் என்பது எதற்கு அண்ணா

பிரியமுடன் ரமேஷ் said...

Arumaiyaga yeludhi irukkireergal. Valthukkal

சௌந்தர் said...

வீட்டில் சரியா தூங்க வில்லை என்றால் இப்படி தான்

என்னது நானு யாரா? said...

சாவுக்கு ஒத்திகை தான் இந்த உறக்கம். எல்லாமும் மாயை என்று கனவை கண்டு எழுந்தவுடனே தெரிந்து விடுகிறது.

ஆனால் கனவு காணும் சயத்தில் அது தான் சத்தியம் என்றும் உண்மை என்றும் நினைத்து கொண்டிருக்கின்றோம். இதனை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால் அவன் தான் ஞானி!

தமிழ் உதயம் said...

உறக்கம் என்பது என்ன. அதை நாம் கவனிக்க முற்பட்டமா என்கிற ரீதியில் மலர்ந்த கவிதை. எனக்கு பிடித்திருக்கிறது.

dheva said...

பத்மா...@ ஆம்...சாக்காடு போன்றது உறக்கம்....உறக்கம் போன்றது சாக்காடு....

============

Mohamed Faaique said... @ தம்பி பேய் சுத்துற ஏரியால தான் வாழுறோம்....ரொம்ப பயந்த மாதிரி இருக்கு...திங்க் பண்றேன்...வேற தளத்தில் எழுத....ஹா..ஹா..ஹா..!

=================
செளந்தர்...@ உறக்கம் என்பது தூங்க....விழிப்பு என்பது வாழ....அப்படின்னுதானே நினைக்கிற...இல்லை...உறக்கம் என்பது வாழ...விழிப்பு என்பது தூங்க....குழப்புறேனா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

==============

தமிழ் உதயம் @ உண்மைதான் நண்பரே....இன்று காலையில் எழுந்தவுடன்... உறக்கத்தில் மறந்தது எதை என்ற ஆராய முற்பட்ட கணத்தில் எழுத தூண்டப்பட்டது இந்த கவிதை...!

==================

பஸ்ஹான் said...

வார்த்தைகள் கையாளபப்பட்டிருக்கும் முறை அருமை. இருந்தும் எனக்கு ஒரு சின்னக் குறை அதாவது முதல் இரண்டு பந்திகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும் வசன நடை சற்று கடினமானதாய்த் தோன்றுகின்றது.


#இமை கவிழும் நேரத்தில்
கருமையாய் எனைச் சூழும்
மெய்மையை பொய்மை என்று
கட்டியங்கூறும் விடியலில்
புறம் பாயும் புலன்களின்
கூட எழும் அகங்காரங்களில்
எப்போதும் மறந்து போகிறது
சவமாய் நான் கிடந்த....
முந்தைய இராத்திரி.....!#
நான் ரசித்த வரி keep it up totally good.

LK said...

vaarthaigalil vilayaadi irukkireergal dhevaa
//மூளைகளுக்குள் எப்போதாவது...
நான் இருப்பேன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...
///
yaar aathu

ஜீவன்பென்னி said...

ANNE PURIYALA.........

cheena (சீனா) said...

அன்பின் தேவா

இதுதான் வாழ்க்கையின் தத்துவம் - விழித்த பின்னர் தான் உறக்கம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விழிக்க விலை எனில் அது உறக்கம் அல்ல.

நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா

JMBatcha said...

உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...!

இராமசாமி கண்ணண் said...

அண்ணே நிரம்ப கஷ்டம்ணே.. முடில...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?
//
இப்படி பார்த்தா வேற பேரு சொல்லுவாங்க தேவா :))....

அன்பரசன் said...

Nice..

சே.குமார் said...

ஆம் இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம்.
நல்ல பதிவு.

VELU.G said...

பதிவு அருமையா இருக்கு தேவா

இருந்தாலும் எனக்கும் விந்தைமனிதன் சொல்றதுதான் சரின்னு படுது

கொஞ்சம் அந்த subject விட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டு எழுத ஆரம்பிச்சிங்கன்னா இன்னும் வீரியமாக இருக்கும்னு தோனுது

வாழ்த்துக்கள்

பதிவுலகில் பாபு said...

அருமையான பதிவு..

நல்லாயிருக்குங்க..

Mahi_Granny said...

அநியாயத்துக்கு சாமியார் கணக்கா போய்கிட்டே இருக்கீங்க; இது தான் நான் சொல்ல வந்ததும் .

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

இருளான நேரத்தில்
எதுவும் தோன்றா மோனத்தில்
அலை பாயும் மனத்தை
அங்கேயே நிறுத்தி வைக்கும்
ஆத்ம தேடலில்.....
அமைதியாய் கரைந்து
அடங்கிப் போகின்றேன்....
ஆர்ப்பாட்டங்கள் ஏதும் அற்று..!!!

....தேவா.. உங்கள் உறக்கம் கவிதைக்கு... பதில் இப்படி சொல்ல ஆசை.. :-)