
வரப்போகிறது தேர்தல்... தயாரா மக்களே....?
யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற உமது முடிவுகள் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுவது அரசியல்வாதிகளின் கடைசி நேர அணுகுமுறைகளில்...? யாரைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் தீர்மானிக்க முடியாத அளவிற்கு குழப்பத்தில் உங்களை இருத்தி வைத்திருக்கும் மீடியாக்களும், அரசியல்வாதிகளும் அப்படி செய்ததின் பலனை அனுபவிப்பதில் காட்டும் போட்டிகளில் மதி மயங்கி நீங்கள் செய்யப் போவது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்களை காக்குமா? இல்லை புலம்பிக் கொண்டே ரோடுகளில் பித்தர்களாக அலைய வைக்குமா? யாருக்கு தெரியும் உங்களுக்கு மட்டுமே....
கடை பரப்பி கலர் கலராய் காட்சி செய்து எம்மக்களை முட்டாள்களாக்கும் அந்த ஒரு நாளில் முட்டாள் ஆவதில் ஆர்வம் கொண்டு சில நூறு ரூபாய்களை பெற்றுக்கொண்டு அன்றைய தின சந்தோசத்தில் தன்னை தொலைத்து ஜன நாயகத்துக்கு சவுக்கடி கொடுக்கப்போவது யார்? வேற்று கிரகவாசிகளா? இல்லை குறை சொல்லி புலம்பித் திரியும் மகா பொதுஜனமாகிய நாம்தான்...
தீர்மானிக்க முடியாத அளவிற்கு நிரப்பப்பட்டு இருக்கும் பசியும், வேலை வாய்பின்மையும் இன்ன பிற பிரிவினைகளும் மக்களை சிந்திக்க விடாமல் மைண்ட் இலுயூசன் என்று சொல்லக் கூடைய பிழையான காட்சியை கற்பிதம் செய்யக் கொடுத்து அதன் போக்கில் முட்டாள்தனமான முடிவுகளை நோக்கி ஆட்டு மந்தைகளாய் செல்லும் நிலையும் தேர்ந்த அரசியல் விற்பன்னர்களால் மக்களின் மூளைகளுக்குள் செலுத்தப்பட்டிருக்கிறது.
திரையில் தோன்றும் காட்சிப் பிம்பம் நிஜத்தில் எமது துயர் நீக்கும் என்ற மாயையில் இருந்த மக்களின் தெளிவுகள் இன்று வேறு விதத்தில் சிதறடிக்கப்படுகின்றன. கூட்டத்தில் ஒருவனாய் நின்று சிந்திக்காதீர் மானுடரே...! பூசியிருக்கும் எல்லா சாயங்களையும் கொடும் தீயில் போட்டெரியும், ஏற்றிருக்கும் வேசங்களை கலைத்துப் போடும், எல்லா துவேசங்களையும் தூர எறிந்து விட்டு.. சொந்த சுய லாப நஷ்ட கணக்குகளை அழித்துவிட்டு....
உம்மை பெருந்திரளாய்...எண்னி எல்லோரின் நன்மைக்கும் சேர்த்து ஒற்றை தீர்மானம் எடுப்பீர்...!அந்த ஒற்றை தீர்மானத்தை வரும்தேர்தலில் தேர்ந்த அரசியல்வாதிக்கான வாக்காய் மாற்றுவீர். ஜனத்திரள் நீவீர்....உமக்கு ஊழியம் செய்யும் மனிதனை தேர்ந்தெடுப்பதில் அலட்சியம் காட்டி, அலட்சியம் காட்டி...குனிந்த நமது முதுகுகள்..மண்ணோடு மண்ணாகி மட்கிப் போவதற்கு முன்.....அதிரடியாய் நிமர வேண்டாமா? அந்த அதிரடியில் அவலங்கள் ஒழிந்தே போக வேண்டாமா?
இலக்குகளை சரியாக தீர்மானிக்க புறத்திலே எழும் கூச்சல்களையும், கெஞ்சல்களையும் மட்டறுப்பீர் மானுடரே...! அறிவில் சிறந்த மூத்த குடி நாம்... உலகம் மொழியற்று திரிந்த போது கவி செய்த பெருங்குடி நாம்....! உற்றுப் பார்த்து கயவரின் இரத்தம் குடிக்கும் கலையறிந்தவர் நாம்...!
நாம் பலமில்லாதவர்கள் அல்ல தோழர்களே நமது பலம் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. மலையைப் பெயர்த்து வீசும் ஆற்றல் கொண்ட நம்மை புல் தடுக்கினால் விழுந்து விடுவீர் என்று பயமுறுத்தல்களில் நிறுத்தி வைத்திருகின்றனர்....கபட மூளை கொண்ட மானுடர்....! நம்மை நயவஞ்சகத்தில் ஆளுமை செய்யும் தேவ தூதர்கள் ஜனித்து வெளிப்பட்டது ஒரு கருவறையில் இருந்துதான்...மரித்து மடியப் போவது ஒரு மண்ணறையில் தானே...தோழர்களே.....?
நம்மை ஆளுமை செய்யும் மூளைகளை ஒத்ததுதான் நமது மூளைகளும்....விழித்தெழுவீர் தோழர்களே...! தேர்தல் என்பது ஒரு நாள் கூத்தல்ல....அது நமக்கு ஊழியம் செய்ய நாம் வைக்கப் போகும் ஊழியர்களுக்கான 5 வருட ஒப்பந்தம். வரி வடிவில் சேரும் கஜானா...மக்களுக்கு திரும்ப முறைப்படுத்தி செய்ய நாம் நியமிக்கப் போகும் மனிதர்களின் தேர்தல் அறிக்கைகளை கிழித்தெறியுங்கள்... தேவைகளை ஆராய்ந்து அறிவுப் பெருக்கத்துக்கும் ஆற்றல் பெருக்கத்துக்கும் உதவுமாறு செய்வீர்களா என்று உறுதி கேளுங்கள்.....!
உறங்கியது போதும் தோழர்காள்... நமது முன்னோர்கள் எல்லம்...தானே மாறும், மாறும் என்று காத்திருந்து, காத்திருந்து மண்ணோடு மண்ணாக மட்கிய வேட்கைகள் இன்னும் உலவிக் கொண்டிருக்கிறது காற்றில்...! நாம் நாம் என்று நின்று விடாமல்... நாளை.. நமது சந்ததியினரின் தெளிவான வாழ்க்கைக்கும், சுகாதரமான மேம்பட்ட வாழ்க்கைக்கும் சேர்த்து வைக்கும் செல்வம் மட்டும் உதவாது....! விழிப்புணர்வை நமக்குள் திணிக்கும் அதே நேரம்..வளரும் நமது பிள்ளைகளுக்கும் இயன்றவரை உறவுகளுக்கும்....சொல்லிக் கொடுப்போம்....!
அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்றும் அரசியல் சாக்கடை என்றும், அரசியல் பேசமாட்டேன் என்றும் ஒதுங்காமல் முறையான ஜன நாயக அரசியல் எல்லோரும் அறியவேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து..... ஜன நாயக தேசத்தின் ஒப்பற்ற குடிமக்கள் ஆவோம்.... நமது ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்துவோம்.....!
சங்கே முழங்கு சங்கே முழங்கு....! சங்கே முழங்கு சங்கே முழங்கு.....!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று....
சங்கே முழங்கு! சங்கே முழங்கு!
தேவா. S
Comments
muthal vettu///
@@@இம்சைஅரசன் பாபு..
முதல் வெட்டு இல்லை முதல் ஓட்டு
யாரு ஜாஸ்தியா தர்றாங்களா அவங்களக்குத்தான் என் வோட்டு...
இப்படிக்கு
நிரந்தர உறுப்பினர்
மானங்ககெட்ட, ரோசங்கெட்ட, அசிங்கப்பபுடிச்ச, ஓட்டை அடகு வைப்போர் சங்கம்
தாய்திரு தமிழ் நாடு (எங்களுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உண்டு)
இருந்தாலும் உங்கள் தமிழை படிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது தேவா அண்ணா
சங்கே முழங்கு சங்கே முழங்கு....! சங்கே முழங்கு சங்கே முழங்கு.....!
என்று சொல்லி எத்தனை சங்குகள் முழங்கினாலும் தேர்தல் நேரத்தில் நம் மக்கள் அனைவரும் செவிடர்களே... எப்படியாவது அடைத்து விடுகிறார்களே பணத்தையும் பொருளையும் கொடுத்து காதுகளையும்... கண்களையும்...
இருந்தாலும் உங்கள் தமிழை படிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது தேவா அண்ணா
//
நீங்க இந்த ஏரியாவுக்கு புதுசா... நாங்க ஓரளவு புரிஞ்சுக்க பழகிட்டோம்...
ஏன்னா, எல்லாருமே கெட்டவங்க... அப்படித்தான் என் கண்ணுக்கு தெரியுது...
என்ன கொடும சார் இது...
அங்கே தவறு செய்யும் மேயர்களை திரும்ப பெறும் உரிமை (Recalling rights) உண்டு. ஆனால் நம் நாட்டில், பேருக்கு ஜனநாயகம் இருக்கே தவிர அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை
அந்த recalling rights நம் நாட்டில் கூட இருந்தால் தான் ஊழல் செய்கிற அயோகியர்களை பதவியை விட்டு கீழே இறக்க முடியும்.
அதுவரை போலியோவால் பாதிக்கபட்ட கால்கள் கொண்ட போலி ஜனநாயகத்தை என்ன தான் செய்ய முடியும் சொல்லுங்க தேவா?
மாற்று வழிகளை சாத்தியமாக்குவோம்! அதற்கு மனங்கள் தூய்மை அடைய வேண்டும். ஆன்மீக சிந்தனைகள் எல்லா இடத்திலும் பரவி எல்லோர் மனங்களில் இருக்கின்ற தீய சிந்தனைகள் ஒழிந்த பின் தான் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற சிந்தனை மலரும்.
அதுவரை கனவுகள் தொடரும்....
அதிக பட்சம் ... நம்ம வீடு, நமது நண்பர்கள்....இப்படி ஒவ்வொருத்தரும் நினைக்கனும்...!
முதலில் இவர்கள் வாக்களித்தல் என்றால் என்ன? எதற்கு ஒருவரை தேர்ந்தெடுக்கிறோம்? அவர் எதுக்கு ஓட்டுக்கு மட்டும் நம்மை தேடி வருகிறார்? இந்த விழிப்புணர்வு வேண்டும் பாஸ்...
ரீ காலிங் எல்லாம்...அ, ஆ, இ , ஈ படிச்சு அதுக்கப்புறம் எழுத்துக்கூட்டி வாசிக்கிற இடம்!
நீங்க எவ்வளவு சத்தமா சங்கு ஊதினாலும், எங்கள் காது செவிடன் காதுதான்
என்ன இப்புடி சொல்லிட்டீங்க? அப்புறம் யார் எங்களுக்கு ஓட்டுக்கு 1000 ரூபாய், தம்பி செளந்தர் புகழ்ந்த கலர் டீவி எல்லாம் தர்றது.////
ஆருண் அண்ணே அதுக்கு பிறகு ஒரு வேதனை பதிவு போட்டேன் அந்த பக்கம் யாரும் வரலை....
இதே பயம் எனக்கு உண்டு
இருந்தாலும் உங்கள் தமிழை படிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது தேவா அண்ணா////
@@@இம்சைஅரசன் பாபு.
இருங்க அவர் ஒரு டிஷ்னரி ரெடி பண்றார் அதை தருவார்
.......உண்மைதான் தேவா.....ஆனால், முறையாக எது நடக்கிறது? அதனால்தான் நல்லவர்களையும் வல்லவர்களையும், அரசியல் களத்தில் இருந்து விலக்கி வைத்து விடுகிறார்கள். :-(
ரீ காலிங் எல்லாம்...அ, ஆ, இ , ஈ படிச்சு அதுக்கப்புறம் எழுத்துக்கூட்டி வாசிக்கிற இடம்!//
தேவா! நீங்க சொல்றது சரிதான். இந்த விழிப்புணர்வு கூடவே recalling rights எல்லாம் simultaneous -ஆ நடந்தா தான் அது ஆரோகியமான ஜனநாயகமா இருக்கும்.
இப்போ பாருங்க Right to Information என்கின்ற விஷயத்தையே எப்படி எல்லாம் முடக்கி போட பார்க்கிறாங்க! ஜனங்க கிட்ட உணமையான Power இருக்கணும். இல்லாததால தான் விரக்தி, கோபம் எல்லாம்.
ஒன்றுமே நடக்கல! அதனால குறைஞ்ச பட்சம் ஓட்டுக்கு 2000-மோ, 3000-மோ வாங்கிகலாம். இதுவாவது நமக்கு லாபமா இருக்குமே என்கினற நினைப்பு தான் மக்களை பணம் வாங்க வைக்கிறது.
உயிர் துடிப்பிள்ள ஜனநாயகம் இருக்கும்போது தான் எல்லோருக்குமே அதை காப்பாற்ற வேண்டும் என்கின்ற ஈடுபாடு உண்டாகும்.
அதுவரை எழுதிகொண்டும், பேசிகொண்டும் இருக்க வேண்டியது தான்...
நல்ல சிந்தனைதான்...ஆனால் 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்ற மனப்பான்மை நம்மிடையே மலிந்து கிடக்கிறதே....
விழிப்புணர்வை எங்கிருந்து தொடங்குவது ...? யாரிடமிருந்து தொடங்குவது......?? இந்த கேள்விகளுக்கும் பதில் வேண்டுமே தேவா...
என்னது நானு யாரா? @ ஜனங்க கிட்டதான் உண்மையான பவர் இருக்குன்னே இவுங்களுக்கு தெரியாது பாஸ்...! அதை பத்திதான் விழிப்புணர்ச்சி கொண்டு வரணும்...!
கெளசல்யா....@ விழிப்புணர்வு நம்முள் இருந்து தொடங்க வேண்டும் கெளசல்யா... நான், என் வீடு, என் சுற்றம், நட்பு என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் இது பற்றி புரிந்தவர்கள் தெரிந்தவர்கள் எடுத்து சொல்ல வேண்டும்....! நான் உணர்கிறேன்...இதோ நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்... நான் பேசும் 10 பேரும் ஒரு பத்து பேரை ரீச் பண்ணமாட்டங்களா...அந்த 10 பேர் இன்னும் 10 பேரை...
பிரச்சினை என்னன்னா...கறுப்பு ஆடுகள் எல்லாம் நமது நண்பர்களாகவும், சொந்த பந்தங்களாகவும் இருக்கு... நாமும் உறவு முறை பாராட்டிட்டு விட்டுட்டு வந்துடுறோம்...அப்படி இருக்க கூடாது என்பது என் வாதம்...!
நாஞ்சில் பிரதாப் - நானும் உங்க சங்கத்துல உறுப்பினரா சேர்ந்துக்குறேன்... ஹிஹிஹி //
வாங்க தலைவா வந்து ஜோதில ஐக்கியமாகுங்க... சங்கத்துக்கு எவ்ளோ கொடுப்பீங்க...வாங்கறதுல 10சதவீதம்
கொடுஙக போதும் :)
ஒத்துகொள்ள கூடிய உண்மைதான்..... கண்டிப்பாக மாற்றம் தேவைபடுகிறது.
விளக்கத்திற்கு நன்றி தேவா
எலேய் உனக்கு என்ன புரிஞ்சதுன்னு சொல்லு முதல்ல.
மேலே தவறா 5 வருஷம்னு போட்டுடேன்...5 வருசத்துக்குள்ள விழிப்புணர்வு நிலையை அடையுறதே கஷ்டம்...!
இதை மட்டும் எல்லாரும் ஒழுங்கா செய்திட்டா எல்லா பிரச்சனையும் தீரும் , எங்க இப்பத்தான் ஓட்டுக்கு ரெட் எரிப்போச்சே ?
நீயே நேற்று பார்த்துட்டு வந்த படம் 'A ' அல்லது 'U ' இன்னும் புரியாம உனோட ப்ளோக்ல பதிவே போட்டிருக்கே நீ என்னை பார்த்து என்ன புரிஞ்சது கேக்றே .தேவா இந்த பயபுள்ளைய ஆட்டத்துல சேக்காதீங்க
வாங்க செல்வா நாம ரெண்டு பெரும் பொய் தூர் வருவோம் சாக்கடையை.புரியாம இருக்கீங்களே பணம் ,ஆள் பலம் இல்லமே இதுல ஒன்னும் முடியாது அந்த காலம் மாரிபோயடுச்சு நீங்க நான் நல்லது செய்யுறேன்னு சொல்லி உங்க எடுத்துல கவுன்சிலோரக கூட நிக்க முடியாது.
நான் அதுக்குத்தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன் ..!! ஆமாங்க நான் முதல்ல ஒரு பிரபலம் ஆகணும் . அப்புறம் பாருங்க ..!! ஹி ஹி ஹி ...
இம்சை....@ தம்பி மிகைப்பட்டபேர் சொல்லும் வாக்கியம்தான் நீங்க சொல்லியிருக்கீங்க...புதுசா ஒண்ணும் இல்ல....!
நாம ஏன் தமிழ் நாட்ட மாத்துறத பத்தி சிந்திக்கிறோம்...முதல்ல நம்ம வீட்ல உள்ளவங்கள...மாத்துறத பத்திதான் சிந்திக்கணும்...! மேக்ரோ லெவல்ல பிரச்சினைகள் சரியான மேக்ரோ லெவலா அது ரிஃப்ல்ளக்ட் ஆகும்....!
சுத்தம் செய்தால் எப்படி இருக்கும் என்று மலைத்து அதை பற்றிய ஆராய்ச்சிகளை விடுத்து.. குப்பைகளை பொறூக்குவதில் கவனம் செலுத்துவோம்..... ! நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டிங்கன்றது உங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம் அங்க அடிங்க ஆப்ப....வெளில வந்து சிரிச்சுகிட்டே......உங்களுக்குத்தாண்ணே போட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டே இருங்க....
என்னுடைய பயம் எல்லாம்...சந்தோசத்துக்காக ஒரு லட்சம் கும்மியடிக்கும் மக்கள்...இது பற்றிய தெளிவான கருத்துக்களை கூட தெரிவிக்க முடியாம இருக்காங்களே...? அதுவும் இளம் இரத்தம் ஓடும் மிகைப்பட்ட சகோதரர்கள் கூட என்னளவில் நான் சரியாயிருப்பேன் என்ற உறுதியை சொல்ல முடியாமல்... தட்டுத் தடுமாறி....யார் மாத்துவான்னு....? வானத்த வெறிச்சு பாத்துகிட்டு இருக்கிறதா பார்த்தா இன்னும் பயமாதான் இருக்கு.....
கிண்டலும் நையாண்டியுமா, ஏதோ ஒரு கட்சியில சேந்து காசு சேத்துட்டு இல்லை குறை சொல்லிட்டு....ஒரு தமிழ்படத்த பாத்துட்டு டீ குடிச்சுட்டே போயிடுமா நம்ம பொழுது....?
இந்திய தேசத்தின் பட்ஜெட்டை என்று பாமரனும் ஆராய்ந்து படித்து வரவு செலவு கணக்கு சரியான்னு பாக்குறது....? மாறும்.....எல்லாம் மாறும்....மாறாது என்ற வார்த்தை தவிர எல்லாம் மாறும்....!
யோவ் மங்குனி எங்கே போய் சரியாய் ஓட்ட போடுறது நாம போகிறதக்கு முன்னாடி வேற எவனோ போட்டு கிட்டு போயடரங்கோ இதுக்கு என்ன செய்ய
இம்சை...@ இதைப் படிக்கலியா... 20 வருஷம் இல்லப்பா 50 வருசம் கூட ஆகும்...ஆனா அது பத்தி இப்பவே எல்லோரும் பேச ஆரம்பிக்கணும்.....!