
முன்பெல்லாம் நிறைய பேசிக் கொண்டிருப்பேன்,இப்போது எல்லாம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.பேச்சின் ஒலி வடிவம் இப்போது வரி வடிவமாயிருக்கிறது.
சரி எதற்கு எழுத வேண்டும்? எழுத்தின் மூலம் எங்கே செல்கிறது பயணம்? எழுத்தின் மூலம் எழுத்தில்லாத இடத்திற்கு....! ஆமாம்..எழுதி எழுதி எல்லாம் மறக்கவேண்டும். அன்றாட வாழ்க்கை ஏற்றி வைக்கும் சுமைகளே டன் டன்னாக இருக்கும் அதே நேரத்தில் அறிந்து கொண்டது அதற்கு மேல் சுமையாயிருக்கிறது.
லோடு வண்டியில் இருந்து ஒவ்வொன்றாய் இறக்கி வைத்து விட்டு கடைசியில் வண்டியையும் சேர்த்து அழித்து விட்டு எதுவுமற்றுப் போகவேண்டும். இதுதான் இலக்கு என்றாலும் விருப்பபடாமல் நிறைய சேர்த்து வைத்துக் கொண்டு விட்டதாக படுகிறது.
நான் வாழும் வாழ்க்கை நான் விரும்பி வாழ்வதா இல்லை திணிக்கப்பட்டதா என்று பார்க்கும் போது பெரும்பாலும் திணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதாகவே எனக்குப் படுகிறது. சமூகம் சார்ந்த ஒரு வாழ்வியல் அமைப்பில் பெருமபாலும் அடுத்தவர்களுக்காக சந்தோசப்பட்டு அடுத்தவர்களுக்காக கோபப்பட்டு என்று பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே படுகிறது.
எந்த செயல் நடந்தாலும் அல்லது நம்மிடம் சொல்லப்படும் எல்லா கருத்துக்களும் சரி என்றோ தப்பு என்றோ ஒரு பதில் சொல்லி ஆகவேண்டியிருக்கிறது. இதிலிருந்து கொஞ்சம் நகர்ந்து நீங்கள் சொன்னதை நான் முழு மனதோடு கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டேன். மிக்க நன்றி ஆனால் எனக்கு கருத்து சொல்ல இதில் ஒன்றும் இல்லை ஆனால் கவனித்துக் கொண்டேன் என்று ஒரு நண்பரிடம் அவர் கூறிய ஒரு காசிஃப் (வம்பு) பற்றி நான் கூறிய போது, நண்பருக்கு கோபம் வந்தது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது.
இது என்ன ஒளிந்து கொள்ளும் முயற்சி? செய்தியை கேட்ட நீங்கள் இது சரி அல்லது தப்பு என்று கூட பதில் சொல்ல திரணியற்றவரா? என்று எனக்குள் நான் பாதுகாப்பாய் தேவைப்பட்டால் முக்கியமான விசயங்களுக்கு உபோயோகம் செய்யலாம் என்று வைத்திருந்த கோபத்தை எடுக்குமாறு மறைமுகமாக தூண்டினார்.
எனக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் சொன்னேன் இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை தயவு செய்து என்னிடம் எதுவும் திணிக்காதீர்கள் என்று....அவர் அடுத்த மனிதரிடம் போய் என்னை லூசு என்று சொல்லியிருப்பார்..அது பற்றியும் எனக்கு கவலை இல்லை....ஏனென்றால் அதுவும் அவரின் கருத்துதானே...
நான் என்னை மாதிரி இருப்பதுதானே அழகு? எனக்கு எதற்கு வேறு முகங்கள்?
எட்டாவது படிக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது. எங்க தெருவில் இருக்கும் பசங்க எல்லாம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவோம்...அப்போது பக்கத்து தெருவில் இருந்த டீமோடு மோதியதில் அவர்கள் ஜெயித்து விட்டார்கள். விளையாட்டு முடிவில் சண்டை வந்து விட்டது. நல்ல வாக்குவாதம் நானும் எதிரணிக்கு எதிராக அம்பயர் அவுட் கொடுத்தது தப்பு என்று வாதிட்டு விட்டு வந்து விட்டேன்.
என்னைப் பொறுத்த அளவில் அந்த பிரச்சினை அந்த மைதானத்தை விட்டு வெளியே வரும்போதே முடிந்து விட்டது ஆனால் எனது நண்பர்கள் எப்போதும் இதைப் பற்றியே பேசுவதும் சதித்திட்டங்கள் தீட்டுவதும், எங்களை தோற்கடித்த அணியில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றி தவறாக பேசுவதும் என்று தினமும் புகைய வைத்துக் கொண்டிருந்தனர். எனக்கு பிடிக்காததால் நான் விளையாடப் போவதையே குறைத்துக் கொண்டேன்.
விடுமுறை தினங்களில் அம்மா கண்டிப்பாய் மதியம் என்னை உறங்க சொல்வார்கள். அப்படி உறங்கி ஒரு 4 மணி மாலைக்கு எழும்போது ஒரு வித மெல்லிய சோகம் போன்ற உணர்வு இருக்கும் மனதில். நான் வெறுமனே வீட்டு வாசப்படியில் போய் அமர்ந்து கொண்டு அந்த உணர்வினை என்னவென்றே சொல்லவும், புரிந்து கொள்ளவும் முடியாமல் அனுபவித்துக் கொண்டு இருப்பேன்.
மாலை வெயில் தணியும் நேரத்தில் ஆனந்தமாய் இருக்கும் அந்த உணர்வு வெளியில் இருக்கும் எதுவோடும் தொடர்பு இல்லாமல் வெறுமையாய் ஒரு ஆராதனை நடத்திக் கொண்டு இருக்கும்.
எதுவுமே கேட்கப் பிடிக்காமல், பேசப் பிடிக்காமல் அதை அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் நண்பர்கள் ஊர் வம்பை பேசுவதற்கு என்னை வலுக்கட்டாயமாக இழுப்பார்கள். அவர்கள் இப்படி பேசுவதில் வசதியாய் பழகிப் போய்விட்டார்கள் மேலும் இப்படி அடுத்தவர் பற்றி குற்றம் குறை கண்டு பேசுவதில் தன்னை நல்லவன் என்று காட்டும் முயற்சிதான் இருக்கிறது.
நான் நல்லவன் என்று காட்ட ஏன் ஊரில் இருப்பவன் எல்லாம் அயோக்கியனாக இருக்கவேண்டும்? நான் மட்டும் நல்ல செயல்கள் செய்தால் போதாதா? என்று கேள்வி எனக்குள் எப்போதும் அலை மோதும். தேவையான விசயங்களை பேசுவதில் தவறு இல்லை. சம்பந்தமே இல்லாத மனிதர்களைப் பற்றி பேசுவதும் பொறாமை கொள்வது.. இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ..... எனக்கான செயல் அல்ல அது....!
எனக்குப் பிடித்த படம், எனக்குப் பிடித்த பாடல், எனது கவிதை எனது தேடல், எனது பக்தி, எனது காதல் எல்லாம் அடுத்தவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று எந்த தேவையும் அவசியமும் இல்லை ஆனல் சக மானுடரை அது பெரும்பாலும் துன்புறுத்தாமலும் பாதிக்காமலும் இருந்தாலும் சரிதன்.
எனது வலைப்பக்கம் கூட அப்படித்தான்... சந்தோசத்திற்காக செல்லும் ஒரு பூங்கா போல.. ஒரு கடற்கரை போல, ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம் போல, வலைப்பக்கத்தை விட்டு வெளியேறும் போது ஒரு சுகமான அனுபவத்திற்கும், சில நேரங்களில் சிந்தனையை தூண்டும் படியும் இருக்கும் படியாக கவனமாக பார்த்துக் கொள்கிறேன்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு கோடி ரூபாய் கொடுக்க முடியாது. வாழ்வியல் முறை அதற்கு உதவாது.........ஆனால் ஆனந்தத்தையும், திருப்தியையும்.. நேர்மறையான அதிர்வுகளையும் கண்டிப்பாய் கொடுக்கமுடியும். இட்ஸ் நாட் காஸ்டிங் எனிதிங்.......
விருப்பப்பட்ட வாழ்க்கை வாழும் அதே நேரத்தில் அது அடுத்த மனிதருக்கும், சமுதயத்திற்கும் அதனால் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளல் நலம்.
சரிங்க நான் வர்றேன்... என் வீட்டுத் தோட்டத்தில் நிறைய ரோஜாப்பூக்கள் பூத்திருக்கின்றன...அவைகளோடு கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது...!
அப்போ வர்ர்ர்ர்ட்டா!
தேவா. S
Comments
நீங்க அவ்ளோ அழகா? சொல்லவே இல்லை..
//
எட்டாவது படிக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது.//
ஓ எட்டு வரைக்கும் படிச்சிருக்கேன்களா?
//சரிங்க நான் வர்றேன்... என் வீட்டுத் தோட்டத்தில் நிறைய ரோஜாப்பூக்கள் பூத்திருக்கின்றன...அவைகளோடு கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது...!//
லூசா மாப்ஸ் நீ- டெரர்
உண்மை. இந்த உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்.
வள்ளல் அண்ணன் தேவா வாழ்க!
//விருப்பப்பட்ட வாழ்க்கை வாழும் அதே நேரத்தில் அது அடுத்த மனிதருக்கும், சமுதயத்திற்கும் அதனால் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளல் நலம்//
முயற்சி பண்ணுறேன் அண்ணே! :)
பேசுங்க பேசுங்க நல்லா பேசுங்க.....
ஆமாம் அண்ணா ., அதனாலதான் நானும் மொக்கை போடுறேன் . உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்னா நீங்க எல்லாம் தெரிஞ்சிட்டு மறக்கணும்னு நினைக்குறீங்க ., நான் எதுவுமே தெரியாம மறக்கணும்னு நினைக்கிறேன் .. ஹி ஹி ஹி ..
இந்த பிரச்சினை உங்களுக்கு அப்ப இருந்து இருக்குதா ..?
தண்ணி ஊத்தி வச்சிருக்கீங்களா ..? எதுக்கும் நான் நல்லா பாத்துக்கறேன் .. என் கம்பூட்டர் ஏதாவது ஆகிட போகுது ..
சிரிப்பு போலிஸ் @ எவ்ளோ நாள் ஆசைடா தம்பி உனக்கு??????
செல்வா @ இது பிரச்சனையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு பிடித்த வரிகள் .தேவா அண்ணா...
இப்படியே கடைசி வரைக்கும் புரியுற மாதிரி எழுதுங்கள்
மலையேறிப் போனாலும் மச்சினன் உதவி வேணும்லயா...சரி...பாக்கலாம்னு சொல்லியிருக்கேன்...!
இப்போ வருவான் பாரு அவுத்து விட்ட காளை மாடு மாதிரி...!
என்ன ஒரு வில்லதனம்.........நீங்க மட்டும் ஹீரோ ......நான்,terror ,ரமேஷ் ,சௌந்தர் ,செல்வா ,மங்குனி எல்லோரும் இங்க வாங்கப்பா நம்ம எல்லோரும் வில்லன் ஆக வேண்டுமாம் ...............
இது எல்லாம் எங்களுக்கு சாதாரணம்
அது யாருங்க ..?
உங்க சந்தோசத்துக்கு வலை பக்கத்துல வரீங்க ......ஆனா புரியாத மாதிரி எழுதி எங்கள குழப்பி விட்டுறீங்க
//மலையேறிப் போனாலும் மச்சினன் உதவி வேணும்லயா...சரி...பாக்கலாம்னு சொல்லியிருக்கேன்...!//
மாப்பு மலை எல்லாம் ஏற வேனாம்.. மொதல்ல ஆபிஸ் படி ஏறு... ரோடு கண்ட இடம் நின்னு பிகர் பாக்காத.... :)
(வந்து பதிவு படிக்கிறேன்..)
என்னது நம்ம சங்கத்து ஆள அடிச்சிட்டாங்களா ..?
//இப்போ வருவான் பாரு அவுத்து விட்ட காளை மாடு மாதிரி...!//
சொல்றது தான் சொல்ற ஒரு திறந்து விட்ட சிங்கம் மாதிரி, பாயும் புலி மாதிரி சொல்றது இல்ல.... ஸ்கூல்ல திட்டு வாங்கற மாதிரியே இருக்கு... அவ்வ்வ்... :)))
சீ ..........சீ ..........கோடி ரூபாய் எல்லாம் வேண்டாம் .ஒரு 50 ,000 ரூபாய் போதும் ........
எலேய் சௌந்தர் ,ரமேஷ் ,செல்வா ,terror .அண்ணன் காசு தரேன் சொல்லுறாரு வாங்க வந்து account .no சொல்லுங்க..
வில்லனா இருந்ததான ரேப் சீன எல்லாம் கிடைக்கும்.. நான் வில்லனாவே இருக்கேன்.
============================
//எலேய் சௌந்தர் ,ரமேஷ் ,செல்வா ,terror .அண்ணன் காசு தரேன் சொல்லுறாரு வாங்க வந்து account .no சொல்லுங்க..//
நான் மெயில் பண்றேன்.
எலேய் சௌந்தர் ,ரமேஷ் ,செல்வா ,terror .அண்ணன் காசு தரேன் சொல்லுறாரு வாங்க வந்து account .no சொல்லுங்க..//
எனக்கு 50,000 கூட வேண்டாம்க .. ஒரு 10,000 போதும் .. அதனால எவ்வளவு சீக்கிரம் ஏற்ப்பாடு பண்ண முடியுமோ ., அவ்வளவு சீக்கிரம் ஏற்ப்பாடு பண்ணுங்க ..!!
//நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு கோடி ரூபாய் கொடுக்க முடியாது//
சீ ..........சீ ..........கோடி ரூபாய் எல்லாம் வேண்டாம் .ஒரு 50 ,000 ரூபாய் போதும் ........
எலேய் சௌந்தர் ,ரமேஷ் ,செல்வா ,terror .அண்ணன் காசு தரேன் சொல்லுறாரு வாங்க வந்து account .no சொல்லுங்க.////
அட என்ன சொல்றிங்க உண்மையாவா இதோ இருங்க அவருக்கு மெயில் பண்றேன்
ஒரு கட்டுரை எழுதினா அதோட ரூட்ட எப்படி மாத்தி விடுறதுன்னு உங்க கிட்டதான்டா கத்துக்கணும்...
நான் என்ன சொல்லியிருக்கேன்..கடைசியில வந்து......பணம் மணி ஆர்டர் செய்ற ரேஞ்சுல கொண்டு வந்து விட்டுட்டீங்களே.. இது நியாயமா? தர்மமா? நீதியா?
நிதர்சனம்...
மச்சி... உன்னை நினைச்சவுடனே என்ன தோனுதோ அதைதான் எழுத முடியும்
எல்லோரும் வாங்க...வாங்க ............நம்ம சிரிப்பு போலீஸ் ரேப் சீன் ல நடிக்க போறானாம் .......
பணம் தரேன் சொல்லிக்கிட்டு இப்படி கேக்கலாமா தேவ அண்ணா.இது
அநியாயம் .......அதர்மம் .அநீதி ..........இது எப்படி இருக்கு
//வில்லனா இருந்ததான ரேப் சீன எல்லாம் கிடைக்கும்.. நான் வில்லனாவே இருக்கேன்.//
எல்லோரும் வாங்க...வாங்க ............நம்ம சிரிப்பு போலீஸ் ரேப் சீன் ல நடிக்க போறானாம் ...////
அவருக்கு ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க இதுல இந்த மாதிரி வேற நடிக்கிறா
இம்சைஅரசன் பாபு.. said...
//வில்லனா இருந்ததான ரேப் சீன எல்லாம் கிடைக்கும்.. நான் வில்லனாவே இருக்கேன்.//
எல்லோரும் வாங்க...வாங்க ............நம்ம சிரிப்பு போலீஸ் ரேப் சீன் ல நடிக்க போறானாம் ...////
அவருக்கு ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க இதுல இந்த மாதிரி வேற நடிக்கிறா
October 13, 2010 1:08 PM //
ஏதும் புரளிய கிளப்பிடாதீங்க ராசாக்களே
இல்ல
அருமையான பதிவுன்னு சொல்லவா...
இல்ல
கலக்கல் பதிவுன்னு சொல்லவா...
இல்ல
என் கவனத்தை சிதற வைத்த பதிவுன்னு சொல்லவா..
விருப்பப்பட்ட வாழ்க்கை வாழும் அதே நேரத்தில் அது அடுத்த மனிதருக்கும், சமுதயத்திற்கும் அதனால் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளல் நலம்.//
உண்மை .இதை படித்த(அறிவாளிகள் ) சிலர்கூட புரியாமல் உள்ளார்ந்த கருத்துக்களை சிதைப்பதில் கருத்தை இருப்பது இன்னும் வருந்தகூடிய ஒன்று .
as usual nice post dheva.
விருப்பப்பட்ட வாழ்க்கை வாழும் அதே நேரத்தில் அது அடுத்த மனிதருக்கும், சமுதயத்திற்கும் அதனால் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளல் நலம்.//
உண்மை .இதை படித்த(அறிவாளிகள் ) சிலர்கூட புரியாமல் உள்ளார்ந்த கருத்துக்களை சிதைப்பதில் கருத்தை இருப்பது இன்னும் வருந்தகூடிய ஒன்று .//
ஆமாங்க. எலேய் சௌந்தர், இம்சை எத்தன தடவ சொல்லிருக்கேன். தேவா அண்ணன் ப்ளாக் வரும்போது டிக்சனரி எடுத்துட்டு வந்து தொலைங்கன்னு. தப்புதப்பா படிச்சிட்டு என் உயிரை எடுக்குறீங்க. மக்கள் கோவப்படுராங்கள்ள..
செம உள்குத்து.. இருக்கு இதுல.....ஏன்டா தம்பி.. இப்படி? அவ்வ்வ்வ்வ்வ்வ்!
நான் எப்படா உங்களுக்கு சாதரணம் இல்லனு சொன்னேன்.. ? எனக்குதான் தெரியுமே வீர தீர பராகிரமசாலின்னு...!
ரமேசு.@ நீ பிளாக் வச்சு இருக்கதே.. பொண்ணு பாக்கதானே...!
சும்மா ஜாலியா கமெண்ட் பண்றாங்க.. அவுங்க அண்ணண் பிளாக்தானேனு ஒரு உரிமைதான்...! ஹா..ஹா..ஹா.. !
இது உங்கள் எழுத்திலேயே தெரிகின்றது அண்ணா... அருமையான பதிவு.