Skip to main content

பிரம்மா...!

















நித்தம் நடக்கும் நாடகத்தில்... நானும் ஒரு நடிகன்......! அரிதார பூச்சுக்களில் அழுந்தியிருக்கும் என் முகம்...சுயம் தேடும் ஓட்டத்தில், வேசமெல்லாம் கலைத்தெறிந்து மொத்தமாய் தொலைந்து போக.....யாக்கைகள் கொண்டு....

சுடலையில் பொடி பூசி.....
பாதங்களின் அதிர்வுகளில்
அண்ட சராசரம் கிடு கிடுங்க...
அகிலமெல்லாம் நடு நடுங்க...
என் உடலின் நரம்புகள்
கிழித்தறுத்து மாலைகளாக்கி....
என்னை தொலைக்கும் வேகத்தில்
நான் நடத்தும் தாண்டவங்களில்...
ஆடி, ஆடி,,,,ஆட்டதிலமிழ்ந்து..
ஆடுபவன் தொலைந்து.....
எச்சமிருக்கும் ஆட்டத்தின் அதிர்வுகளாய்...
நான் காணாமால் போகும்...
முயற்சிகளுக்காய் நித்தம் தொடர்கிறது....
என் ருத்ர தாண்டவம்....!

என் பயணம்...அடைதலை நோக்கியதானதல்ல....ஆனால் அது கடந்து செல்வதை நோக்கியது....! படைப்பினை நடத்தும் மூல சக்தியின் கிளைகளையும் தழைகளையும் பற்றி, பற்றாமல் படர்ந்து தெரிந்து கொள்ள எனக்குள் என்னை செலுத்திய பயணத்தில் கிளைத்த எண்ணங்களை...எழுத்துக்களாய் கோர்த்து முடித்து இதோ எதார்த்த உலகிற்கு கொண்டு வருகிறேன்....

என் கதையின் எல்லா மாந்தர்களும் போலியான அரிதாரப்பூச்சுக்களில் எதார்த்த உலகம் அறியாத பொய்மையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எழுத்துக்களுக்குள் எப்போதும் வந்து உட்கார்ந்து விடும் கற்பனைகளை கலைய விரும்பி எடுக்கும் முயற்சிகள் எல்லாம்....வெட்ட வெட்ட உயிர்க்கும் அமீபாவாய், மறுக்க மறுக்க கிளைக்கும் எண்ணமாய் மீண்டும் மீண்டும் சாயங்களை பூசி உண்மைகளோடு சேர்ந்து அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன...கற்பனையில் தோன்றும் வண்ணங்கள்.

எப்போதும் ஏதாவது தோன்றிக்கொண்டிருக்கும் மூளையின் செல்களில் எங்கே கலந்திருக்கிறது இந்த கற்பனைகள்......? வடிவமில்லாமல் திசுக்களாய் அலையும் இவைதானே.... ஒரு ஒவியனின் கைகளின் வழியே வர்ணங்களை விசிறியடித்து விதவிதமாய் ஜாலங்கள் காட்டும் சித்திரமாகவும்..., இசைக்கலைஞனின் நெஞ்சத்தில் இராகங்களாகவும், ஒரு எழுத்தாளனின் எழுத்தின் கருவாகவும், வெளிப்படுகிறது. வற்றாத நதியாய், ஜீவனுள்ள கருவாய்.. கிளைத்து வரும் எண்ணங்களின் வெளிப்பாட்டில் வெளியே வரும் படைப்புகளோடு படைப்பாளியும்தானே மிளிர்கிறான்....?

எப்போதும் முறுக்காய் திரிந்த பாரதியின் பாக்கெட்டில் பைசாக்கள் இருந்ததில்லை ஆனால் அவன் கண்களில் ஒளி இருந்தது....! அந்த படைப்பாளியின் வீட்டில் அடுப்பெரியவில்லை ஆனாலும் அவன் சொன்னான்... " எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா......" என்று.. அவனின் கற்பனையில் அவன் சக்கரவர்த்திதான்.....! எதார்த்த வாழ்க்கையில் பட்டினி கிடந்த அவன் உடல் அதே நேரத்தில்.. எங்கோ ஒரு மூலையில் மனிதர்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்காக கவிதைகள் எழுதியது.....!

ஏன் இந்த முரண்.. ? பாரதி பிறப்பிலேயே எண்ணங்கள் கிளர்ந்த நிலையில் பிறந்த ஒரு மனிதன்....! அவனுள் எல்லா சக்கரங்களும் அவன் அறியாமலே விழித்துக் கொண்டிருந்திருக்கின்றன. இப்படித்தான் ஆன்மீகம் அவற்றை சக்கரங்கள் என்று சொல்லும் போது அவை எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லும் மனிதர்கள் அதை அறிவியல் க்ளாண்ட்ஸ் (சுரப்பிகள்) என்று சொல்லும் போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியல் கூட ஒரு வகையில் மூட நம்பிக்கைதான்....! என்ன நான் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதா? ஆமாம் அறிவியல் ஒன்றை கண்டுபிடிக்கும் ...கொஞ்ச நாட்கள் ஆன பின்பு அதை மாற்றிச் சொல்லும்.... மாற்றிச் சொல்லும் போது ஏற்கனவே நாம் நம்பியிருந்தது மூட நம்பிக்கைதானே....?

உலகின் கடைசிக் கூறு அணு என்று அறிவியல் கூறி அதை பகுக்க முடியும் என்பதை கண்ட போது அது மூட நம்பிக்கைதானே...? பூமி சூரியனை சுற்றுவதும் மூட நம்பிக்கைதான்...! ஆமாம் மூலத்தின் ஈர்ப்பில் சுற்றி வரும் பூமி ஒரு நாள் அச்சில் இருந்து விலகும் அன்று பூமியும் சூரியனும் இருக்கவே இருக்காது அப்போது... நாம் எல்லாம் சேர்ந்த இந்த பூமியும் சூரியனும் இன்ன பிற கோள்களும் தூள் தூளாகி நொறுங்கும் போது எல்லாமே மூட நம்பிக்கைதானே?

எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிவிட்டு... ஏதேதோ செய்து கொண்டிருகிறோம்.. கற்பனைகள் எல்லாமே.... இருப்பதில் இருந்து வருவது. இல்லாமல் எப்படி கற்பனைகள் வரும்...குறைந்த பட்சம் சாத்தியக்கூறுகளாவது இருக்கவேண்டும். இப்படித்தான் கவிதையிலும் கட்டுரையிலும் கதையிலும் வந்து விழும் அலங்காரங்களில் பொய்மையும் கற்பனையும் இருந்தாலும் அவை பொய்யானவை அல்ல....!

எல்லா கற்பனைகளும், விவரித்தல்களும் கிடைக்கப்பெறும் இடம் ஆழ்மனம்.

யாருமே வரையாத ஒரு ஓவியத்தை ஓவியனின் மூளையின் எந்த பாகம் சிந்திகிறது.........? அதன் வர்ண கூட்டு என்ன? நெளிவு சுளிவு என்ன என்று எது தீர்மானிக்கிறது......? ஒரு பேருந்தையும், விமானத்தையும், விளக்கையும் கண்டு பிடித்தவனுக்கு உள்ளே எது சொல்லியது இப்படி ஒன்று வேண்டுமென்று...?

சிக்கலான அதி நுட்பமான விசயங்கள் ஆழ்மனதிலிருந்து... ஏற்கெனவே அறிந்த ஒரு விசயத்திலிருந்துதானே வர முடியும்? மனமறியாத ஒன்றை, உடலறியா ஒன்றை...மூளை அறியா ஒன்றை....எப்படி செய்கிறான் மனிதன்?

பிரபஞ்ச மூலத்தோடு நெருங்கியவன்தான் படைப்பாளி.....! ஆமாம் எல்லோரும் பார்ப்பதில் இருந்து எல்லோரும் சிந்திக்க முடியாத ஒன்றை சிந்திப்பவன்....தான் உருவாக்குபவன்....இந்த வல்லமை எல்லா மனிதர்களுக்குள்ளும் இருந்தாலும் அதை பயன்படுத்தி மூல உண்மையின் அருகே போய்.....அதன் அடி ஆழத்தில் இருந்து உணர்வை எடுத்து வந்து அதை பொருளாக்கி காட்டுகிறவன் தானே... பிரம்மா?

கலைஞர்கள் இன்னோவேசன் உள்ள மனிதர்கள், காண்பதில் புதிதை வெளிக் கொண்டு வருபவர்கள், வெறும் கற்களில் கலை நயம் கொண்டு வருபவர்கள்...இப்படி சொல்லி கொண்டே போகலாம்............பொதுவில் கிளர்ந்தெழுந்த மனதின் உணர்வுகளை....ஆழ்கடல் சென்று மூச்சடக்கி கொண்டு வரும் முத்து போல கொண்டு வந்து சக மனிதர்களுக்கு அதை சமைத்து கொடுப்பவர்கள்தான் படைப்பாளிகள்..........!

வலியின் மூலத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வரவும், சந்தோசத்தை இசையில் பரவ விடவும், உணர்வுகளை ஓவியமாக்கவும் தெரிந்தவன் கலைஞன்....

ஆடலாய், பாடலாய், கவிதையாய், கட்டுரையாய், ஓவியமாய், நாடகமாய், இசையாய், சிற்பமாய், இன்னும் எதுவெல்லாம் உலகம் தாண்டி மனிதனின் பார்வை தாண்டி போய்....கருத்துக்களை கொண்டு வந்து சாமானியனுக்கு தருகிறதோ..... அதை குறைந்த பட்சம் குறை கூறாமல் இருப்போம்.

படைப்பாளிகளாய் உருவெடுப்போம்...! படைக்கும் பிரம்மாக்களின் உணர்வுகளை மதிப்போம்......!

" மானஸ சஞ்சரரே ப்ரம்மணி மானஸ சஞ்சரரே.............."


தேவா. S

Comments

அருமையான எழுத்துநடை
//வலியின் மூலத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வரவும், சந்தோசத்தை இசையில் பரவ விடவும், உணர்வுகளை ஓவியமாக்கவும் தெரிந்தவன் கலைஞன்//

இந்த வரிகள் நன்றாக இருக்கிறது தேவா அண்ணா
//கற்பனைகள் எல்லாமே.... இருப்பதில் இருந்து வருவது. இல்லாமல் எப்படி கற்பனைகள் வரும்...குறைந்த பட்சம் சாத்தியக்கூறுகளாவது இருக்கவேண்டும்.//

நிதர்சனமான உண்மை.ரொம்ப நாளைக்கு அப்புறம் நன்றாக ஒரு பதிவு உங்களிடம் இருந்து
dheva said…
//நிதர்சனமான உண்மை.ரொம்ப நாளைக்கு அப்புறம் நன்றாக ஒரு பதிவு உங்களிடம் இருந்து //

இம்சை..@ தம்பி ஏண்டா.. கொல்றீங்க....!
Kousalya Raj said…
//குறைந்த பட்சம் குறை கூறாமல் இருப்போம்.//

ஆவேச தாண்டவம் எதனால்.... என்று சொல்வதில் தொடங்கி உங்களின் ஆழமான மன உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டு வந்து ....உங்களின் இந்த பயணம் (படைப்புகள்) எதை நோக்கி என்பதை துல்லியமாக விளக்கியது மிக அருமை.

//எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிவிட்டு... ஏதேதோ செய்து கொண்டிருகிறோம்.. கற்பனைகள் எல்லாமே.... இருப்பதில் இருந்து வருவது. இல்லாமல் எப்படி கற்பனைகள் வரும்...குறைந்த பட்சம் சாத்தியக்கூறுகளாவது இருக்கவேண்டும்.//

சரியான சொல்லடி.....!!

//" மானஸ சஞ்சரரே ப்ரம்மணி மானஸ சஞ்சரரே.............."//

' மதசிகி பின்ச்சா மன்கிருத சிகுரே.....!!

இந்த வரிகள் மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டது. அதற்காக நன்றி.

:))
//படைக்கும் பிரம்மாக்களின் உணர்வுகளை மதிப்போம்.//

படைப்பாளிக்கு உண்மையிலேயே ஆன்ம பலம் இருக்குமானால் யார் மதிக்கிறார்கள் யார் அவனின் கருத்தை, ஆக்கத்தை மிதிக்கிறார்கள் என்று கவலைப் படமாட்டான்.

பாரதியின் தீட்சன்யமான பார்வை அத்தகையது தானே தேவா? அவன் சாகும் வரை வறுமையிலேயே வாடி இருந்தானே. அதனால் படைப்பாளி போலி கவுரவத்திற்காகவும், பிறரின் உண்மையில்லா புகழ்ச்சி வார்த்தைகளுக்காகவும் மயங்காமல் இருப்பது தான் அவனை உயர்த்தி பிடிக்கும் தளமாக இருக்கும்.
அருமையான எழுத்துநடை
dheva said…
என்னது நானு யாரோ....@ என்ன சொல்ல வர்றீங்க....

ஒரு விசயம் சொல்றேன்.. பங்காளி....

கட்டுரையில படைப்பாளி என்ன பண்ணனும்னு சொல்ல வரலை நான்..... படைப்பாளின்னா யாரு..அவன ஏன் மதிக்கணும்னு சொல்ல வந்தேன்....

ஏன்னா நானும் ஒரு ரசிகனாய் படைப்பாளிகளை ரசிப்பவன் தான்.....படைப்பாளியாக காத தூரம் பயணிக்க வேண்டும்...!
vinthaimanithan said…
//அறிவியல் கூட ஒரு வகையில் மூட நம்பிக்கைதான்....! என்ன நான் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதா? ஆமாம் அறிவியல் ஒன்றை கண்டுபிடிக்கும் ...கொஞ்ச நாட்கள் ஆன பின்பு அதை மாற்றிச் சொல்லும்.... மாற்றிச் சொல்லும் போது ஏற்கனவே நாம் நம்பியிருந்தது மூட நம்பிக்கைதானே....?//

வன்மையாக மறுக்கிறேன்... அறிவியல் எப்போதும் தன்னை மீண்டும் மீண்டும் ஆய்வுக்குள்ளாக்கி சரியான தரவுகளின் அடிப்படையிலேயே தன்னை செழுமைப்படுத்திக் கொள்கிறது. அணுவே பிரமாணம் என்றது பொய்யல்ல... அது மேலும் செழுமைப் படுத்தப்பட்டு அணுவிலும் துகள்கள் உண்டு என்பதை கம்பீரமாய் ஒப்புக் கொண்டது அறிவியல்... தான் கண்டதே இறுதி என்று அறிவியல் எப்போதும் வாதிடுவதில்லை....

கலிலியோவை, நியூட்டனும், நியூட்டனை ஐன்ஸ்டைனும் மறுக்கவில்லை. மாறாக அவர்கள் விட்ட புள்ளியில் இருந்து தொடர்ந்து பயணித்து முன்னெடுத்துத்தான் சென்றனர்.

ஆனால் 'மெய்ஞ்ஞானம்' என்று சொல்லப்படுவது காலங்காலமாய் நின்ற புள்ளியிலேயே தான் நிற்கிறது... தான் சொல்வதையே இறுதிப்புள்ளியென நம்பச் சொல்கிறது. எனவே அது தான் சொல்வதை எப்போதும் மறுக்க அவசியம் இல்லை.

ஆனால் அறிவியல் எப்போதும் தன்னைத்தானே பரிசோதனைகளுக்குட்படுத்தி மாற்றிக் கொள்கிறது... "நீ போன வருஷம் இருந்த மாதிரி இல்லை... வளர்ந்துவிட்டாய்" என்று ஒரு மனிதனைக் குறை சொல்வது போலத்தான் அறிவியலைக் குறை சொல்வதும்....
dheva said…
விந்தை மனிதன்....@ அறிவியல் மாற்றிக் கொள்கிறது. மாற்றிக் கொள்ளும் வரை இருந்த கருத்துக்கள் பொய்யாகிறது.


அறிவியலே மாற்றிக்கொள்கிறது என்பது சரிதான்...அதுவரை எண்ணியிருந்த பழைய உண்மைகளை நம்பிக் கொண்டிருக்க முடியுமா...? புதியாய் ஒன்றை செப்பனிட்டு கண்ட பின்பு....கடந்த காலங்களில் நம்பியிருந்ததை என்னவென்று சொல்வது தம்பி?

அதுவும் உண்மை என்றா? அதுவும் முழுமையற்ற உண்மைதான்.... இப்போது நிற்கும் நிலையும் தற்காலிக உண்மைதான்.........இன்னும் அறிவியல் முழு உண்மையையும் அறிய முடியவில்லை...இன்று நீங்கள் சொல்லும் சரிகள் நாளை மாறும்....? சரிதானே? மாறும் பட்சத்தில் மாறியதை என்ன பெயரிட்டு அழைப்பது?
dheva said…
//ஆனால் 'மெய்ஞ்ஞானம்' என்று சொல்லப்படுவது காலங்காலமாய் நின்ற புள்ளியிலேயே தான் நிற்கிறது... தான் சொல்வதையே இறுதிப்புள்ளியென நம்பச் சொல்கிறது. எனவே அது தான் சொல்வதை எப்போதும் மறுக்க அவசியம் இல்லை.//

விந்தை மனிதன்...@ மெய்ஞானம் மாறது தம்பி... சத்தியம் எப்போதும் ஒன்றாய்த்தானிருக்கும்....அது எப்போதும் நம்பச் சொல்வதில்லை அந்த கூற்றை மாற்றுங்கள்..அது எப்போதும் உணரச் சொல்கிறது.
vinthaimanithan said…
அதைத்தான் நானும் சொல்கிறேன்... ஆனால் மெய்ஞ்ஞானம் எனப்படுவது முழு உண்மையைச் சொல்கிறதா? எந்த அடிப்படையில்? எந்த தரவுகளை வைத்து? வெறும் ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே மெய்ஞ்ஞான எதையும் 'நம்ப'ச் சொல்கிறது... அறிவியலோ நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் ஆய்ந்து மெய்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே சொல்கிறது... கண்டதே காட்சி... கொண்டதே கோலம் என்று ஒருபோதும் வாதிட்டதில்லை... அது தான் உண்மையென்று கூறும் எதனையும் மிகச்சரியாக தரவுகளின் அடிப்படை கூறுகின்றது... அத்தோடு நின்று விடாமல் தன் பாதையில் மேலும் முன்னேறிச் சென்று தான் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் உரசிப்பார்த்து மேம்படுத்திக்கொள்கிறது.

அது மேலும் முன்னேறும்... முழு உண்மையையும் விளக்கும்வரை....
dheva said…
விந்தை மனிதன்...@ கட்டுரையில் அறிவியலின் அந்த அந்த தளங்கள் மூட நம்பிக்கை என்று சொன்னேன்........சரி.. மெய்ஞானம் பற்றிய கட்டுரையள்ள இதுவெனினும் ...கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்....

மெய் ஞானம்...எல்லாம் மாறும் என்று சொல்கிறது. மேலும் இறுதி உண்மை வெற்றிடமான சூன்யமென்றும்..சூன்யத்தில் இருந்து எல்லாம் தோன்றியது என்றும் கூறுகிறது. இதில் என்ன பொய் இருக்கிறது?
vinthaimanithan said…
அறிவியலின் எந்த உண்மையும் மூடநம்பிக்கையல்ல... ஒரு உண்மை மற்றொரு உண்மையை செழுமைப்படுத்துகிறது.... நியூட்டனின் விதிகள் உதறித் தள்ளப்படவில்லை... அதனை ஐன்ஸ்டைன் க்வாண்டம் ஃபிஸிக்ஸ் என வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறார்... ஐன்ஸ்டைனை ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் ஸ்ட்ரிங் தியரி எனவும்.... ஸ்டீஃபனை இன்னொருவர்.. எனவும் நீளும்... அறிவியல் ஒருபோதும் மூடநம்பிக்கையாகாது.

ஆனால் மெய்ஞ்ஞானம் எந்த அடிப்படையில் தான் சொல்வனவற்றை மெய்ப்பிக்கின்றது? ஏதும் ஆய்வுகள்? தரவுகள்? ஏதும் இல்லை. வெறும் நம்பிக்கையின் அடிப்படையில்.... அவ்வளவே... கேள்விகேட்டால்.... உணரத்தான் முடியும் விளக்க முடியாது என்று வியாக்கியானம்...

முடியல... ரொம்ப நாளா இந்த மாதிரி விவாதத்துக்குள்ள நுழையக்கூடாதுன்னு விரதம் வெச்சிருந்தேன்... இந்த விவாதம் முடிவின்றி நீண்டு கொண்டே போகும்... நம்மால் மட்டும் argue பண்ணி தீர்க்க முடியும் விஷயமில்லை. அரிஸ்டாட்டில், ப்ளேட்டோ எனத்துவங்கிய பயணம், கலிலியோ, காண்ட், நீட்ஷே, ஹெகல், மார்க்ஸ், நியூட்டன், ஐன்ஸ்டைன், ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் எனவும், சாங்கியன், கபிலன், புத்தன், சங்கரன், ராமானுஜர், கிறிஸ்து, நபி எனவும் நீண்டுகொண்டே போகின்றது.

என் அறிவுக்கு எட்டிய வகையில் பௌத்தம் மட்டுமே ஆன்ம விசாரனையை தீர்க்கமாக மேற்கொண்ட மதம்.

Anyway, thanks for ur contribution in this arguement..... வேற யாருமே இதில கலந்துக்கலையே, ஏன்?
@விந்தைமனிதன்

மனிதனுக்கு ஐந்துப் புலன்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றுக்கும் ஒரு வரையறை இருக்கின்றன. அதனால் அறிவியல் என்ன தான் முயன்றாலும் மெய்ஞான கூற்றை மறுக்கவோ, அல்லது ஏற்கவோ செய்யும் சக்தி அற்றதாக இருக்கிறது. ஏனெனில் மெய்ஞானம் எல்லா புலன்களையும் தாண்டிய நிலையில் இருந்து இயங்குகிறது.

Electron Microscope கொண்டு மற்ற அனுக்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம் ஆனால் எலக்ட்ரானை பற்றி அதனால் தெரிந்துக்கொள்ள முடியாது. அதனால் புலன்களுக்கும் மீறிய விஷயங்களை அறிவியல், எதைக்கொண்டு ஆராயப்போகிறது. எல்லாம் Light Years என்கின்ற நிலையில் இருக்கின்ற பிரம்மாண்டத்தை அறிவியலால் தொட்டுப்பார்க்க முடியுமா என்ன நண்பரே?

அறிவியலுக்கும் எல்லை உண்டு. அதை தாண்டி அதனால் போக முடியாது.
//பிரம்மா...!//
சத்தியராஜ், குஷ்பூ நடிச்சது..

//நானும் ஒரு நடிகன்.//
அட நடிகன் சத்தியராஜ், குஷ்பூ நடிச்சதுதான்..

//ஒரு மனிதன்.//
மனிதன் ரஜினி நடிச்சது..
dheva said…
அறிவியல் ஆன்மீகத்தினொரு பகுதி. அறிவியல் எப்படி நடந்தது என்ற மெக்கானிசத்தை மட்டுமே போதித்து வந்திருக்கிறது... அறிவியலை ஒரு மெய்ஞானி எப்போதும் மறுத்தவனக இருப்பதில்ல...


கோப்பர்னிக்ஸின் ஒப்பியல் விதியை (RELATIVITY OF VELOSITY) உலகம் நம்பிக் கொண்டிருந்த போது கலிலியோ அதை தனது Horizontal Component of Earth 's Motion thiayari கொண்டு உடைத்தார். காலங்கள் தோறும் அறிவியல் அறிவியலை உடைத்துக் கொண்டுதானிருக்கிறதே அன்றி... மெய்ஞானம் அதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

ஏனெனில் அறிவியலுக்குத் தெரியாது தாம் யாரென்று..ஆனால் மெய்ஞானத்துக்கு தெரியும் அறிவியல் தன்னின் பகுதியென்று.

புத்தர் ஆத்ம விசாரணை கூட வேண்டாமென்றுதான் சொன்னார்...."ஏஸ் தம்மோ சனந்தனோ...."
பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு,
மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார்
மெய்ப்பொருளை ஒருபோதும் அடைவதில்லை,
அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்”

-தம்மபதம்-


என்று ஏதேதோ சொல்கிறது.. இதில் ஏதும் உங்களுக்கு பதில் இருக்கிறதா என்று தெரியவில்லை. மதங்கள் பேருண்மையை லே மேன் என்று சொல்லக்கூடிய மனிதர்களுகு விளக்க வேண்டி கற்பனை நயத்தோடு சொல்லப்பட்டது...அறிவாளிகளுக்கு எப்போதும் அது முட்டாள்தனமாகத்தான் இருக்கும்....ஆனால்.. ஒன்றுமறியா மனிதர்களை அது நெறிப்படுத்தும்....

தம்பி.. விசயம் தெரிந்தவர்கள் மதத்தையும், அதை பொதித்தவர்களையும், அதன் சட்டதிட்டங்களையும் பற்றி பேசக்கூடாது... ஏனென்றால் நமக்குத் தெரியும் அது.. நெறிப்படுத்த என்று.. நீங்களும் நானும் நெறிப்பட அறிவு உதவியது என்று வைத்துக் கொள்வோம்.....

பாவம் அவர்களுக்கு மதம் உதவட்டுமே.. ஏன் அதை சாட வேண்டும்....மதத்தை சரியாக பயன்படுத்தினால் உதவும்...ஆனால் அதை யாரும் சரியாக பயன்படுத்த வழிக்காட்டிகள் இல்லை. வழிகாட்டிகள் எல்லாம் அறிவு முதிர்ச்சியில் சிரித்து விளையாடியும், நகைத்தும் விளையாடிக் கொன்டிருக்கிறார்கள்.....

யார்தான் கடைதேற்றுவார்.....?.....

விவாதமல்லவா நடக்கிறது தம்பி.. எப்படி எல்லோரையும் நாம் எதிர்பார்ப்பது.. விருப்பம் பொறூத்துதானே வருவார்கள்....? ஹா.. ஹா. ..ஹா
கலக்கல் தேவா அண்ணா!
Unknown said…
விந்தைமனிதன் விவாதம் சரியானது...
dheva said…
நெற்றிக்கண் திறக்கும்
என்னின் ரெளத்ரம்....
நரசிம்ம அவதாராமாய்..
மூட நம்பிக்கை குடல்களையும்,
பொய்மையின் குரல்வளையும்....
அழுந்த பற்கள் கொண்டு....
கிழித்தெறிய முற்படும் போதெல்லாம்...
எங்கிருந்தோ வரும்
ஒரு மெல்லிய குரல்.. என்னை
சாந்தி...சாந்தி என்று....
சமாதியில் தள்ளிவிட்டு .....
காதலாய் பார்க்கச் சொல்கிறது....!
dheva said…
கே.ஆர்.பி. செந்தில்...@ நானும் தம்பியின் விவாதத்தின் போக்கில் நேர்மறையான கருத்துக்கள் உடையவன் தான்.... !
//கற்பனைகள் எல்லாமே.... இருப்பதில் இருந்து வருவது. இல்லாமல் எப்படி கற்பனைகள் வரும்...குறைந்த பட்சம் சாத்தியக்கூறுகளாவது இருக்கவேண்டும். //

உண்மைதான் அண்ணா .. நிச்சயமாக இருப்பதில் இருந்தே கற்பனைகள் வரவேண்டும் .. இல்லாதவைகளில் இருந்து கற்பனை வருவதற்கு வாய்ப்புகள் குறைவே ..!!
VELU.G said…
//படைப்பாளிகளாய் உருவெடுப்போம்...! படைக்கும் பிரம்மாக்களின் உணர்வுகளை மதிப்போம்......!
//
சரிதான் தேவா
பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பது நாமும் நமது அறிவியலும் அறிந்த உண்மை . அது எதனால் சுற்றுகிறது ..? சூரியனில் இருக்கும் ஈர்ப்பு விசையினால் என்று அறிவியல் கண்டறிந்துள்ளது . ஏற்கெனவே இருப்பதை மட்டுமே அறிவியல் கண்டறிந்துள்ளது ..? அந்த ஈர்ப்பு விசயனை உருவாக்கியது யார் ..? மேலும் பூமியிலும் ஆயிரம் அறிவியல் சாதனங்கள் இருக்கின்றன. எல்லாமே அறிவியலால் எர்ப்பட்டவையே ..? ஆயினும் அறிவியல் தானாக எதையும் கண்டுபிடித்ததா ..? இல்லையே .. ஏற்கெனவே பூமியில் இருந்ததை மட்டுமே எடுத்து பயன்படுத்தியுள்ளது . அதற்க்கு இங்கேயே எடுத்துக்காட்டுகளும் .. ரேடியோ அலைகள் வவ்வாலின் எதிரொலி மூலமாகா கண்டறியப்பட்டுள்ளது. ஆக அறிவியலின் எல்லா சாதனைகளுக்கும் பின்புலமாக எடுத்துக்காட்டாக ஏதோ ஒன்று இருக்கிறது என்று தானே அர்த்தம். அவை அத்தனையுமே தற்செயல் நிகழ்ச்சி என்கிறது அறிவியல் .. இங்கே நமது பூமியில் நடந்த இந்த தற்செயல் நிகழ்சிகள் ஏன் மற்ற கிரகங்களில் நடக்கவில்லை..? இதற்க்கெல்லாம் அறிவியல் இன்னும் மேம்போக்கான கருத்துக்களையே சொல்லிவருகிறது .. ஏன் பூமி உருவானதிலும் அதையே சொல்ல்கிறது ..!!
dheva said…
செல்வு @ சரிதான்.. தம்பி....

அறிவியல் இருப்பதை ஆராய்ந்து அது எப்படி நிகழ்கிறது என்று விளக்குகிறது. ஏன்... இந்த இயக்கம் என்றுதான்? ஏன்...? ஏன்? ஏன்? என்றுதான்...

நோக்கமில்லா இயக்கம்.....அகண்ட வெளி....விரிந்த அண்டம்.....ஏன் இந்த பிண்டத்தை போட்டு இந்த பாடு படுத்துகிறது...கேள்விகளின் இறுதியில்.. கேவிக்கேவி அழுகையோடு நிறுத்தி விடுகிறது...அதற்கு மேல் செல்லா.. செட்டப் பாக்ஸ்சும் செட்டப்ப்பாக்ஸ் உள்ளே இருக்கும் சாப்ட்வேறும் உதவுவதில்லை...( நம்மைத்தான் சொல்கிறேன்...)

இப்போ.. லியனர்டோ டாவின்ஸி போன்ற ஓவியனை இத்தனை மில்லி மீட்டரில் மோனோலிசாவின் புன்னகையை நிறுத்து என்ற உள்ளுணர்வைப் பற்றிதான் வியந்து போயிருக்கிறேன்....!
@@@தேவா

அறிவியல் எப்படி மூடநம்பிக்கை சொல்றிங்க? அப்போ அறிவியல் சொல்வது எல்லாம் பொய்யா
dheva said…
செளந்தர்...@ மறுபடியும் முதல்ல இருந்தா.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மீ பாவம் நோ....!
Chitra said…
என் பயணம்...அடைதலை நோக்கியதானதல்ல....ஆனால் அது கடந்து செல்வதை நோக்கியது....! படைப்பினை நடத்தும் மூல சக்தியின் கிளைகளையும் தழைகளையும் பற்றி, பற்றாமல் படர்ந்து தெரிந்து கொள்ள எனக்குள் என்னை செலுத்திய பயணத்தில் கிளைத்த எண்ணங்களை...எழுத்துக்களாய் கோர்த்து முடித்து இதோ எதார்த்த உலகிற்கு கொண்டு வருகிறேன்....



.......வாழ்வின் அர்த்தம் உணர்ந்து - நல்ல கொள்கை கொண்டு - ஒரு பிடிப்புடன் முன்னேறி செல்வது, பக்குவப்பட்ட மனதே...... உங்கள் எழுத்துக்கள் மூலம், அதை தெரிந்து கொள்கிறோம். பாராட்டுக்கள்!
vasu balaji said…
வரிக்கு வரி விவாதம் பண்ணலாம். வருசக்கணக்கானாலும் முடிவில்லை. கண்டவர் விண்டிலரால் இப்படி ஆகியிருக்கலாமோவென்றால் அதும் சரிப்படாது. நீ நிற்குமிடமிங்கே. உன் பயணம் அங்கே. வழி நீதான் தேடிக்கொள்ள வேண்டும் என்ற கட்டற்ற சுதந்திரம். தேவாவின் வழியில் நான் பயணித்தால் போய்ச் சேர்வேனா என்ற உத்தரவாதம் இல்லைதானே:)
@தேவா
//கவிதையாய், கட்டுரையாய்,........
...................... மனிதனின் பார்வை தாண்டி போய்....கருத்துக்களை கொண்டு வந்து சாமானியனுக்கு தருகிறதோ..... அதை குறைந்த பட்சம் குறை கூறாமல் இருப்போம்.//

வார்த்தைகளை கொண்டு வலை பிண்ணி கருத்துகளை கோர்த்து கவிதை ஆக்கி
சிந்தையில் தோன்றியதை செந்தமிழில் வடித்து
நித்தமும் நீ படிக்கா நான் கொடுத்தால்
அதை சத்தமில்லாமல் சாகடித்து உன்
சரக்குக்கு சைட் டிஷ் ஆக்கும் சாணக்கியம் சரியட்டும்.

(நம்ம மொழில சொன்னா.. கஷ்டபட்டு கவிதை, கட்டுரை எல்லாம் எழுதி தேவா நமக்கு கொடுத்தா அத படிக்காம புரியர மாதிரி எழுத சொல்லி நக்கல் அடிச்சி நம்ம போதைக்கு அவரு பதிவா ஊருகா ஆக்கிடறோம்....இதனால தேவா கோவப்பட்டு எழுத துப்பில்லாட்டியும் எழுதறவன குறை சொல்லாம இருடா #$@%^&*@# அப்படினு திட்டறாறு....அவ்வ்வ்வ்வ்)
dheva said…
பாலாண்ணே....@ உண்மைதன் பாலண்ணே...அகப்பயணம்........அவரவர் கடக்க வேண்டிய பாதையை அவரவரின் அகத்தெளிவைக் கொண்டுதான் கடந்து செல்ல வேண்டும்! நன்றிகள்!
உங்கள் கற்பனை குதிரையை கொஞ்சம் இல்லை இல்லை நிறையவே தட்டிவிட்டு சும்மா பூந்து விளயாடிடீங்க . சூப்பர் சூப்பர் சூப்பர்...
ஒரு வேண்டுகோள்.... என்னுடைய இந்த கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டும்... உங்களுடைய நண்பரிடமும் கண்டிப்பாக சொல்லுங்கள்...நன்றி...
http://nanbanbala.blogspot.com/2010/09/blog-post_22.html

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த