Skip to main content

ஹாய்....24.10.2010!


















எப்பவுமே... ஏதோ ஒண்ண சொல்ல வந்துட்டு மேடையில நின்னு பேசுற அரசியல்வாதி மாதிரி ஆ.. ஊ..ன்னு கருத்துக்களை தொண்டை கிழிய கத்தி கர்ஜித்து, அடித்து உக்கிரமாக பேசி...ஹா.. ஹா. ஹா. ரொம்ப காமெடி லைஃபா இருக்குள்ள....சரி எல்லாத்தையும் தூக்கி ஓரமா போடுங்க...

வாங்க.. உக்காருங்க.. ! நல்லாயிருக்கீங்களா? வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா...? என்ன சாப்பிடுறீங்க? டீயா? இல்லை காஃபியா? அட.. டீயா... சரி சரி.... நானும் டீதான் குடிக்கிறது. கம்மியா ஒண்ணும் இல்ல நிறைய...என்ன ஒரு மாதிரியா டையர்டா இருக்கீங்க.. இந்தாங்க.. இந்த தண்ணில முகத்தை கழுவிட்டு கொஞ்ச சில்லுன்னு இந்த தண்ணியவும் குடிங்க....!

செம காத்து அடிக்குதுல்ல...ஆமாம்....ஏகாந்தமா நாம் இப்படி ஒரு மாலைப் பொழுதுல கயித்து கட்டில எடுத்து போட்டு வாசல்ல உக்காந்து பேசிக்கிட்டு இருக்கறத பாத்துதான் சுத்தி இருக்கிற இந்த மரமெல்லாம் சந்தோசத்துல இந்த ஆட்டம் ஆடுது....

ஆமாங்க கொஞ்சம் போரடிச்சுதான் போச்சு.. வலைப்பூக்களில் நடக்கும் சில அத்துமீறல்களையும் இன்னும் சில அநாகரீகமான செயல்களையும் பாத்து....! அதான் எதுக்கு இந்த ஓட்டம் ஓடி...எந்த ரேஸ்ல மெடல் வாங்க போறோம்னு கூட சில நேரம் தோணுதுங்க.!

ரொம்ப கண்ணியமான படைப்பாளிகள் நிறைஞ்ச ஒரு இடம்னு ஆரம்பத்துல இருந்த எண்ணம் எல்லாம் மண்ணா போச்சுங்க...ஆமாங்க...! என்ன ஆச்சர்யமா பாக்குறீங்க... கூட்டம் சேர்ந்து மொய்க்கணும்னுதான் நிறைய பேரு நினைக்கிறாங்களே தவிர... என்ன விக்கிறோம்னு மறந்து போய்ட்டாங்க...! ஏன்னா நல்லது கெட்டது எது செஞ்சாலும் நியாயப்படுத்தி பேச தான் ஆயிரயம் புள்ளி விவரங்கள் இருக்குங்களே....!

இப்போ சந்தன கடத்தல் வீரப்பன் செஞ்சது நியாயம்னு கோவில் கட்டி கும்பிடச்செய்யுற அளவுக்கும் வாதம் செஞ்சு நிரூபீக்கலாம்....அப்புறம் மும்பைல எல்லாரையும் கொன்னானே அந்த பையன் பேரு என்ன? என்னவோல்லா...ம்ம்ம்ம்ம்ம் ஆங்.. அஜ்மல் கசாப் அவன் செஞ்சது நியாம்னும் வாதம் பண்ணலாம்....ஆனா அது சரி ஆகுமாங்க...இல்லேல்ல ... நம்ம மனசுக்கு தெரியும் நாம செய்றது நல்லதா கெட்டதான்னு....

ஊருப்பக்கம் பாத்தீங்கன்னா.. காலையில் 11 மணி காட்சிக்கு கூட்டம் அலைமோதும்... இப்போ எல்லாம் அப்படி தனியா ஒரு படம் தேவையில்ல அத தமிழ் சினிமாவே செஞ்சுடுது. இங்க ஒரு விசயம் கவனிக்கனும்...காமம் தப்புனு யாரும் சொல்ல வரல ஆனா.. காமத்த கத்துக் கொடுக்கவும் அதை சரியா பதின்ம வயதில் இருக்கவங்களுக்கு புரியவைக்கவும் சொல்லிக் கொடுக்குறவங்களுக்கு என்ன அருகதை இருக்குன்னு யோசிக்கணும்...சரிங்களா?

இல்லேன்னா தெருவோரத்துல கூத்து காட்டுற மோடி மஸ்தான் வித்தை மாதிரிஆயிப் போயிடும்....கிளர்ச்சியை உண்டு பன்ணாத புரிதலை பயிற்றுவிக்கும் காமத்தை எழுதுலாம் தப்பில்ல...

இதுல ஒரு விசயம் பாருங்க...என்னோட வலைப்பூவை..என் பொண்ணு எடுத்து படிக்கணும், என் தம்பி, தங்கச்சிங்க, எங்க அம்மா, சித்தி , பெரியப்பான்னு எல்லோரும் எடுத்து படிக்கணும் அப்படின்ற எண்ணத்துலதான் நான் எழுதுறேன்....எல்லோரும் எழுதணும்னு வலியுறுத்தல.. நான் எழுதுறேங்க....... அவ்ளோதான்!

வலைப்பூக்கள்ள மட்டும் இல்ல இணையத்த தட்டினா....வாரப்பத்திரிக்கைகள திறந்தா எல்லாமே...ஜிகினா ஒட்டுன பாய்சன் தான்...! அதனலாதான் சொல்றேன்...பெத்தவங்க புள்ல குட்டியல விட்டு தூரமா போயிடாதீங்க..அரவணைச்சு எல்லாத்தையும் புரிய வைக்கவேண்டியது நம்ம கடமைங்க....!

ஊர கொற சொல்லி என்னத்த பண்ண போறோம்? என்னங்க... நம்ம வூட்டு செவரு வெள்ளையா இருக்கானு ஒவ்வொருத்தரும் பாக்கணும்....

எல்லா இடமும் நாறிப் போய் கிடக்கு நானும் அசிங்கம் பண்ணின என்ன தப்புனு ஒரு கேள்வி கூட நியாமா வர்ற மாதிரி மாறு வேசம் போட்டு வரும்ங்க..யோசனையே பண்ணாம வெட்டித்தள்ளிடுங்க...!

பேச்சு சுவாரஸ்யத்துல சொல்ல மறந்துட்டேன்.....அந்த ஓரமா நிக்குது பாருங்க ரோசா செடி...நேத்துதாங்க பூத்துச்சு....! ஆமாங்க செடியா வாங்கியாந்து அது ஒரு நா மொட்டு விட்டு பூக்குற போது கிடைக்கிற பரவசம் இருக்குங்களே....அடா...அடா..அடா...! அதோ அதுக்கு பின்னால் நிக்கிறாளே அவ சிகப்பு ரோசாங்க..பாசாக்காரி...கிட்ட போனாளே துள்ளுவா......

பேச்சு சுவாரஸ்யத்துல டீய வச்சுபுட்டிங்க....அட டீய குடிங்க...ஆறிட போகுது.....

அப்புறம் ஒரு முக்கியமான விசயத்த சொல்லிபுடுறேன்...! வலைப்பூ வாசிக்கிற வாசகர்கள்...நல்ல எழுத்துக்கு சொந்தக்காரங்க மேலும் ரொம்ப எதார்த்தமா எழுதுறாங்கன்னு, அவங்க குணமும் அப்படி இருக்கும்னு நினைச்சு ஏமாந்து போய் உறவ வளர்த்துகிட்டு.. .. நிஜம்ன்ற நெருப்பு கனவுங்கற தோட்டத்த எரிக்க்கிறத தாங்கிக்க முடியாம கஷ்டப்படுறாங்க......! நல்ல எழுத்துகள படிங்க....ஆன எழுத்தாளன் எழுதுற மாதிரி எல்லாம் நல்லவனா இருப்பானு நினைச்சு ஏமாந்து போயிடாதீங்க....இதுல உசாரு வேணும்.....!

ஏன்னா..கண்ணு முன்னாலா பாத்து பாத்து வாங்குற கத்திரிக்காய வீட்டுக்கு கொண்டு வந்து வெட்டிப்பாத்தாலே பூச்சி இருக்குது...! பெரும்பாலன நேரத்துல எழுதற எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமே சம்பந்தமே இருக்காதுங்க...! காணமா இருக்குற நேரத்துல மனசு ஓவரா கற்பனை பண்ணும் அது ஏமாற்றமா போயிடக் கூடாதுங்க..! அம்புட்டுதேன்....

சோறு சமைக்கச் சொல்லிட்டேன்... நீங்க இருந்து சாப்பிட்டு புட்டுதான் போகணும்....சரீங்களா.....தம்பி சமீரயும் வரச் சொல்லியிருக்கேன்...இன்னிக்கு அவனுக்கு பிறந்த நாளு....அவனும் வந்த உடன் எல்லோருமா சேர்ந்து இரவுச் சாப்பாட ஒண்ணா சாப்பிடுவோம்...ஆமாங்க உறவுகளோட வாழ்ற வாழ்க்கையே ரொம்ப அலாதியானதுதான்....!

கொஞ்சம் நீங்க ரெஸ்ட் எடுங்க.... அதோ அந்த அலமாரில புத்தகம் எல்லாம் இருக்கு வேணும்னா எடுத்து படிங்க....! நான் கொஞ்சம் தோட்டம் வரைக்கும் வெரசா போயிட்டு ஒடியாந்திறேன்....!


அப்போ....வர்ர்ர்ர்ட்ட்டா!


தேவா. S

Comments

me the firstuuuuuuuuuuuuuu
enakku than sudu soruuuuu
//ஊர கொற சொல்லி என்னத்த பண்ண போறோம்? என்னங்க... நம்ம வூட்டு செவரு வெள்ளையா இருக்கானு ஒவ்வொருத்தரும் பாக்கணும்....//

சபாஷ் ........இந்த வரிகளுக்கு .........
//அப்புறம் ஒரு முக்கியமான விசயத்த சொல்லிபுடுறேன்...! வலைப்பூ வாசிக்கிற வாசகர்கள்...நல்ல எழுத்துக்கு சொந்தக்காரங்க மேலும் ரொம்ப எதார்த்தமா எழுதுறாங்கன்னு, அவங்க குணமும் அப்படி இருக்கும்னு நினைச்சு ஏமாந்து போய் உறவ வளர்த்துகிட்டு.. .. நிஜம்ன்ற நெருப்பு கனவுங்கற தோட்டத்த எரிக்க்கிறத தாங்கிக்க முடியாம கஷ்டப்படுறாங்க......! //

இந்த வரில உடன்பாடில்ல எனக்கு...மனதில் என்ன தோன்றுகிறதோ அதை தான் எழுத்தின் மூலமாக வருகிறது .............
பொதுவாக எதிர்பார்ப்பு இருந்தால் தான் பிரச்சனை
dheva said…
தம்பி பாபு...@ எல்லோரும் இருக்க மாட்டஙகன்னு சொல்லல...

ஆனா. ...எல்லோரும் அப்படி இருப்பாங்கன்னும் சொல்ல முடியாது....!

இது எதார்த்த உண்மை. எழுதும் எழுத்தில் கற்பனையும் சமுதாயத்திற்கு நல்ல விசயம் சொல்ல வேண்டும் என்ற முனைப்பும் இருக்கும் அந்த முனைப்பில் எழுத்தாளான் பின்பற்ற வெண்டும் என்று நினைக்கும் விசயங்களையும் கூட எழுத சாத்தியம் இருக்கிறது.....

மீண்டும் சொல்றேன்....எல்லொரும் இருக்க மாட்டாங்கன்னு சொல்லல...ஆனா... எல்லோரும் அப்படிதான் இருப்பாங்கன்னு சொல்லவும் முடியாது...!
//ஏன்னா..கண்ணு முன்னாலா பாத்து பாத்து வாங்குற கத்திரிக்காய வீட்டுக்கு கொண்டு வந்து வெட்டிப்பாத்தாலே பூச்சி இருக்குது...! பெரும்பாலன நேரத்துல எழுதற எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமே சம்பந்தமே இருக்காதுங்க...! //

இது சிலருக்கு வேனும்மன பொருந்தலாம் எப்படினா ...தான் சுய சிந்திப்பு இல்லாமல் வேறு ஒருவரின் கருத்தையோ அல்லது வேறொருவர் எழுதி கொடுகிறத அப்படியே போடும் பொது .கத்திரிக்காய் சொத்தையாக இருபது போல தானே இருக்கும் .........
dheva said…
இம்சை...@ பிரமச்சார்யத்த போதிச்சு மேடை மேடயா பேசுன எழுதுன சில ஆளுக.. கேமரா முன்னால வந்தப்பதான் ஒரிஜினல் முகம் தெரிஞ்சுச்சு....

செஞ்சது தப்பு இல்லா.. நான் செய்யமாட்டேன்னு சொல்லிட்டு செய்றது தப்பு...!
இம்சை, இனைய உலகில் பெரும்பாலானோர் முகமூடி அணிந்தே வளம் வருகின்றனர். அவர்கள் உண்மை முகம் அவர்களின் முகமூடி முகத்திற்கு மாறுபட்டதாய் இருக்கும்
என்ன ரெண்டு பேரும் தனியா செத்து செத்து விளையடுரிங்க....இதோ படித்து விட்டு வரேன்
''// பெரும்பாலன நேரத்துல எழுதற எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமே சம்பந்தமே இருக்காதுங்க...! காணமா இருக்குற நேரத்துல மனசு ஓவரா கற்பனை பண்ணும் அது ஏமாற்றமா போயிடக் கூடாதுங்க..! அம்புட்டுதேன்..//'' ஆமாண்ணே. கனவுல வந்த மாதிரியே ஒரு பொண்ண தேடிக்கிட்டே இருக்கேன். இன்னும் கிடைக்கல. ஆனா இனிமே தேடடுறதில்ல முடிவுபண்ணிட்டேன்.
a said…
எதார்தமாய் இருக்கு தேவா...............
என்னோட வலைப்பூவை..என் பொண்ணு எடுத்து படிக்கணும், என் தம்பி, தங்கச்சிங்க, எங்க அம்மா, சித்தி , பெரியப்பான்னு எல்லோரும் எடுத்து படிக்கணும் அப்படின்ற எண்ணத்துலதான் நான் எழுதுறேன்....

//

உண்மை தான் அண்ணா.. இது தான் என்னுடைய ஆசையும்... விளையாட்டாக எழுதும் என் எழுத்துக்களில் விளையாட்டாக கூட யாரயும் புண் படுத்தும் அளவில் ஒரு வார்த்தை கூட வரக்கூடாது என்று நினைக்கிறேன்.. இனி மேல் வராது என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது...
தோழர் சமீருக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
நல்ல எழுத்துகள படிங்க....ஆன எழுத்தாளன் எழுதுற மாதிரி எல்லாம் நல்லவனா இருப்பானு நினைச்சு ஏமாந்து போயிடாதீங்க....இதுல உசாரு வேணும்.....!

//

அண்ணா நீங்க எப்படி... (சும்மா டமாசுக்கு)
நல்ல எழுத்துகள படிங்க....ஆன எழுத்தாளன் எழுதுற மாதிரி எல்லாம் நல்லவனா இருப்பானு நினைச்சு ஏமாந்து போயிடாதீங்க....இதுல உசாரு வேணும்.....!///

நான் இந்த பதிவை படிக்கலாமா அண்ணே நீங்க நல்லவரா கெட்டவரா ?????????
ஆமாண்ணே. கனவுல வந்த மாதிரியே ஒரு பொண்ண தேடிக்கிட்டே இருக்கேன். இன்னும் கிடைக்கல. ஆனா இனிமே தேடடுறதில்ல முடிவுபண்ணிட்டேன்.////

@@@@ஜீவன் பென்னி

பிறந்தநாள்அதுவும் நல்ல முடிவு.....
ஜீவன் பென்னி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
dheva said…
// நான் இந்த பதிவை படிக்கலாமா அண்ணே நீங்க நல்லவரா கெட்டவரா ????????? //

செளந்தர்...@ தெரியலயேப்பாபா....(நாயகன் ஸ்டைல்ல படிச்சுக்க...ஹா..ஹா..ஹா..)
my family
whish you a many more happy returns of the day
jeevan benni(samir)
வணக்கம் அண்ணே

முதல்ல பிறந்தநாள் வாழ்த்து சொல்லிடறேன்
சமீர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//நல்ல எழுத்துகள படிங்க....ஆன எழுத்தாளன் எழுதுற மாதிரி எல்லாம் நல்லவனா இருப்பானு நினைச்சு ஏமாந்து போயிடாதீங்க....இதுல உசாரு வேணும்//
உண்மைதான் சிலருக்கு தனிமையில், சிலருக்கு மதுவில், சிலருக்கு பிரயாணங்களில் சிந்தனைகள் தோன்றும் பலர் சிந்தனைகளை கற்றோடே களைந்து விடுகிறார்கள் தங்கள் கவித்தன்மையை.
காற்றே கவி பாட
நேற்று பூத்த
ரோசாமலர் வாட..............
htttp://marumlogam.blogspot.com
vasu balaji said…
நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க தேவா. ஒரு சிலர் வீம்புக்குன்னாலும் பண்ணுவேன்னு பண்றதில என்ன வருதுன்னு புரியலை. தம்பி சமீருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
Unknown said…
அருமை..

//என்னோட வலைப்பூவை..என் பொண்ணு எடுத்து படிக்கணும், என் தம்பி, தங்கச்சிங்க, எங்க அம்மா, சித்தி , பெரியப்பான்னு எல்லோரும் எடுத்து படிக்கணும் அப்படின்ற எண்ணத்துலதான் நான் எழுதுறேன்....//

//நல்ல எழுத்துகள படிங்க....ஆன எழுத்தாளன் எழுதுற மாதிரி எல்லாம் நல்லவனா இருப்பானு நினைச்சு ஏமாந்து போயிடாதீங்க....இதுல உசாரு வேணும்.....!//
அது சரி.இந்த பதிவு யாரால் ஏற்ப்பட்ட பாதிப்பு..
@இம்சை

//இந்த வரில உடன்பாடில்ல எனக்கு...மனதில் என்ன தோன்றுகிறதோ அதை தான் எழுத்தின் மூலமாக வருகிறது .............
பொதுவாக எதிர்பார்ப்பு இருந்தால் தான் பிரச்சனை//

மக்கா ஸாரி!! இந்த விஷயத்துல நான் தேவா கூட ஒத்து போறேன். சிலர் எழுத்துல அமைதி தவழும் ஆனா நிஜத்துல கோபகார ஆசாமியா இருப்பாங்க (நான் மங்குனிய சொன்னேன்...). என்னை கூட நல்லவன் நம்பி நீங்க இப்பொ கஷ்ட்ட படறிங்க இல்ல அதுமாதிரிதான்... :))
dheva said…
பாரத் பாரதி...@ எழுத்தின் வீச்சில் இருக்கும் சத்தியம் அறியப்படவேண்டும். அதில் இருக்கும் உண்னைகள் உணரப்படவேண்டும்...கிளைத்த இடத்தையும் ஏன் என்ற ஆராய்ச்சியும் வந்து விட்டால் கட்டுரை தோல்வியை அடையும்....அது ஆரோக்கியமான் விசயம் அல்ல....!
//இதுல ஒரு விசயம் பாருங்க...என்னோட வலைப்பூவை..என் பொண்ணு எடுத்து படிக்கணும், என் தம்பி, தங்கச்சிங்க, எங்க அம்மா, சித்தி , பெரியப்பான்னு எல்லோரும் எடுத்து படிக்கணும் அப்படின்ற எண்ணத்துலதான் நான் எழுதுறேன்....எல்லோரும் எழுதணும்னு வலியுறுத்தல.. நான் எழுதுறேங்க....... அவ்ளோதான்!//
இதான்!! என் வீட்டில் யாரும் என் வலைப்பூவை படிப்பதில்லை. ஆனாலும் எழுதுகிறேன். சாகிற வரை எழுதுவேன்! இது ஒரு திருப்தி!

நல்ல விசயங்கள் எழுதுறவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. எங்க போகப் போறோம்கிறது நம்மகிட்டதான் இருக்கு! மற்றவர்களை குற்றம் சொல்வதை விட நம்மால் முடிந்தவரை ஒழுங்காக இருக்க வேண்டியதுதான்!

அதேபோல் எழுத்தை போல் எழுதுகிறவர்கள் இருப்பதில்லைதான். ஜாலியா மொக்கையா எழுதுறவங்க நிறைய பேரின் குணங்கள் அருமையா இருக்கு ஆனா பெரிய விசயங்களை எழுதுறவங்கள் எல்லாரும் நல்லவங்க இல்லைன்னு இங்க தெரிஞ்சுக்க முடியுது!

சமீர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Unknown said…
எதார்த்தமா எழுதி இருக்கீங்க...தலைப்பு 'வணக்கமுங்க' இல்ல 'வாங்க வாங்க' இப்படி ஏதேனும் வைத்திருக்கலாம். உண்மையைச் சொல்லனும்னா உங்கள் சமீபத்திய பதிவுகளில் என் சிற்றறிவுக்கு எட்டி முழுதும் புரிந்தது இது மட்டுமே. நன்றி.
வினோ said…
சமீர்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமீர்!!!
எதார்தமாய் இருக்கு...
/// இதுல ஒரு விசயம் பாருங்க...என்னோட வலைப்பூவை..என் பொண்ணு எடுத்து படிக்கணும், என் தம்பி, தங்கச்சிங்க, எங்க அம்மா, சித்தி , பெரியப்பான்னு எல்லோரும் எடுத்து படிக்கணும் அப்படின்ற எண்ணத்துலதான் நான் எழுதுறேன்....எல்லோரும் எழுதணும்னு வலியுறுத்தல.. நான் எழுதுறேங்க....... அவ்ளோதான்! ///

பங்காளி தேவா.. சரியா சொல்லிருக்கீங்க.. எழுதுகிறோம்கிற பேர்ல கண்டதையும் எழுதுறாங்க.. நாலுபேர் படிச்சி பார்க்கும்போது நம்ம எழுத்த கண்ணுல ஒத்திக்கிறமாதிரி இருக்கணும் நம்ம வலைப்பூ..

ரொம்ப நல்ல கருத்துகள்.. பாராட்டுக்கள்.
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சமீர்.
vinthaimanithan said…
avasiyamana,arumaiyana pathivu. eppavum nalla thamizhla mattum comment poduradhu en vazhakkam. out of station... so browsing centre la e-kalappai work aagala...google translater enakku allergy... adhaiyum meeri intha padhivukku comment pottey aaganum enbadhaal....

vaazhthukkal anna...!
Mahi_Granny said…
dinner தேவா வீட்டிலேயா . thanx . சில இடுகைகளுக்கு பின்னூட்டம் இடும் போது கூட, பயத்தில் வாசித்ததுடன் கடந்து போகிறேன்
Bibiliobibuli said…
தேவா,

எளிய நடையில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் குறிப்பிட்ட, தேர்ந்தெடுத்த பதிவர்களின் தளங்களைத் தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.

பதிவுலகம் பற்றியும் ஏதோ பூடகமாக சொல்வது போல் எனக்கு தோன்றுகிறது. ஒருவேளை என் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம். இங்கே யாரும் பூரணமானவர்கள் கிடையாது. என்னுடைய கருத்தும் பதிவுலகம் இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக எழுதலாம் என்று தான் தோன்றுகிறது.
//எல்லா இடமும் நாறிப் போய் கிடக்கு நானும் அசிங்கம் பண்ணின என்ன தப்புனு ஒரு கேள்வி கூட நியாமா வர்ற மாதிரி மாறு வேசம் போட்டு வரும்ங்க..யோசனையே பண்ணாம வெட்டித்தள்ளிடுங்க...!//

யதார்தமான வார்த்தைகள்! பதிவு அருமையாக இருக்கிறது! நான் பழகி பார்த்த வரையில் பதிவர்கள் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்! உள்ளத்தில் உண்மை ஒளி இல்லையென்றால் வார்த்தையிலே அதன் வலிமை இருக்க முடியாது தேவா! அதனால் நாம் எளிதில் கண்டுப்பிடித்து விட முடியும் எது உண்மை எதுப் போலி என்பதை. அருமை தேவா!
///பேச்சு சுவாரஸ்யத்துல டீய வச்சுபுட்டிங்க....அட டீய குடிங்க...ஆறிட போகுது....///

ஹ்ம்ம் கும்ம்... டீயை குடுத்துட்டு குடிக்க விட்டாத் தானே.... :D :D

இந்த பேச்சு பேசிட்டே போனா... என்னத்த குடிக்கறதாம் :-)))
(இவரு டீ எல்லாம் குடுப்பாரு...... ஆனா குடிக்க தான் விட மாட்டாரு....ரெம்ப நல்லவரு.......)
////பெரும்பாலன நேரத்துல எழுதற எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமே சம்பந்தமே இருக்காதுங்க...! காணமா இருக்குற நேரத்துல மனசு ஓவரா கற்பனை பண்ணும் அது ஏமாற்றமா போயிடக் கூடாதுங்க..! அம்புட்டுதேன்...////

வாவ்... அருமையான பகிர்வு தேவா...!! கண்ணால் காண்பதும் பொய்... ஹ்ம்ம்..
தேங்க்ஸ்..
//அப்புறம் ஒரு முக்கியமான விசயத்த சொல்லிபுடுறேன்...! வலைப்பூ வாசிக்கிற வாசகர்கள்...நல்ல எழுத்துக்கு சொந்தக்காரங்க மேலும் ரொம்ப எதார்த்தமா எழுதுறாங்கன்னு, அவங்க குணமும் அப்படி இருக்கும்னு நினைச்சு ஏமாந்து போய் உறவ வளர்த்துகிட்டு.. .. நிஜம்ன்ற நெருப்பு கனவுங்கற தோட்டத்த எரிக்க்கிறத தாங்கிக்க முடியாம கஷ்டப்படுறாங்க......! நல்ல எழுத்துகள படிங்க....ஆன எழுத்தாளன் எழுதுற மாதிரி எல்லாம் நல்லவனா இருப்பானு நினைச்சு ஏமாந்து போயிடாதீங்க....இதுல உசாரு வேணும்.....!//

உண்மை தான் தலைவரே.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சமீர்...
நான் அப்பூடி என்ன மாப்ள தப்பா எழுதிட்டேன்? இல்ல ஒனக்கு தப்பா செஞ்சுபுட்டேன்..? நானெல்லாம் உள்ளேயும் வெளியையும் "சேமு" தான்...

இப்பிடி எல்லாரு முன்னாடியும் திட்டிப்புட்டியே!! ஹூம் ஹூம் (அழுகுறேனாக்கும்!)
dheva said…
கலா நேசன்...@ டைட்டில்...சும்ம ஒரு சப்போர்ட்டுகு பாஸ்...அவ்ளோதான்.. அத கண்டுக்காதீங்க.. ஹா..ஹா..ஹா..!
dheva said…
ரதி..@ சம காலத்தில் இருக்கும் ஒரு ஆரோக்கியமான சூழலை மையப்படுத்திதான் தோழி எழுதியிருக்கிறேன்... ! நன்றிகள்!
dheva said…
//இம்சை...@ பிரமச்சார்யத்த போதிச்சு மேடை மேடயா பேசுன எழுதுன சில ஆளுக.. கேமரா முன்னால வந்தப்பதான் ஒரிஜினல் முகம் தெரிஞ்சுச்சு....

செஞ்சது தப்பு இல்லா.. நான் செய்யமாட்டேன்னு சொல்லிட்டு செய்றது தப்பு...!//

என்னது நானு யாரா @ வாங்க பங்காளி! சொல்லாம கொள்ளாம எங்க போய்ட்டீங்க.....! மேலெ உள்ளது உங்களுகு சராமாரி ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு!
dheva said…
கோவி. கண்ணன்...@ வாங்க அண்ணா.. ! நன்றி.!
Kousalya Raj said…
நீங்க சொல்ற மாதிரி பார்த்தா..புத்திமதி சொல்றவங்க எல்லாம் புத்தனா தான் இருக்கணும்.....!!? அப்படி இருக்க முடியுமா தேவா...??? ஏதோ தனக்கு சரின்னு பட்டதை சொல்ராங்க... அவங்க சொன்னா விஷயத்தை மட்டும் தான் பார்க்கணுமே தவிர அவங்க குணத்தோடு அதை ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் கண்டிப்பா ஏமாந்து தான் போகணும்...

nice post dheva.....

சரியா சொன்னீங்க....!!
யாரயோ சொல்லுறீங்களா? இல்லை எல்லாரையும் சொல்லுறீங்களா? இல்லை சிலர் மட்டும் சொல்லுறீங்களா? ஒண்ணும் புரியல... :(
dheva said…
கெளசல்யா..@ ரொம்ப தெளிவா இருக்கீங்க....! அந்த மாதிரி புரிதல் இருக்கணும்னுதான் சொல்றேன்...ஹா..ஹா..ஹா...!
vasan said…
பேச்சு சுவார‌ஸ்த்தில, டீ சூடு க‌ம்மினாலும், டேஸ்ட் சூப்ப‌ர‌ இருக்கு, ம‌ர‌மும், தேட்ட‌மும், பூக்க‌ளும் அருமையா மெயின்ட‌ன் ப‌ண்ணுரிங்க‌, அப்ப‌ நீங்க தோட்ட‌த்துக்கு போயிட்டு வாங்க‌,
நானும் புற‌ப்புட‌ரேன். த‌ம்பி சமீரை ரெம்ப‌க் கேட்ட‌த‌ச் சொல்லி, பிற‌ந்த‌நாள் வாழ்த்தையும் சேர்த்திகிடுங்க‌. போயிட்டு வ‌ர்ற‌னுங்க தேவா. ...வ‌ண‌க்க‌ம்.
Anonymous said…
நான் வழக்கமா பேச்சு நடை போன்ற எழுத்து நடையை எதையாச்சும் கிண்டல் பண்றதுக்கோ, அல்லது நகைச்சுவை எழுத்துக்கோதாப் உபயோகப்படுத்துவேன். ஆனா... ரொம்ப சாதாரணமா பாமரத்தனமான நடைல, பேச்சுவாக்குல எவ்வளவு முக்கியமான விஷயத்தை படிக்கிறவன் மனசுல நட்டு வைச்சிருக்கீங்கனு நினைச்சா பிரமிப்பாவும் பெருமையாவும் இருக்கு. அண்ணே... மனம் நிறைய வாழ்த்துக்கள்... :-)
/நல்ல எழுத்துகள படிங்க....ஆன எழுத்தாளன் எழுதுற மாதிரி எல்லாம் நல்லவனா இருப்பானு நினைச்சு ஏமாந்து போயிடாதீங்க....இதுல உசாரு வேணும்.....!//

ஓஹோ , நல்லவேளை .. நானும் கொஞ்சம் உசராவே இருந்திக்கறேன் ..!!
ரொம்ப அருமையான கருத்துக்கள். இவை ஒவ்வொன்றுடனும் நான் உடன்படுகிறேன்.

சமீருக்கு எனது வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த