Skip to main content

மரபு.....!














ட்ரெய்லர் II


சுற்றிப் பரவியிருந்த மண்ணின் தாதுக்களுக்குள் நான் கலந்து ஒளிந்திருந்தேன், செடி கொடிகளுக்குள் சத்துப்பொருளாய் மாறி விரவியிருந்தேன், காய், கனிகளுக்குள் தைரியமாய் அடர்ந்து போயிருந்தேன்...வீசும் காற்றில் பிராணனில் பரவிப்போயிருந்தேன்..ஹைட்ரஜனுக்குள் கலந்து போயிருந்தேன்....ஓடும் நீரில் நனைந்து போயிருந்தேன்......

எம்மை சுவாசித்தவரின் நாசிகளுக்குள் பிராணணாயும், உண்டவரின் உடலுக்குள் சக்திப்பொருளாகவும், கண்டவரின் புத்தியில் நினைவுப் படிமமாகவும் படிந்து போயிருந்தேன். உடலுக்குள் எல்லாமாகி சக்தியாய் விரவி......இரத்தத்தில் கலந்து....உடலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஓட்டமாயிருந்தேன்....மேலும் ஒரு ஒரத்தில் இருந்த விந்துப் பையில் ஜீவசத்தாய் கலந்து போயிருந்தேன்...வேறொரு உடலின் கருப்பை உள்ளே சினைமுட்டைகளாய் அடர்ந்து போயிருந்தேன்.....

ஒரு இயற்கை சுழற்சியில் இரண்டும் ஒன்றாய் கலந்த கணத்தில் ஒரு திரண்ட உருவாய் வளர்ந்து போயிருந்தேன்...நீரும் காற்றும் எனைச் சுற்றி நிறைந்து போயிருந்தேன்....ஏதோ தினத்தில் ஒரு உருவாய் இந்த பூமியில் விழுந்து போயிருந்தேன்......

எந்த மண்ணில் இருந்து என் பிண்டத்துக்கான சத்து உருவப்பட்டதோ.....? எந்த பூமியில் இருந்து எனக்கான காற்று சுவாசிக்கப்பட்டதோ....? எந்த சூழ்நிலையில் அல்லது மனோ நிலையில் கருவாய் நான் ஜனிக்கப்பட்டேனோ அது எனக்குள் ஒரு வித குணாமாய் நிறைந்து போயிருந்தேன். எந்த உடல்களின் ஜீவசத்தாய் நான் வெளிப்பட்டு இருந்தேனோ...அந்த உடலில் இருந்த குணம் குரோமோசோம்களாய் என்னுள் பரவிக் கிடந்தது.....! டி.என்.ஏ க்களில் எல்லாம்...எந்த இடத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதோ அதன் மொத்த தொடர்ச்சியின் வேர்கள் மறைந்து ஒளிந்து போயிருந்தன....!

என் குணாதியங்களின் பின்ணனியில் காற்றும், நீரும், காய்களும் கனிகளும் இன்ன பிற தாதுக்களும், உப்புக்களும், உணவுப் பொருட்களும் மறைமுகமாய் விஸ்வரூபம் எடுத்துக் கிடந்தன. உடல் ஜனிக்க காரணாமாயிருந்த ஜீவன்கள் எல்லாம் என் புத்தியில் நிறைந்து போயிருந்தனர்.

ஆமாம்.....எல்லா உயிர்களின் குணாதிசயங்களின் பின்ணணியில் நாம் துச்சமென நினைக்கும் பல்வேறு விசயங்கள் இருக்கின்றன. அதுவும் ஒவ்வொரு மண்ணின் இயல்பும் ஒவ்வொரு மாதிரி...அந்த இயல்புக்கேற்ப உடலும் மனமும் சேர்ந்தே பிசையப்படுகின்றன. மலைகளில் வாழும் மனிதர்களுக்கு ஒரு இயல்பும், சமவெளியில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும், பாலையில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும்,,, நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும், காடுகளில் சுற்றித் திரிபவர்களுக்கு ஒரு இயல்பும், குளிர் பிரதேசங்கங்களில் இருப்பவர்களுக்கு ஒரு இயல்பும் ...என்று....மனிதர்கள் மாறி மாறி குணங்களுடன் இருந்தார்கள்....

குணாதிசயத்தையும், வாழும் போது மனோ நிலையையும் நிர்ணயிக்கும் மிகப் பெரிய காரணியாய் நீரும் காற்றும் இருந்தன......!

மனிதர்களின் குணம் மற்றும் பெற்று வந்த மரபணுக்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு முறையான வாழ்க்கை முறைகள் ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ப தீர்மானிக்கப்ட்டது. அது அந்த அந்தப் பகுதிகளின் செளகரியத்தை முன்னிலைப்படுத்தி தீர்மானிக்கப்பட்டது......கரடு முரடான வாழ்க்கையில் ....மனம் என்ற விசயம் ஈடுபட விதிமுறைகளை உருவாக்க மனிதனின் ஆழ்மனம் ....மிகவும் உதவியது......

மனித ஆழ்மனம் எதோடு தொடர்புடையது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா.....?

அச்சச்சோ.....ரொம்ப பேசிட்டேங்க....எனக்கு நேரமும் ஆயிடுச்சு....ஒரு மிகப்பெரிய உண்மையை கொஞ்சமா சொல்லணும்னு நினைச்சேன்....ஆனா அது முடியாது போல இருக்கு....! வாழ்க்கைல எப்பவுமே...இருக்குற சுவாரஸ்யமும் த்ரில்லும்தான் இந்த நிமிசம் வரைக்கும் எல்லாத்தையும் இழுத்துப் பிடிச்சு நிறுத்தி வைச்சு இருக்கு இல்லீங்களா....! சுவாரஸ்யமாவே பார்ப்போம் வாழ்க்கையை.....

இப்போதைக்கு கிளம்புறேன்....மிச்சத்த...பாக்குறப்போ பாக்கலாம்.....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா.........!



தேவா. S

Comments

தேவா,

/குணாதிசயத்தையும், வாழும் போது மனோ நிலையையும் நிர்ணயிக்கும் மிகப் பெரிய காரணியாய் நீரும் காற்றும் இருந்தன......!//

உண்மை.

தொடர்நுங்கள். இந்த போஸ்ட் சின்னதா இருக்கற மாதிரி ஒரு பீலிங்
//சுற்றிப் பரவியிருந்த மண்ணின் தாதுக்களுக்குள் நான் கலந்து ஒளிந்திருந்தேன்//

இன்னும் கடனை அடைக்கிலியா. எவ்ளோ நாள்தான் இப்படி ஓடி ஒளிவீங்க?
//செடி கொடிகளுக்குள் சத்துப்பொருளாய் மாறி விரவியிருந்தேன், காய், கனிகளுக்குள் தைரியமாய் அடர்ந்து போயிருந்தேன்...வீசும் காற்றில் பிராணனில் பரவிப்போயிருந்தேன்..ஹைட்ரஜனுக்குள் கலந்து போயிருந்தேன்....ஓடும் நீரில் நனைந்து போயிருந்தேன்......//

கடன்காரங்களுக்கு பயந்து வீட்டை தவிர எல்லா இடத்துலையும் இருந்திருக்கீங்க
இப்போதைக்கு கிளம்புறேன்....மிச்சத்த...பாக்குறப்போ பாக்கலாம்.....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா.........!
புறச்சூழ்நிலைகள் தான் நம் வாழ்க்கையையும், குணாதியங்களையும் தீர்மாணிக்கின்ற மிகப் பெரிய பொறுப்ப ஏத்துக்கிட்டிருக்குங்க. அப்போ அகத்துல இருக்கக்கூடிய ஒன்னு புறப்பொருள்களைக் கண்ட்ரோல் பண்ணி உங்க குணத்தை மாத்த முடியுமா?
dheva said…
தம்பி.. ஜீவன் பென்னி...@

சித்தத்தில் தெளிவிருந்தால் சீவன் முக்தி எய்துமப்பா....

தெளிவு நிறைந்த சித்தம்..எல்லாம் கட்டுப்பட வைக்குமப்பா....!!!!!!
இயற்கை மனிதனின் நிர்ணயிப்பதில் பெரும் காரணியாய் விளங்கியது என்பது கற்காலம் முதல் இக்காலம் வரை உண்மைதான். ஆனால் அவை ஒரு எல்லை வரைதான்!
Anonymous said…
//மனித ஆழ்மனம் எதோடு தொடர்புடையது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா.....? //
எனக்கு தெரியாது.. அதையும் நீங்களே சொல்லிடுங்க அண்ணே..
//எந்த மண்ணில் இருந்து என் பிண்டத்துக்கான சத்து உருவப்பட்டதோ.....? எந்த பூமியில் இருந்து எனக்கான காற்று சுவாசிக்கப்பட்டதோ....? எந்த சூழ்நிலையில் அல்லது மனோ நிலையில் கருவாய் நான் ஜனிக்கப்பட்டேனோ அது எனக்குள் ஒரு வித குணாமாய் நிறைந்து போயிருந்தேன். எந்த உடல்களின் ஜீவசத்தாய் நான் வெளிப்பட்டு இருந்தேனோ...அந்த உடலில் இருந்த குணம் குரோமோசோம்களாய் என்னுள் பரவிக் கிடந்தது.....! டி.என்.ஏ க்களில் எல்லாம்...எந்த இடத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதோ அதன் மொத்த தொடர்ச்சியின் வேர்கள் மறைந்து ஒளிந்து போயிருந்தன....!//

இந்த பத்தியே போதும் அண்ணா ., மனித வாழ்வின் நிலையாமை பற்றி விளக்குவதற்கு அல்லது மனித வாழ்வின் உண்மையை சொவதற்கு ..!!
.//.இதை அடித்து நொறுக்கி துவம்சம் செய்ய.... உங்களுக்கு முழு உரிமை இருக்கு.....அதில் உண்மையிருந்தா பின்பற்ற எனக்கு மனமும் இருக்கு.....//

அண்ணன் சண்டைக்கு கூப்பிடுவாரு போல ., யாரவது வாங்களேன் ..!!
@தேவா

கொஞ்ச நாள் இந்த புள்ள நால்ல எழுதுச்சி. ஊர் வம்புக்கு போகாத போகாத சொன்னேன். கேக்கல.. இப்பொ மறுபடியும் யருக்கும் புரியாம எழுத ஆரம்பிசிடுத்து... அவ்வ்வ்வ்..
dheva said…
பாலாஜி சரவணா....@ பிரபஞ்சத்தோடு தொடர்புடையது தம்பி.....!!!!!!!
dheva said…
டெரர்...@ மாப்பு...ஊர் வம்பா???? என்ன சொல்றா..ஒண்ணும் புரியலையே..ராஜா....!!! நீ என்ன சொல்றா......?????(சிவாஜி ஸ்டைல்)
nis said…
//ஒவ்வொரு மண்ணின் இயல்பும் ஒவ்வொரு மாதிரி...அந்த இயல்புக்கேற்ப உடலும் மனமும் சேர்ந்தே பிசையப்படுகின்றன.//

true anna.
ட்ரைலர்-I புரிந்தது,.. இது சிரமப்படுத்துகிறது... இன்ன்னும் சில முறை படிக்க வேண்டும் தேவா அண்ணா.
பாட்டு பட்டைய கெளப்புதே பங்க்ஸ்!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...