Skip to main content

அவள்....!























அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது.

+2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை.


அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை.

மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என்ற ஒரு மிகப் பெரிய கண்ணுக்கு தெரியாத பாரம் தலையை கனக்க செய்யாமல் இல்லை......

வழக்கம் போல கல்லூரிக்குள் நண்பர்களோடு சென்று கொண்டிருந்த சுரேஷ் பேச்சு மும்முரத்தில் எதேச்சையாக கவனிக்க காரணமாகியிருந்தது அவளின் கண்கள்.....சட்டேன்று ஏதோ ஒன்று நெஞ்சை இறுக்கிப் பிடிக்க மீண்டும் பார்த்தான் சந்தேகமாக.....ஆமாம் அவள் இவனைத்தான் பார்க்கிறாள்....!

மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டவன் ஒரு வளைவு தாண்டி அவள் சென்று மீண்டும் திரும்ப வந்து இவனைப் பார்த்து செல்வது கண்டு தரையில் நிற்க முடியவில்லை...உற்சாகத்தில் கத்தினான்..டேய் மச்சான்.....அவ என்ன பாத்துட்டே போறாடா...பறந்து கொண்டிருந்தான் சுரேஷ். நண்பர்களின் விசாரித்தலில் அவள் மூன்றாமாண்டு வணிகவியல் படிப்பதை அறிய அதிக நேரம் பிடிக்கவில்லை அவனுக்கு....

தினமும் அவளை கவனிக்க ஆரம்பித்தான்...ஒரு வித மலர்ச்சியை பரவவிட்டுக் கொண்டு இவனை பார்ப்பதை இப்போது அவனது நண்பர்களும் பார்க்கத் தொடங்கினர். "மச்சான்... நீ ரொம்ப லக்கிடா அவ உன்னையதான்டா பார்க்கிறா...என்ன தேர்ட் இயர் படிச்சா என்ன மச்சி பிரச்சைனை 2 வருசம்தானடா சீனியர் ஸ்டில் சீ இஸ் ப்ரெட்டி டா....உனக்கு ஏத்த ஜோடிடா மச்சான்.. ம்ம்ம்ம் நமக்குதான் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது" வித விதமாய் நண்பர்கள் கூட்டம் சுரேஷை ஏற்றி விட்டது.

இப்படித்தான் வாழ்வின் ஓட்டத்தில் பலர் வருவர் நமது வாழ்க்கையில்..என்ன காரணம் என்று நாம் ஆராயக் கூட முடியாத அளவிற்கு இருக்கும் முக ஸ்துதிகள். ஒருவர் நம்மை புகழ்கிறார் என்றால் நின்று கவனிக்க வேண்டிய இடம் அது. தகுதிகள் எப்போதும் கூடவே இருப்பது அதை பிறர் சொல்லி நாம் உணரும் போது வார்த்தைகளை புறத்திலேயே நிறுத்தி விட்டு.... ஒரு புன்னகையோடு அதை கடந்து செல்ல வேண்டும்.

பெரும்பாலும் புகழ்ச்சிக்கு பின்னால் காரியங்கள் ஒளிந்திருக்கிறது...அல்லது காரணமின்றி ஒருவரை புகழ்வதில் தனக்கும் அதில் ஒரு பங்கு உண்டு என்ற சொறிதலில் சுகமடையும் ஒரு சுய நலமும் இருக்கிறது. பெரும்பாலும் நலவிரும்பிகள் புகழ்தலோடு ஒரு எச்சரிக்கையையும் அதை தக்க வைக்கும் கட்டுப்பாட்டையும் விதைத்தே செல்கிறார்கள்.

இப்படி மேலே சொன்ன ஏதோ ஒரு விசயத்துக்காக சுரேஷ் புகழப்பட்டான். அந்த புகழ் அவனுக்குள் தீயை கிளறி விட...அவள் பார்வையையே குட்டிப் போட்ட நாயாய் சுற்றி வந்தான். அந்த கிறுக்கில் ...வார்தைகள் தாறுமாறாய் வந்து விழ...விழுந்தது எல்லாம் ... கவிதையாய்.... நண்பர்களால் புகழப்பட்டது.

கிறக்கத்தில் உறக்கம் போனது....இப்போது எல்லாம் நண்பர்கள் இல்லாத போதும் அவள் இருக்கும் வீட்டை வலம் வர ஆரம்பித்தான் சுரேஷ். அவ்வப்போது காணும் அவளையும் அவளது பார்வையையும் வாங்கிக் கொண்டு காற்றில் பறந்து கொண்டிருந்தான்.

நகர்ந்து கொண்டிருந்த நாட்களும் நண்பர்களின் உந்துதலும் அவளிடம் போய் காதலை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தை திடபடுத்தியதின் விளைவு அவளின் முன் கொண்டு போய் நிற்கவைத்தது...அந்த மதிய உணவு இடைவேளையில் எடுத்த முடிவு...திக் திக் அனுபவமாக அவளை லைப்ரேரிக்கு செல்லும் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சந்தித்து மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திக்கி திணறி...சொன்னான்...


" நல்லா இருக்கீங்களா....என்று கேட்டான்... அவள் மெளனமாய் தலையசைத்து...அவனை மலர்ச்சியாய் பார்த்தாள்.." மெல்லிய குரலில் சொன்னான்..."எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க....." அவள் சிரித்தாள்...சரி...என்று சொல்லி மீண்டும் அவனை பார்த்தாள்...அவன் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தான்.....மெலிதாய் கிசு கிசுப்பாய்....சொன்னான் நான் உங்களை நேசிக்கிறேன்ங்க..ஆக்சுவலி ஐ லவ் யூங்க என்று..சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டான்.....!

அவள் ஆழமாய் அவனை ஊடுருவிப் பார்த்தாள்....பின் மெதுவாக சொன்னாள்.... என் வீடு உனக்குதான் தெரியும்தானே.....? இன்னிக்கு ஈவ்னிங் என்னோட வீட்டுக்கு வா.....என்று....சொல்லிவிட்டு வருவேல்ல என்று அவன் முகம் பார்த்தாள்...

அவன் மெல்ல தலையசைத்தான்....சரிங்க வர்றேன்....ஆனா வீட்ல எப்படி? என்று இழுத்தான். அவள் பரவாயில்லை வா...என்று சொல்லி விட்டு...மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

சுரஷுக்கு 19 வயதில் இது ஒரு வித்தியாசமான உணர்வுதான்....! ஒரு கனவைப் போல கடந்துபோயிருந்த அந்த நிமிடங்களை இழுத்து பிடித்து நிறுத்தி வைத்து மீண்டும் மீண்டும் அந்த சூழலுக்குள்ளேயே கிடந்தன் சுரேஷ்.

மெல்ல காற்றில் பறப்பது போல நடந்து அவனுக்காக காத்திருந்த நண்பர்கள் கூட்டத்திற்குள் வந்தான்....ஹேய்....மச்சா நீ கில்லிடா... செம பிகருடா.....அவ.....உனக்கு மச்சம்டா..கூட்டம் கை குலுக்கி கும்மாளமிட்டது. எல்லாம் சரிடா மச்சான் வீட்டுக்கு வர சொல்லியிருக்காளேடாடன்னு இழுத்த சுரேஷை கூட்டம் மோட்டிவேட் செய்தது ...

"டேய் மச்சான் ...சில பொண்ணூக எல்லாம் இப்படித்தான்...வெளில சுத்த கூச்சப்படுவாங்க....வீட்டுல கூட்டிடுப் போய் கிளாஸ்மெட்டுனு சொல்லிட்டு பாதுகாப்பாவே பேசுவாங்க..... நீ போடா மச்சான் ... ஜமாய்.. நாளைக்கு பார்ட்டி கொடுக்கணும் அப்புறம் புல் ஸ்டோரியும் சொல்லணும் ...மறைச்சே.அவ்ளோதான் பாத்துக்க... " ஆளாளுக்கு ஒன்று சொல்ல... சுரேஷ்...அந்த மாலை நேரத்தை பற்றிய திட்டமிடலில் இருந்தான்........


6 மணி மாலை...அவள் வீட்டருகே...பைக் நிறுத்தி விட்டான் சுரேஷ்....."மச்சான் ஜமாய்டா" யாரோ ஒரு நண்பன் சொன்னது காதில் வந்து தேவையில்லாமல் ஒலித்தது. மெல்ல பயந்து கொண்டு வீட்டு வாசலில் போய்... நின்றான். காலிங் பெல்லை அடிக்க கை போனது....அப்புறம் யோசித்தான்...சரி போய் விடலாமா...எதுக்கு தேவையில்லாம அவுங்க வீட்ல போய்.....ம்ம்ம்ம் இரண்டு அடி திரும்பி பைக் நோக்கி நடக்க ஆரம்பித்தான்....

பிறகு நின்றான்....சரி சும்மாவா வரச் சொல்லியிருப்பா...ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அப்போதே சொல்லியிருப்பாளே.. மனம் அவனை தேற்றியது. மீண்டும் அவள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

காலிங் பெல்...அமுக்கியவுடன் உள்ளே ஒரு எலக்ட்ரானிக் குருவி இவனது வருகையை தெரிவிக்க....உள்ளிருந்து காலடி சத்தம் கதவருகே நடந்து வருவது கதவு திறக்கப்படும் ஓசையும் கேட்ட சுரேஷின் லப்...டப் பின் வேகம் ...அதிகரித்தது.............

பளீரென்று நின்ற கதவுகளுக்குப் பின்னால்...........

அவள்

"உள்ளே வாங்க....." மிருதுவான அழைப்பு....வெளித் திண்ணையிலிருந்து உள்ளே அழைப்பாள் என்று எதிர்பார்க்காத அவன் இன்னும் வேகமான இதயதுடிப்புக்கு சொந்தமானவன் ஆனான். வீட்ல என்று இழுத்தான்.......அவள் தொடர்ந்தாள்....அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க....அப்பா...வேலை முடிந்து வர மணி எட்டு ஆகும்..........என்று சொன்னவள் நிறுத்தினாள்....

மீண்டும் அவனை உள்ளே வாங்க என்று அழைத்துக் கொண்டு அந்த...அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.......

சுரேஷுக்கு ஒரு மாதிரி வியர்க்க ஆரம்பித்தது...என்ன இது வீட்டுக்குள் அழைத்து வேறு ஒரு அறைப்பக்கம் போகிறாளே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவள் அறைக்கதவை திறந்து உள்ளே சென்று விட்டாள்....! சுரேஷ் கதவுக்கு இரண்டு அடி முன்னாலேயே நின்று கொண்டான்...

உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்......வாங்க உள்ளே..... அவள் அவனை கூப்பிட்டாள். மெல்ல நடந்து கதவு கடந்து உள்ளே போனான் சுரேஷ்....

உள்ளே.......

அது...அவர்களின் பூஜை அறையாயிருந்தது.....சாமி படங்கள் துணியிட்டு மறைக்கப்பட்டு இருந்தது...........பளீரென்று சாமி படங்களை மறைத்திருந்த துணியை விலக்கினாள்.....எல்லா சாமிப்படங்களோடு சேர்ந்து பக்கத்து ஓரத்தில்.....இருந்த புகைப்படத்தின் கீழே ....தோற்றம் மறைவு...அட...என்ன இது...இந்த பையன் என்னை மாதிரியே... இருக்கானே என்று நினைத்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.....

அவள் அழுது கொண்டிருந்தாள்.......சுரேஷ் அவளிடம் என்னாச்சுங்க...உடைந்த குரலில் கேட்டான். அவள் அழுகை இரண்டு மடங்காகியது......அழுது முடிக்கும் வரை சுரேஷ் மெளனமாய் நின்று கொண்டிருந்தான்....மீண்டும் சுவற்றில் இருந்த அந்த போட்டோவை பார்த்தான்.....

அவள் பேசத் தொடங்கினாள்.....அவன் என் தம்பி.....! .என் தம்பி என்றால் எனக்கு உயிர்..... நானென்றால் அவனுக்கு உயிர் ..அவள் விவரித்து முடிக்கையில்.....தாறுமாறாக...யாரோ ஓட்டி வந்த வாகனம் நடை பாதை ஓரமாக அவன் பைக்கை நிறுத்தி பக்கத்தில் பூ வாங்கிக் கொண்டிருந்த அவனின் அக்காவிற்காக காத்திருந்த பொழுதில்.... இவன் மீது மோதி அந்த இடத்திலேயே துடி துடித்து இறந்தது.... மேலும் அதை அவள் கண் முன்னே கண்டதையும் சொன்னதை சுரேஷால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவள் அழுகையோடு தொடர்ந்தாள்.... நீ மட்டும் இல்லை தம்பி...இன்னும் என் தம்பியை ஒத்த வயதில் அவனை போலவே இருக்கிறவங்கள பாத்தா என் தம்பி ஞாபகம் வந்துடும். அதுவும் நீ அவனை மாதிரியே இருப்பதால் என் தம்பி இருந்தால் இப்படிதானே பேசுவான் ..இப்படிதானே சிரிப்பான் என்று வைத்த கண் வாங்கமல் பார்த்திருக்கிறேன்.....ஆனால் அதில் பாசம்தான் தம்பி இருந்திருக்கு..... காதல் இல்லை.... !

நான் உன்னை கவனிப்பதை உனக்கு தெரியாமலேயே தான் ரொம்ப நாளா செஞ்சுகிட்டு இருந்தேன்...ஆனால் நீ கவனிச்சது லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன். நீ என்னை கவனிச்சப்புறமும்...என்கிட்ட தவறா எதுவும் பேசலன்னு தெரிஞ்சதும் உன்னை பார்த்து அதே வாஞ்சையோடு சிரிக்க ஆரம்பிச்சேன்....

ஆனா....எனக்கு இப்போ இருக்குற உலக பத்தி நல்லா தெரியும்பா...ஒரு பொண்ணு ஒரு ஆணை பார்த்தாலே ஏன்? ஏன்னு அதுக்கு ஒரு அர்த்தம் கற்பித்து களங்கம் கற்பித்து ஒரு தவறான ஒரு பார்வையைதான் சமுதாயம் பதிக்கிறது.

இப்போ கூட நீ புரிஞ்சுகிட்டியான்னு எனக்கு தெரியல.....ஆனா ஒரு பெண் ஆணோட பேசினாலே அதை காதலாகவும் காமத்தோடும் சம்பந்தப்படுத்திதான் எல்லோரும் சிந்திக்கிறாங்க? வகுப்பறையில் கூட படிக்கிற பசங்க கிட்ட எல்லாம் என்ன நல்லா இருக்கியானு சினேகமா கேட்ட கூட ஒண்ணு அவுங்க தப்பா நினைச்சு நான் அவுங்கள லவ் பண்றேன்னு நினைக்கிறாங்க இல்லேன்னா...கூடப்படிக்கிற பொண்ணூக எல்லாம் என்னடி லவ்வானு கிண்டல் பண்றாங்க.......

இது பெண்களுக்கு மட்டும் இல்லைப்பா... நிறைய ஆண்கள் கூட பெண்களை இதே ரீதியில் பார்க்கலாம்...தம் உறவுக்கார பெண்ணாக, எங்கேயோ சந்தித்த நபராக, தனது தங்கையைப் போல அல்லது அம்மா அக்கா போல இருக்கிறாளே என்ற ரீதியில் பார்க்கலாம்...!

ஒரு பெண் ஆணையும் அல்லது ஆண் பெண்ணையும் பார்க்க....இயல்பாய் ஒரு முகம் பிடித்த மாதிரி இருந்தா எந்த எண்ணமும் இல்லாம பாக்கிறது எல்லம் எப்படிப்பா...? காதலாவும் காமமாவும் ஆகும்...? ஆன மிகைப்பட்ட பேரு இப்படி தவறா நடக்கிறதால....,உறவுகளை சின்னாபின்னமாக்குவதால எல்லோருமே இப்படி பயந்து பயந்து வாழ்றது எப்படிப்பா சரியாகும்?

என் தம்பி மாதிரியே இருந்த உன்னைப் பார்த்ததில்....எனக்குள் காதல் துளி கூட இல்லவே இல்லப்பா...ஆனா உன்னை பார்ப்பதில் இருக்கும் பிடிப்பும் உண்மைதன்......

அவள் சொல்லி முடித்துவிட்டு...சுரேஷை பார்த்தாள்.......


"கரெக்டுதானுங்க அக்கா........" தெளிவான குரலில் தீர்க்கமாய் சொன்னான் சுரேஷ்.

அவனுக்குள் இருந்த பழமையும் அறியாமையை கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்தது. ஒரு பெண்....என்றவுடன் மனம் போடும் வித்தைகள்தான் எத்தனை? கற்பனைகள் எத்தனை......விவரித்து பார்த்து நாமேதானே நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.

வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பது மனிதர்களும் இயற்கையும்.....இதோடு தானே வாழ வேண்டும்.....! பிடிக்கும் விசயங்களை எல்லாம் பிடித்தலோடு வைத்துக் கொள்வது நல்லது....மற்றவரோடு நமது பிடித்தல்களை தொடர்புபடுத்தி அவர்களை நிர்பந்திக்கும் போதுதானே..எல்லா பிரச்சினையும்......!

தொடர்புகளையும் பார்வைகளையும் வைத்து....கணித்தல் தவறு. இனி யாரையாவது பிடித்தால்...கற்பனையை வளரவிடுவது மடைமை ...மாறாக உண்மையை உடனுக்குடன் அறிவது... நல்ல சமுதாயத்தை உருவாக்கும். நமது கலச்சாரம் ஒராயிரம் விசயங்களை நமக்கு சும்மா விளையாட்டுக்கு சொல்லிச் செல்லவில்லை எல்லாம் படிப்பினைகள்.....

சுரேஷ்...அவள் குரல் கேட்டு கலைந்தவனாய்...அவளின் கரம் பற்றி ரொம்ப நன்றிங்க அக்கா....கொஞ்சம் தண்ணி கொடுங்க குடிக்க....

சுரேஷின் தெளிவை உணர்ந்தவளாய்.....உள்ளே சென்றாள் அவள்.


பைக்கின் கிக்கரை சுரேஷ் உதையும் போது...மணி 7:05 ......ஆக்ஸிலேட்டரின் முறுக்கலில் அடி பணிந்த பைக் பறக்க தொடங்கியது.....

"மச்சான் ஜமாய்டா.." யாரோ நண்பன் சொன்னது காதில் ஒலித்தது.....

ஆமாம்டா....ஜாமயிச்சுட்டேன்.....அவன் புரிதலுக்கு நன்றியாக காற்று அவன் கேசம் கலைத்து கொஞ்சிக் கொண்டிருந்தது...வீடு நோக்கி பறந்துகொண்டிருந்தது பைக்.....!


தேவா. S

Comments

RVS said…
அக்கா .. தம்பி.. கதை அட்டகாசம்... வாழ்த்துக்கள்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.
இந்த தேவாவுக்கு என்ன ஆச்சி தெரியலயே!! புள்ள இப்படி புரியர மாதிரி எழுத ஆரம்பிச்சிடுத்தே. இனி நான் ஹீப்ரு மொழி படிக்க எந்த ப்ளாக் போவேன்... :)

மாப்ஸ் கதை கலக்கல். பையன் பெண்ன பாக்க வீட்டுக்கு போறவறை நல்லா போச்சி. கிளைமாக்ஸ் ஒல்ட் ட்ரெண்ட் (பசங்கள இப்படி அக்கா செண்டிமெண்ட் சொல்லி ஏமாத்தரதே பொளப்பா போச்சி... கிர்ர்ர்ர்ர்). சொல்லி இருக்க கருத்து அருமை.
dheva said…
டெரர்@ அக்கா தம்பி...என்பது ஒரு பதத்துக்கு எடுத்துகிட்டேன் ...

ஆனா...பாக்குறவங்க எல்லாம் காதலிக்கணும் அல்லது கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற அவசியம் இல்லை....சும்ம பிடிச்சு பாத்திருக்கலாம் இல்லையா.... கொஞ்சம் முரண்பாடா இருக்கும் ஆன இந்த உண்மையை ஏத்துக்க பொது புத்தி நம்மை அனுமதிக்காது.
dheva said…
//இந்த தேவாவுக்கு என்ன ஆச்சி தெரியலயே!! புள்ள இப்படி புரியர மாதிரி எழுத ஆரம்பிச்சிடுத்தே. இனி நான் ஹீப்ரு மொழி படிக்க எந்த ப்ளாக் போவேன்... :)//

டெரர்....@ ஊசி போடுறதுக்கு முன்னால மிட்டாய் கொடுக்குற மாதிரிதான்.. நீ மிட்டாய் சாப்பிட்டுகிட்டே இரு....உனக்கே தெரியாம் இஞ்செக்சன் போட்டுடுவோம்...!
@தேவா
//டெரர்....@ ஊசி போடுறதுக்கு முன்னால மிட்டாய் கொடுக்குற மாதிரிதான்.. நீ மிட்டாய் சாப்பிட்டுகிட்டே இரு....உனக்கே தெரியாம் இஞ்செக்சன் போட்டுடுவோம்...!//

எப்படியோ எனக்கு நல்ல புத்தி / நல்ல தமிழ் வந்தா சரி... (ஹி ஹி ஹி... நாங்க எல்லாம் டெரர்.. எங்களுக்கு மான ரோஷம் கிடையாது.)
கதை மிக அருமை. வாழ்த்துக்கள்.
கதை அட்டகாசம்... வாழ்த்துக்கள்...
தேவா அண்ணன் கதை நல்ல இருக்கு.
//வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பது மனிதர்களும் இயற்கையும்.....இதோடு தானே வாழ வேண்டும்.....! பிடிக்கும் விசங்களை எல்லாம் பிடித்தலோடு வைத்துக் கொள்வது நல்லது....மற்றவரோடு நமது பிடித்தல்களை தொடர்புபடுத்தி அவர்களை நிர்பந்திக்கும்
போதுதானே..எல்லா பிரச்சினையும்......!//


உங்கள் பதிவில் எனக்கு பிடித்த வரிகள்
கணேஷ் said…
நல்லா இருக்கு அண்ணா கதை...
எல்லா தம்பிகளுக்கும் சொல்லும் கதையா இது...
சௌந்தர்,teror மேடைக்கு வரவும்
நமக்கு தான் அந்த கொடுபின இல்லை ,இந்த மாதிரி கதை எழுதி தம்பிகள உசுப்பேத்தி விடுறீங்களா

தேவா அண்ணன் ?
அண்ணா இந்த கதை யாருக்கு வெறும் பயனுக்கு தானே
dheva said…
இம்சை....@ என்ன எல்லோரையும் எதுக்கு மேடைக்கு......

உசுப்பேத்தி விடுறேனா....டெரர் அல்ரெடி...டென்சனாயிட்டான்.....முடிவ மாத்து மாப்ஸ்சுன்னு போன போட்டு கெஞ்சுறான்.....

ரெண்டு பேரும் சேரணுமாமம்....அவனுக்கு.....!
//2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு
மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை//


இது கதையாக இருந்தாலும் .
இப்பொழுது ஒரு கல்லூரி கூட கல்லூரி மாதிரி நடப்பதில்லை.இன்னும் ஸ்கூல் மாதிரி தான் இருக்கிறது .
இந்த கதை கிளைமாக்ஸ் சரி இல்லை கதையை மாத்துங்கள்
dheva said…
செளந்தர்...@ வெறும்பயலுக்கும்...அப்புறம் காலேஜ் போறேன்னு சென்னை போனானே தம்பி ஜில் தண்ணிஅவனுக்கும்......அப்புறம்...எப்பவுமே அடி வாங்கிட்டு அதை பெரிய காவியமாய் எழுதுவானே..சிரிப்பு போலிஸ் அவனுக்கும்.....தான்....!
dheva said…
செளந்தர்...@ தம்பி...கதாநாயகனை தப்பிக்க வச்சிருக்கேன்... நீ மாட்டி விட சொல்ற....
@dheva annan
டென்ஷன் ஆக மாட்டாரு நம்ம terror ,நாங்க கீழ விழுந்தாலும் மீசை ல மண் ஒட்டாம கீழ விளுவோம்ல
dheva said…
இம்சை... @ ஸ்கூல் மாதிரி நடந்தா மட்டும் பசங்க கம்முன்னு இருந்திடுவாங்களா?
Mahi_Granny said…
உங்களுக்குள் ஒரு குட்டி சாமியார் இருப்பார் என நினைக்கிறேன். i இப்படி கதை சொல்லி விட்டீர்களே. தம்பிகள் எல்லாம் வருத்தப்படுகிறார்கள் பாருங்கள்.
தொடர்புகளையும் பார்வைகளையும் வைத்து....கணித்தல் தவறு. இனி யாரையாவது பிடித்தால்...கற்பனையை வளரவிடுவது மடைமை ...மாறாக உண்மையை உடனுக்குடன் அறிவது... நல்ல சமுதாயத்தை உருவாக்கும். நமது கலச்சாரம் ஒராயிரம் விசயங்களை நமக்கு சும்மா விளையாட்டுக்கு சொல்லிச் செல்லவில்லை எல்லாம் படிப்பினைகள்...///////

இந்த வரிகள் யாருக்கோ சொல்வது போல இருக்கு
//உங்களுக்குள் ஒரு குட்டி சாமியார் இருப்பார் என நினைக்கிறேன்//

ha ha
இம்சைஅரசன் பாபு.. said...
//வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பது மனிதர்களும் இயற்கையும்.....இதோடு தானே வாழ வேண்டும்.....! பிடிக்கும் விசங்களை எல்லாம் பிடித்தலோடு வைத்துக் கொள்வது நல்லது....மற்றவரோடு நமது பிடித்தல்களை தொடர்புபடுத்தி அவர்களை நிர்பந்திக்கும்
போதுதானே..எல்லா பிரச்சினையும்......!//

உங்கள் பதிவில் எனக்கு பிடித்த வரிகள்////

@@@இம்சை அரசன் உனக்கு வேற வரி பிடிக்க வில்லையா
//இந்த வரிகள் யாருக்கோ சொல்வது போல இருக்கு //

எனக்கு தெரியும்.............எனக்கு தெரியும்.............
dheva said…
Mahi_Granny said. @ அக்கா... ஒரு நீதி சொல்ல வந்தா தம்பிங்க எல்லாம் தீக்குளிக்கிற ரேஞ்சுக்கு போறாங்க... ! நீங்க வேற சாமியார் இருக்கார்னு சொல்லிட்டீங்க...ஹா...ஹா..ஹா...!
Mahi_Granny said...
உங்களுக்குள் ஒரு குட்டி சாமியார் இருப்பார் என நினைக்கிறேன். i இப்படி கதை சொல்லி விட்டீர்களே. தம்பிகள் எல்லாம் வருத்தப்படுகிறார்கள் பாருங்கள்.////

@@@Mahi_Granny குட்டி சாமியார் இல்லை இவர் ஒரு பெரிய சாமியார் அதான் எங்களை இவரிடம் சிஷ்யனா சேர சொல்கிறார்
@soundar

இம்சை அரசன் உனக்கு வேற வரி பிடிக்க வில்லையா

ஏன் பிடிச்சதுன்னு உங்களுக்கு புரிந்ததா ?

பப்ளிக்............
பப்ளிக்............
dheva said…
செளந்தர்...& இம்சை....@ ஒரு முடிவோட தான் வந்தீங்களா?

செளந்தர்..@ அது என்னா யாருக்கோ...படிக்கிற எல்லோருக்கும்தான்....!
dheva said…
இம்சை & செளந்தர்....@ ஈவ்னிங் ஆபீஸ் ரூமுக்கு வந்திடுங்கப்பா....!
@dheva anan
சாமியார்னு உண்மைய போட்டு உடைச்சிடான்களே ?
இந்த கதையில் உங்களால் நேரில் சொல்ல முடியாத வார்த்தைகள் இந்த பதிவில் சொல்லி இருக்கீங்க யார் அந்த பையன், இல்லை அது நீங்க தானா
@dheva annan
சௌந்தர் அண்ணன் தீ மிதிக்க போறாராம் சாய்ந்திரம் வந்திருங்க
dheva said…
எந்த பையன்..? ஓ கதையிலா அது..அருண்பிரசாத்
பைக்கின் கிக்கரை சுரேஷ் உதையும் போது...மணி 7:05 ......ஆக்ஸிலேட்டரின் முறுக்கலில் அடி பணிந்த பைக் பறக்க தொடங்கியது...../////

இந்த பையன் ஹெல்மட் போடவே இல்லை இது சட்டப்படி குற்றம்
இம்சைஅரசன் பாபு.. said...

@dheva annan
சௌந்தர் அண்ணன் தீ மிதிக்க போறாராம் சாய்ந்திரம் வந்திருங்க////

கண்டிப்பா வந்து விடுகிறேன்
dheva said…
சௌந்தர் அண்ணன் தீ மிதிக்க போறாராம் சாய்ந்திரம் வந்திருங்க

இம்சை..@ தீ மிதிக்க இல்லை...டீ குடிக்க....
dheva said…
செளந்தர்....@ ஹெல் மட் அவன் கழட்டவே இல்லை....அதனால திரும்ப போடலை......
ganesh said...
நல்லா இருக்கு அண்ணா கதை.///

கணேஷ் உண்மைய சொல்லுப்பா என்ன அறிவியல் தெரிந்த உனக்கு உண்மை தெரியலை
//ஆக்ஸிலேட்டரின் முறுக்கலில் அடி பணிந்த பைக் பறக்க தொடங்கியது.....//

பறக்குற பைக் எனக்கு ஒன்னு வாங்கி கொடுங்க தேவா அண்ணன்
வெறும்பய Online .......................
dheva said…
கணேஷ ஏன்டா வம்புக்கு இழுக்கிற...பச்ச புள்ளைய போயி......
செளந்தர்....@ ஹெல் மட் அவன் கழட்டவே இல்லை....அதனால திரும்ப போடலை...///

ஹெல் மட் அவன் கழட்டவே இல்லை என்று சொல்லவே இல்லை அதுவும் சட்டப்படி குற்றம்
சௌந்தர் said...

அண்ணா இந்த கதை யாருக்கு வெறும் பயனுக்கு தானே


//


எனக்கா... படிச்சிட்டு வரேன்.. எங்கையும் போகாதீங்க...
dheva said…
வெறும்பய...@ எங்கட காணோம்னு தேடுன காலம் எல்லாம் போச்சு.....இப்போ ஐயோ வந்துட்டாங்களேன்னு நினைக்கிற மாதிரி போச்சு.....வா தம்பி.... நல்லாயிருக்கியா...உன் பங்கு அப்படியேதான் இருக்கு.......வா!
dheva said…
செளந்தர்....@ ட்ராபிக் டிப்பார்ண்மென்ட்ல சேந்துட்டியா....கங்க்கிராஜுலேசன்பா!
dheva said…
பாக்கி இருக்கிற எல்லோரும் வீட்லயே ரெஸ்ட் எடுங்கப்பா...யாரும் வர வேணாம்.....!
அது...அவர்களின் பூஜை அறையாயிருந்தது.....சாமி படங்கள் துணியிட்டு மறைக்கப்பட்டு இருந்தது...........பளீரென்று சாமி படங்களை மறைத்திருந்த துணியை விலக்கினாள்.....எல்லா சாமிப்படங்களோடு சேர்ந்து பக்கத்து ஓரத்தில்.....இருந்த புகைப்படத்தின் கீழே ....தோற்றம் மறைவு...அட...என்ன இது...இந்த பையன் என்னை மாதிரியே... இருக்கானே என்று நினைத்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்....///////


நான் கூட அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது நினைத்தா தம்பி சொல்லிட்டார், இவர் பழக்க தோசத்தில் எல்லாரையும் தம்பி சொல்கிற நினைவில் இங்கயும் தம்பி சொல்லிட்டார்
//கணேஷ ஏன்டா வம்புக்கு இழுக்கிற...பச்ச புள்ளைய போயி......//

பச்சை புள்ள கரி நல்ல இருக்கும் சாய்ந்திரம் டீ குடிக்க சைடு திஷா வச்சிகிடலாம்
dheva said...
பாக்கி இருக்கிற எல்லோரும் வீட்லயே ரெஸ்ட் எடுங்கப்பா...யாரும் வர வேணாம்.....////

@@@ஆல் அனைவரையும் அழைக்கிறேன் வாருங்கள்
வெறும்பய said...
சௌந்தர் said...

அண்ணா இந்த கதை யாருக்கு வெறும் பயனுக்கு தானே


//


எனக்கா... படிச்சிட்டு வரேன்.. எங்கையும் போகாதீங்க.////

படிக்கத்தே ஜெய் படிச்சா உனக்கு கோபம் வரும்
//நான் கூட அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது நினைத்தா தம்பி சொல்லிட்டார், இவர் பழக்க தோசத்தில் எல்லாரையும் தம்பி சொல்கிற நினைவில் இங்கயும் தம்பி சொல்லிட்டார்//

ha....ha...........hahhhhhhhhhhhaaaaaaaa
dheva said…
செளந்தர்...@ யாருக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைச்சே அந்த பொண்ணுக்கா....உன் கற்பனை நல்லா இருக்கே.....!
அருமையான கதை.... ஒரு அண்ணன் தங்கை பைக்கில் போனால் கூட தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் உலகம் இது... கண்டிப்பாக கல்லூரியில் படிக்கும் அன்பர்கள் படிக்க வேண்டிய கதை இது...

இந்த மாதிரி எத்திவிட்டு ஒருத்தனோட ஒடம்ப ரணகளமாக்கியிருகோம்...# அனுவபம்..
dheva said...
செளந்தர்...@ யாருக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைச்சே அந்த பொண்ணுக்கா....உன் கற்பனை நல்லா இருக்கே.....!////

ஆமா ஆமா
dheva said…
//பச்சை புள்ள கரி நல்ல இருக்கும் சாய்ந்திரம் டீ குடிக்க சைடு திஷா வச்சிகிடலாம் //

இம்சை...@ பயபுள்ளய பாத்தியா... எப்படி அலையுதுன்னு...!
dheva said…
//படிக்கத்தே ஜெய் படிச்சா உனக்கு கோபம் வரும் //

செளந்தர்... @ இங்கேயே உக்காந்து கிட்டு வர்ரவன எல்லாம் படிக்காத படிக்கதனு சொல்லிட்டு நீ வேற கதை சொல்லிட்டு இருக்கியே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
dheva said...
பச்சை புள்ள கரி நல்ல இருக்கும் சாய்ந்திரம் டீ குடிக்க சைடு திஷா வச்சிகிடலாம் //

இம்சை...@ பயபுள்ளய பாத்தியா... எப்படி அலையுதுன்னு...////

@@@dheva said...இப்படி சோக கதைய சொல்லிட்டு பின்ன என்ன செய்வது சைடு டிஷ் தான் தேவை அவருக்கு
சௌந்தர் said...

படிக்கத்தே ஜெய் படிச்சா உனக்கு கோபம் வரும்..

///

இல்லையே நண்பா.. கோவம் வரல... யோசிக்க தான் தோணுது... நல்ல கதை...
அடபாவிகளா.. அடிக்கிற கும்மிக்கும்.. போட்ட பதிவுக்கும் சம்மந்தம் இருக்கிற மாதிரி தெரியலையே..
வெறும்பய said...
அருமையான கதை.... ஒரு அண்ணன் தங்கை பைக்கில் போனால் கூட தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் உலகம் இது... கண்டிப்பாக கல்லூரியில் படிக்கும் அன்பர்கள் படிக்க வேண்டிய கதை இது...

இந்த மாதிரி எத்திவிட்டு ஒருத்தனோட ஒடம்ப ரணகளமாக்கியிருகோம்...# அனுவபம்/////

@@@வெறும்பய said...என்ன நண்பா எப்படி இருக்கே r u ok
//லைப்ரேரிக்கு செல்லும் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சந்தித்து மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திக்கி திணறி...சொன்னான்...
" நல்லா இருக்கீங்களா....என்று கேட்டான்... அவள் மெளனமாய் தலையசைத்து...அவனை மலர்ச்சியாய் பார்த்தாள்..//


சொன்னான்............கேட்டான்...............
கதையில் பிழை இருக்கிறது (இலக்கண பிழை )
கணேஷ் said…
ganesh said...
நல்லா இருக்கு அண்ணா கதை.///

கணேஷ் உண்மைய சொல்லுப்பா என்ன அறிவியல் தெரிந்த உனக்கு உண்மை தெரியலை ////
dheva said...

கணேஷ ஏன்டா வம்புக்கு இழுக்கிற...பச்ச புள்ளைய போயி.....////

சௌந்தர் அண்ணா அறிவியல் தெரியும்..ஆனா இந்த உணமைன்னா என்னான்னு தெரியாது..எல்லோரும் அடிக்கடி சொல்றாங்களே ....அப்படின்னா என்ன?? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்...))))))

நான் பச்சை புள்ளை இல்லை...கொஞ்சம் மா நிறம்...அண்ணா பச்சையாக எங்காவது மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?)))))
(எதுக்கு எனக்கு support பண்ணிங்க அதுக்கு gift)
வெறும்பய said...
அடபாவிகளா.. அடிக்கிற கும்மிக்கும்.. போட்ட பதிவுக்கும் சம்மந்தம் இருக்கிற மாதிரி தெரியலையே..////

@@@வெறும்பய said...என்ன நண்பா சொல்லறே நாங்க இந்த பதிவை படித்து இருந்த இப்படி கமெண்ட் போடுவோமா இன்னும் படிக்க வில்லை
சௌந்தர் said...
@@@வெறும்பய said...என்ன நண்பா எப்படி இருக்கே r u ok

//

நான் பெர்பெக்ட்லி ஆல் ரைட் நண்பா... அடி வாங்குன தளும்பெல்லாம் சரியாப் போச்சு..
//நான் பச்சை புள்ளை இல்லை...கொஞ்சம் மா நிறம்...அண்ணா பச்சையாக எங்காவது மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?)))))
//

THE HULK (பச்சை மனிதன் )நான் பார்த்திருக்கிறேன்
இம்சைஅரசன் பாபு.. said...

கதையில் பிழை இருக்கிறது (இலக்கண பிழை )

//

பிழையா.. தேவா அண்ணனின் கதையில் பிழையா... இருக்கவே இருக்காது...

அப்படி பிழை இருந்தால்.. அதை நிரூபித்தால் கோமாளி செல்வாவுக்கும்... சிரிப்பு போலீசுக்கும் மொட்டை அடிக்கிறேன்...
dheva said…
//நான் பச்சை புள்ளை இல்லை...கொஞ்சம் மா நிறம்...அண்ணா பச்சையாக எங்காவது மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?)))))//

கணேஷ்..@ தம்பி நீயுமா....??????
நான் பச்சை புள்ளை இல்லை...கொஞ்சம் மா நிறம்...அண்ணா பச்சையாக எங்காவது மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?))))/////

@@@@@கணேஷ்
வாங்க கணேஷ் இப்போ தான் நீங்க நம்ம குருப் உண்மை பற்றி அப்பறம் சொல்லி தரேன்
dheva said…
இம்சை...@ தமிழ் வாத்தியாரா நீ சொல்லவே இல்லை....
சௌந்தர் said...

@@@வெறும்பய said...என்ன நண்பா சொல்லறே நாங்க இந்த பதிவை படித்து இருந்த இப்படி கமெண்ட் போடுவோமா இன்னும் படிக்க வில்லை

//


சும்மா இரு நண்பா.. தேவா அண்ணன் எழுதுரதிலையே இந்த மாதிரி ஏதாவது ஒண்ணு ரெண்டு தான் புரியிராப்ப்ல இருக்கு... அதையும் கெடுத்திடாதே...
dheva said…
//அப்படி பிழை இருந்தால்.. அதை நிரூபித்தால் கோமாளி செல்வாவுக்கும்... சிரிப்பு போலீசுக்கும் மொட்டை அடிக்கிறேன்//

வெறும்பய...@ டெரர் கோச்சுக்குவான்....அவனையும் சேத்துக்கோ!
இந்த கதையின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கு வெறும் பையன் சொல்லுங்க
வெறும்பய said...
இம்சைஅரசன் பாபு.. said...

கதையில் பிழை இருக்கிறது (இலக்கண பிழை )

//

பிழையா.. தேவா அண்ணனின் கதையில் பிழையா... இருக்கவே இருக்காது...

அப்படி பிழை இருந்தால்.. அதை நிரூபித்தால் கோமாளி செல்வாவுக்கும்... சிரிப்பு போலீசுக்கும் மொட்டை அடிக்கிறேன்..////

@@@வெறும்பய said...என்ன நண்பா இப்படி சவால் விட்டு விட்டாய் போ அவர்களுக்கு மொட்டை உறுதி
dheva said...

வெறும்பய...@ டெரர் கோச்சுக்குவான்....அவனையும் சேத்துக்கோ!

//

என்னாச்சு டெரர்ருக்கு .. ஆளையே காணோம்...

எங்கையாவது கும்மி போட்டு அடி வாங்கி ரெஸ்ட்ல இருக்காரா...
dheva said...

வெறும்பய...@ டெரர் கோச்சுக்குவான்....அவனையும் சேத்துக்கோ!

//

என்னாச்சு டெரர்ருக்கு .. ஆளையே காணோம்...

எங்கையாவது கும்மி போட்டு அடி வாங்கி ரெஸ்ட்ல இருக்காரா...
dheva said…
டெரர் ஆபிஸ்ல கும்மிகிட்டு இருக்காங்க.....!
இங்கு அழைத்தும் இன்னும் வரமால் இருக்கும் பிரதாப், ஜெய்லானி, மேடைக்கு உடனே வர வேண்டும்
சௌந்தர் said...

இந்த கதையின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கு வெறும் பையன் சொல்லுங்க ..
//

எனக்கும் இந்த கதைக்கும் ஒரு நூலளவு சம்மந்தமிருக்கு...

இந்த கதையில் அந்த பொண்ணு வீட்டுக்கு கூப்டா.. என்ன அவளோட கிளாஸ் ரூமுக்கு கூப்பிட்டா...

அவன தம்மின்னு சொன்னா... என்ன அவ அண்ணான்னு சொன்னா...


அவ்வளவு தான்... மத்தபடி கதை அருமை ஆஹா .. ஓகோ ..
dheva said…
வெறும்பய....@ உன் கதையா இது...ஹா...ஹா...ஹா.....
dheva said...

டெரர் ஆபிஸ்ல கும்மிகிட்டு இருக்காங்க.....!


//


அட இப்பதான் நடக்குதா.... எனக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடியே செய்தி வந்திச்சே.... ஒரு வேளை அது வேற இடமோ...
"கரெக்டுதானுங்க அக்கா........" தெளிவான குரலில் தீர்க்கமாய் சொன்னான் சுரேஷ்./////

இவ்வாறு கனவு கண்டான் சுரேஷ்
@தேவா
//டெரர் ஆபிஸ்ல கும்மிகிட்டு இருக்காங்க.....!//

மாப்பு பாத்த இல்ல நான் பத்தவச்ச ஒரு திரி எப்படி ஏரியுதுனு.... ராசியான கை.... கும்முங்க மக்கா நல்லா கும்முங்க.... இது ரொம்ப நாளா தப்பிச்சிட்டு இருந்த ஆடு...

(ஆபிஸ்ல ஆணி புடுங்க விட்டாங்க... அவ்வ்வ்வ்)
சௌந்தர் said...

என்ன நண்பா இப்படி சவால் விட்டு விட்டாய் போ அவர்களுக்கு மொட்டை உறுதி..

.///

எதோ நம்மால முடிஞ்சது நண்பா.... இவ்வளவு தான்..
//எங்கையாவது கும்மி போட்டு அடி வாங்கி ரெஸ்ட்ல இருக்காரா... //

டென்ஷன் ஆக மாட்டாரு நம்ம terror ,நாங்க கீழ விழுந்தாலும் மீசை ல மண் ஒட்டாம கீழ விளுவோம்ல
dheva said...

வெறும்பய....@ உன் கதையா இது...ஹா...ஹா...ஹா.....


//

அது எப்படீன்னா என்னோட கதைய பெயர மத்தி... பட்டி டிங்கரிங் பாத்து இவ்வளவு அழகா எழுதியிருக்கீங்க.....

இந்த கதை எழுத யார் rights கொடுத்தா...
dheva said…
நம்ம ஒண்ணு எழுதுவோம்..செளந்தர் உசாரா ரூட்ட மாத்திடுவான்.....விட்டா...சுரேஷ் கல்யாணம் ஆகி கனவு கண்டான்னு கூட சொல்லுவான்....!
//தகுதிகள் எப்போதும் கூடவே இருப்பது அதை பிறர் சொல்லி நாம் உணரும் போது வார்த்தைகளை புறத்திலேயே நிறுத்தி விட்டு.... ஒரு புன்னகையோடு அதை கடந்து செல்ல வேண்டும்.//

அழகான ஞானம் நிறைந்த வரிகள் தேவா! இதை புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த ஒரு பக்குவம் தேவை மனிதனுக்கு!
dheva said...

வெறும்பய....@ உன் கதையா இது...ஹா...ஹா...ஹா.....


//

அது எப்படீன்னா என்னோட கதைய பெயர மத்தி... பட்டி டிங்கரிங் பாத்து இவ்வளவு அழகா எழுதியிருக்கீங்க.....

இந்த கதை எழுத யார் rights கொடுத்தா...
//ஒரு பொண்ணு ஒரு ஆணை பார்த்தாலே ஏன்? ஏன்னு அதுக்கு ஒரு அர்த்தம் கற்பித்து களங்கம் கற்பித்து ஒரு தவறான ஒரு பார்வையைதான் சமுதாயம் பதிக்கிறது.//

இது நம்முடைய அழுகி போய் கிடக்கும் பழமையான கருத்துக்கள் கொண்டோர் அதிகமாய் நம் சமூகத்தில் இருப்பதனால் வந்த பிரச்சனை. கற்பு ஏதோ உடலுறவுக்கு சம்பந்தபட்டதென்று எண்ணும் சமூகம் இப்படி மனிதர்களை பிரித்து பிர்த்து வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறையாகிலும் உடலுறவை தாண்டி சிந்திக்கும் சமூகமாக வளரட்டும்.
அது...அவர்களின் பூஜை அறையாயிருந்தது.....சாமி படங்கள் துணியிட்டு மறைக்கப்பட்டு இருந்தது...........பளீரென்று சாமி படங்களை மறைத்திருந்த துணியை விலக்கினாள்.....எல்லா சாமிப்படங்களோடு சேர்ந்து பக்கத்து ஓரத்தில்.....இருந்த புகைப்படத்தின் கீழே ....தோற்றம் மறைவு...அட...என்ன இது...இந்த பையன் என்னை மாதிரியே... இருக்கானே என்று நினைத்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.....//////

இதுக்கு பிறகு கதையை நான் மாத்துகிறேன்
இம்சைஅரசன் பாபு.. said...

டென்ஷன் ஆக மாட்டாரு நம்ம terror ,நாங்க கீழ விழுந்தாலும் மீசை ல மண் ஒட்டாம கீழ விளுவோம்ல..

//


நீங்களும் டெரர் கூட அடி வாங்கி கிட்டு தான் இருக்கீங்களா... பரவாயில்ல ஒரு அடி கூட மிஸ் பண்ணாம வாங்கிட்டு மெதுவா வாங்க...
dheva said…
என்னது நானு யாரா? @ கதையின் சாரம் விளங்கியமைக்கு நன்றி !
//ஒரு பெண்....என்றவுடன் மனம் போடும் வித்தைகள்தான் எத்தனை? கற்பனைகள் எத்தனை......விவரித்து பார்த்து நாமேதானே நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.//

ஆண், பெண் பேதம் அதிகமாய் நம் சமுகத்தில் ஊசலாடுகிறது. அதன் விளைவு தான் இது. நான் ஏற்கனவே சொன்னது போல, கற்பு ஏதோ உடலுறவுக்கு சம்பந்தபட்டதென்று எண்ணும் சமூகம் இப்படி மனிதர்களை பிரித்து பிர்த்து வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறையாகிலும் உடலுறவை தாண்டி சிந்திக்கும் சமூகமாக வளரட்டும்.

அப்படிபட்ட ஆரோகிய சமூகத்தில் இந்த விதமான தவறான கற்பிதங்கள், கற்பனைகள் தோன்றாது. நம் வாரிசுகளையாவது எல்லா விஷய்ங்களையும் புரிய வைத்து வளர்ப்போம்
சௌந்தர் said...

இதுக்கு பிறகு கதையை நான் மாத்துகிறேன்

//

கொஞ்சம் விட்டா எதிர் பதிவு . எதிர் கவிதை.. மாதிரி எதிர் கதையும் எழுதுவ போலிருக்கே...
@வெறும்பய said...
எலேய்!! நீ அடிக்கடி சேம் ஸைட் கோல் போடற.... உனக்கு இந்த ஜன்மத்துல பெண் கிடைக்காது... நீ ஆண் பிள்ளை மடத்துல சாமியார போக...
//நீங்களும் டெரர் கூட அடி வாங்கி கிட்டு தான் இருக்கீங்களா... பரவாயில்ல ஒரு அடி கூட மிஸ் பண்ணாம வாங்கிட்டு மெதுவா வாங்க... //

பப்ளிக்............ பப்ளிக்............
dheva said…
நல்ல வேளை பாதி தம்பிகளுக்கு லீவு...இன்னிக்கு....அதனால எப்படி பாத்தாலும் எனக்கு லாபம்தான்...!
இந்த கதையை நானும் terror மாத்தி ஒரு பதிவு போட போகிறோம்
TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய said...
எலேய்!! நீ அடிக்கடி சேம் ஸைட் கோல் போடற.... உனக்கு இந்த ஜன்மத்துல பெண் கிடைக்காது... நீ ஆண் பிள்ளை மடத்துல சாமியார போக...

//

அவசரப்படாத மக்கா.. நீ இல்லைன்னு ஒரு தைரியத்தில தான் நாக்கு மேல பல்ல போட்டு பேசிட்டேன்...

தயவுசெஞ்சு சாபத்த return வாங்கிடு... ஒனக்கு புண்ணியமா போகும்..
ஹே சிங்கம் களதில இறங்கியாச்சு ...........................
ஒரு பெண் ஆணையும் அல்லது ஆண் பெண்ணையும் பார்க்க....இயல்பாய் ஒரு முகம் பிடித்த மாதிரி இருந்தா எந்த எண்ணமும் இல்லாம பாக்கிறது எல்லம் எப்படிப்பா...? காதலாவும் காமமாவும் ஆகும்...? ஆன மிகைப்பட்ட பேரு இப்படி தவறா நடக்கிறதால....,உறவுகளை சின்னாபின்னமாக்குவதால எல்லோருமே இப்படி பயந்து பயந்து வாழ்றது எப்படிப்பா சரியாகும்//////

இதை யாருக்கு சொல்றிங்க அதை சொல்லுங்க முதல்
dheva said...

நல்ல வேளை பாதி தம்பிகளுக்கு லீவு...இன்னிக்கு....அதனால எப்படி பாத்தாலும் எனக்கு லாபம்தான்...!

//

ஆமா ஆமா.. இன்னைக்கு நீங்க அடிவாங்கினது யாருக்கும் தெரியாது பாருங்க...
dheva said...

நல்ல வேளை பாதி தம்பிகளுக்கு லீவு...இன்னிக்கு....அதனால எப்படி பாத்தாலும் எனக்கு லாபம்தான்...!

//

ஆமா ஆமா.. இன்னைக்கு நீங்க அடிவாங்கினது யாருக்கும் தெரியாது பாருங்க...
வெறும்பய said...
சௌந்தர் said...

இதுக்கு பிறகு கதையை நான் மாத்துகிறேன்

//

கொஞ்சம் விட்டா எதிர் பதிவு . எதிர் கவிதை.. மாதிரி எதிர் கதையும் எழுதுவ போலிருக்கே...////

இது நல்ல ஐடியாவா இருக்கே இதோ இப்பவே ஒரு எதிர் கதை தயார்
dheva said…
இம்சை...@ யாரு சிங்கம்...?
dheva said…
செளந்தர்...@ ஏண்டா டேய்....என்னய ஒரு வழி பண்ணாமா விடமாட்டியா...

இது யாருக்கு சொன்னேன்னு உனக்கு தெரியணும் அவ்ளோதானே....வெயிட் பண்ணு சொல்றேன்...!
அதுக்குள்ள சதம் போட்டாச்சா...
தொடர்புகளையும் பார்வைகளையும் வைத்து....கணித்தல் தவறு. இனி யாரையாவது பிடித்தால்...கற்பனையை வளரவிடுவது மடைமை ...மாறாக உண்மையை உடனுக்குடன் அறிவது... நல்ல சமுதாயத்தை உருவாக்கும். நமது கலச்சாரம் ஒராயிரம் விசயங்களை நமக்கு சும்மா விளையாட்டுக்கு சொல்லிச் செல்லவில்லை எல்லாம் படிப்பினைகள்...///////

மக்களே இந்த வரிகளையும் கவனியுங்கள்
@வெறும்பய
//தயவுசெஞ்சு சாபத்த return வாங்கிடு... ஒனக்கு புண்ணியமா போகும்..//

சாபத்த எடுக்க முடியாது.... வேனும்னா மாத்தி தரேன்... நீ பெண் பிள்ளை ஆசிரமத்தில் தலைமை சாமியார் ஆவாய்...
@soundar

இதை யாருக்கு சொல்றிங்க அதை சொல்லுங்க முதல்

சௌந்தர் விடாத மடக்கிபுடி ரொம்ப நாள் ஆகிடுச்சு அட்டு கல் சூப்பு குடிச்சி
.மாறாக உண்மையை உடனுக்குடன் அறிவது...


//

இதை நான் ஆமோதிக்கிறேன் .... எத்தன இடத்தில உடனே ரிசல்ட் தெரிஞ்சிருக்கு... கையாலும்.. சில இடங்களா செருப்பாலும்..
dheva said...
செளந்தர்...@ ஏண்டா டேய்....என்னய ஒரு வழி பண்ணாமா விடமாட்டியா...

இது யாருக்கு சொன்னேன்னு உனக்கு தெரியணும் அவ்ளோதானே....வெயிட் பண்ணு சொல்றேன்...///

@@@dheva அதான் எனக்கு சாட் சொல்லிட்டிங்க யாருன்னு
//இம்சை...@ யாரு சிங்கம்...?//

நம்ம terror
ERROR-PANDIYAN(VAS) said...

சாபத்த எடுக்க முடியாது.... வேனும்னா மாத்தி தரேன்... நீ பெண் பிள்ளை ஆசிரமத்தில் தலைமை சாமியார் ஆவாய்...

//

ஹாய் ஜாலி...

இன்னையிலிருந்து நம் சங்கத்திற்கு டெரர் தான் தலைவர்... அவருக்கு டெய்லி ஒரு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி தர வேண்டும்....
ஆகா... புள்ளைங்க என்னமா விளையாடுதுங்க...மாம்சு...உங்களை யாரு புரியறமாதிரி எழுதச்சொன்னது... இது தேவையா...:))
பதிவுலக அன்பர்களுக்கு பட்டிகாட்டான் ஜெ. அண்ணன் இப்பொழுது ஒரு மெயில் அனுபஈருக்கிறார் உங்கள் பார்வைக்கு அண்ணன் சார்பாக


என் இனிய??!!! வலையுலக நண்பர்களே??!!!,


தக்காளி, எனக்கு டைபாய்டு ஜூரம்னு டாக்குட்டரு சொல்லிட்டாரு...., அதனாலே..., படுத்து, தூங்கி ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்கேன். உங்கள போட்டுத்தள்ள சீக்கிரம் வருவேண்டி என்று சொல்லிக்கொண்டு திரிம்பவும்தூங்கப் போறேன். 2, 3 நாள்ல திரும்பின்வருவேன, அது வரையிலும் சந்தோசமா இருங்கடி....


என் உடல்நலத்தை விசாரித்த( போன் பண்ணியும், எஸ்எம்எஸ்+சாட்+மெயில் மூலமாக...) வலையுலக நண்பர்களுக்கு, கும்மியடித்து வெறுப்பேத்துவத்கில் எந்த சலுகையும் காட்டப் படாது என்பதை திமிரோடு??!!! தெரியப் படுத்திக் கொள்கிறேன்.


இன்னும் இரண்டு(நம்புங்கப்பா!!! அதுக்குள்ளயும் நெட் வர அளவுக்கு உடம்பு சரியாகிடும்...) நாளில் தெளிவோடும்!!!, தெம்போடும்??!!, வருவேன் என்பதை திரிவித்துக் கொண்டு, மீண்டும் தூனக்கச் செல்கிறேன்.


இப்படிக்கு!!!!


பட்டிக்காட்டான்(Jey)
நாஞ்சில் பிரதாப் said...

ஆகா... புள்ளைங்க என்னமா விளையாடுதுங்க...மாம்சு...உங்களை யாரு புரியறமாதிரி எழுதச்சொன்னது... இது தேவையா...:))

//

அதே தான்.... வந்தமா ஒரு அட்டண்டன்ஸ போட்டமான்னு இருந்த பல பேரு இப்ப கும்மியடிக்கிறாங்க பாருங்க...
அட பாவிங்களா யாரு அது என் பெயரில் இத்தனை கமெண்ட் போட்டு இருக்காங்க எனக்கு தெரியாது
dheva said…
பங்காளி ஜெய் எல்லாருக்கும் அனுப்பியிருக்காரு...



இம்சை..@ இது என்ன விளம்பர இடைவேளையா?
மாம்சு உங்கள் விமர்சனம் படம் பார்க்க துண்டுகிறது...:))

(பதிவை படிக்காமலே நாங்க கமண்ட் போடுவோம்ல...எப்புடி:))
@@@ஆல் ஜெய் அந்த வண்டலூர் சிங்கத்தை பார்த்து பயந்து போய்ட்டார்
வெறும்பய said...
நாஞ்சில் பிரதாப் said...

ஆகா... புள்ளைங்க என்னமா விளையாடுதுங்க...மாம்சு...உங்களை யாரு புரியறமாதிரி எழுதச்சொன்னது... இது தேவையா...:))

//

அதே தான்.... வந்தமா ஒரு அட்டண்டன்ஸ போட்டமான்னு இருந்த பல பேரு இப்ப கும்மியடிக்கிறாங்க பாருங்க../////
@@@@வெறும்பய said.
இந்த ப்ளாக் கும்மி அடிச்சி ரொம்ப நாள் ஆகுது அதான் இப்போ
நாஞ்சில் பிரதாப் said...

மாம்சு உங்கள் விமர்சனம் படம் பார்க்க துண்டுகிறது...:))

//

இதென்ன கூத்தா இருக்கு.. கவிதைய படிக்காமலையே கமெண்ட் போடுறாங்களே..
//இன்னையிலிருந்து நம் சங்கத்திற்கு டெரர் தான் தலைவர்... அவருக்கு டெய்லி ஒரு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி தர வேண்டும்...//

அப்போ சுருட்டு??

(தலைவர் சொல்லி போட்டு தள்ள பாக்கத...)

@தேவா

அடுத்த பதிவு தலைப்பு “அச்டுஹ்ர்ப்யுசெ” இதான?

(எப்படியும் புரியாது...இவங்க கும்மி அப்படி)
நாஞ்சில் பிரதாப் said...
மாம்சு உங்கள் விமர்சனம் படம் பார்க்க துண்டுகிறது...:))

(பதிவை படிக்காமலே நாங்க கமண்ட் போடுவோம்ல...எப்புடி:)////
@@@நாஞ்சில் பிரதாப் said...

நாங்களும் இப்படி தான் சூப்பர்
வெறும்பய said...
நாஞ்சில் பிரதாப் said...

மாம்சு உங்கள் விமர்சனம் படம் பார்க்க துண்டுகிறது...:))

//

இதென்ன கூத்தா இருக்கு.. கவிதைய படிக்காமலையே கமெண்ட் போடுறாங்களே.////

வெறும்பய said...நண்பா இது கவிதை இல்லை ஏதோ பாட்டு
dheva said…
கை வலிக்கிது மக்கா....கமெண்ட் மாடரேஷன் எடுத்திட்டேன்...!
TERROR-PANDIYAN(VAS) said...

அப்போ சுருட்டு??

//

தலைவரையே சுருட்டு பிடிக்க கூடாதுன்னுட்டாங்க.. சின்ன தலைவர் ஆசைப்படலாமா..
TERROR-PANDIYAN(VAS) said...

மாப்ஸ் கதை கலக்கல். பையன் பெண்ன பாக்க வீட்டுக்கு போறவறை நல்லா போச்சி. கிளைமாக்ஸ் ஒல்ட் ட்ரெண்ட் (பசங்கள இப்படி அக்கா செண்டிமெண்ட் சொல்லி ஏமாத்தரதே பொளப்பா போச்சி... கிர்ர்ர்ர்ர்).

terror உண்மையான கமெண்ட்
dheva said...

கை வலிக்கிது மக்கா....கமெண்ட் மாடரேஷன் எடுத்திட்டேன்...!

//

உலக தொலைகாட்சிளில் முதல் முதல் முறையாக நீங்கள் போடும் கமெண்ட்ஸ் உடனுக்குடனே உங்கள் பார்வைக்கு... தேவா அண்ணனின் தளத்தில்... வாரீர்...வாரீர்..
dheva said…
நாஞ்சிலு...@ பதிவ படிக்காம கமெண்ட் போடுவது எப்படின்னு உன்கிட்டதா கத்துக்கிடணும் மாப்ஸ்!
வெறும்பய said...
This post has been removed by the author////

அப்படி என்ன கோபம் உனக்கு என்ன சொன்னே இப்போ இல்லை
@dheva said...
//கை வலிக்கிது மக்கா....கமெண்ட் மாடரேஷன் எடுத்திட்டேன்...!//

ஹா..ஹா..ஹா.... வீழ்ந்தது அடுத்த ப்ளாக்... கொண்டாடுங்கள் மக்கா....
சௌந்தர் said...

அப்படி என்ன கோபம் உனக்கு என்ன சொன்னே இப்போ இல்லை

//

ஆர்வக் கோளறுல நம்ம டேரர புகழ்ந்திட்டேன்...அது தான் வேறொன்னுமில்ல..
dheva said...
கை வலிக்கிது மக்கா....கமெண்ட் மாடரேஷன் எடுத்திட்டேன்...////

இது நம் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி
ஹேமா said…
பாசமலராய் கதை உருக வைக்கிறது.
அருமை.வாழ்த்துகள் தேவா.
velji said…
கதை நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள்!
Chitra said…
இப்படித்தான் வாழ்வின் ஓட்டத்தில் பலர் வருவர் நமது வாழ்க்கையில்..என்ன காரணம் என்று நாம் ஆராயக் கூட முடியாத அளவிற்கு இருக்கும் முக ஸ்துதிகள். ஒருவர் நம்மை புகழ்கிறார் என்றால் நின்று கவனிக்க வேண்டிய இடம் அது. தகுதிகள் எப்போதும் கூடவே இருப்பது அதை பிறர் சொல்லி நாம் உணரும் போது வார்த்தைகளை புறத்திலேயே நிறுத்தி விட்டு.... ஒரு புன்னகையோடு அதை கடந்து செல்ல வேண்டும்.


....... very good advice.
Chitra said…
அருமையான கதை, தேவா... நல்லா இருக்குதுங்க.
//பிடிக்கும் விசயங்களை எல்லாம் பிடித்தலோடு வைத்துக் கொள்வது நல்லது....மற்றவரோடு நமது பிடித்தல்களை தொடர்புபடுத்தி அவர்களை நிர்பந்திக்கும் போதுதானே..எல்லா பிரச்சினையும்......!// - "நச்" வரிகள் மாப்ஸ்... பிரமாதம்.
"அவள்"-னு தலைப்பைப்பார்த்ததும் நீ மஞ்சுவைப்பத்திதான் எழுதப்போறன்னு நெனச்சேன்... அட அதேதான்! கரெக்டா மாப்ஸ்...?!? (கண்டுபுடிசுடம்ல..)
சூப்பர் மாப்ஸ்! பட்டைய கிளப்புற‌. ராமு மாப்ஸின் ஆசையை எப்போ நிறைவேத்த போற??? ஹாஹா
வித்தியாசமான் கதை வித்தியாசமான் முடிவு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
நல்ல கதை. பாதி காதல் உணர்வுகள், கூட இருக்கும் நண்பர்களாலேயே தூண்டி விடப்படுகின்றன. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...