
தூசுகளாய் மாறி
நான் கரைந்து போய்
எங்கேயோ பிறந்திருந்த
பொழுதற்ற பொழுதுகளில்
முழுதாய் நான்
அடர்ந்து போயிருந்தேன்
வெளிச்சமும் இருட்டும்
எனது இயல்பாய் போன
தேசமற்ற ஒரு தேசத்தில்
நான் கரைந்து போயிருந்தேன்.
ஆகா.. காதலற்ற காதலாய்...
நான் நிறைந்து போயிருந்தேன்!
பஞ்சுப் பொதி ஒத்த..
மேகக் கூட்டத்தினுள் அடர்ந்த
நீர்த்திவலைகளாய் நான்
நிறைந்து போயிருந்தேன்...
பற்றிப் பரவும் காற்றின்
வீச்சில் அலைகளாய்
நான் கலைந்து போயிருந்தேன்..!
ஒரு முட்டை ஓட்டுக்குள்
சூடான ஒரு கருவாய்
நான் இறைந்து போயிருந்தேன்...
எங்கேயோ ஊறும்
ஒரு ஆட்டு மந்தையின்
நெருக்கத்தின் இடைவெளிகளில்
நான் கலந்து போயிருந்தேன்...!
சுவாசம் தப்பவிட்டு
சுவாசிக்கும் ஒரு ஜீவனாய்
நான் விரிந்து போயிருந்தேன்..
பெய்யும் மழையை ....
வாங்கும் ஒரு நிலமாய்
நான் குழைந்து போயிருந்தேன்...!
இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...
அந்த நித்திய இருப்பில்
நான்.. எங்கும் எப்போதும்
இல்லாமல் இருந்து போயிருந்தேன்...!
அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!
தேவா. S
Comments
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...
அந்த நித்திய இருப்பில்
நான்.. எங்கும் எப்போதும்
இல்லாமல் இருந்து போயிருந்தேன்...!
அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!
மனம் தொட்டு தவழ்ந்து செல்கின்றன வரிகள்
இம்சைஅரசன் பாபு.. said...
me the firstuuuuuu///
உனக்கு வெட்கமா இல்லை? எப்ப பாத்தாலும் முத ஆளா. வேலைய பாரு ஒழுங்கா
பாங்க்ல உங்க இருப்பு...! எவ்ளோ பாஸ்?
இன்று தன்னையே முடித்து ஒரு கவிதை .....!!
எதை நோக்கிய பயணம் இது என்று நெருங்கியவர்களுக்கே வெளிச்சம்...!!!
nice poem....nice song....!
சுவாசிக்கும் ஒரு ஜீவனாய்
நான் விரிந்து போயிருந்தேன்..
பெய்யும் மழையை ....
வாங்கும் ஒரு நிலமாய்
நான் குழைந்து போயிருந்தேன்...!//
Varikal arumai....
Kavithai super.
சுகமாய் இறந்து போயிருந்தேன்!
//
மிக அருமையான கவிதை
சுகமாய் இறக்க முடியுமா தேவா?
இறந்தபின் சுகம், துக்கம் என்ற உணர்வு உண்டா?
மேகக் கூட்டத்தினுள் அடர்ந்த
நீர்த்திவலைகளாய் நான்
நிறைந்து போயிருந்தேன்...//
இந்த வரிகள் உண்மைலேயே கலக்கலா இருக்கு..!!
சுகமாய் இறந்து போயிருந்தேன்!//
எனக்கு உண்மைலேயே கமெண்ட் போட தெரியல ..!!
சுகமாய் இறந்து போயிருந்தேன்!////
இறப்பது கூட சுகமா?
//அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!//
சுகமாய் இறத்தல் என்பது...உடலிலிருந்து எண்ணும் எண்ணத்தில் வாழ்வின் சுமைகள் களைந்து பயணிக்கும் மட்டுப் பட்ட சுகம்...(உடலளவில் மனக் கொள்ளும் கற்பனை சுகம்...!!!) இங்கே இருந்து சுகம் கொள்ளும் நான் .. .மட்டுப்பட்ட.. நான்(பிண்ட அகங்காரம்)
//இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...//
எல்லாம் கழிந்து பிரபஞ்சத்தின் பிரபஞ்சமாய் கலந்து
" வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய், கோனாகி, நான் எனது என்பவரை கூத்தாட்டுபவனாகி...." மாறூம்போது... ஏற்படும் சுகம்...பிரபஞ்ச அகங்காரம்.... கொண்ட மூல நான்.. ( பிரம்ம அகங்காரம்)...
இந்த இடத்தில் அனுபவம், அனுபவிப்பவன் இரண்டும் இன்றி அனுபவித்தல் என்ற நிகழ்வு மட்டும் எஞ்சும்.. அதாவது சுகம்.. என்ற ஒன்று தொக்கி ஏகாந்தமாய் இருக்கும்,
//இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...//
இது பிரம்மம் !
ஆனா, கீழ நீ வேலுவுக்கு கொடுத்த விளக்கைத்தைப் படித்ததும் அந்த "கொஞ்சம்" புரிஞ்சதும் சுத்தமா புரியாம போச்சு.. .. அபிராமி அபிராமி (அந்த குணா கமல் நெலமதான் இப்ப எனக்கு... சந்தோஷமா? )
எனக்கு பிடிச்ச பாட்டும் வேற சைடு ல ஓடுது அதுக்கும் ஸ்பெசல் நன்றி
(p.s. very nice song in the background to read this.)
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...
அந்த நித்திய இருப்பில்
நான்.. எங்கும் எப்போதும்
இல்லாமல் இருந்து போயிருந்தேன்...!//
கவிதையைக் காதலித்து அதன்
கரம் பற்றி காவியமாய்
ரசித்து அதனுள்
கரைந்த விதம் அருமை..!!
/// சுகமாய் இறந்து போயிருந்தேன்......///
எப்படிங்க இப்படி... உங்கள் உள்ளம் உணர்த்தும் இந்த ஒரு வரியில் செம செம....!!!
மீண்டும் வசந்தம் எழுந்து விட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது....
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது
எந்தன் தோட்டத்தில் ....
முப்பது நாளும் முஹூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில் ...
Simply superb lyrics... :-))
(Just now I was able to listen to the whole song. That's why the late effect :-)) )
உங்கள் கவிதை இயற்கையோடொன்றிய மனித "இருப்பு" என்பதை சொல்லிவிட்டு கடைசியில் "சுகமாய் இறந்துபோயிருந்தேன்" என்பது தத்துவமா, புரியவில்லை?
அப்புறமா, சிறுகுடி ராம் என்பவர் சொன்னது தான் எனக்கும் பொருந்தும்.
//வேலுவுக்கு கொடுத்த விளக்கைத்தைப் படித்ததும் அந்த "கொஞ்சம்" புரிஞ்சதும் சுத்தமா புரியாம போச்சு.. .. அபிராமி அபிராமி (அந்த குணா கமல் நெலமதான் இப்ப எனக்கு... சந்தோஷமா? )//
சிரிச்சு மாளல ஐயா!!! :))))
இனிமேல் உங்கள் புரியாத கவிதை வாசிக்க உங்கள் தளத்தை தொடர்ந்து படிப்பேன்.
கடைசி வார்த்தை ஏனோ டச்சிங்கா இருக்கு..
சகோதரிக்கு வந்தனங்கள்......!
//உங்கள் கவிதை இயற்கையோடொன்றிய மனித "இருப்பு"//
மனித இருப்பு இல்லை சகோதரி........!
கவிதையின் கடைசி வரியியில் இருந்து வருகிறேன்...
//அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!//
இது முதல் வரியாய் கொள்ளுங்கள்......... இறக்கும் போது நான் என்ற அகந்தை என்ற மனம்தோடு சேர்ந்து சமாதியை ஒத்த ஒரு இறப்பு......!
அதற்கு.... பிறகு பிரபஞ்ச இருப்பினை ஒத்த இருப்பு......அங்கே எல்லாமாய் இருக்கும் ஒரு நிலை...பிரபஞ்ச உண்மைதான் விரிந்து பரந்து எல்லாமாயிருக்கிறது....அப்படி நானே நானாயிருக்கும் பிரம்மம பேசினால் தான் வியாபித்து இருக்கும் சத்தியத்தை வார்த்தையாக்குமெனில் ...நிறைந்து நின்ற சில இடங்களை விவரிக்குமெனில் எங்கணம் இருக்கும் என்று எண்ணியதின் விளைவு அல்லது எனக்குள் ஸ்பூரித்தது அல்லது....அக யாக்கை....அதுதான் இந்த கவிதை
இன்னும் குழப்புகிறேனா? சரி...சொல்லில் விளங்காத சூத்திரம்..உணர்தலில் விளங்குமென நினைக்கிறேன் சகோதரி...மேலும் நான் விவரிக்க முனைந்தால் எல்லாம் வல்ல ஒன்றை கமர்சியல் ஆக்க முனையும் என் முயற்சியில் என அறியாமை விசுவரூபமெடுத்து என்னை கீழே தள்ளி அழிக்கும்....!
தொடர்ந்து வாருங்கள் சகோதரி....! நன்றிகள்!
//சரி...சொல்லில் விளங்காத சூத்திரம்..உணர்தலில் விளங்குமென நினைக்கிறேன்//
:)
(ஹலோ!! டெம்ப்ளேட் கமெண்ட் எல்லாம் போட முடியாது!!)