Pages

Wednesday, September 8, 2010

பாபு....!விடிந்து விட்டது....என்பதை உணர்ந்த பாபு ஏன் விடிந்தது என்று கவலையாய் எண்ணத் தொடங்கியிருந்த மனோ நிலைக்கு காரணம் இருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்து விட்டு ...அடுத்து என்ன? என்ற கேள்விக்குறிக்கு பின்னால் என்ன என்று தெரியாமல்....வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு யோசனையை சொல்லி... வேதியல் பட்டதாரியான அவனை கொத்தி.. குதறிக் கொண்டிருந்தார்கள்......!

சந்தோசமாய் கழிந்த கல்லூரி நாட்கள் போய்விட்டதே என்ற மிரட்சியில் இருந்து மீண்டு வரமுடியாத பாபுவின் முன்னால் பக்கது வீட்டுக்காரர்களும், எதிர் வீட்டுக்காரர்களும் கூடிக் கலந்து இருக்கும் இந்த சமுதாயம் ரொம்பவே பயமுறுத்தியது...பற்றாக்குறைக்கு ஒரு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கல்லூரி காதல் வேறு ரொம்பவே அவனை தொந்திரவு படுத்தியது.


துரை… என்ன இன்னும் தூக்கமா...காலையில எழுந்து ஏதாச்சும் உருப்படியா செய்றானா பாரு... நேரத்திலேயே எழுந்து செய்ய வேண்டிய வேலைகளை செய்யணும் வேலை இருக்கோ இல்லையோ.....காலையில எழுந்துடனும்...அலுவலம் செல்ல தயாரகிக்கொண்டிருந்த அப்பாவின் வசவுகள்...பழகிப் போன ஒன்றுதான்...!

படுக்கையில் காபி கொண்டு வந்து கொடுத்த அம்மா சொன்னாள்… எழுந்து குளிச்சுட்டு வாப்பா...சீக்கிரம் என்று சொல்லி விட்டு அடுக்களைக்கு பறந்தாள்......காபி டம்ளர் காலியானவுடன்..... என்னசெய்வது அடுத்து ....ம்ம்ம்ம்ம்...இரண்டு நாளில் சென்னைக்கு செல்லவேண்டும் அங்கு இருக்கும் நண்பனின் அண்ணன் ரூமில் தங்கி வேலை தேடவேண்டும்....

ஆமாம்...என்ன வேலை தேடுவது....? நான் படித்த கல்லூரியில்...வேதியல் ப்ராக்டிகல் வகுப்பில் கூட எல்லா மாணவர்களையும் வைத்துக் கொண்டு விரிவுரையாளரே...பென்சாயிக் ஆசிட் ப்ரிபேரசன் செய்து விடுவார்...எங்களுக்கு நோட்ஸ் வைத்துதான் படிக்க சொல்வார். சால்ட் அனாலிஸிஸ் மற்றும் டைட்ரேசன் செய்வது இது இரண்டு மட்டும்தான் நாங்கள் செய்யும் ப்ராக்டிகல்.

வேதியல் படித்து அதில் முதல் வகுப்பில் பாஸ் பண்ணியிருந்தாலும்...கணக்கும் பிசிக்சும் ஆன்சிலரியாய் இருந்தாலும்...எல்லாமே... எங்களைப் பொறுத்த வரைக்கும்...பரிட்சைதான்...மார்க்தான்..! +2 வரைக்கும் தமிழ் மீடியம் படித்து விட்டு....கல்லூரியில் ஆங்கிலம் என்பது...புரபசர் கொடுக்கும் நோட்ஸ்தான்...அந்த நோட்சே எழுத முடியாமல் நிறைய பேர்....

பாடம் நடத்தும் விரிவுரையாளரும்...தமிழில்தான் நடத்தி நோட்ஸ் கொடுப்பார். விளங்கி படிப்பவர்கள்... +2 வரைக்கும் ஆங்கில வழி கற்றவர்கள்தான்...எங்களுக்கு அது மனப்பாடம் செய்யவேண்டிய நிலைதான்....தெர்மோடனமிக்ஸும், ஆர்கானிக், இன் ஆர்கானிக் எல்லாம் எனக்கு எப்படி வாழ்க்கையை போதிக்க போகிறது....ம்ம்ம்ம் சேல்ஸ் ரெப் ஆகலாம்..ஆனால் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும்.... நான் சரளமாக பேசமுடியாமல் போனதற்கு என் சூழலும் ஒரு காரணம்...கல்லூரி வந்துதான் ஆங்கிலத்தை ஒரு சப்ஜக்டாக பார்க்த நாங்கள் ஒரு புது விலங்கை போல தொட்டு தொட்டு பார்ப்பது போல பார்த்து ஆச்சர்யமாய் ஆங்கிலம் பேசுபவர்களோடு பழக ஆரம்பித்தோம்...

கெமிஸ்ட்ரி படித்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணியாச்சு....? அடுத்து என்ன செய்வது? வேலை தேடு.....இதுதான் பதில்....கிராமப்புற மாணவனுக்கு நகரத்து மாணவனுக்கு கிடைக்கும் விசய ஞானம் கிடைப்பது இல்லை...பெரும்பாலும் ஆளுக்கொரு யோசனை சொல்லி குழப்பத்தில் தள்ளி விட்டு...கல்லூரியில் படிக்கும் போது இருந்த திமிர் அடித்து நுரைத்து கரையும் நேரங்களில்....பெரும்பாலும் கண்ணீரோடு...ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு...என்ன வாழ்க்கை இது என்று எண்ணும் தருணங்களில்....எல்லாமே விரக்தியாய்.......

படிக்க வைத்த பெற்றோருக்கு மார்க் வாங்கும் வரை கல்வி கற்க உதவி செய்யத் தெரியும்...சமுதாயத்திற்கு குறை சொல்லவே மட்டுமே தெரியும்.... வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு முன் அனுபவம் இருக்கானு கேட்க மட்டும் தெரியும்..?
….
…..
……
சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்து விட்ட பாபுவிற்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த அப்பா தைரியமா வேலை தேடு.... கிடைச்சுடும்...போனவுடனே கம்ப்யூட்டர் க்ளாஸ் சேந்துடு என்று யாரோ சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டு நாங்கள் எடுத்த முடிவையும் வலியுறுத்தினார்! அம்மாவின் அழுகை இரணப்படுத்தியது....அவளின் முந்தானைக்குள்ளேயே வளர்ந்தவன்... வாழ்க்கையின் அவசியம் விரட்டும் விரட்டலில் யார்தான் நிற்க முடியும்...ஓடிக்கொண்டேதான் இருக்கமுடியும் என்று அறியாத பாபு...கண்ணீரோடு....கையசைக்க பேருந்து ஓடத் தொடங்கியிருந்தது....

வேதியல் படித்து விட்டு....இனி கம்ப்யூட்டர் க்ளாசில் சேர்ந்து கொண்டே..வேலை தேட வேண்டும்....மிரட்சியில்....இருந்தான் பாபு.....அம்மா..அப்பாவை நினைக்கும் போது.... நெஞ்சு ஒரு பக்கம் அடைத்தது.... அம்மா அணைத்தும் அப்பா பிடித்து தள்ளி தனியே நிற்க சொல்லியும் வாழ்க்கையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்...

அரை குறை ஆங்கிலமும், பெட்டியில் இருக்கும் பட்டமும் என் சொத்து....வாழ்க்கை எப்போதும் தட்டில் இலை போட்டு எல்லாவற்றையும் உன் காலடியில் கொண்டு வந்து வைக்காது...உன் உணவிற்கும் வாழ்க்கைக்கும் நீ போராடித்தான் ஆக வேண்டும்.....அப்பா அடிக்கடி சொல்வார்....!

சும்மா எதுவும் கிடைத்தால்....அது நிலைக்காது அல்லது அதன் உயர்வு உனக்கு தெரியாது.......அடித்து பிடித்து.....ஓடு.... உன் இலக்கை அடைந்த பின் உனக்கு மமதை வராது.....அம்மா சொன்னது......

எது எப்படி இருந்தாலும் சரி..என் வழி முறைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்..... எனக்கு எது வேண்டும் எனக்கு தெரியும்...அதை எப்படி கொண்டு வருகிறேன் என்ற வழிமுறை என்ன்னைச் சார்ந்தது....ம்ம்ம்... நான் பார்த்துக் கொள்கிறேன்....! பாபுவுக்குள் இருந்த திமிர் வேறு வடிவம் எடுத்தது....எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருந்தால் எனக்கான வாழ்வு என்று ஒன்று இருக்காதா....என்னை பற்றி நானே தீர்மானிக்கிறேன்.... கன்ணாமூச்சி ஆடும் என் வாழ்க்கையை நானே கண்டு பிடிக்கிறேன்....!

சமுதாயமும், கல்வி முறையும், வழிகாட்டுதல் இல்லாமையும்....குறைகளாக இருக்கட்டும் அதை சொல்லி சொல்லி சொறிந்து புண்ணை பெரிதாக்காமல்................ நான் நிறைவானவன் இந்த குறைகள் என்னை ஒன்றும் செய்து விடாது....திமிர்...தன்னம்பிக்கை என்ற வேசம் கட்டியிருந்தது...பாபுவிற்குள்....

சைதாப்பேட்டை எல்லாம் இறங்கு....கண்டக்டரின் குரல் உறங்கியவர்களை எழுப்பியது....விழித்திருந்த...பாபு... தாவி இறங்கினான்........சூட்கேசோடு மெல்ல நடக்க ஆரம்பித்தான்......அவனுக்கான அற்புத வாழ்க்கைகையும்....எதிர்காலத்தையும் ஒளித்து வைத்துக் கொண்டு...மெளனமாய் ஒரு புன் முறுவலோடு விடியத் தொடங்கியிருந்தது சென்னை......

" பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! "


பின் குறிப்பு: கல்லூரி முடித்து வேலை தேடும், முரண்பாடுகளில் சூழலில் இருக்கும் எல்லா தம்பிகளுக்கும் இது சமர்ப்பணம்....!


தேவா. S

27 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

பதிவுலகில் பாபு said...

புதிதாய் வேலை தேடுபவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பதிவு..

படிக்கற ஒவ்வொருத்தரும் மேலே சொல்லியிருக்கற ஏதாவது ஒரு லைனை கிராஸ் பண்ணித்தான் வந்துருக்கோம்..

நல்லாயிருக்கு..

ப.செல்வக்குமார் said...

//சால்ட் அனாலிஸிஸ் மற்றும் டைட்ரேசன் செய்வது இது இரண்டு மட்டும்தான் நாங்கள் செய்யும் ப்ராக்டிகல்.///
இது நான் பன்னிரண்டாம் வகுப்பிலேயே செய்துவிட்டேனே ..!!

TERROR-PANDIYAN(VAS) said...

மாப்ஸ் வர வர புரியர மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டிங்க... பதிவு நல்லா இருக்கு...

Balaji saravana said...

நம்பிக்கை தரும் பதிவு அண்ணா!
நல்லா இருக்கு!

TERROR-PANDIYAN(VAS) said...

ப.செல்வக்குமார் said...
//சால்ட் அனாலிஸிஸ் மற்றும் டைட்ரேசன் செய்வது இது இரண்டு மட்டும்தான் நாங்கள் செய்யும் ப்ராக்டிகல்.///

இது நான் பன்னிரண்டாம் வகுப்பிலேயே செய்துவிட்டேனே ..!//

நீ என் செய்ய மாட்ட.. நீ நலாவது படிக்கும்போதே நாலு கொலை, இரண்டு வழிபறி பண்ணவன்தான...

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே அந்த அம்மா, அப்பா பத்தி சொன்னது ஒவ்வொரு கிராமப்புற இளைஞனின் வாழ்கையிலும் இருக்கும். நகர்ப்புற வாழ்க்கை பற்றி எனக்குத்தெரியாது.

வெறும்பய said...

மிகவும் தன்னம்பிக்கை தரும் பதிவு....

(இந்த பதிவு ஒரு தடவை படிச்சவுடனையே புரிஞ்சு போச்சு..)

pinkyrose said...

தேவா சார்
சமீபத்ல ஒரு பொண்ண சந்திக்க நேர்ந்தது
நல்ல புத்திசாலி
பயோ மெடிகல் போறா
ஆனா கிராமப்புரத்து பொண்னு

பயம் பயம் அவ்ளோ பயம் எவ்ளோ சொல்லி தைரியம் பண்ணி அனுப்புனொம்
இந்த பதிவ படிக்க சொல்லனும்
நன்றி

விஜய் said...

அண்ணா,
பதிவை படிச்சேன் ,மிக்க மகிழ்ச்சி அண்ணா, இன்றையா இளைங்கர்களுக்காய் என் அண்ணா ஒரு புதிய ஒரு உந்துதலை பதிவாய் வடிக்க ஆரம்பித்து இருக்கிறார் என நினைக்கையில் சந்தோசப்படும் முதல் ஆளாய் நான் தான் அண்ணா நிற்ப்பேன் , வாழ்த்துக்கள் அண்ணா, கொஞ்சம் ஆணி அதிகம் அண்ணா, அதான் பதிவ போட்ட உடனே படிக்க முடியாம போய்டுச்சு..
எப்படி இருந்தாலும் உங்கள் எழுத்துகள் ஜொலிக்கும் எப்பொழுதும் ,

//சமுதாயமும், கல்வி முறையும், வழிகாட்டுதல் இல்லாமையும்....குறைகளாக இருக்கட்டும் அதை சொல்லி சொல்லி சொறிந்து புண்ணை பெரிதாக்காமல்................ நான் நிறைவானவன் இந்த குறைகள் என்னை ஒன்றும் செய்து விடாது....திமிர்...தன்னம்பிக்கை என்ற வேசம் கட்டியிருந்தது//

அருமையான வரிகள் அண்ணா, நீங்கள் சொல்வதுபோல் பழிய யார்மேலையோ போடாமல் துணிந்து களத்தில் இறங்குவது தான் புத்திசாலி தனம்..அருமை அண்ணா..தொடருங்க ...நான் உங்களை தொடர்கிறேன்

dheva said...

பிங்கி ரோஸ்...@ உண்மைதான்....கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு எப்படி ஒரு நகரத்து வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சொல்லித்தர யாருமில்லை. நகரத்தில் படிக்க அல்லது வேலை தேடி வரும் கிராமப்புற மாணவர்களை நகரமும்.... நுனி நாக்கு ஆங்கிலமும் நிச்சயமாய் மிரட்டத்தான் செய்கிறது...

மிகச் சிலரே.. நகர்ப்புறங்களில் அரவணைத்து வழிகாட்டுகிறார்கள் இல்லையேல் கிண்டலும் கேலியையும் எதிர் கொள்ள வேண்டியவர்க்ளாக இருக்கிறார்கள் ...கிராமப்புற மாணவர்கள்..இதனால் ஏற்படும் கூச்சம் சர்வ நிச்சயமாய் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது.......

எல்லாவற்றையும் உடைப்பில் தூக்கி போட்டு விட்டு... கூச்சமில்லாமல் மேலே வருவது... தான் வெற்றிக்கான மனப்பாங்கு....!

என்னது நானு யாரா? said...

தேவா! இந்த கதையை படிக்கின்ற நேரத்தில் என் மனதில் தோன்றிய எண்ணங்கள்:

1. இன்னமும் எத்தனை காலத்திற்கு இப்படி போட்டி போடும் உலகமாக நம்முடைய நாகரீகம் இருக்க போகிறது

2. இந்த போட்டி போடுவதால் எல்லா துரோக செயல்களும், வஞ்சக செய்கைகளும் நியாயம் தான் என்று நியாயபடுத்தபடுகிறேதே. இது மாறும் காலம் வாராதோ?

3. விலங்குகளும், பறவைகளும் தங்களுக்கு வாய்த்த வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியோடு, நன்றாக ரசித்து வாழும் போது மனிதர்களுக்கு மட்டும் 'என்ன இந்த வாழ்க்கை' என்று விரக்தி தோன்றுகிறதே. இது தான் நாம் சாதித்து நிலைநாட்டிய நாகரீகத்தின் பெருமையா?

4. சாதரணமாக சின்ன சின்ன செயல்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிகளை எல்லாம் இழந்துவிட்டு, பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடி, பணம் சேர்த்த பின்னர், தொலைத்து விட்ட இன்பங்களை Plasma Tv -யும், பெரிய பங்களா வீடும், தோட்டமும், கார்களும் நமக்கு திரும்பவும் ஈட்டி கொடுக்க வல்லவையா?

5. உடலிலே பல நோய்கள், மனதிலே சதா அரிக்கும் கவலை. சிலர் முகம் பார்த்து சிரித்தால் கூட, மகிழ்ச்சியாய் பதிலுக்கு சிரிக்க முடியாமல் செயற்கை தனத்துடன் ஒரு புன்முறுவல்... அதுவும் கஷ்டபட்டு வெளிபடுகிறதே. இது தானா வாழ்க்கையின் இலட்சியங்கள்.

6. இந்த வெற்றிகளை வேட்டையாடத்தானா உங்களின் கதாநாயகன் அந்த பஸ்ஸில் இருந்து இறங்குகின்றான்.

உங்களின் சிந்தனைகள் என்ன? தெரிவியுங்கள் தேவா! படிக்க காத்திருக்கின்றேன்

அருண் பிரசாத் said...

ஒரு பதிவையாவது கும்முறமாதிரி ஜாலியா போடுங்க தல.... ஒரே செண்டிமெண்ட், சீரியஸ், டச்சிங்கா போட்டுட்டு....

அருண் பிரசாத் said...

//கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கவும்,//

எதுக்கு கிராமபுற மாணவர்கள் ஊக்கு, பின்னு, கொக்கிலாம் விக்கனும். டீசண்டா பேன்ஸி ஸ்டோர் வைக்க சொல்லுங்க

தமிழ் உதயம் said...

வாழ்க்கை, அனுபவம் எல்லாவற்றையும் கற்று தரும். எதிர் நிச்சல் போட, போராட. ஒரு ஊக்க சக்தி இந்த பதிவு.

சௌந்தர் said...

கல்லூரி பட்டிப்பு முடிந்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும், வேலைக்கு செல்லவில்லை என்றால் வீட்டில் நம் மீது படும் பார்வை அதிகம் ஆகும், கல்லூரி பட்டிப்பு முடிந்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல தன்னபிக்கை தரும் பதிவு

VELU.G said...

நல்லாயிருக்கு தேவா

நல்ல மாற்றம் தெரியுது

உங்களுக்குள் எரியும் கனல் எரிந்து கொண்டே இருக்கட்டும். சரியான நேரத்தில் சரியாக வெளிப்படும் எதுவும் நல்ல நிலைக்கு செல்லும்

வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க

ஹேமா said...

அம்மாவின் உற்சாகம் தரும் வார்த்தைகள் நம்பிக்கையின் உச்சம்.

அமைதிச்சாரல் said...

படிச்சு முடிச்சதுக்கும், வேலை கிடைக்கிறதுக்குமான இடைவெளி இளைஞர்களுக்கு ரொம்பவே கொடுமையான காலம் :-((

Chitra said...

சமுதாயமும், கல்வி முறையும், வழிகாட்டுதல் இல்லாமையும்....குறைகளாக இருக்கட்டும் அதை சொல்லி சொல்லி சொறிந்து புண்ணை பெரிதாக்காமல்................ நான் நிறைவானவன் இந்த குறைகள் என்னை ஒன்றும் செய்து விடாது....திமிர்...தன்னம்பிக்கை என்ற வேசம் கட்டியிருந்தது...பாபுவிற்குள்....

...a very nice message!

rk guru said...

அருமையான பதிவு......வாழ்த்துகள்

Mahi_Granny said...

உற்சாக டானிக் கொடுக்கும் தேவா, நல்லா இருங்க தம்பி

ஜீவன்பென்னி said...

NAM VAZKAI NAM KAIYIL.

Murali.R said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

கோவை ஆவி said...

நல்ல பதிவு!!

sakthi said...

சும்மா எதுவும் கிடைத்தால்....அது நிலைக்காது அல்லது அதன் உயர்வு உனக்கு தெரியாது.......அடித்து பிடித்து.....ஓடு.... உன் இலக்கை அடைந்த பின் உனக்கு மமதை வராது.....அம்மா சொன்னது....

அருமையான சிந்தனை

நல்ல பகிர்வு தேவா