Skip to main content

டிக்கட்....!























அந்த காலை பரபரப்பில் நானும் பேருந்து நிறுத்தமும் கால் கடுக்க காத்திருந்தோம் அவளின் வருகைக்காக..இதோ.. தெருமுனையில் வந்து கொண்டே இருக்கிறாள்
காற்றில் பறக்கும் கேசங்களை கைகொண்டு சரி செய்த படி....

அவள் நெருங்க நெருங்க ஏன் என் இதய துடிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இப்போது கேள்வி என்று கொண்டாலும் அதற்கு பின்னால் காதல் என்ற ஒன்று ஒளிந்து இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவளைக் கண்டும் காணமலும் நான் நின்றூ கொண்டிருக்கிறேன்....

அட இவள் கை வீசி நடந்து வருகிறாளா..இல்லை காற்றிலே ஓவியம் செய்கிறாளா? மீண்டும் ஒரு குழப்பக்குளத்தில் நான் விழுந்து நீந்திக் கொண்டிருந்த வேளையில் பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தே விட்டாள் அவள்.

மொத்த ஆக்ஸிஜனும் அவளை மொய்த்துகொண்டு அவளின் சுவாசத்திற்கு உதவிக்கொண்டுதான் இருக்க வேண்டும்....ஆமாம் இல்லையென்றால் எனக்கு ஏன் மூச்சு முட்டுகிறது...தொண்டை அடக்கிறது.

தூரத்தில் வந்த அவளை ஓரளவு பார்க்க தைரியமாயிருந்த கண்கள் பக்கத்தில் வந்தவுடன் அமெரிக்காவிற்கு பயந்து ஒளிந்த ஒசாமாவாய்.... அந்த பக்கம் திரும்பவே இல்லை...ஆமாம் கண்களைபார்த்தால் கண்டு பிடித்து விடுவாள் நான் காதல் திருடன் என்று...

சில நேரம் இந்த நகரப்பேருந்தின் மீது எனக்கு வரும் கோபம் ஆயிரம் சுனாமிக்கு சமம்...! ஊரில் உள்ள எல்லா இளைஞர்களும் அவளுக்கு காத்திருக்க அவளை காக்க வைக்கும் பேருந்துக்கு எவ்வளவு திமிர் இருக்கும்....அவள் கையிலிருக்கும் கடிகாரத்தை பார்க்கும் போது எல்லாம் அவளுக்கே தெரியாமல் அவளை பார்த்தேன்...அந்த கடிகாரமாயிருந்தால் கூடி அடிக்கடி என்னை பார்ப்பாளே என்று நினைத்துக் கொண்டிருந்த சமயம் அந்த திமிர் பிடித்த பேருந்து ஊரையே கூட்டிக் கொண்டு மதயானையைப் போல பிளிறிக் கொண்டு அவளை காக்க வைத்த மமதையில் உறுமிக் கொண்டு நின்றது.

அவள் பாதங்களை சுமக்க வாய்ப்பு கிடைத்த பேருந்தின் படிக்கட்டுக்கள் என் பாதங்களை வெறுப்பாய் தாங்கி என்னையும் வேண்டா வெறுப்பாய் உள்ளே திணித்துக் கொண்ட கடுப்பில் கியர் மாறி சீறியது பேருந்து....!

அவள் நின்று கொண்டிருந்தாள்...இவள் அமரவில்லையென்று எல்லா இருக்கைகளும் சுமைதாங்கிகளாய் வேறு மனிதர்களை தாங்கி அழுது கொண்டிருந்தன.... நானோ....அவளின் உடைகளுக்குள் புகுந்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த காற்றினை கண்களால் எரித்துக் கொண்டிருந்தேன்...

"எம்மா எங்க போகணும்?" அவளிடம் டிக்கட் கேட்க எவ்வளவு துணிச்சல் இருக்கும் இந்த கண்டக்டருக்கு.... பெட்ரோல் எடுத்து வந்து பேருந்தை கொளுத்த எனக்குள் இருந்த தீவிரவாதி உத்தவரவு இட...அதே நேரத்தில் உள்ளே இருந்த வேறு ஒரு அஹிம்சாவாதி அதை அடக்க... இரண்டும் சேர்ந்து பயம் என்ற உணர்வைக் கொடுக்க...கண்டக்டரை ஒரு கேவல பார்வை பார்த்துவிட்டு... என் தேவதை பயணம் செய்ய அவளுக்கு அல்லவா நீங்கள் தட்சணை கொடுக்க வேண்டும்...! ஏ உலகமே அழகை நீ எப்போது ஆராதிக்கப் போகிறாய்......?

மனிதர்களுடம் கேளுங்கள்...
பயணத்திற்கான கட்டணத்தை...
தேவதைகளை ஆராதியுங்கள்...!

கவிதை ஒன்று சட்டென்று மனதிற்குள் தோன்றி மறைந்த அதே வேளையில்... அவளின் கடைக் கண்ணால் என்னைப் பார்த்தாள்.. நான் பார்வையின் வீச்சில் பற்றி எரிந்து கொண்டிருந்தேன்....! போதும் போதும் கடைக்கண் பார்வையே போதும் நீ முழுதாய் பார்த்தால் நான் பஸ்பமாகி விடுவேன்... என்று நினைத்து கொண்டிருந்த போதே... கண்டக்டரின் லாங்க் விசிலுக்கு பேருந்து அடிபணிந்து நின்றது....

அட...என்ன இது என் தேவதை இங்கே இறங்குகிறாள்....! இது க்யூன் மேரீஸ் காலேஜ் என்று என் கேள்விக்கு அருகில் நின்றவர் பதில் சொல்லி முடிக்கும் முன் தேவதை படிகளை கடந்து கீழே இறங்கி மீண்டும் காற்றில் மிதக்க ஆரம்பிக்க.. நானும் இதோ இறங்க..போக............அட யார் இவர்கள் என்னை இறங்க விடாமல் மேல தள்ளுவது.. 4 பேர் என்னை மறித்து ...டிக்கட் எங்க எடு என்றார்கள்.....



கொஞ்சம் பிரெக் விட்டுக்கோங்க.. எல்லோரும்....

இது வரைக்கும் கவிதை நடையா வந்துச்சுல்ல மக்கா...இப்போ பாருங்க.. என்ன நடக்குதுன்னு………...

ஹலோ யாருங்க நீங்க....? கேள்விக்கு பதிலாய்.. நாங்க தான் செக்கிங்க் இன்ஸ்பெக்டர்....எங்க போறீங்க நீங்கனு கூட்டத்தில் ஒருவர் கேட்டர்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அடையாறுங்க.. என்று சொன்னேன்..எங்க ஏறுன.. மீண்டும் கேள்வி! ஸ்டெர்லிங்க் ரோடு பக்கம்...என்று மெதுவாய் சொன்னென்...!

எல்லாம் சரிதான் தம்பி.. அதுக்கு இன்னாத்துக்கு....பாரிஸ் போற பஸ்ல ஏறினே....? செக்கிங்க் இன்ஸ்பெக்டரின் கேள்வியில் அதிர்ந்து போன நான்.. என்னது இந்த பஸ் அடையாறு போகலையாயாயா... ?????!!!!! சத்தமாய் கேட்டதை செக்கிங்க் இன்ஸ்பெக்டரின் பார்வை வால்யூமை குறைக்க வைத்தது...! திக்கித் திணறி...சார்... அவ... அந்த பொண்ணு ....அவ.. தேவதை..சத்தியமாய் உளறினேன்...


" ஹூ இஸ் செல்லாத்தா................" அப்டீன்ற ரேஞ்சுக்கு யாருய்யா தேவதை.....னு

செவுள்ள அறையிற மாதிரி சத்தம் கொடுத்தார் செக்கிங்கு....சரி சரி டிக்கட்ட எடுன்னு சொன்னாரு....! நாம எங்க டிக்கட் எடுத்தோம்...சரின்னு டிக்கட்டுக்குதான இவ்ளோ பில்டப்பு.. திமிரா பர்ஸ்ல இருந்து 10 ரூபாய் எடுத்து கொடுத்தேன்... ஒரு டிக்கட் கொடுங்க சார்னு சொன்னேன்...!

தம்பி..முன்னாடியே எடுத்திருந்த ஒரு டிக்கட்டு.. இப்படி சாகவாசமா எடுத்தா... 200 அப்டின்னு படபடன்னு சீட்டெழுதி கையில கொடுத்துட்டு காச எடுன்னு சொன்னதும்..தான் அட இது நிஜமாவே சீரியசா போகுதுன்னு...சுத்தி முத்தி பாத்தா எல்லோரும் என்னயவே பாக்குறானுவ...

அதுவும் கூட்டத்துல ஒருத்தர் " அவன அப்ப புடிச்சே பாத்துகிட்டுதான் சார் இருந்தேன்.. லூசு மாதிரி.. நின்னுகிட்டு ஏதேதோ பேசி சிரிச்சுகிட்டு இருந்தான்..." என் காதுல விழுகுற மாதிரியே சொன்னாரு.. அந்த அறிஞர்! 200 ரூபாய செக்கிங்கு கையில கொடுத்துப்புட்டு வேக வேகமா கீழ இறங்கிட்டேன்......

என் காலக்கிரகமா இது.. உச்சி வெயிலு மண்டைய பொளக்குது... அடையாறு போறவன் பீச்சோரமா அனல்ல காஞ்சு கிட்டு இருக்கேன்....ஏற்கனவே ஆபீசுல இருந்து போன் மேல போனு ....! இன்னிக்கு முக்கியமான அசைன்மெண்ட் சப்மிட் வேற பண்ணனும்... நல்லா இருக்கு பாட்டு.... போனதும்

ங்கொய்யாலா..கவித...பாட்டு... காதல்...

எனக்கு வேணும்! எனக்கு வேணும்...! அவ… பாட்டுக்கு வந்தா.. நின்னா போயே போய்ட்டா…!

இப்ப கையில் இருந்த காசும் போச்சு ...கத்தி கத்தி குரலும் போச்சு....சொக்கா.......சொக்கா....!

எனக்கு வேணும் எனக்கு வேணும்.... கொஞ்சம் சத்தமாவே புலம்பிட்டன் போல சார்.. கையில் இருக்க பத்து பைசாவ ஒரு நாதாறி போட்டுட்டு போகுது.. எல்லாம் தலை எழுத்து...

நீங்க ஏன் சார் என் கூட வெயில்ல நின்னுகிட்டு..போய் மத்த வேலைய பாருங்க....... நான் ஏதாச்சும் பஸ் புடிச்சி போயிக்கிறேன்...ஒரே ஒரு விசயம் சொல்லிக்கிறேன்....

" கவிதை கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்கதீங்க.. சார்.....அடி பயங்கரமா விழும்...."


பஸ் வந்துருச்சு சார் அப்போ...வர்ர்ர்ட்ட்டாடாடா!


தேவா. S

Comments

எங்கே, இப்பல்லாம் திரும்பின இடமெல்லாம் கவிதைமயமா இருக்கு!:-)
//அவளிடம் டிக்கட் கேட்க எவ்வளவு துணிச்சல் இருக்கும் இந்த கண்டக்டருக்கு.... பெட்ரோல் எடுத்து வந்து பேருந்தை கொளுத்த எனக்குள் இருந்த தீவிரவாதி உத்தவரவு இட...அதே நேரத்தில் உள்ளே இருந்த வேறு ஒரு அஹிம்சாவாதி அதை அடக்க... இரண்டும் சேர்ந்து பயம் //

அந்நியன் ஸ்டைல் ல பேச வேண்டியது தானே ............தீவிரவாதி மாதிரி ஒரு பேச்சு அப்புறம் அஹிம்சாவாதி
மாதிரி ஒரு பேச்சு
அவன அப்ப புடிச்சே பாத்துகிட்டுதான் சார் இருந்தேன்.. லூசு மாதிரி.. நின்னுகிட்டு ஏதேதோ பேசி சிரிச்சுகிட்டு இருந்தான்..." /////

விடுங்க தேவ சார் , அந்த பன்னாட பரதேசிகளுக்கு நம்ம யூத்தோட பீல்லினக்ச பத்தி என்ன தெரியும் ......
அப்போ நீங்க வித் அவுட் அ
Kousalya Raj said…
அழகான லவ் ஸ்டோரி என்று படிச்சிட்டு வந்தா இன்டர்வெல் போடாம கதை திசை மாறி போய்விட்டது....

என்னவோ தேவா இன்று எங்க போனாலும் சிரிச்சிட்டே இருக்கிறேன்...!! உங்க போஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்குமே என்று நம்பி வந்தேன்....??!!!

இப்ப சிரிச்சிட்டே இருக்கேன்...

:)))
Kousalya Raj said…
//" கவிதை கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்கதீங்க.. சார்.....அடி பயங்கரமா விழும்...."//

உண்மைதான்...யதார்த்தம் புரியும் போதுதான் அடிபட்டத்தின் வலியே தெரியும். எளிய நடையில் உணர்த்திட்டீங்க....நன்றி.
டிக்கெட்லே 2009 இருக்கு கல்யாணம் ஆகி எத்தனை வரும் ஆச்சி? ஆனா இதுலே 2009னு இருக்கு சென்னை வந்தா இதே வேலை தானா?
கண்களைபார்த்தால் கண்டு பிடித்து விடுவாள் நான் காதல் திருடன் என்று...///

அதுக்கு தான் கண்ணாடி போட்டு இருக்கீங்களா?
VELU.G said…
பாஸ் எப்ப நடந்தது இந்த சம்பவம்

சொல்லவே இல்ல

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா


அருமை
///கொஞ்சம் பிரெக் விட்டுக்கோங்க.. எல்லோரும்....
இது வரைக்கும் கவிதை நடையா வந்துச்சுல்ல மக்கா...இப்போ பாருங்க.. என்ன நடக்குதுன்னு………...///

***இப்புடு சூடு......அப்டியா?? :-))
சொல்லுங்க சொல்லுங்க சீக்கிரம் சொல்லுங்க... (ஹையா... நா நினச்சது நடக்குதா பார்ப்போம்) :-))

///எல்லாம் சரிதான் தம்பி.. அதுக்கு இன்னாத்துக்கு....பாரிஸ் போற பஸ்ல ஏறினே....? ///

****ஹா ஹா ஹா...
சூப்பர்...கண்ணா சூப்பர்.. :-))


///" ஹூ இஸ் செல்லாத்தா................" அப்டீன்ற ரேஞ்சுக்கு யாருய்யா தேவதை.....னு//

****இது இது சூப்பர்.. எல்ல்லாம்.. இந்திரன்.. எப்பெக்ட் போல இருக்கு.. :-)))


///எனக்கு வேணும் எனக்கு வேணும்.... கொஞ்சம் சத்தமாவே புலம்பிட்டன் போல சார்.. கையில் இருக்க பத்து பைசாவ ஒரு நாதாறி போட்டுட்டு போகுது.. எல்லாம் தலை எழுத்து...///

***ஹா ஹா ஹா.... முடியல தேவா... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-)))


//" கவிதை கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்கதீங்க.. சார்.....அடி பயங்கரமா விழும்...."///

****பதிவெல்லாம் விட, இந்த தத்துவம் தாங்க அருமை..
"எந்தா ஒரு ஞானம்......!!"
தேவா... மொத்த பதிவும் கலக்கல்..!!
"எம்மா எங்க போகணும்?" அவளிடம் டிக்கட் கேட்க எவ்வளவு துணிச்சல் இருக்கும் இந்த கண்டக்டருக்கு.... பெட்ரோல் எடுத்து வந்து பேருந்தை கொளுத்த எனக்குள் இருந்த தீவிரவாதி உத்தவரவு இட.////

உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்கள் இவரை
//டிக்கெட்லே 2009 இருக்கு கல்யாணம் ஆகி எத்தனை வரும் ஆச்சி? ஆனா இதுலே 2009னு இருக்கு சென்னை வந்தா இதே வேலை தானா//

பய புள்ள எப்படி எல்லாம் கண்டு புடிக்குது .........
வீட்டுல சோறு தண்ணி இல்லாம ஆக்கி புத்த மக்கா..................
மங்குனி அமைசர் said...
அவன அப்ப புடிச்சே பாத்துகிட்டுதான் சார் இருந்தேன்.. லூசு மாதிரி.. நின்னுகிட்டு ஏதேதோ பேசி சிரிச்சுகிட்டு இருந்தான்..." /////

விடுங்க தேவ சார் , அந்த பன்னாட பரதேசிகளுக்கு நம்ம யூத்தோட பீல்லினக்ச பத்தி என்ன தெரியும்/////

@@@ மங்குனி அமைசர்
அடாடா உங்களை எல்லாம் யார் யூத் என்று சொன்னது
Unknown said…
:) :) :) இதே மாதிரி தாண்ணே தண்ணி லாரியில தண்ணியப் பிடிச்சிட்டு இருக்குறப்போ கவிதை கண்கள் எட்டிப்பாக்க குடம் ரெண்டையும் கீழ போட்டதுதான் மிச்சம்.
dheva said…
//அந்நியன் ஸ்டைல் ல பேச வேண்டியது தானே ............தீவிரவாதி மாதிரி ஒரு பேச்சு அப்புறம் அஹிம்சாவாதி
மாதிரி ஒரு பேச்சு///

இம்சை..@ ஏற்கனவே பைத்தியகாரன் ஆயாச்சு அதுல இப்டி வேறயா!
dheva said…
//விடுங்க தேவ சார் , அந்த பன்னாட பரதேசிகளுக்கு நம்ம யூத்தோட பீல்லினக்ச பத்தி என்ன தெரியும் ...... //

மங்குனி..@ உனக்குதாம்பா புரியுது நம்ம ஃபீலு...!
dheva said…
கெளசல்யா....@ இன்னுமா சிரிச்சுட்டு இருக்கீங்க....அச்சசோ....!
dheva said…
வேலு...@ சும்மமா... பாஸ் நாம ஏன் பாஸ் பொண்ணுங்க பின்னால போகப்போறோம்.....ஹா..ஹா..ஹா..!
dheva said…
//அடாடா உங்களை எல்லாம் யார் யூத் என்று சொன்னது //

செளந்தர்.. @ நீதான் யூத்..... நாங்க எல்லாம் இந்தியன் தாத்தா...தம்பி...!
dheva said…
சமீரு..@ நீ இப்பவும் அப்படிதானடா இருக்க
dheva said…
ஆனந்தி..@ தத்துவத்த புரிஞ்சுகிட்டீங்களே....பெரிய விசயம்ங்க.... (எந்திரன் எபக்ட் இன்னும் போகலியா?)
dheva said…
எஸ். கே.@ நான் எங்க கவிதை எழுதினேன்....???? ஹா..ஹா..ஹா..!
////ஆனந்தி..@ தத்துவத்த புரிஞ்சுகிட்டீங்களே....பெரிய விசயம்ங்க.... (எந்திரன் எபக்ட் இன்னும் போகலியா?) ////

எஸ் எஸ்... நல்லவே புரிஞ்சிக்கிட்டேன் தேவா..
புரிய வச்சதுக்கு நன்றிங்கோ :-)))
மனிதர்களுடம் கேளுங்கள்...
பயணத்திற்கான கட்டணத்தை...
தேவதைகளை ஆராதியுங்கள்...!///


அருமை... அருமை...
@தேவா
கவிதையாய் தொடங்கி காதலில் கசிந்து , திட்டு வாங்கி , இறுதியில் தத்துவமாய் முடித்துவிட்டீர்கள் நல்லது
@தேவா

//காற்றில் பறக்கும் கேசங்களை கைகொண்டு சரி செய்த படி....//

நாங்க எல்லாம் வாடகைக்கு ஆள் வச்சா சரி பன்றோம்?
@தேவா

//மீண்டும் ஒரு குழப்பக்குளத்தில் நான் விழுந்து நீந்திக் கொண்டிருந்த வேளையில் //

பயபுள்ள காலைல குளிக்காம வந்து இருக்கும் போல.. இங்க வந்து நீந்திகிட்டு...
//ஆமாம் இல்லையென்றால் எனக்கு ஏன் மூச்சு முட்டுகிறது...தொண்டை அடக்கிறது.

இளைஞர்களும் அவளுக்கு காத்திருக்க அவளை காக்க வைக்கும் பேருந்துக்கு எவ்வளவு திமிர் இருக்கும்

மதயானையைப் போல பிளிறிக் கொண்டு அவளை காக்க வைத்த மமதையில் உறுமிக் கொண்டு நின்றது.//

உனக்கு மட்டும் எப்படி மாப்ஸ் இப்படி டிசைன் டிசைனா தோனுது அப்படினு கேக்கனு போல தான் தோனுது இருந்தாலும் வேற யாராவது கேக்கட்டு சொல்லி நான் கேக்கல.
@தேவா

//யார் இவர்கள் என்னை இறங்க விடாமல் மேல தள்ளுவது.. 4 பேர் என்னை மறித்து//

யார்பா அது?? எப்பொ பாரு மாப்ஸ் நடக்கற வழில குறுக்க நிக்கறதே வேலை.

(கொஞ்சம் இறங்கி புரியர மாதிரி எழுத விடாம தடுக்கறது அப்படினு இதுல உள்குத்து எதும் இல்லை)

(மாப்பு குத்து மதிப்பா கொளுத்தி போட்டேன்... யாருகிட்டையாது போய் அடி வாங்கு... :)))
///உனக்கு மட்டும் எப்படி மாப்ஸ் இப்படி டிசைன் டிசைனா தோனுது அப்படினு கேக்கனு போல தான் தோனுது இருந்தாலும் வேற யாராவது கேக்கட்டு சொல்லி நான் கேக்கல. ///

ஹா ஹா ஹா...
நல்ல கருத்துள்ள கேள்வி..
தேவா... பதில் ப்ளீஸ்...:-))
Anonymous said…
இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பூக்களை http://www.sinhacity.com இல் காணுங்கள்
@தேவா

//" கவிதை கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்கதீங்க.. சார்.....அடி பயங்கரமா விழும்...."//

மாப்ஸ் நீ கவிதா மேல கண்ணோடு யார் வீட்டு பாஸ்லயோ பயணம் பண்ணிட்டு எங்க மேல தப்பு சொல்லிட்டு......
Ananthi said...

ஹா ஹா ஹா...
நல்ல கருத்துள்ள கேள்வி..
தேவா... பதில் ப்ளீஸ்...:-)///

@@@Ananthi
ஹலோ இன்னும் நான் கேட்ட கேள்விக்கே பதில் வரலை அதுக்குள்ள என்ன அவசரம்
vinthaimanithan said…
ரொம்ப பேரு இப்பிடித்தான் பொண்ணுங்க பின்னாடி தவங்கெடந்து போக வேண்டிய பாதைய விட்டுட்டு பொறவு லபோதிபோன்னு கத்திட்டு இருக்கானுங்க! அவளுங்க பாட்டுக்கு தெள்ள்ள்ள்ள்ள்ளிவா போயிட்டே இருக்காளுவ!
சார் கவிதை நல்ல இருக்கு!!
நீங்க எப்போதும் கவிதை தானே எழுதுவீங்க இப்ப ஏன் ?
அந்த டிக்கட்?? வேலிடிட்டி இல்லையே!!
sakthi said…
ட்விஸ்ட் கடைசில நல்லாயிருந்தது தேவ்
//nan potta comment enga dheva //

kaaka thookindu poi irukkumo????
கலக்கல் நல்ல ட்விஸ்ட் ...
" கவிதை கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்கதீங்க.. சார்.....அடி பயங்கரமா விழும்...."

தேவா... மொத்த பதிவும் கலக்கல்..!!
ஹேமா said…
தேவா...தொடங்கிய விதமும் முடித்த விதமும் உங்கள் பாணியில் அருமை.
சும்மா நச்-னு இருக்கு மாப்ஸ்...

ஆனா, இப்பிடியெல்லாம் நீ இருந்தும் உன்னைய வீட்ல வச்சு நல்லா கவனுசுக்கிற தங்கச்சிக்கு, நீ கோடி கும்பிடு போடணும்டா. ஹஹாஹா
Chitra said…
" கவிதை கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்கதீங்க.. சார்.....அடி பயங்கரமா விழும்...."


...... ஹா,ஹா,ஹா,ஹா..... தேவா..... கதையும் கருத்தும் நல்லா இருக்குதுப்பா..... dot.
அப்பாடி நான் இண்டர்வல்-க்கு அப்புறம் படிக்கலை.... முதல் பதில தேவதையோடவே போய்கிறேன்... நீங்க அடி வாங்கிட்டு வந்து சேருங்க
///அட இவள் கை வீசி நடந்து வருகிறாளா..இல்லை காற்றிலே ஓவியம் செய்கிறாளா? //
ஆஹா , இதைத்தான் ஒரு பாட்டுல சொல்லுவாங்க .
" பூவிலாடும் பட்டாம் பூச்சி கூட நீ நடந்து கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி ..!!
///மொத்த ஆக்ஸிஜனும் அவளை மொய்த்துகொண்டு அவளின் சுவாசத்திற்கு உதவிக்கொண்டுதான் இருக்க வேண்டும்....ஆமாம் இல்லையென்றால் எனக்கு ஏன் மூச்சு முட்டுகிறது...தொண்டை அடக்கிறது.//

செம கற்பனை அண்ணா ..!!
//அந்த திமிர் பிடித்த பேருந்து ஊரையே கூட்டிக் கொண்டு மதயானையைப் போல பிளிறிக் கொண்டு அவளை காக்க வைத்த மமதையில் உறுமிக் கொண்டு நின்றது.//

ஹய்யோ , இப்படி கூட வர்ணிக்க முடியுமா .?
///அவள் நின்று கொண்டிருந்தாள்...இவள் அமரவில்லையென்று எல்லா இருக்கைகளும் சுமைதாங்கிகளாய் வேறு மனிதர்களை தாங்கி அழுது கொண்டிருந்தன.... நானோ....அவளின் உடைகளுக்குள் புகுந்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த காற்றினை கண்களால் எரித்துக் கொண்டிருந்தேன்...//

உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணா இப்படி எல்லாம் வருது ..!!
இது கவிதை மாதிரியே இருக்கு , எனக்கு என்ன சொல்லுறது அப்படின்னே தெரியல ..!!
//" கவிதை கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்கதீங்க.. சார்.....அடி பயங்கரமா விழும்...."
//

அட அட . saththiyama enakkum intha maahtiri ஒரு mudivuthaan pidikkum அண்ணா .. kaaranam ennannaa ithuthaane perumpaalum unmayaa இருக்கு ..!!
(google translator velai seiya maatenkuthu )
ஒருநாள் விருப்ப பயணசீட்டு//

அப்ப விருப்பம் இல்லைனா என்ன சீட்டு கொடுப்பாங்க?
Anonymous said…
கவிதையா ஆரம்பிச்சு.. எதார்த்தத்துல நுழைஞ்சு.. பதார்த்தமா தத்துவம் சொல்லிட்டுப் போய்டீங்க அண்ணா!
செம..
க ரா said…
டிக்கெட்டுன்னு அழகா தமிழ்ல பெயர் வச்சிட்டு அது இன்னா பயனசீட்டு .. ஏன் இப்படி :)
க ரா said…
கவிதையா ஆரம்பிச்சு.. எதார்த்தத்துல நுழைஞ்சு.. பதார்த்தமா தத்துவம் சொல்லிட்டுப் போய்டீங்க அண்ணா!
செம..
---
இப்படி ஏத்தி விடறதுக்குண்ணே ஒரு குருப் அலயுது.. பார்த்து சூதனமா நடந்துக்குங்க.. அம்முட்டுதான் சொல்லிபுட்டேன் :)
வணக்கம்

ரொம்ப நல்லாயிருக்கு சார்.........

உங்கள் கவிதை + கவிதா கதா
Unknown said…
நல்லா இருக்குங்க....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கவிதை + காதல் = உண்மை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.
Unknown said…
கதை சூப்பர்..
Unknown said…
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னப்பா.........பேருந்து நிறுத்தமும் உங்க கூட சேர்ந்து அவளுக்காக காத்திருந்ததா சொல்லி,

பேருந்து நிறுத்தத்தையும் ஜொள்ளு விட வச்சிட்டீங்களே.....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த