Pages

Thursday, September 16, 2010

சாரல்...!விருப்பம்


உனக்கு காபி பிடிக்கும்
எனக்கு டீ பிடிக்கும்
நான் காபி; நீ டீ....!
***


முரண்


இருக்கவா போகவா
என்றாய்...
வாழவா சாகவா என்றால்
என்ன நான் சொல்வது?
***


விடை

ஒரு ஓவியம் வரையச் சொன்னாய்
உன் பெயர் எழுதினேன்....
ஒரு கவிதை கேட்டாய்
உன் ஒவியம் வரைந்தேன்...
ச்சோ ஏன் இப்படி ...என்று
உதடு சுழித்தாய்...
பதிலே கேள்வி கேட்டால்
எப்படி பதில் சொல்ல?
***


நிஜம்

இன்னொரு முறை ...
என் பெயர் சொல்லி அழை...
என் உயிர்ப்பை...
உறுதி செய்து கொள்கிறேன்...!
***


ஆச்சர்யம்!

விலகிப் போகிறாய்...
என்றுதான் நினைக்கிறேன்...
விலகி நிற்கும் தூரங்களிலும்
காக்க வைத்திருக்கும் காலங்களிலும்
விசுவரூபமாய் வியாபித்து ...
நிற்கிறாயே எப்படி?
***

கவிதையா அப்டீன்னா?
ஆச்சர்யமாய்.. நீ கேட்டு...
ஒரு நொடியில் பட படவென
இமைத்து....லட்சம் கவிதைகள்
சொல்கிறாயே அது எப்படி?
***

புதிர்

உன் விழிகள்....
எல்லோரையும் பார்ப்பதற்கும்...
என்னை மட்டும் தவணை முறையில்
கொல்வதற்குமா?

***

கவிதை

...ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்..
அவள் வருகிறாள்...
நான் தொலையப் போகிறேன்...!
***

காதல் என்பது ஒரு உணர்வு காற்று மாதிரி பரவி விரவியிருக்கும் .... மனதை திறந்து வைத்திருக்கும் வேளைகளில் அது நம்மை ஆக்கிரமிப்பதை யாராலும் தடுக்க முடியாது.... அந்த ஆக்கிரமிப்பில் மலரும் பூக்களின் நிறங்கள்.. நமது கற்பனையையும் மிகைத்தவை....! சப்தமில்லாமல்... மெல்ல நுழையுங்கள் உங்களின்...அந்த வெட்ட
வெளி இருப்புத்தன்மைக்குள்...!


தேவா. S

93 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

சூப்பரு மாப்ஸ்....

Chitra said...

ஒவ்வொரு கவிதையும், காதலில் தோய்ந்து எழுதி இருப்பது தெரிகிறது..... அழகு!

சௌந்தர் said...

இருக்கவா போகவா
என்றாய்...
வாழவா சாகவா என்றால்
என்ன நான் சொல்வது?/////

நீங்க எதாவது ஒன்னு சொல்லனும் எதுவும் சொல்ல வில்லை என்றால் என்ன அதான் அப்படி கேக்குறாங்க.

உங்களை கேள்வி கேட்டால் நீங்க மீண்டும் அவங்களையே கேள்வி கேக்குரிங்க

சே.குமார் said...

//...ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்..
அவள் வருகிறாள்...
நான் தொலையப் போகிறேன்...!
//

அனைத்தும் அருமை...
காதல் வரியின் சாரலில்.... (இல்லை இல்லை) அருவியில் நனைந்ததில் என்னைக் அதிகம் கவர்ந்தது கடைசிக் கவிதை.

Balaji saravana said...

தத்துவ ஞானிட்ட இருந்து காதல் கவிதைகள் :)
அருமை அண்ணா!

dheva said...

டெரரு....@ போன போஸ்ட்ல நீ போட்ட கமெண்ட்ல மிரண்டு போயிட்டே மாப்ஸ் சரி பொழச்சு போ உனக்கு அர்ப்பணிச்சுடுறேன் இந்த கவிதைகள....!

dheva said...

செளந்தர்...@ கவிதைக்கு உள்ள போய் நீ ஒரு பொண்ணு கிட்ட பேசுற மாதிரி கற்பனை பண்ணி பாரு.. நிஜமாவே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்....ஹா..ஹா..ஹா.. வீட்டுக்குள்ள வா தம்பி... காபி, டீ, ஹார்லிக்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் கிடைக்கும்...!

என்னது அப்படி நினைக்க மாட்டியா...? சரி விடு ரைட்டு..!

dheva said...

சித்ரா..@ம்ம்ம்ம்ம் அப்டின்னுதான் நினைக்கிறேன்... !

Bavan said...

//கவிதையா அப்டீன்னா?
ஆச்சர்யமாய்.. நீ கேட்டு...
ஒரு நொடியில் பட படவென
இமைத்து....லட்சம் கவிதைகள்
சொல்கிறாயே அது எப்படி?//

ரசித்தேன் தேவா அண்ணே.. எல்லாமே அருமை..:D

dheva said...

சே. குமார்.. @ பாஸ் கொஞ்சம் டேபிளட் எடுத்துக்கோங்க... ஜுரம் வந்திட போகுது....! ஏற்கனவே நீங்க மார்க்கெட் போயிட்டு வந்து வாங்கிகட்டிக்கிட்டதுல ஜுரம் வந்து இப்போதான் தேறி இருப்பீங்க...!

dheva said...

பாலாஜி சரவணா....@ நான் தத்துவ ஞானின்னு எப்பப்பா சொன்னேன்.... அப்போ காவி துணி கமண்டலம் எல்லாம் ரெடியா வச்சிருக்கிங்களா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva said...

பவன்@ தம்பி உனக்கு புரியலேன்ன எப்படி... ur already running the show na... ha ha ha!

சௌந்தர் said...

ஒரு ஓவியம் வரையச் சொன்னாய்
உன் பெயர் எழுதினேன்...///

அப்படி என்ன பெயர் அது....

சௌந்தர் said...

ஒரு கவிதை கேட்டாய்
உன் ஒவியம் வரைந்தேன்.////

ஆக மொத்தம் அவங்க கேட்பதை செய்து தருவது இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

konar notes please

இம்சைஅரசன் பாபு.. said...

//இருக்கவா போகவா
என்றாய்...
வாழவா சாகவா என்றால்
என்ன நான் சொல்வது?//

யாரை பார்த்து அன்ன இந்த கவிதை
terror நேற்று போட்ட பதிவுக்கு அவரை போக சொல்லுறதோ ,சாக சொல்லுறதோ தப்பு .அவர் திருந்தி விடுவார் மன்னிப்போம்

சௌந்தர் said...

கவிதையா அப்டீன்னா?
ஆச்சர்யமாய்.. நீ கேட்டு...
ஒரு நொடியில் பட படவென
இமைத்து....லட்சம் கவிதைகள்
சொல்கிறாயே அது எப்படி?////

அப்போ அவங்க கவிதை எழுதுவது உங்களுக்கு தெரிந்து இருக்குஅதை சரியா எண்ணி வேற சொல்றிங்க

தமிழ் உதயம் said...

ரெம்ப ரெம்ப நன்றாக இருந்தது கவிதை. ஆழந்து லயித்து எழுதப்பட்ட கவிதை.

dheva said...

கமிசனர் ஆபீசா... சார் எது எழுதுனாலும் கோனார் நோட்ஸ் கேக்குறான்...

ஆமா சார் அவன் தான்....உங்க டிப்பார்மெண்ட்க்கே சவால் விடுற சிரிப்பு போலிஸ்தான்.. அவன் கிட்ட இருந்து தமிழ்னாட்ட காப்பதுங்க சார்!

dheva said...

இம்சை.. @ உன்கிட்டதான்டா தம்பி கேக்குறேன்...!

dheva said...

//dheva said...
செளந்தர்...@ கவிதைக்கு உள்ள போய் நீ ஒரு பொண்ணு கிட்ட பேசுற மாதிரி கற்பனை பண்ணி பாரு.. நிஜமாவே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்....ஹா..ஹா..ஹா.. வீட்டுக்குள்ள வா தம்பி... காபி, டீ, ஹார்லிக்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் கிடைக்கும்...!

என்னது அப்படி நினைக்க மாட்டியா...? சரி விடு ரைட்டு..!
//

கன்னா பின்னா ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

Shameer said...

//...ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்..
அவள் வருகிறாள்...
நான் தொலையப் போகிறேன்...!//

anne super......

இம்சைஅரசன் பாபு.. said...

காபி, டீ,இத எல்லாம் விட்டு ரொம்ப நாள் ஆகிடுச்சு .ஒன்லி ஆட்டு கால் சூப்பு,ஆட்டு கரி பாயா,வித் சிங்கள் கட்டிங் தேவா அண்ணன்

சௌந்தர் said...

அது எப்படி அண்ணா வியாழன் ஆனா இப்படி கவிதை வருது என்ன விசயம்

dheva said...

//இம்சைஅரசன் பாபு.. said...
காபி, டீ,இத எல்லாம் விட்டு ரொம்ப நாள் ஆகிடுச்சு .ஒன்லி ஆட்டு கால் சூப்பு,ஆட்டு கரி பாயா,வித் சிங்கள் கட்டிங் தேவா அண்ணன் //


மாப்ஸ்... டெரரு.. அந்த அரிவாள எவ்ளோ நேரம் தீட்டுவ.. எடு எடு சீக்கிரம் .. இந்த இம்சைய பொழி போட்டுடு வந்துடுறேன்...!

Shameer said...

@soundar //அது எப்படி அண்ணா வியாழன் ஆனா
இப்படி கவிதை வருது என்ன விசய//

thambi ippo nee kooda kavitha eluthalampa.....

dheva said...

//சௌந்தர் said...
அது எப்படி அண்ணா வியாழன் ஆனா இப்படி கவிதை வருது என்ன விசயம்
//

ஹலோ... கண் டாக்டரா..? ஆமா சார் நம்ம தம்பிதான் அவருக்கு வியாழன் அன்னிக்கு மட்டும்தான் என் போஸ்ட் கண்ணுக்கு தெரியுதாம் மத்த நாள் எல்லாம் தெரியலாம்...

ஆமா சார் லாஸ்ட் மூணு நாளா கவிதை எழுதிட்டு இருக்கேன்.. இன்னிக்குதான் கவிதை கண்ணுக்கு தெரியுதாம்.... கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்...!

இம்சைஅரசன் பாபு.. said...

//மாப்ஸ்... டெரரு.. அந்த அரிவாள எவ்ளோ நேரம் தீட்டுவ.. எடு எடு சீக்கிரம் .. இந்த இம்சைய பொழி போட்டுடு வந்துடுறே//
terror அவரு வர மாட்டார் இன்னொரு பதிவு அவர் ஸ்டைல போட்ட தப்பினாறு இல்லன பாயா தான்

சௌந்தர் said...

ஹலோ இவர் வியாழன் மட்டும் தான் காதல் கவிதை எழுதுறார் மக்களே

இம்சைஅரசன் பாபு.. said...

terror அவரு வர மாட்டார் இன்னொரு பதிவு அவர் ஸ்டைல போட்ட தப்பினாறு இல்லன பாயா தான்

வானம்பாடிகள் said...

முதல் ரெண்டு ஓக்கே. மத்ததெல்லாம் ‘ஹை’

dheva said...

சமீர்...@ நீ காதல்ல இருக்கே.. வாழ்த்துக்கள்...!

dheva said...

//சௌந்தர் said...
ஹலோ இவர் வியாழன் மட்டும் தான் காதல் கவிதை எழுதுறார் மக்களே //

தேவா.... நீ என்னா எழுதறேன்னு உனக்கே தெரியல.. ஆனா...தம்பி கணக்கு வச்சிருக்கிறான் பாரு... ! நீ லக்கிடா உனக்கு சூப்பர் தம்பி கிடைச்சிருக்கான்

dheva said...

Shameer said...
@soundar //அது எப்படி அண்ணா வியாழன் ஆனா
இப்படி கவிதை வருது என்ன விசய//

thambi ippo nee kooda kavitha eluthalampa.....

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டு....!

அருண் பிரசாத் said...

அய்யோ.... தேவா அண்ணணை காணோம்... இவ்வளவு காதலோட எழுதி இருக்கீங்க... சே.... காலேஜ் படிக்கறப்பவே இது கிடைச்சிருந்தா 4 பிகரை உசார் பண்ணி இருப்பேன்

சௌந்தர் said...

அருண் பிரசாத் said...
அய்யோ.... தேவா அண்ணணை காணோம்... இவ்வளவு காதலோட எழுதி இருக்கீங்க... சே.... காலேஜ் படிக்கறப்பவே இது கிடைச்சிருந்தா 4 பிகரை உசார் பண்ணி இருப்பேன்////

@@@ அருண்
அருண் அண்ணா எதுக்கு நமக்கு இந்த தேவை இல்லாத வேலை, அதுக்கு தான் நம்ம தேவா அண்ணன் இருக்கிறார்

dheva said...

அருணு..@ ஆசை தோசை அப்பளம் வடை... போய்யா....போ...போஓஓஓஓ!

வினோ said...

கலக்கல் தேவா.. காலையில் எழுதவுடன் இந்த கவிதைகள். நல்லா இருக்கும் நாளும் காதலுடன்...

சிவராஜன் said...

எல்லாமே நல்ல இருக்கு , சரி அப்பு இந்த கவிதைக்கு சொந்தகாரங்க அதாவது தமிழில் சொல்லணும் என்றாள் owner யாரு ?

சௌந்தர் said...

Shameer said...
thambi ippo nee kooda kavitha eluthalampa.....///

@@@Shameer

இந்த கவிதையே நான் எழுதியது தான் ஏதோ அண்ணன் கேட்டார் என்று கொடுத்தேன்

இம்சைஅரசன் பாபு.. said...

கவிதை(அதே காதலியை மணம் முடிந்த பின்னால் )

...ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்..
அவள் வருகிறாள்...
என்னை அடிபதற்காக ...!

இப்படியும் எழுதலாம் இல்லையா அண்ணா

dheva said...

வினோ...@ வாங்க வினோ............ காதல்ல இருக்கிற காதல் புரியற உங்களுக்கு....இந்த நாள் காதலா இருக்கும் கண்டிப்பா...வாழ்த்துக்கள்....! ஆன நம்ம புள்ளைங்கள பாருங்க.. பிரிச்சு மேயுதுங்க.....ஹா..ஹா..ஹா...!

dheva said...

சிவராஜன்..@ ஏன்டா தம்பி எங்கள பாத்தா ஓனரா தெரியலையா.. என்ன டவுட்டு ராஸ்கல்.......சின்னபுள்ளத் தனமால்ல இருக்கு...!

dheva said...

//செளந்தர்...@ இந்த கவிதையே நான் எழுதியது தான் ஏதோ அண்ணன் கேட்டார் என்று கொடுத்தேன் //

ஆமா.. ஆமா...!

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆசை தோசை அப்பளம் வடை... போய்யா....போ...போஓஓஓஓ//

இதுவும் ஒரு கவிதை தானே தேவா அண்ணா

dheva said...

//இம்சைஅரசன் பாபு.. said...
கவிதை(அதே காதலியை மணம் முடிந்த பின்னால் )

...ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்..
அவள் வருகிறாள்...
என்னை அடிபதற்காக ...!

இப்படியும் எழுதலாம் இல்லையா அண்ணா //


இம்சை.. @ இந்த கேள்விய அருண் கிட்ட கேளு.. பதில் சொல்வான்... ஹா.. ஹா..ஹா..

நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்டா.. இத படிச்சுட்டு.. !

dheva said...

///இம்சைஅரசன் பாபு.. said...
//ஆசை தோசை அப்பளம் வடை... போய்யா....போ...போஓஓஓஓ//

இதுவும் ஒரு கவிதை தானே தேவா அண்ணா //


இம்சை... உன் நம்பிக்கை எனக்கு பிடிச்சுருக்கு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... கொய்யாலா குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா இவன்.....!

சௌந்தர் said...

..ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்..
அவள் வருகிறாள்...
நான் தொலையப் போகிறேன்...////

இது கல்யாணத்திற்கு பிறகு சொல்லும் கவிதை

அருண் பிரசாத் said...

///இம்சைஅரசன் பாபு.. said...
//ஆசை தோசை அப்பளம் வடை... போய்யா....போ...போஓஓஓஓ//

இதுவும் ஒரு கவிதை தானே தேவா அண்ணா //

தேவா... எழுதுறது புரியலன்றது உண்மைதான் அதுக்காக அவர் எழுதுற எல்லாத்தையும் கவிதையா பார்க்கற உங்க மனசு யாருக்கு வரும் ( மறை கழண்டுடுச்சுன்றத சொல்லவரேன்)

@ தேவா...
ஒரு வாயில்லா பூச்சி இம்சைய இப்படி பண்ணிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

dheva said...

அருணு...கண்ணுல தண்ணி வந்துடுச்சுடா செல்லம்... அண்ணன் மேல இவ்ளோ பாசமா உனக்க்கு...

பாசக்கார பய... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னொரு முறை ...
என் பெயர் சொல்லி அழை...
என் உயிர்ப்பை...
உறுதி செய்து கொள்கிறேன்...!//

காலைல எழுந்து துணி துவைக்க சொன்னால் இன்னும் என்ன உறக்கம்.இந்த வார்த்தைல எப்படி அண்ணா உயிர்ப்பை
உறுதி செய்ய முடியும்

அருண் பிரசாத் said...

@ தேவா...

நோ... நோ... நோ... உணர்ச்சிவசத்தை அடக்குங்க, எமோஷன கண்ட்ரோல் பண்ணுங்க... நீங்க இன்னும் பல பேரை பைத்தியமாகனும்... சத்தியமா நான் உங்க கவிதைய படிச்சி பத்தியமாகனும்னு தான் சொன்னேன்.... அய்யயோ எப்படி சொன்னலும் தப்பாவே வ்ருதே...

சௌந்தர் said...

அருண் பிரசாத் said...
@ தேவா...

நோ... நோ... நோ... உணர்ச்சிவசத்தை அடக்குங்க, எமோஷன கண்ட்ரோல் பண்ணுங்க... நீங்க இன்னும் பல பேரை பைத்தியமாகனும்... சத்தியமா நான் உங்க கவிதைய படிச்சி பத்தியமாகனும்னு தான் சொன்னேன்.... அய்யயோ எப்படி சொன்னலும் தப்பாவே வ்ருதே.////

@அருண்
இந்த கவிதையை படித்ததில் இருந்தே நம்ம அருண் அண்ணனுக்கு என்னமோ ஆகி விட்டது

என்னது நானு யாரா? said...

இது நல்லா இருக்கு! இந்த மாதிரி விட்டுபோட்டு, கவிதையும் புரியாம, அதுக்கு கொடுக்கிற விளக்கமும் புரியாம, வந்த கடமைக்கு ஓட்டு போட்டு போறாப்புல ஆயிடுது.

எளிமையா எழுதுங்க! ரஜினி ரசிகர் நீங்க! அதனால ரஜினியை வைச்சி ஒரு உதாரணம். படையப்பா ஜெயிச்சது ஆனா பாபா தோத்துபோனது. மக்கள் எளிமையை தான் விரும்புறாங்க!

நல்ல விஷயம், அது எளிமையா சொல்ல படலைன்னா அது ஏற்றுக்கொள்ள படுவதில்லை தேவா!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதையில் அழகு கூடிக்கொண்டே செல்கிறது.. ஒவ்வொன்றும் அழகு..

///கவிதையா அப்டீன்னா?
ஆச்சர்யமாய்.. நீ கேட்டு...
ஒரு நொடியில் பட படவென
இமைத்து....லட்சம் கவிதைகள்
சொல்கிறாயே அது எப்படி?
***///

அதுலேயிருந்து ஒரு கவிதைய நமக்காக எடுத்துவிடுங்க பங்காளி..

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்த கவிதையை படித்ததில் இருந்தே நம்ம அருண் அண்ணனுக்கு என்னமோ ஆகி விட்டது //

ஐயோ சௌந்தர் terror க்கு யாரோ சூனியம் வச்சங்கான ,நம்ம அருணும் இப்படி ஆயிட்டாரே.தேவா அண்ணன் கொஞ்சம் பல்பு வாங்கன கதையை நீங்களும் கொஞ்சம் எழுதுங்கள் அப்பா தான் அருணுக்கு சரியாகும்

dheva said...

//என்னது நானு யாரா? said...
இது நல்லா இருக்கு! இந்த மாதிரி விட்டுபோட்டு, கவிதையும் புரியாம, அதுக்கு கொடுக்கிற விளக்கமும் புரியாம, வந்த கடமைக்கு ஓட்டு போட்டு போறாப்புல ஆயிடுது.

எளிமையா எழுதுங்க! ரஜினி ரசிகர் நீங்க! அதனால ரஜினியை வைச்சி ஒரு உதாரணம். படையப்பா ஜெயிச்சது ஆனா பாபா தோத்துபோனது. மக்கள் எளிமையை தான் விரும்புறாங்க!

நல்ல விஷயம், அது எளிமையா சொல்ல படலைன்னா அது ஏற்றுக்கொள்ள படுவதில்லை தேவா! //


நீங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இருக்கு பாஸ்......மிகைப்பட்டவர்களுக்கு புரியும்னு எனக்கும் தெரியும் ... ஆனா............முடிஞ்ச வரைக்கும் சிக்கலான விசயத்தை பேச விரும்புறேன்...ஆனா அதை எளிமைப்படுத்தி எழுத இன்னும் ட்ரை பண்றேன்....

100 பேர் படிக்கும் போது....15 பேர் ரசிக்கிறாங்க.. 85 பேருக்கு புரியலன்றது ஒரு ஆரோக்கியமான சூழ் நிலை இல்லைதான்....முடிஞ்ச வரைக்கும்.... முயற்சி பண்றேன்... வசந்த்.....!

நேர்மையான விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள்!

dheva said...

வானம்பாடிகள்.. @ நன்றி அண்ணா...!

dheva said...

//அதுலேயிருந்து ஒரு கவிதைய நமக்காக எடுத்துவிடுங்க பங்காளி.. //

ஸ்டார்ஜன்...@ பங்காளி.. மேலே எழுதியிருக்கறது எல்லாமெ கவிதைதான் பங்க்ஸ்ஸ்ஸ்ஸ்!

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா
//நீங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இருக்கு பாஸ்.//

ஆனா எனக்கு உடன்பாடு இல்லை மாப்ஸ். பங்காளி சொல்லி இருக்கது மத்த பதிவுக்கு வேண்டுமானல் பொருந்தலாம். இந்த பதிவு பொருந்தாது. கவிதை எளிமையா இருக்கு என்பது என் கருத்து.

ஒரு நொடியில் பட படவென
இமைத்து....லட்சம் கவிதைகள்
சொல்கிறாயே அது எப்படி?

கலக்கல் மாப்ஸ்....

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

மாப்ஸ் இந்த துபாய்ல நீ எந்த மூஞ்சிய பாத்து இப்படி பீல் பண்ற?? வெள்ளகாரியா, அரபியா, பிலிப்பினியா, கேரளாவா, இலங்கையா, பங்காளியா...

dheva said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@தேவா

மாப்ஸ் இந்த துபாய்ல நீ எந்த மூஞ்சிய பாத்து இப்படி பீல் பண்ற?? வெள்ளகாரியா, அரபியா, பிலிப்பினியா, கேரளாவா, இலங்கையா, பங்காளியா... //


அட பாவி மாப்ஸ்..ஏன்யா இப்படி மானத்த வாங்குறா.. யாறையும் பாக்கமலேயே எழுதக்கூடதுன்னு யாருய்யா ரூல்ஸ் போட்டது....ஹா.. ஹா.. ஹா..!

வினோ said...

அட பாவமே.. வீட்டுல இருந்து ஆபீஸ் வரக்குள்ள மக்கா இத்தனை விசயம் நடந்திருச்சா?

ப.செல்வக்குமார் said...

தமிழ்நாட்ட டெவலப் பண்ணனும் ..?
ஆல்ரெடி டெவலப் ஆகிடுச்சா ..?

இம்சைஅரசன் பாபு.. said...

தேவா அண்ணன்
கவிதை உண்மையாகவே நன்றாக இருக்கு.
காதலிப்பவர்களுக்கு தான் கவிதை எழுத வரும் என்று சொல்வார்கள் .எனக்கு அந்த பாக்கியம் இல்லை .அதனால் கவிதை பற்றி அறவே எதுவும் தெரியாது .அதனால் உங்கள் கவிதையை பார்க்கும் பொழுது நன்றாக இருக்கிறது படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.இன்னும் இதே போல் பல கவிதைகள் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

நாங்கள் அப்ப அப்ப வந்து சும்மா கும்மிட்டு போவோம் .நன்றி

ப.செல்வக்குமார் said...

எல்லா கவிதையுமே நல்லா இருக்கு அண்ணா..
போலீஸ்காரற இங்க வர சொல்லுங்க .. நான் நோட்ஸ் தரேன் ..!!

வெறும்பய said...

வெறும்பய Online...

VELU.G said...

நம்ம தேவாவா இது

இப்படி காதலில் தொலைந்து போய்விட்டீரே

அருமை அருமை நண்பரே

பதிவுலகில் பாபு said...

எல்லா கவிதையுமே நல்லாயிருக்குங்க தேவா..

ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க..

என்னது நானு யாரா? said...

@@TERROR-PANDIYAN(VAS) said...

//ஆனா எனக்கு உடன்பாடு இல்லை மாப்ஸ். பங்காளி சொல்லி இருக்கது மத்த பதிவுக்கு வேண்டுமானல் பொருந்தலாம். இந்த பதிவு பொருந்தாது. கவிதை எளிமையா இருக்கு என்பது என் கருத்து.//

இந்த கவிதை எளிமையா, நல்லா இருக்குன்னு தானே சொன்னேன். என் கமெண்டை சரியா படிங்க டெரர் பங்காளி!

dheva said...

வெறும்பய ஆன்லைன்னு சொல்ல வந்தியாட தம்பி.. ?

ஹேமா said...

காதலில் மூழ்கிக் கிடக்கையில் முத்தெடுத்த வரிகள்.அருமை தேவா !

நிலாமதி said...

யாரை எண்ணி இக் கவிதை எழுதினீர்களோ அவர் ..கொடுத்து வைத்தவர்......

dheva said...

வேலு...@ உங்க தேவாவேதான்...!

dheva said...

டெரர்... @ மாப்ஸ் டென்சன் ஆகாத.. கேட்டுக்க்குவோம்....!

dheva said...

ஹேமா.. @ நல்ல வேளை முத்து எடுத்துட்டு மேலே வந்துட்டேன்..சில பேரு முத்தோட உள்ள போயிட்டதா கேள்வி.. ஹா.. ஹா.. ஹா. நன்றிங்க..!

dheva said...

நிலாமதி..@ யாரையும் நினைச்சு இல்லாம் எழுதலேங்க..(ஆமா யாரயாச்சும் நினைச்சா எப்டி எழுத முடியும்??????)

dheva said...

பாபு... @ நன்றி தம்பி!

dheva said...

இம்சை..@ ரொம்ப டீசண்டா கமெண்ட் போட்டுருக்கான்.. .திருந்திட்டானாம்மா...எல்லோரும் கேட்டுக்கோங்க...!

வில்சன் said...

உன் ஆபீஸ்ல புது பிகர் எதுவும் சேர்ந்து இருக்கா மாப்ஸ்? (கல்லூரி காலத்து தேவாவை மறுபடியும் ஞாபகப்படுத்தும் ப்ரெஷ்ஷான வரிகள்)

TERROR-PANDIYAN(VAS) said...

@என்னது நானு யாரா?
//இந்த கவிதை எளிமையா, நல்லா இருக்குன்னு தானே சொன்னேன். என் கமெண்டை சரியா படிங்க டெரர் பங்காளி//

அவ்வ்வ்வ் பங்காளி கோச்சிகாதிங்க... இது நல்லா இருக்கு! இந்த மாதிரி விட்டுபோட்டு, அப்படினு நீங்க சொன்னது கும்மி அடிக்கிறத சொல்றிங்க நினைச்சிட்டேன். செஞ்ச பாவத்துகு இரண்டு நாள் வெறும் சைவ உணவு மட்டும் சப்பிடறேன்...

(உண்மையில் தவறான புரிதளுக்கு வருந்துகிறேன். பருங்க கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு :)) )

Riyas said...

very nice poems...

என்னது நானு யாரா? said...

@@TERROR-PANDIYAN(VAS) said...

//செஞ்ச பாவத்துகு இரண்டு நாள் வெறும் சைவ உணவு மட்டும் சப்பிடறேன்...//

மெய்யாலுமா பங்காளி?

அருண் பிரசாத் said...

@ டெரர்
//உண்மையில் தவறான புரிதளுக்கு வருந்துகிறேன். பருங்க கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு :)//

சாச்சுபுட்டங்களே மாம்சு! இதுக்குதான் நல்லா பாராட்டி கமெண்ட் போடாதய்யானு சொன்னேன், பாரு டாக்டர் வந்து பல்பு கொடுத்துட்டாரு...

அமைதிச்சாரல் said...

சூப்பர் வரிகள்..

அவங்க கேட்டதுக்கெல்லாம் தப்புதப்பாவே விடை எழுதிவெச்சிருக்கீங்களே.. கோச்சுக்கப்போறாங்க :-)))

என்னது நானு யாரா? said...

@@அருண் பிரசாத்

//சாச்சுபுட்டங்களே மாம்சு! இதுக்குதான் நல்லா பாராட்டி கமெண்ட் போடாதய்யானு சொன்னேன், பாரு டாக்டர் வந்து பல்பு கொடுத்துட்டாரு. //

அவரு என்ன பண்ணுவாரு! வீட்டில சமையல் வேலை முதல்கொண்டு எல்லா வேலையும் செய்திட்டு கலைப்பா வர்றாரு! அதனால சரியா கண்ணு தெரியல! விடுங்க அருண்!

வெறும்பய said...

dheva said...

வெறும்பய ஆன்லைன்னு சொல்ல வந்தியாட தம்பி.. ?
//

அவளின் இதயம் என நினைத்து இந்த இணைய கடலுக்குள் தொலைத்து போன என் தேவா அண்ணனை தேடிக்கொண்டிருக்கிறேன்...

இராமசாமி கண்ணண் said...

இந்த கவிதைக்கு அடியில கொஞ்சம் உரைநடை எழுதறத நிப்பாட்டுங்ண்ணா... கவிதை மட்டும் தனியா இருந்தா இன்னும் நல்ல பீல் கொடுக்கும்.. மிச்ச படி கவிதைகள பத்தி சொல்றதா இருந்தா.. ம்ம் .. என்ன சொல்ல்.. என்ன சொல்ல.. மொதல்ல போட்ருக்கற அந்த படம் நல்லாருக்குண்ணா :)

க.பாலாசி said...

காதல் ஒரு தேன்கூடுங்க... அதன் எச்சாளரத்தின் வழி வழிந்தாலும் அது தேன்தான்... இந்த கவிதைகளும்.. ரசித்துப்பருக இவையனைத்துமே அனைத்துமே உகந்தவை...

ganesh said...

அண்ணா என்ன அருமை...ரெம்ப நல்லா இருக்கு...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உன் விழிகள்....
எல்லோரையும் பார்ப்பதற்கும்...
என்னை மட்டும் தவணை முறையில்
கொல்வதற்குமா? //

இது அருமை தேவா..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

...ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்..
அவள் வருகிறாள்...
நான் தொலையப் போகிறேன்...!//

ஆனால் இது அட்டகாசம் தேவா..

அப்பாவி தங்கமணி said...

//அவள் வருகிறாள்...
நான் தொலையப் போகிறேன்...!//

வாவ்... அழகான வரிகள்