Pages

Saturday, October 2, 2010

தேசம்...!ஒரு துப்பாக்கி இருந்தால் கொடுங்கள்.. கனவிலே கெஞ்சிக் கொண்டிருந்தேன்.... நடுத்தெருவில் நின்று கொண்டு எல்லோரும் வெறிக்க வெறிக்க பார்த்து சென்று கொண்டே இருந்தார்கள்.....எனக்குள் கோபம் கோபமாய் வந்தது சுற்றி இருக்கும் குறைந்த பட்சம் 100 பேரயாவது சுட்டுக் கொள்ள வேண்டும் நான்.....

எனது வக்கிரத்துக்கு பின்னால் நின்று கொண்டிருப்பது இந்த சமூகம்தான் என்பது எல்லோருக்குமே தெரியும் இருந்தாலும் யாரும் எதுவும் தெரியாதது போல போய்க்கொண்டிருக்கிறார்கள்.

பூக்கடையில் ஒரு முழம் பூ இவ்வளவு என்று ஏமாற்றி கூடுதலாய் விற்கும் வியாபாரி முதல்...ஐந்து நட்சத்திர ஹோட்டல் நடத்தும் முதலாளிகள் வரை பணம் சம்பாதித்தலில் இருக்கும் குரூரம் ஒரு பக்கமும் கேவலமான சுய நல அரசியல்வாதிகள் ஒருபக்கமும், இன்னொரு பக்கத்தில் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊடகங்களும், சினிமா என்ற பெயரில் பொழுதுபோக்கை வாழ்க்கையாய் மாற்றிக் கொண்டிருக்கும் வியாபரிகளின் தந்திரங்களும்........

என்று எனது அடங்காத கோபத்தின் உச்சத்தில் முட்டாள் மனிதர்கள் இதற்கெல்லாம் வழி விட்டு தத்தம் வேலைகளிலும் தம் வயிற்றுச் சோற்றிலும் சந்தோசபட்டுக் கொண்டு நகர்ந்து கொண்டிருப்பதில் கூட கவலைப்படாமல் போய்விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு கர்வம்.

திறம்பட அறிந்தவனென்றால் எமது அறிவு மற்ற மானிடர்க்கு பயனள்ளவா அளிக்க வேண்டும்? மாறாக அது ஏன் இவர்களின் கர்வத்தை வளர்க்கிறது.

இந்திய தேசத்தின் வரலாறு என்று இல்லை......உலகின் வரலாற்றை எடுத்துப் பாரும் கர்வம் கொண்ட மானிடரே....அங்கே.... மாவீரர்களும், ஞானிகளும், தத்துவ மேதைகளும், அறிவியல் அறிஞர்களும், அன்பு செய்தவர்களும், புரட்சி செய்தவர்களும்.... தமது எண்ணங்களையும் தமது வாழ்க்கையையும் விதைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களின் செருக்கில் கவிதைகள் பூத்தன, புரட்சியான சிந்தனைகள் மானுடரின் நல் வாழ்வுக்கு அர்த்தங்கள் பகிர்ந்தன......

பசியையும், வறுமையையும், கேடுகெட்ட தலைமை கொண்டிருக்கும் சுய நல அரசியல் தலைவர்களையும் விரட்ட வேண்டிய நாம்....பொழுது போக்க வேண்டிய திரைப்படத்தை பார்த்துவிட்டு அது பற்றி வியாக்கியானங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம், சக மனிதர்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்....அதில் குற்றங்கள் கண்டு பிடித்து கீழே இறக்கி விட தருணங்கள் பார்க்கும் சிக்குப் பிடித்த மனதுக்கு சொந்தகாரர்களாகிப் போய்விட்டோம்.....

சகிப்புத்தன்மையும், அஹிம்சையும் போதிக்கப்பட்ட ஒரு தேசத்தில் எடுக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியான முடிவுகளால் அழிக்கப்பட்டது ஒரு இனத்தின் சில லட்சம் மனித உயிர்களும் அவரது வாழ்வாதரங்களும் மட்டுமெ... என்று ஒதுங்கிக் கொண்டு போவதற்கு பின்னால்...போதனைகள் செத்துப் போய்விட்டதே என்ற ஆதங்கத்தோடு.... இவர்களுக்காக..... சட்டையில்லாமல் அரை நிர்வாணத்தோடு தேசமெல்லாம் சுற்றி, தடியால் அடிவாங்கி, சிறை சென்று கடைசியில் குண்டடிபட்டு இறந்த தேசப்பிதாவின் மீது பரிதாபமும் வருகிறது.

டாஸ்மாக்குகள் மூடப்படுவதோடு....
உனக்கான நினைவு கூறல்கள்
முடிந்து போகின்றன மகாத்மா...
ரூபாய் நோட்டுக்களில் ...
உன்னை அச்சேற்றி விட்டு...
ரூபாய்களோடு சேர்ந்து..
விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்...

காந்தி தேசத்தின் புதல்வர்கள் கதர் சட்டை அணிவதில்தான் தீவிரமாயிருக்கிறார்களே அன்றி...அவர் பயிலச் சொன்ன கருத்துச் சட்டையை அல்ல....!

இதோ யாரோ ஒருவர் என்னருகில் வந்து உனக்கு துப்பாக்கி எதற்கு என்று மூர்க்கமாய் கேட்டு என சட்டையின் காலர் பிடித்து... பைத்தியக்காரா என்று தள்ளிவிட்டுப் போகிறார்..... ஆமாம் நண்பரே நான் பைத்தியக்காரன் தான்...

சுதந்திரமாய் சிந்திக்காத மனிர்களோடு சேர்த்து வைத்து அடுத்த மனிதரின் அந்தரங்கம் ஆராயும் கூட்டத்தையும் அநீதி இழைக்கும் அத்தனை பேரையும் கொன்று குவிக்க எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்.. நான் பைத்தியக்காரனாகவே இருந்துகொள்கிறேன்.....

சப்தமாய் நான் கத்தி கத்தி... எனது சப்தம் எனது உறக்கத்தை கலைக்க மெல்ல கண்விழித்துப் பார்கிறேன்...ஓ.... விடியப்போகிது ஆனால் இன்னும் இருளாய்த்தானிருகிறது.. ச்சே...என்ன கனவு இது துப்பாக்கி வேண்டும் என்று....காலண்டரின் தேதி கிழித்து அன்றைய நாளை நோக்குகிறேன்....

" OCT' 02 - தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள்...." தேசத்தின் மரியாதையை சொல்லி எல்லா நாடுகளிலும் பெருமைப்பட்டுக் கொள்ள கூடிய ஒரு ஆத்மா...மகா ஆத்மா...

அவரின் மெலிந்த தேகமும், எளிமையும் இன்று பரபரப்பாய் பேசப்படும் 150 கோடி பொழுது போக்கு தயாரிப்புகளுக்கு முன்னால் மறைந்து போய்கிடக்கின்றன. சப்தமில்லாமல் வரிசையில் நகர்ந்து போய்... நீ எவ்வளவு வேண்டுமானலும் அடி நான் வாங்கிக் கொள்கிறேன்....அடித்து அடித்து உனது கைகள் வலிக்குமே என்ற கவலைதான் எனக்கு ... என்ற வைராக்கியம் கொண்டு அதை கற்பித்த வைர மனிதர்.....

யாரை நினைப்பது, யாரைப் பற்றி விவாதம் செய்வது, யாரின் கருத்துக்களை அலசி ஆராய்வது....மிகைப்பட்ட மானுடர்கள் அறிவதில்லை....அவர்கள் பொதுபுத்தியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்....

கண்களில் நீர் கசிந்தது...மகாத்மாவை மனதார வணங்கினேன்....

நேரம் ஓடியதில் பளீச் சென்று விடிந்து போயிருந்தது.... நான் பால்கனியில் நின்று கொண்டிருந்தேன்...கீழே யாரோ யாரிடமோ அந்த காலையில் சப்தமாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்

" மச்சி எந்திரன் டிக்கட் கிடச்சிருச்சு மச்சி... சூப்பர்ல ... ஈவ்னிங் ஷோ போறேன் "

சந்தோசத்தின் சப்தம்...அக்டோபர் 2ன் நிசப்தத்தை கிழித்துக் கொண்டிருந்தது.....!


தேவா. S

19 comments:

sakthi said...

ரூபாய் நோட்டுக்களில் ...
உன்னை அச்சேற்றி விட்டு...
ரூபாய்களோடு சேர்ந்து..
விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்..

தேவா வார்த்தை இல்லை

சபாஷ் !!!

sakthi said...

சுதந்திரமாய் சிந்திக்காத மனிர்களோடு சேர்த்து வைத்து அடுத்த மனிதரின் அந்தரங்கம் ஆராயும் கூட்டத்தையும் அநீதி இழைக்கும் அத்தனை பேரையும் கொன்று குவிக்க எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்.. நான் பைத்தியக்காரனாகவே இருந்துகொள்கிறேன்.

எனக்கு அவ்வப்போது தோன்றும் எண்ணமிது

எஸ்.கே said...

வாழ்வின் நிதர்சனம் இதுதான்! எப்போதும் இனிமையை நாடும் மனம் கஷ்டங்களையும் கஷ்டப்பட்டவர்களையும் நினைத்துப் பார்ப்பதில்லை. அப்படி நினைப்பவர்களும் கொஞ்ச நேரம்தான் அதை செய்வார். சமூகத்தின் கோப்பப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. சமூக அவலங்களை பற்றி எழுத்துக்களுக்கு காரசாரமாக கருத்து தெரிவிப்போர் அதை செய்தவுடன், மீண்டும் சாதாரண வாழ்க்கை திரும்பி விடுவார்கள் (எழுதுபவர்கள் கூட இப்படி இருக்கலாம்:-))

சமூக மாற்றம் கூட்டு முயற்சியாம்! ஆனால் அதை செய்ய ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும் தனிப்பட்ட விதத்தில்!

இருக்கட்டும்! இப்படிப்பட்டவைகளை படிக்கும்போதாவது சிந்திக்கின்றோமே! காந்தியடிகளின் பிறந்த நாளில் ஒரு நல்ல மனிதனாக வாழ முயற்சிப்போம்! ஜெய்ஹிந்த்!

சௌந்தர் said...

சக மனிதர்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்....அதில் குற்றங்கள் கண்டு பிடித்து கீழே இறக்கி விட தருணங்கள் பார்க்கும் சிக்குப் பிடித்த மனதுக்கு சொந்தகாரர்களாகிப் போய்விட்டோம்..////

நாம் எப்போதும் அடுத்தவரின் வளர்ச்சியை குறைசொல்லி கொண்டுஇருக்கிறோம்,அவன் முன்னேறி கொண்டே இருப்பான் நாம் மட்டும் அதே இடதில் இருந்து கொண்டு குறைசொல்லி கொண்டு இருப்போம்.

" மச்சி எந்திரன் டிக்கட் கிடச்சிருச்சு மச்சி... சூப்பர்ல ... ஈவ்னிங் ஷோ போறேன் "

சந்தோசத்தின் சப்தம்...அக்டோபர் 2ன் நிசப்தத்தை கிழித்துக் கொண்டிருந்தது.....!

:(

ஜீவன்பென்னி said...

//entiraaaaaaaaaaa...........

anne enthiran padam parthuteengala..........//

sorry innaiku gandhi jayanthi illa

gandhi was a great man........

i solute him...........

//machi naalaiku tasmac la party vanthudu.......//

neenga sonnathuthan nitharsanamne............

கே.ஆர்.பி.செந்தில் said...

அன்பின் தேவா, வார்த்தைகளில் கொப்பளிக்கும் கோபம் உங்கள் மனத்தைக் காட்டுகிறது.. இந்த மாய உலகில்.. உலகோடு ஒட்டி ஒழுகுதல்தான் சிறந்த வழி ....

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

உண்மை. தேச பிதாவையும் சுகந்திரம் வாங்க நம் முன்னேர் பட்ட கஷ்டத்தையும் நாம் மெல்ல மறந்து கொண்டு இருக்கிரோம்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காந்தி தேசத்தின் புதல்வர்கள் கதர் சட்டை அணிவதில்தான் தீவிரமாயிருக்கிறார்களே அன்றி...அவர் பயிலச் சொன்ன கருத்துச் சட்டையை அல்ல//
கதர் சட்டை அணிந்தால்தான் இப்பல்லாம் நிறைய பித்தலாட்டம் பண்ணி மால் சம்பாதிக்க முடியும் போல..காந்தியை வைத்து சம்பாதிப்பவர்களே அதிகம்..

வினோ said...

உங்க கோவம் சரி தான் அண்ணே... எதார்த்தம் வேற மாதிரி அல்லவா இருக்கு?

Kousalya said...

//ரூபாய்களோடு சேர்ந்து..
விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்...//

நிதர்சனம் இதுவே....!!

//கண்களில் நீர் கசிந்தது...மகாத்மாவை மனதார வணங்கினேன்....//

தேச பிதாவை நினைவு கூர்ந்ததுக்கு என் வணக்கம்.

LK said...

//OCT' 02 - தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள்...//

இன்று ஒரு நாள்தான் அவரை நினைவுகூர்கிறோம்

ஹேமா said...

நல்ல மனிதர்களை நினைத்துகொள்வோம்.உங்கள் ஆதங்கமும் கோபமும் பட்டுத்தெறிக்கிறது வரிகளில் !

விந்தைமனிதன் said...

யாரங்கே! சீக்கிரம் இவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடை! கனவில் துப்பாக்கி கேட்கிறாராம்!!

சே.குமார் said...

//ரூபாய் நோட்டுக்களில் ...
உன்னை அச்சேற்றி விட்டு...
ரூபாய்களோடு சேர்ந்து..
விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்..//

அருமை தேவா...

உங்கள் கட்டுரையின் சாராம்சத்தை இந்த நான்கு வரிகள் அழகாய் சொல்லிவிட்டன. இன்றைய நிலை இதுதான்...

இன்னும் சில காலத்தில் காந்தி ஜெயந்தி குறித்து கேட்டால் காந்தியை தெரியாது... ஜெயந்தியைத் தெரியும் என்று சொல்லும் நிலை கூட வரலாம்.

mohana ravi said...


//டாஸ்மாக்குகள் மூடப்படுவதோடு....
உனக்கான நினைவு கூறல்கள்
முடிந்து போகின்றன மகாத்மா...
ரூபாய் நோட்டுக்களில் ...
உன்னை அச்சேற்றி விட்டு...
ரூபாய்களோடு சேர்ந்து..
விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்...//

உண்மை! மனம் வேதனை படுகிறது!

இம்சைஅரசன் பாபு.. said...

@தேவ
உங்கள் கோபம் நியாயம் தான் ..என்னக்கும் இந்த கோபம் உண்டு தேவ அண்ணா.
ஆனால் இரு பழமொழி கூறி கொள்ள ஆசை படிக்கிறேன் தேவா அண்ணா
1 .அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ...

(இந்த பழமொழி போடவா வேண்டாமா என்று நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள் )

2 .ஒரு ஊர்ல எல்லோரும் ஒட்டு துணி போடாம இருந்தனாக
ஆனா ஒருத்தன் மட்டும் துணி போட்டானாம் .அது மாதிரி தான் அண்ணா

dheva said...

இம்சை.....@ கூற்றின் நியாயம் விளங்கும் அதே நேரத்தில்


எனக்குள் இருக்கும் கோபம் என்னை சமன் செய்யு, என் வீட்டில் உள்ளவர்களுக்கும் என் குழந்தைக்கும் தேசத்தின் முக்கிய மனிதர்களையும், பிரியாரிட்டி என்று சொல்லக்கூடிய எதற்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும்..என்றும் சொல்லி வளர்ப்பதோடு... நானும் கடைப்பிடிக்கிறேன்.

முக்கியத்துவம் என்பது மனிதர்களின் அனுபவச் செறிவிலும் புரிதலிலும் இருந்து வருகிறது. எனது முக்கித்துவம் இப்படியாக வகைப்படுத்தப்படுகிறது.

ஒரு கட்டத்தில் மகாத்மா யாரென்று அறியாத சந்ததியினர் வரலாம்.......என் வாழ்வின் பக்கங்கள் இப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்....

எனது எண்ணம் இது... எல்லோரும் கடைபிடித்துதான் ஆக வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை... வலியுறுத்தவும் முடியாது........

ஊரோடு ஒத்து வாழும் போது... முரண்பட்டு வாழ்கிறோம் என்ற எண்ணம்... உள்முனைப்பு கூர்மையாக இருப்பவர்களுகு வரும்.....வரக்கூடது என்பது நமது கையில் இல்லை....அது தானே தோன்றுவதுப்பா...

dheva said...

//சமூக மாற்றம் கூட்டு முயற்சியாம்! ஆனால் அதை செய்ய ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும் தனிப்பட்ட விதத்தில்!//

எஸ். கே @ தன்னளவில் மாறுவதுதான் முக்கியம்.... யாரும் யாரையும் மாற்ற முடியாது.....அவரவர் கண்ணோட்டஙகள் வேறு..

மேலே சொன்னது என்னுடைய கண்ணோட்டம்...இது எல்லோருக்கும் ஒத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை.

எஸ்.கே said...

//dheva said...//
என் கருத்தும் நீங்கள் சொன்னதுதான் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் மாற முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சமூகம் மாற வேண்டும் என சொல்வதில் அர்த்தமில்லை.