Pages

Tuesday, October 19, 2010

சுடலை...!
எல்லோரும் போய் விட்டார்கள் சுப்பையாவை தவிர. அந்த கார்கால 7 மணியில் கிராமத்து இருட்டு கருமையை எனக்கென்ன என்று பரவவிட்டு இருந்தது. சுப்பையாவை கவனிக்கமால இருந்த மாசனாம் தன்னுடைய வேலையில் மும்முரமாயிருந்தார். கட்டுக்களை எல்லாம் பிரித்துக் மேலே சமமாக சாணி ராட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.

குய்யோ முறையோ என்று உறவுக் கூட்டம் கதறுவதும் பின் கடைசியில் மாசானத்தின் பொறுப்பில் விட்டு விட்டு வீடு போய்ச் சேருவதும் இன்னிக்கு நேத்தா பார்க்கிறார் மாசானம்.

எத்தனையோ உடல்கள் வருகின்றன எரித்து... எரித்து அந்த எரித்தலில் ஒரு புரிதல் ஏற்பட்டு வாழ்க்கையில் ஒரு நிதானத்துக்கு வந்த மாசானம் இருட்டில் தகர கொட்டகை ஓரமாய் அமர்ந்திருந்த 15 வயது சுப்பையாவை அப்போதுதான் கவனித்தார்....! அட..சுப்பையா.. என்னப்பு.. நீ போகலியா? கேள்வியில் ஆச்சர்யத்தை திணித்து சுப்பையாவை உற்றுப் பார்த்தவராய் கேட்டார் மாசானம்.

இல்லண்ணே என்ன செய்வீகன்னு பாக்க ஆசையா இருந்துச்சு.. அதாண்ணே... சுப்பையாவின் பதில் கேட்டு மாசானம் சிரித்த சிரிப்பில் பக்கத்து மரத்தில் இருந்த பறவைகள் பயந்து போய் கத்த தொடங்கின. ஏய் தம்பி கிறுக்கு புடிச்சு போச்சா..சுடுகாட்ல உக்காந்து கிட்டு என்ன கேள்வி கேட்டுகிட்டு.... ? உங்க அப்பு ஆத்தாக்கு தெரிஞ்சா வைவாக (திட்டுவாங்க) நீ வெரசா கிளம்பப்பே.... எனக்கு கொள்ளை வேல கிடக்கு....

அது ஒண்ணுமில்லண்ணே ஒரு நாத்து இருந்து சும்ம பாக்றேண்ணே....ன்னு சுப்பையா அவரின் சம்மத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக் கொண்டன்....! அட என்ன தம்பி சரி இருங்க ஆன எரிய ஆரம்பிச்ச உடனே வெரசா போய்டனும். சரியா....! இங்க பிசாசுங்க இருக்கு என்று சொல்லிவிட்டு அவர் வேலையில் மும்முரமானார்.

சுப்பையா உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். பிசாசு... இருக்கா? ஹா..ஹா..ஹா...செத்த மனுசந்தானே பிசாசா வருவான்....வரட்டும் வரட்டும் அப்படி ஒரு வேலை வந்தா நான் பேசி சமாளிச்சுகிறேன். இருக்குற மனுசன் கிட்டதான் பிரச்சினை எப்பவும் பின்னால குத்தறதுக்கும், புறணி பேசுறதுக்கும், காசு பணம் சேக்கவும் ஆட்டமா ஆடுவாய்ங்கே.. செத்த பின்னானாடி என்னத்த செய்ய போறனுக வரட்டும் வரட்டும்..மனதுக்குள் சொல்லிக் கொண்டே... எரியூட்டப் போகும் அந்த உடலின் மீது மனதை செலுத்தினான் சுப்பையா....

கருப்பையா பிள்ளை.....ஆமாம்..." கண்டி முதலாளி பருத்திக்கண்மாய் கருப்பையா பிள்ளை" அப்படின்னு சொன்ன...குருக்கத்தி, விட்டனேரி, பருதிக்கண்மாய், கிளுவச்சி, ஒருபோக்கி, பாப்பான் கண்மாய், கொல்லங்குடி, நரிக்குடி, நாட்டரசன் கோட்டை, காளையார்கோவில் வரைக்கும் படு பேமஸ். தெரியாத ஆளு இல்லை. சுப்பையாவுக்கு 7 வயசு ஆன 1954ஆம் வருசத்துல தான் நல்லா விவரம் தெரிஞ்சு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான் சுப்பையா. இவனுக்கு பெரியப்பாரு முறை வேணும்.

வானம் பாத்த பூமி மக்க...எப்பவும் வெதைய விதைச்சுப் புட்டு அண்ணாந்து பாத்துகிட்டே திரியுங்க...எப்பாடா வான ராசா கண்ண தொறப்பாரு...எம் புஞ்சைகாட்டு புள்ளையலுக்கு எல்லாம் மழையா வந்து விழுந்து எங்க வயித்துப் பாட்ட தீப்பாருன்னு ஏங்கிகிட்டு அலையிற சனம், கம்மாயில இருக்குற சொச்ச தண்ணிக்கும் முறை வச்சி தொறந்து விட்டு புட்டு கம்மா தண்ணி கொறய கொறய வயித்துல நெருப்பெரிய ஆரம்பிக்கும்...கண்ணுல மிரட்சியா...ஏப்பே... இன்னிக்கு நாளைக்கு மழை தண்ணி விழுகுமா?ன்னு ஒருத்தர ஒருத்தரு கேக்கவும்...விழுமப்பா...நேத்து காயஓடை பக்கமெல்லம் நல்ல மழை விழுந்துருக்குப்பா... மங்கலம் கம்மா பாதிக் கம்மா பெருகிருச்சாம்பா...! நமக்கும் விழும்பா...ஒருத்தரை ஒருத்தர் கேள்வி கேட்டு பதில் சொல்லி ஒரு மிரட்சியான வாழ்க்கை...

சில நேரம் விளையும் பல நேரம் விளையாது இருந்தாலும் வாழ்க்கையை சமமாக பார்க்கும் மனம் கொண்டவர்கள். இவர்களுக்கு மத்தியில் கண்டி கருப்பையா பிள்ளை ஒரு ஆதர்சன கதா நாயகன் தான் எல்லோருக்கும்.

சுப்பையாவுக்கு பெரியப்புதானே...அதுவுமில்லாம சுப்பையாவோட அப்பு ரங்கூன் போறதுக்கு முழுக்காரணமே கருப்பையாபிள்ளைதான். முத தடவை சுப்பையா.. அவுக அப்பு கூட பருத்திகண்மாய்க்கு கருப்பையாபிள்ளை வீட்டுக்கு போனதே பெரிய அனுபவம்தான்...!

1 கிலோ மீட்டர் சதுர பரப்புக்குள் கருவ முள் அடஞ்ச வேலி. பெரிய மூங்கிப்படல் அடஞ்ச கதவு.. அதாண்டி உள்ள போனா..ரெண்டு பாக்கமும் நெறய தென்னங்கண்டுக (மரம்) அத தாண்டி அதோ உள்ள தெரியுதப்பா பெரியா கோட்ட மாதிரி வீடு.....சுப்பையா திணறிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

மனிசங்க இப்படியும் கூடவா வாழ்வாய்ங்க.....சுப்பைய அவுக அப்பு கைய கெட்டிய பிடிச்சுகிட்டு நடந்து போக சொல்ல எங்கே இருந்தோ வந்துசுப்பா.. ரெண்டு நாட்டு நாய்க.. ஒண்ணு ஒண்ணும் ஒரு கன்டுகுட்டி பெருசல.. வெல வெலத்து போன சுப்பையா.. கண்ண மூடிக்கிட்டு மாரநாட்டு கருப்பே.. எங்கள காப்பாத்து சாமீன்னு வேண்ட ஆரமிச்சுட்டான்.. நாய்க ரெண்டும் பாஞ்சுகிட்டு வருதுக....வெரசா.......


(பதிவின் நீளம் கருதி....இதன் இறுதி பாகம் நாளை..........!!!)


தேவா. S

37 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuuuuuuu
enakku than sudu soruuuuuuuuuuuuuu.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிசாசு...//

டெரர் என்ற உண்மையான பெயரை கூறாததால் வன்மையாக கண்டிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிசாசு...//

டெரர் என்ற உண்மையான பெயரை கூறாததால் வன்மையாக கண்டிக்கிறேன்

சிறுகுடி ராம் said...

மாப்ள, இன்னைக்கி மொத ஓட்டு நாந்தேன் போடணும்னு நெனச்சேன்... ஆனா இந்த இ(ன்)ட்லி பயபுள்ள ஏத்துக்கிற மாட்டேனுடுச்சு... ம்ம்ம் என்னத்த சொல்ல!

சரி சரி... பின்னூட்டத்தயாவது நான் மொதல்ல எழுதுறேன்... ஹிஹிஹி

சிறுகுடி ராம் said...

அட மக்கா!! இந்த "இம்சை அரசன் பாபு" தொல்ல தாங்க முடியலையே...!! எப்பப்பாத்தாலும் மொத ஆளாவுள்ள எழுதிருறாரு!!!நான் இந்த போட்டிக்கி வரலப்பா...

சிறுகுடி ராம் said...

சின்னப்புள்ளைல அப்பாவுக்கு நடந்தத உன்கிட்ட சொன்னாங்களாக்கும்...!
அவுங்களுக்கு தெரியுமா இத நீ பதிவா எழுதப்போறன்னு? காபி ரைட் எதுவும் பண்ணி வச்சிருக்கபோறாக!!
பாத்து செய்யி... அப்பறம் அவுகளுக்கு வலுவா குடுக்கவேண்டி இருக்கும்...

இம்சைஅரசன் பாபு.. said...

error மக்க இவனுக்கு மோகினி பிசாசு பிடிச்சிருக்கு ...........உடனே தண்ணி தொளிச்சு அறுத்துரனும்....
சீரியல் பாக்குறான்.....மோகினி பிசாசுங்கரன் ......சீக்கிரம் கல்யாணத்தை பண்னி தொலைடா ரமேஷு ......

இம்சைஅரசன் பாபு.. said...

@சிறுகுடி ராம்
பரவா இல்லை சுடுசோறை நீங்க எடுத்துகோங்க .........
பொதுவாக என் மனசு தங்கம் ....
ஒரு போட்டி என்று வந்துவிட்டால் சிங்கம் ........
மனசு தங்கம் என்பதால் சுடு சோறு உங்களுக்கு ஓகவா சிறுகுடி ராம்

கே.ஆர்.பி.செந்தில் said...

தேவா உங்களுக்கு சிறுகதைதான் மிக சிறப்பாக எழுத வருகிறது.. எனவே நிறைய எழுதுங்க.. வாரம் இரண்டாவது எழுதவேண்டும் என விண்ணப்பம் வைக்கிறேன்..

அப்புறம் கணவர் பயோடேட்டா எழுதுமாறு கேட்டிருந்தீர்கள்.. அடிமைகளுக்கு எது கருத்து சுதந்திரம்.. இருந்தாலும் அடுத்த வாரம் முயற்சிக்கிறேன்.. அல்லது அதே பார்மட்டில் நீங்களே கூட எழுதுங்க..

dineshkumar said...

இம்சைஅரசன் பாபு.. said...
me the firstuuuuuuuuuuuu
enakku than sudu soruuuuuuuuuuuuuu.

சுடுகாட்ல யார்யா அது சுடு சோறு கேட்கறது.........

dineshkumar said...

வணக்கம்
சுவாரஷ்யமா இருக்கு தொடருங்க தோழரே

மங்குனி அமைசர் said...

சுவாரசியமா இருக்கு சார்

சிறுகுடி ராம் said...

@இம்சைஅரசன் பாபு
//பரவா இல்லை சுடுசோறை நீங்க எடுத்துகோங்க .........
பொதுவாக என் மனசு தங்கம் ....//

சுடு சோறு எனக்கு வேணாங்க...
ஆனா ஏதோ, "தங்கம்" அப்டினெல்லாம் பேச்சு அடிபடுது.. அந்த தங்கத்தை மட்டும் குடுத்துருங்க.... அதுவும் வெயிட்டா குடுங்க... ஹிஹிஹி..

சௌந்தர் said...

சுப்பையா உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். பிசாசு... இருக்கா? ஹா..ஹா..ஹா...செத்த மனுசந்தானே பிசாசா வருவான்....வரட்டும் வரட்டும் அப்படி ஒரு வேலை வந்தா நான் பேசி சமாளிச்சுகிறேன்.////

இதை எல்லாம் பார்த்தல் வேலை செய்ய முடியமா

சிறுகுடி ராம் said...

மாப்ள, நம்ம ஊரப்பக்கட்டு ஸ்லாங்-குல கலக்குறடா... அதுதான் ஒங்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே...!!
எல்லாரும் அவுகவுக ஊரு பேச்சு வழக்கு மற்றும் வார்த்தைகள மறக்கவே கூடாதுங்கிறது என்னோட அபிப்ராயம். எழுதுறப்பதான் அங்கங்க செரமமா இருக்கும்... ஆனா, அப்டியும் எழுதிட்டோம்னா, படிச்சு பாக்குறப்ப, அப்டியே நம்ம ஊருகளுக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்தாப்ல இருக்கும்பாரு.... அதுல உள்ள சந்தோசமே தனிதான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கே.ஆர்.பி.செந்தில் said... தேவா உங்களுக்கு சிறுகதைதான் மிக சிறப்பாக எழுத வருகிறது..///

அப்ப மிச்சதெல்லாம் படு கேவலமா எழுதுறாரா. செந்தில் அண்ணா என்ன இருந்தாலும் பப்ளிக்குல அசிங்க படுத்தி இருக்க கூடாது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

இம்சைஅரசன் பாபு.. said...

error மக்க இவனுக்கு மோகினி பிசாசு பிடிச்சிருக்கு ...........உடனே தண்ணி தொளிச்சு அறுத்துரனும்....
சீரியல் பாக்குறான்.....மோகினி பிசாசுங்கரன் ......சீக்கிரம் கல்யாணத்தை பண்னி தொலைடா ரமேஷு ......//

யாரை தொலைக்கணும்

சிறுகுடி ராம் said...

//1 கிலோ மீட்டர் சதுர பரப்புக்குள் கருவ முள் அடஞ்ச வேலி. //

இங்கினகுள்ள மட்டும் ஒரு சதுர கிலோ மீட்டர்ங்குறதுக்கு பதிலா, ஒரு சதுர மைல் இல்ல வேற எப்டியாச்சும் வழக்கு மொழில இருக்குறது மாதிரி சொல்லியிருந்தா இன்னம் கொஞ்சம் எபெக்டிவா இருந்திருக்கும்னு தோணுது...

அன்புடன் மலிக்கா said...

இதன் இறுதி பாகம் நாளை..........!!!)//

நாளைக்கும் வருவோம்.............!!!!!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//பதிவின் நீளம் கருதி....இதன் இறுதி பாகம் நாளை..........!!!//

கொக்கரகோ!! கொக்கரகோ!! (கோழி கூவுது..)
டிங்டாங் டிங்டாங்!! (கடிகார மணி....)
கௌசல்யா சுப்ர... (மொபைல் அலாரம்...)
எழுந்து போய் குளிச்சி ஆபிஸ் கிளம்புங்க (தங்கச்சி திட்டு...)
கீங்..கீங்..கீகீகீங் (டிராபிக் ஜாம்...)
பாய் டாடி... (பொண்ண ஸ்கூல்ல விட்டாச்சி..)
கீங்..கீகீகீகீகீகீ (கார பார்த்து ஓட்டு மாப்பு.. இண்டிகேட்டர் போடமா ட்ராக் மாத்தர... ஆரபி அண்ணன் ஹாரன் அடிச்சி திட்டராரு பாரு...)
குட்மார்னிங் மேடம்... (ஆபிஸ் வந்தாச்சி...)

மறுநாள் ஆகிடுத்து.... (பதிவு போடு மாப்ஸ்...)

சிறுகுடி ராம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
////// இம்சைஅரசன் பாபு.. said...

error மக்க இவனுக்கு மோகினி பிசாசு பிடிச்சிருக்கு ...........உடனே தண்ணி தொளிச்சு அறுத்துரனும்....
சீரியல் பாக்குறான்.....மோகினி பிசாசுங்கரன் ......சீக்கிரம் கல்யாணத்தை பண்னி தொலைடா ரமேஷு ......//

யாரை தொலைக்கணும் //////


அருமையான கேள்வி ரமேஷு....!!!

ஹூம்... எங்களாலதான் தொலைக்க முடியாம போச்சு..! நீங்களாவது நல்லபடியா கல்யாணத்த பண்ணி "தொலைங்க"... ஹிஹிஹி..

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கே.ஆர்.பி.செந்தில் said... தேவா உங்களுக்கு சிறுகதைதான் மிக சிறப்பாக எழுத வருகிறது..///

அப்ப மிச்சதெல்லாம் படு கேவலமா எழுதுறாரா. செந்தில் அண்ணா என்ன இருந்தாலும் பப்ளிக்குல அசிங்க படுத்தி இருக்க கூடாது../////

@@@ரமேஷ்
அட அவர் ஒன்னும் அசிங்க படுத்தலை நீங்க அப்படி செய்றிங்க

எஸ்.கே said...

சூப்பர்! வித்தியாசமாக இருக்கு! தொடர்ச்சி வரட்டும்! உங்க நடையே வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹூம்... எங்களாலதான் தொலைக்க முடியாம போச்சு..! நீங்களாவது நல்லபடியா கல்யாணத்த பண்ணி "தொலைங்க"... ஹிஹிஹி.. ///

definitely definitely

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
சுடலை...!///
டெரர் கிட்ட எதையோ சுட்டுடீங்கலாமே. பின்ன என்ன சுடலை...!ன்னு விளம்பரம்

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல எழுத்து நடை,வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கே.ஆர்.பி.செந்தில் said... தேவா உங்களுக்கு சிறுகதைதான் மிக சிறப்பாக எழுத வருகிறது..///

அப்ப மிச்சதெல்லாம் படு கேவலமா எழுதுறாரா. செந்தில் அண்ணா என்ன இருந்தாலும் பப்ளிக்குல அசிங்க படுத்தி இருக்க கூடாது..


முதல்ல இந்த இம்சையை தடை பண்ணனும்,யோவ் சிரிப்புப்போலீஸ் ஏன் ஏன் இந்த கொலை வெறி?

நாஞ்சில் பிரதாப் said...

மாம்சு... சுடலைங்கற தலைப்பை கடலைன்னு படிச்சுட்டேன்...
கடலைப்போடுவதை பத்தித்தான் எழுதியிருப்பிங்கன்னு நம்பி ஏமாந்துட்டேனே...

ப.செல்வக்குமார் said...

இதென்ன இந்தப்பையன் சுப்பையா பிணம் எரியறத கூட பாக்குரக்கு போறானா ..? தைரியமான பையன ..!!

ப.செல்வக்குமார் said...

//மறுநாள் ஆகிடுத்து.... (பதிவு போடு மாப்ஸ்...)/

அதுக்குள்ள மறுநாள் ஆகிடுச்சா ..?

AT.Max said...

நன்றாக உள்ளது உங்கள் பதிவு.

Kousalya said...

வட்டார தமிழில் ஒரு சிறு கதை.......நன்றாக இருக்கிறது..... வித்தியாசமான கதை களம்...அடுத்து என்ன....? காத்திருக்கிறேன்....!

ஜெயந்தி said...

//தேவா உங்களுக்கு சிறுகதைதான் மிக சிறப்பாக எழுத வருகிறது.. எனவே நிறைய எழுதுங்க.. வாரம் இரண்டாவது எழுதவேண்டும் என விண்ணப்பம் வைக்கிறேன்..//
நானும் இதை வழிமொழிகிறேன்.

அருண் பிரசாத் said...

வழக்கு மொழி, வெட்டியானின் தோற்றம், செயல் அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்துட்டீங்க.... நாளைக்கு வரேன்...

Chitra said...

சில நேரம் விளையும் பல நேரம் விளையாது இருந்தாலும் வாழ்க்கையை சமமாக பார்க்கும் மனம் கொண்டவர்கள்.

.....நல்ல மனப்பக்குவம் கொண்டவர்கள்.

LK said...

எல்லோரும் சொல்லிட்டாங்க இனி நான் சொலல் என்ன இருக்கு அடிச்சு ஆடுங்க தேவா

shankar said...

தேவா ..,
சொக்க வைக்கும் எழுத்து நடை ..,இன்னும் கொஞ்சம் சூழ்நிலை விவரணையை கூட்டியிருக்கலாம்...,