
ஒவ்வொரு முறை கட்டுரைகளை எழுதிவிட்டு கட்டுரைக்குள்ளேயே நின்று ஏதோ கருத்துக்களை சொல்லிவிட்டு போவது வழக்காமான நிகழ்வாகிவிட்டது. கட்டுரைகளின் கருத்துக்களுக்கு நன்றி சொல்வதும் சொல்லும் கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதும் ஒரு தனி நிகழ்வாகவே பெரும்பாலும் அமைந்து விடுகிறது. பெரும்பாலும் வாசகர்களிடம் பேசுவது என்பது இல்லாமையால் ஏதோ ஒரு நெருக்கம் விடுபட்டுப் போவதாக உணர்ந்தேன். அதனால் அடிக்கடி கருத்துக்களை தாண்டி நாம் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று எண்ணியதின் விளைவு,,,இதோ உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.
கருத்துக்கள் கட்டுரைகள், கவிதைகள், உணர்ச்சி பூர்வமான விவாதங்கள் இதற்கு பின்னால் மனிதம் மனிதத்தோடு கைகோர்க்கும் உன்னதமான விஷயம் மறைமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஆன் லைனில் சந்துக் கொள்வதும், வலைப்பூக்களில் எழுதுவதும் தாண்டி உறவுகள் ஆரோக்கியமாக கைகோர்க்கப்பட்டு எதார்த்த வாழ்கையின் தூண்களாக மாறவேண்டும். சிக்கல் இல்லாத உறவுகளாக அமைவதில் நல்ல சமுதாயம் அமையும்.
எழுதிக் கொண்டே இருப்பதற்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாசிப்பது எல்லாம் நமக்குள் விழுந்து கிரக்கிக்கப்பட்டு செரித்து புரிதலில் இருந்து வேறு விதமாய் உயிர்த்தெழுந்து வெளிவருகிறது. கற்றுக் கொள்வதற்கு நிறைய பேரிடம் பேச வேண்டியிருக்கிறது. நிறைய அனுபவங்களை உள்வாங்க வேண்டியிருக்கிறது.
நம்முடைய பிரச்சினைகளையும் அடுத்தவர் பிரச்சினைகளையும் கூர்ந்து கவனித்து நமது தவறுகளையும் அடுத்தவரின் தவறுகளையும் எவ்வளவுதான் உள்வாங்கினாலும் மீண்டும் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாததாய் இருப்பதை உணரும் போது ஆச்சர்யமாயிருக்கிறது...! சறுக்கல்களும் தவறுதலும் மனித இயல்புகள் அவை மாறாது என்றும் தவறுகளை உணர்தலிலும் மீண்டும் அதே தவறு நிகழாது கவனிப்பதிலும் தெளிவாய் இருப்பவர்கள் நல்ல மனிதர்கள் ஆகிப் போகிறார்கள்.
நானும் ஏதேதோ எழுதுகிறேன். முகம் பார்க்காத உறவுகளின் வாசிப்புகளும் நேசிப்புகளும் வியக்க வைக்கிறது. ஆன்மீகத்தை தவறாக மதத்தோடும் கற்பனை கடவுளரோடும் தொடர்புபடுத்தி ஒரு ஏமாற்ற வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கும், விசயம் தெரிந்தவர்கள் தம்மை கடவுளரோடு தொடர்பு படுத்தி எம்மக்களை ஆட்டுமந்தைகளாக்கி வைத்திருப்பதில் இருக்கும் கோபத்தில் ஆன்மீகம் சார் கருத்துக்களை எழுதுகிறேன்.
ஆன்மீகம் சார் கருத்துக்களை சொல்லும் போது புறத்தில் இருகும் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பொருள்களை வைத்து உதாரணம் சொல்ல முடியாது...அகம் நோக்கிய திருப்புதலுக்கு கொண்டு சொற்களை பிரோயோகம் செய்யும் போது....வாசிப்பாளனின் மனம் உள் நோக்கி திரும்ப தயாராகி தன்னை உற்று நோக்கும் போது என் கட்டுரை புரிகிறது.
அப்படி உள் நோக்கி திரும்ப மனம் பெரும்பாலும் யாருக்கும் ஒத்துழைக்காது. மனம் வெளியேதான் ஓடும்...அதை உள் நோக்கி திருப்ப மனதில் அமைதியும் பொறுமையும் தேவையாயிருக்கிறது... ஆனால் பரபரப்பு வாழ்க்கையில் அப்படி இருப்பது குதிரைக் கொம்புதான்.... அதனால் என் கட்டுரையின் சாரங்கள் பிடிபடுவது கடினமகிப் போகிறது.
எளிமையாக சொல்ல முயற்சித்தாலும், எளிமை என்பது பழக்கம் சார்ந்த அனுபவம் சார்ந்த ஒன்றுதான். எவ்வளவுதான் எளிமை என்று 10 பிள்ளைகள் பெற்றவள் சொன்னாலும் முதல் பிள்ளை பெறுபவளுக்கு அது கடினம்தான். புரிதலுக்கு அனுபவம் முக்கியமாகிறது. அனுபவத்திற்கு பொறுமை காரணமாக அமைகிறது. பொறுமைக்கு மன அமைதி காரணமாயிருக்கிறது. மன அமைதிக்கு நம்ம நாமே பார்த்துக் கொள்வது காரணமாகிறது. நம்மை நாமே பார்த்துக் கொள்வதா? அப்டீன்னா?
24 மணி நேரத்தில் 18 மணி நேரம் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் மிச்சமிருக்கும் 6 மணி நேர தூக்கத்திலும் கூட அதுதான் நடக்கிறது. நான் என்ன சொல்கிறேன்… ஒரு நாளைக்கு 20 நிமிசம் ஒதுக்கி....... அந்த நேரத்தில் வேறு எதைப் பற்றியும் எண்ணாமல் நம்மை பற்றியும் நமது உடலின் இயக்கம் பற்றியும் என செய்து கொண்டிருக்கிறோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது பற்றி சிந்திப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?
நமக்குள் நடக்கும் விசயங்கள் பிடிபட...கர்வம் என்பது சுக்கு நூறாகும். கர்வம் என்ற உடன் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஒருவர் லிங்கனை அவமானப்படுத்த வேண்டும் என்று ஏதோ விசயம் பற்றி பேசும் போது இடையில் " உங்கள் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பு இன்றளவும் என்னிடத்தில் உள்ளது என்று சொன்னாராம்" இப்படி சொல்வதின் மூலம் லிங்கன் ஒரு செருப்பு தைப்பவரின் மகன் என்று ஏளனம் செய்வதே சொன்னவரின் மனதில் இருந்தது.
லிங்கன் அதை பொறுமையாக கேட்டுவிட்டு..." ஓ அப்படியா...! என் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பு இன்னும் அப்படியே இருக்கிறதா? பழுதாகாமல் இருக்கிறதா ? என் தந்தையின் தொழில் நேர்த்தி அப்படி " என்று சொல்லிவிட்டு மேலும்..." இனி அந்த செருப்பு பழுதடைந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள் நான் சரி செய்து தருகிறேன் " என்று சாதாரணமாகவே சொன்னாராம்....!
அவர் ஆபிரஹம் லிங்கன்....! தெருவில் அலைந்து கொண்டிருந்த போதே.. தான் ஒரு அமெரிக்க ஜனாதிபதியாகி அடிமை முறைகளை நீக்குவேன் என்ற கனவு கொண்டவர். அவரிடம் கர்வம் இல்லை. ஆனால்...இன்று...கத்துக்குட்டிகளும், கரப்பான் பூச்சிகளும், மீசை இருப்பதாலேயே தன்னை புலி என்று கருதிக் கொள்ளும் பூனைகளும் காட்டும் மமதை இருக்கிறதே.....அதை சொல்லில் வடிக்க முடியாது. மனிதர்களின் மமதையும் தலைக்கனமும் அவர்களை வேறோடு சாய்க்கும்.
அட.....இப்போ கூட நான் ஏதோ கருத்து சொல்ல வரலை பாஸ்....! இந்த கட்டுரையில் எந்த கருத்தும் இல்லை... நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்....! நம்ம பங்காளி வசந்த் ( நான் உங்க உறவுக்காரன் அப்பு)சொன்னது மாதிரி...பாட்சா மாதிரி ஹிட் படம் கொடுங்க பங்காளி, புரியாத பாபா மாதிரி ஏன் எழுதணும்னு சொன்ன கருத்துக்களும், மின்னஞ்சலில் வரும் அறிவுரை மற்றும், விமர்சன கருத்துக்களையும் செவி கொண்டு கேட்டு கவனமாகவே நடை பயில்கிறேன்.
ஒரு விசயம் மட்டும் உண்மை பாஸ்..... என்னாதான் தெரிஞ்சுகிட்டதா மனசு நினைச்சுகிட்டாலும் இன்னும் ஒண்ணுமே தெரியாதவனாய்....ஒரு புள்ளியாய்...பிரபஞ்சத்தின் முன் நின்னுட்டு இருக்கோம் பாஸ் எல்லோரும்....
நல்ல கட்டுரைகளை படிக்கணும்....! நல்ல கட்டுரைகளை எல்லோரும் எழுதணும்...! 60 பேருக்கு கமெண்ட் பண்ணினா... 30 பேர் நிச்சயமா வருவாங்கன்ற நிலை மாறி.... ஆரோக்கியமான சூழ்நிலை வரணும். அவ்ளோதான்.. மத்தபடி... இது கட்டுரை இல்லை.....அதனால ஒரு டைட்டில்குள்லே அடைக்க முடியாது..... அடிக்கடி சந்திப்போம் பாஸ் இந்த “ ஹாய்....” மூலமா...!
வாழ்வில் எல்லா வளமும் பெற்று எல்லோரும் இன்புற்று இருப்போமாக..!
தேவா. S
Comments
Correct Dheva.
Nalla Pakirvu
இந்த புரிதலும், தெளிவும் இருந்து விட்டால் மமதையை நாம் வென்று விடுவோம்...
//பொறுமைக்கு மன அமைதி காரணமாயிருக்கிறது. மன அமைதிக்கு நம்ம நாமே பார்த்துக் கொள்வது காரணமாகிறது. நம்மை நாமே பார்த்துக் கொள்வதா? அப்டீன்னா?//
தியானம் பண்ண சொல்றீங்களா...?
:))
வாழ்த்துக்கள்
சரியாச் சொன்னீங்க தேவா.வழக்கமான நேரம் போகவில்லை என்பதால் போடப்படும் இடுகைகள், மொக்கைகள் எல்லாம் தாண்டி ஏதோ ஒரு மாற்றம் நம் இடுகையால் நம்மிடத்திலும், படிப்போரிடத்திலும்
வரவேண்டும். உங்களின் இந்த அவா எனக்குப் புரியுது..
//எழுதிக் கொண்டே இருப்பதற்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. //
உண்மைதான்...
-
DREAMER
தேவா! அந்த 20 நிமிடங்களில் சிந்தனைகள் எதுவும் வேண்டாம். நான் சொல்லுவதை நீங்களும், இங்கு படிக்க வரும் நண்பர்களும் செய்து பாருங்கள்.
உங்களை தொந்தரவு செய்யாத இடத்தில் அமர்ந்துக் கொண்டு கண்களை மூடி, முதுகை நேராக வைத்துக்கொண்டு, ஆனால் உடலை தளர்வாக எந்த ஒரு இறுக்கமும் இல்லாமல் வைத்து, உங்களின் மூச்சை காற்றை கவனிக்க பழகுங்கள்.
உள்ளே செல்லும் மூச்சு, வெளியே செல்லும் மூச்சு, மூச்சின் மீது வெறுமனே கவனம் செலுத்துங்கள். அதன் போக்குக்கு விட்டுவிடுங்கள். அதை கட்டுப் படுத்தாதீர்கள்.
முதலில் எந்த ஒரு சிந்தனைகளும் இல்லாமல் மூச்சுக்காற்றை மட்டுமே கவனிப்பது அதிகமாக சிரமமாக இருக்கும். ஒரு 10 நொடிகள் மூச்சை கவனிக்கும் போதே மனம் எங்கோ பறந்துப் போவதை, உங்களின் அனுபவம் மூலம் காண்பீர்கள்.
அப்புறம், படிபடியாக மனம் மூச்சிக் காற்றில் லயித்து நிற்கும். அதற்கு நாம் சோர்வின்றி பழக வேண்டும்.
இப்படி பழக பழகத் தான் தியானம் கைக்கூடும். தியானம் கைக்கூடினால் அகந்தை தானாக ஒழியும். மனசு லேசாகும். உள் அமைதி உங்களுக்கு நிரந்திரமாக கிடைக்க இது ஒன்று தான் வழி.
இல்லையென்றால் மனம் புற விஷயங்களில் சிக்கிக் கொண்டு அல்லல் பட்டுக்கொண்டே தான் இருக்கும். அதற்கு நிம்மதி என்பதே கிடைக்காது.
இவைகளை பற்றி எல்லாம் நான் தொடராக பதிவுகளை வெளியிட இருக்கின்றேன். குறிப்பாக ஆன்மீகத்தில் மனிதன் எவ்வாறு முன்னேறி உள் அமைதி அடைந்து உலக அமைதிக்கும், தன்னாலான காரியங்களை, செயலாற்ற முடியும் என்று எழுதலாம் என்று இருக்கின்றேன். நீங்களும், நம் நண்பர்களும் படிக்க என் வலைபக்கத்திற்கு வரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வருவீர்கள் இல்லையா?
//ஒரு நாளைக்கு 20 நிமிசம் ஒதுக்கி....... அந்த நேரத்தில் வேறு எதைப் பற்றியும் எண்ணாமல் நம்மை பற்றியும் நமது உடலின் இயக்கம் பற்றியும் என செய்து கொண்டிருக்கிறோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது பற்றி சிந்திப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?//
உண்மையச்சொல்லனும்னா 20 நிமிசம் இல்ல 10 நிமிசம்கூட எதைப்பற்றியும் எண்ணமுடியாமல் இருக்கமுடிவதில்லை. சிலநேரங்கள்ல யோசிக்கறதுதான்...ப்ப்ப்ப்ச்.. ஏன்னுதான் தெரியல... இந்த வாழ்க்கையில எப்போதுமே அழுத்தங்கள் இருந்துகிட்டுதான் இருக்கு...
ஆமா தேவா நானும் பதிவுலகத்தில் வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது ..ஆனாலும் எப்போதும் பதிவுலக நண்பர்கள் புதுசா ஏன்னா எழுதியிரிப்பா ன்னு தான் யோசிச்சிட்டு இருப்பேன் ...என்னே பத்தி சிந்திக்கறது முற்றிலும் விட்ட மாதிரி தான் ..
சரி இப்போ நீங்க சொன்ன பிறகு என்னே சரி பண்ணா யோசிப்பேன் ..
நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி ..
இந்த "ஹாய்" இதற்குள் அடங்கிவிடுகிறது ஓராயிரம் கேள்விகளும் நல விசாரிப்புகளும்..
நம்மை நாம் சுய பரிசோதனை செய்வது கிடையாது உண்மை ..
சுயபரிசோதனை செய்து மனிதனாக முயற்சித்தாலே எத்தனையோ பிரச்சினைகளை வீழ்த்தமுடியும்..மனிதனாக முயற்சிப்போம் .
தெளிந்த பேச்சிக்கள் ... உபயோகமான பகிர்வு தேவா ..
அப்படியே வரிசையா வருது பாருங்க ..!
சரி சரி விடுங்க ..!! இந்த ஹாய் கூட நல்லாத்தான் இருக்கு ..!!
நாம எவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவும் நம்மை பண்படுத்தும். நம் அனுபவங்களும்.
ஸோ... மெல்ல மெல்ல அமைதியில் கரையட்டும் நெஞ்சம்!
அப்போ இதுக்கு பெயர் என்ன?????
நல்ல கட்டுரைகளை படிக்கணும்....! நல்ல கட்டுரைகளை எல்லோரும் எழுதணும்...! 60 பேருக்கு கமெண்ட் பண்ணினா... 30 பேர் நிச்சயமா வருவாங்கன்ற நிலை மாறி.... ஆரோக்கியமான சூழ்நிலை வரணும். அவ்ளோதான்..
You know what.........Great Leaders are Readers Boss!
Yes ur so correct too...........this word Hi has all the feels thambi...!
INTERACTIION IS VERY IMPORTENT TO BUILD RELATIONSHIPS....THAMBI..!
சீனிவாசன் நல்லா இருக்கான்பா.. ஜோதில ஐக்கியம் ஆகிட்டான்...!
படிக்கவே தெரியஎரிய்தவங்களுக்கு அறிவுக்கண்ணை திறந்தவங்க நீங்க..உங்களுக்கு தெரியாததா தோழி....!
தேவா! நீங்க நம்பலையா? இதற்குப் பேரு தான் ஆனாபானா தியான முறை. புத்தர் சொல்லி தந்த தியான முறை. ஆனாபானா - அப்படின்னு சொன்னா வரும் மூச்சு, போகும் மூச்சுன்னு பாலி மொழியில அர்த்தம்.
தினமும் சிறுக சிறுக நேரத்தை அதிகரிச்சி ஒரு அரை மணி நேரம் செய்து பாருங்க. ஒரு 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்குள் தெரிகிற மாற்றத்தை நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.
கேள்விகள் எல்லாம் அனுபவத்திற்கு முன் உள்ள நிலை. அனுபவம் வாய்த்தப்பின் கேள்விகள் அங்கு கிடையாது. உங்களை அனுபவிக்க சொல்லுகின்றேன். அனுபவித்தப் பின் உங்களின் கருத்தை சொல்லுங்க தேவா!
நிறை குடம் தளும்பாது...குறை குடம் கூத்தாடும்....!! கரெக்ட்-ஆ?
நீங்க பேசியிருக்கிற விஷயங்கள்... யோசிக்க வேண்டியவை தான்..
நமக்கென்று சிறிது நேரம் ஒதுக்கி.... ஆன்ம சோதனை.... ஹ்ம்ம்ம்....நல்லா இருக்குங்க.. :-))
நான் எப்ப சொன்னேன் நீங்க சொன்னதை நம்பலேன்னு....!
//உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.//
இது நமக்கு புரிஞ்சதனாலேயே நாம பின்பற்றுவதாலேயே எல்லோருக்கும் தெரியணும் அல்லது திணிக்கனும்னு நினைக்கிறது தவறு. முதலில் தனியே அமர்ந்து சிந்திக்க முடியாத மனிதர்களிடம் தம்மாவையும் விபாசனா தியான முறையையும் திணிப்பது மேலும் குழப்பத்தில் போய்தான் போய் முடியும்....ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்... ஞான விசயங்களும், மற்ற வழிமுறைகளும் திணித்தலில் வராது... தேட்டை உள்ளவர்கள் தேடி வந்து கேள்விகள் கேட்பார்கள்.....
பாபா தோற்றுப் போனிச்சுன்னு சொன்னீங்களே அது.... ஏன் தெரியுமா..? கடினமான திரைக்கதையோ கதையோ இல்லை...பாபாவில் ஆன்மீகத்தை கமர்சியலாக்க பார்த்தார்கள்.. அது காமெடியாகிவிட்டது அவ்வளவுதான்..
நீங்கள் சொல்லும் தியான முறைகள் மிகச் சிறப்பானதுதான் எனினும் அதை வாங்கும் பாத்திரம் முதலில் சுத்தமாக இருக்க வேண்டும்...அல்லவா?
//அப்புறம் நீங்க சொன்ன மேட்டர் எல்லாம் சரியா?//
சரியான்னு கேட்டு எழுதி இருந்தீங்க! அதனால நீங்க டவுட் படறீங்கன்னு நினைச்சி, அனுபவத்தால டவுட் எல்லாம் மறையும்னு சொன்னேன்.
//நீங்கள் சொல்லும் தியான முறைகள் மிகச் சிறப்பானதுதான் எனினும் அதை வாங்கும் பாத்திரம் முதலில் சுத்தமாக இருக்க வேண்டும்...அல்லவா?//
வாங்கும் பாத்திரம் சுத்தமாக இல்லை என்றால் என்ன செய்வோம் பங்காளி? சோப்பு போட்டு கழுவுவோம் இல்லையா? தியான செயல் அந்த சோப்பு போட்டு கழுவுகிற செயல் தான்.
தியானம் செய்ய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி யாரும் சித்தர்களின் நிலையில் இருந்து ஆரம்பிக்கறதில்லை.
எல்லோருமே காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்று ஆறு கெட்ட குணங்களோடு தான் தியானம் ஆரம்பிக்கிறாங்க. அதனால பாத்திரம் எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. தியானம் கைக்கூடும்.
//எல்லோருக்கும் தெரியணும் அல்லது திணிக்கனும்னு நினைக்கிறது தவறு.//
இது திணிப்பு கிடையாது. எந்த வழியில போனா டெல்லி வரும்னு தெரியாம கன்னியாகுமரிக்கு போகிற ரூட்டில போய் கொண்டிருக்கிறவங்களுக்கு, சரியான திசையை காட்டுகிற கைக்காட்டி மரம் அம்புட்டு தேன்.
//தம்மாவையும் விபாசனா தியான முறையையும் திணிப்பது மேலும் குழப்பத்தில் போய்தான் போய் முடியும்..//
குழப்பத்தோடு தான் பாஸ் தியானம் செய்ய வர்றாங்க மனுஷங்க! தியானம் செய்ய செய்ய அவங்க குழப்பம் விலகி போகுது.
நீங்க நான் சொன்னதை ஏத்துக்கிட்டு ஒரு 3 மாசம் ட்ரை செய்ய முடியுமா தேவா? இதை ஒரு சவாலா ஏத்துகிடுங்க.
தினமும் நாள் தவறாம, ஒரு அரை மணி நேரம் மேல சொன்ன முறையில தியானம் செய்யுங்க! 3 மாசம் கழிச்சி உங்களுக்கு உள் அமைதி கிடைக்கலைன்னு நீங்க சொன்னிங்கன்னா, நான் சொன்னது எல்லாம் தப்புன்னு பகிரங்கமா மன்னிப்பு கேட்டுகிறேன்.
மாற்றம் தியானம் செய்ய செய்ய தன்னாலே வரும் தேவா! இன்னைக்கி ஒரு ஆன்மீக தொடர் பதிவை ஆரம்பிச்சிருக்கேன். நேரம் கிடைக்கும் போது படிச்சி பாருங்க. இந்த தொடர் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற நம்பிக்கையால எழுத ஆரம்பிச்சிருக்கேன். படிக்க வருவீங்க இல்ல தேவா?
உங்களுக்கும் எல்லா வளமும் ஆண்டவன் அருளும் படி இறைவனிடம் வேண்டுகிறேன் அண்ணா
//இது திணிப்பு கிடையாது. எந்த வழியில போனா டெல்லி வரும்னு தெரியாம கன்னியாகுமரிக்கு போகிற ரூட்டில போய் கொண்டிருக்கிறவங்களுக்கு, சரியான திசையை காட்டுகிற கைக்காட்டி மரம் அம்புட்டு தேன்//
நான் சொல்றது எல்லாம் மனிதன் மாறுவதற்கான சூழ் நிலைகள் மட்டும்தான் நம்மலாள உருவாக்க முடியும் மாற்றம் என்பது முழுக்க் முழுக்க தனிமனிதன் எடுக்கும் முடிவு சார்ந்த விசயம்.
நீங்க சரியான திசையை காட்டினீங்கன்னா...? அந்த திசையில் போக முடிவு செய்யப்போவது அவன் தான்.. நீங்க சொல்லிகிட்டே இருங்க.... நான் தப்பு சொல்லல..........தியானத்தின் முதல் படி.. தன்னைப்பற்றிய சிந்தனை...
தியானம் என்பது செய்வது அல்ல அது நிகழ்வது...
தியானம் என்பது காத்திருத்தல்...
தியானம் என்பது என்ன தோன்றுகிறதோ அதை சாட்சியாக நின்று கவனித்தல்
தியானம் என்பது. எதையோ ஒன்றைப்பற்றி சிந்திபது மட்டுமல்ல ஆனால் எல்லாவற்றையும் தனித்து இருந்து நோக்குதல்...
தியானம் என்பது ஈடுபாடு...அது காதலிலும் வரும், காமத்திலும் வரும்,குளிக்கும் போதும் வரும், உடுத்தும் போதும் வரும் இப்போது உங்களுக்கு இதை டைப் பண்ணும் போதும் வரும்....
ஒன்றில் நிற்றல்..எல்லாமாய் உணர்தல்....! உங்கள் கருத்துக்களுக்கு செவி கொடுக்கிறேன்.. அதையும் என் அனுவமாய் மாற்றிக் கொள்கிறேன்.. ! நன்றி பஙகாளி..!
இப்போ என்னதான் சொல்றிங்க. இரண்டு யானை சண்டை போடற இடத்துல மாட்டிகிட்ட பூனை மாதிரி நான் முழிக்கிறேன்...
ஆமாம் பங்காளி! நான் அதை ஏத்துக்கிறேன். நாம வெறும் கைக்காட்டி மரம் தான். அந்த திசையில பயணம் செய்றது தனிமனிதனின் முடிவு
//தியானம் என்பது செய்வது அல்ல அது நிகழ்வது...
தியானம் என்பது காத்திருத்தல்...
தியானம் என்பது என்ன தோன்றுகிறதோ அதை சாட்சியாக நின்று கவனித்தல்
தியானம் என்பது. எதையோ ஒன்றைப்பற்றி சிந்திபது மட்டுமல்ல ஆனால் எல்லாவற்றையும் தனித்து இருந்து நோக்குதல்...//
அதற்கான சூழலை அமைச்சி கொடுக்கிறதுக்காகத் தான் தேவா, உங்களை தனியான யாரும் தொந்தரவு செய்யாத இடத்தில அமர்ந்து கண்களை மூடி மூச்சிக் காற்றை கவனிக்க சொல்கின்றேன்.
மனத்தை வெறுமையாக்குவது தியானம்.
குழப்ப முடிச்சுக்களை அவிழ்பது தியானம்
தீய நடத்தைகளை மாற்றுவது தியானம்
அமைதியை ஏற்படுத்துவது தியானம்
முன்பே சொன்ன ஆறு தீய குணங்கள் இருந்தால் மனிதன் ஆணவக்காரனாகத் தான் இருப்பான். அவனை நல்வழிப் படுத்தத் தான் குண்டலினி தியானம், அல்லது நான் மேலே சொன்ன ஆனாபானா தியானம்.
நீங்களும் மற்ற நண்பர்கள் இந்த எளிய முறையை பயிற்சி செய்து பார்த்து அதன் பயனை அனுபவ பூர்வமாக தெரியபடுத்த வேண்டுகின்றேன்.
எல்லா நல்லவர்களின் வாழ்க்கையிலும் தியானம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. So please try the meditation and see the results for yourself.