Pages

Monday, December 13, 2010

தேடல்....13.12.2010!
சில நாட்களாக ஆழமாக மனதிலே ஓடிக் கொண்டிருக்கும் விசயம் படைப்பு. எது படைப்பு? யார் படைக்கிறார். எல்லா துறைகளும் பயனாளர்கள் உண்டு நுட்ப அறிவியலார் உண்டு....ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கும் பொது அறிவியலார் உண்டு. ஒரு விசயத்தை உள்வாங்கி தாக்கத்தை வெளிப்படித்தும் உணர்வியலாரும் உண்டு.. ஆனால்....

எங்கே ஒளிந்திருக்கிறான் ஒரு படைப்பாளி?

நம்மைச் சுற்றி நிகழும் ஓராயிரம் விசயங்களை கிரகித்து எழுதிவிடலாம்...அரசியல், கலை, கல்வி, சமகால சமூக அவலங்கள்.... இன்னும் எவ்வளவோ ஆனால் ஒரு படைப்பு என்பது முற்றிலும் இதற்கு முன் இருந்தவைகளோடு ஒத்துப் போகாததாகவும் புதுமையான உணர்வுகளைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. படைப்புகள் எல்லாமே பழக்கப்பட்ட புலன் அறிவுகளுக்கு எப்போதும் எதிராகவே அல்லது புரிந்து கொள்ளப்படுவதற்கு ஏதுவாகவோ இருப்பது இல்லை.

முதன் முதலாய் மூளைக்குள் ஏறும் எந்த செய்தியும் நமக்குப் பிடிபடுவதில்லை. அது... விளங்கிப் புரிந்து கொள்ளவேண்டியதாகவே இருக்கிறது. பார்க்காத ஒன்றை கேட்காத ஒன்றை விளங்குவதில் அல்லது விளக்குவதில் சிக்கல் ஏற்பட்டு போகிறது. இந்த சிக்கலில் பெரும்பாலும் மாட்டிக் கொண்டு தவிப்பது கடவுள் என்ற பதம். இங்கே சொல்லப்படும் கடவுள்கள் எல்லாம் பகுத்தறிவுகளாலும் பல்வேறு சித்தாந்தங்களாலும் பந்தாடப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன். அப்படிப் பந்தாடப்படுவதற்கு காரணமும் இருக்கிறது....

கடவுள் என்று இல்லை, உணர்வு பூர்வமான எந்த விசயமும் எழுத்திலோ, உருவத்திலோ கொண்டு வர முயற்சி செய்வது கத்தி மேல் நடக்கும் ஒரு செயலைப் போன்றது. கடவுளை காட்டு அல்லது தெளிவு படுத்து என்று சொல்லும் எவராலும் காமத்தின் உச்சத்தையோ அல்லது அல்லது பசி எப்படி இருக்கும் என்றோ இன்னபிற வேறு தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட விசயங்களையோ வரையறை செய்யவே முடியாது.

வேண்டுமென்றால் அது இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று உவமைதான் கொடுக்க முடியுமே அன்றி பசி என்பதின் உருவத்தையும் அதை ஒருவன் எப்படி உணர்ந்தான் என்பதையும் படமாய் எழுத்தாய் சொல்ல முடியாது. இப்போது பசி என்று உங்களுக்கு சொல்லப்படும் போது மிகைப்பட்ட பேர்கள் அதை உணர்ந்து இருப்பதால் அதை ஓ..... இது மாதிரி இந்த நேரத்தில் வயிற்றில் அமிலம் சுரப்பதால் ஏற்படும் நிகழ்வா என்று உணர்கிறீர்கள்.

ஆனால் கடவுள் என்ற பதம் மூளைக்கு எட்டப்படாததாகவே எப்போதும் இருக்கிறது....! அதை உணர்ந்தவர் அதை உணர்ந்தவரிடம் அப்படியாகத்தானே இருந்தது கடவுள் அனுபவம் என்று கேட்டால் அவரும் அப்படியாகத்தான் இருந்தது என்று சொன்னால் இது புரியாத அல்லது உணராத மூன்றாமவருக்கு அவர்கள் இருவரும் பைத்தியக்காரர்கள் பொய்யர்கள் என்றாகிப் போவார்கள் சரிதானே...?

மதவாதிகள் செய்த பெரும் தவறு இது. நெறிப்படுத்த வேண்டுமானால் இவர்கள் மனிதர்களுக்கு நெறிமுறைகளை வகுத்தளித்ததோடு நின்றிருக்கலாம் மாறாக அதை மனிதர்கள் பின்பற்ற வேண்டுமென்று இவர்களை எல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி பயமுறுத்தி வைத்தது மகா அயோக்கியத்தனம். இப்படி பயமுறுத்தும் பொருளாகவே கடவுள் இருந்து விட்டதால்.. அதை மனிதன் ஆராய்ந்து கேள்விகள் கேட்டு அந்த பொய்யை உடைத்துக் கொண்டும் உடைப்பதிலேயும் மும்முரமாயிருக்கிறான்.

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் கற்பனை கடவுளர்களுக்கு ஒராயிரம் வணக்கங்கள் செய்ய பெரும் கூட்டமும் இருக்கிறது. வணக்கங்கள் செய்வது கூட அனுமதித்து விட்டுப் போகலாம் ஆனால் அந்த வணக்கத்தின் பேரால் மதம், தனித்தனி கடவுள், சாதி, மதம், பூஜை, பரிகாரம், சாமியார், மந்திரவாதி என்று அபத்தமாய் போய்க் கொண்டிருக்கிறான் பக்திமார்ககத்தில் உள்ள மனிதன்..........!

இதனால் யாருக்கு சுமையோ இல்லையோ.......ஆனால் பவித்ரமான பரிசுத்த சத்திய இறை என்னும் பொருளற்ற பொருள், அன்பு ரூபம் எல்லாமான பெருஞ்சக்தி மிகச்சிலராலேயெ கண்டு கொள்ளப்பட்டு விளக்கங்கள் கொடுக்க இயலாமல் இரகசியமாய் போய்விட்டது.

இயல்புகள் எல்லாம் வழமையில் இல்லாமல் போனதால் இயல்பாய் இருக்கும் மனிதர்கள் அதியசமாய்த்தான் பார்க்கப்படுகிறார்கள். என்னைக் கேட்டார் ஒரு நண்பர்......கடவுளை எப்படி உணர்வது...இவ்வளவு பேசுகிறாயே.. என்னிடம் எடுத்து உணர வைக்க முடியுமா? என்று பொட்டில் அடித்தது போல கேட்ட நண்பர்.....பல புத்கங்களைப் படித்தவர் அறிவியல் அறிவில் கில்லாடி, நவீன செய்திகளால் தன்னை நிறைத்து வைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய அறிவாளி, சித்தாந்தகளை எல்லாம் கரைத்துக் குடித்த சிந்தனைவாதி........நான் ஒரு சிறு குழந்தைதான் அவரின் அறிவுக்கு முன்னால்............

இந்த கேள்விக்கு எப்படி பதில்சொல்வது என்று யோசிக்கமல் நான் சொன்னேன் கண்டிப்பாய் முடியும் அண்ணா என்று சொல்லிவிட்டு ஆனால் என்னிடமிருந்து வரும் ஒரே ஒரு நிபந்தனையை நீங்கள் ஏற்கவேண்டுமென்று ஒரு வேண்டுகோளையும் வைத்தேன். கடவுளை உணரவைக்க முடியுமென்று சொன்னதை கேட்ட அவர் சிலிர்த்து எழுந்து அவரின் மூளையை உலுக்கிவிட்டு.. என்னைப் பார்த்து கேட்டார்..என்ன ? என்ன? உன் நிபந்தனை என்று சற்று கோபமாகவே கேட்டார்.

இந்த இடத்தில் ஒரு விசயத்தை இடைச்சொருகலாய் சொல்லிவிடுகிறேன்......

றிவாளிகள் எப்போதும் கோபம் கொள்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் அறிந்து வைத்திருப்பது அவர்களுக்கு பொக்கிஷம் என்று நினைக்கிறார்கள் அதனாலேயே ஒரு கோபமும் எனக்கு கீழ்தான் நீ என்ற மமதையும் வந்து விடுகிறது. ஆனால் புத்திசாலிகள் அமைதியாயிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் கற்றதெல்லாம் குப்பை என்று.... சரி இப்போது சூழ் நிலைக்குள் மீண்டும் வாருங்கள்.........

என்னை கடவுளை உணரவை அவர் அதட்டினார்.........! நான் பொறுமையாக சொன்னேன் அண்ணா.. முதலில் என் வேண்டுகோள்....என்னவென்றால்........நீங்கள் கற்றறிந்த எல்லாம் இந்த கணமே மறந்து விடுங்கள். என்னிடம் எந்த சித்தாந்தமோ வாதமோ உதாரணமோ காட்டக் கூடாது. அதாவது உங்கள் தலையில் இருக்கும் லைப்ரரியை ஒன்று எரித்து விடுங்கள் இல்லை உங்களை விட்டு தூர வைத்துவிட்டு வாருங்கள் என்று சொன்னேன்...........!

வர் திடுக்கிட்டார்.......ஆனால் அதுதான் உண்மை... பல கருத்துக்களோடு இருப்பவருக்கு எப்படி உணரவைப்பது? நீங்கள் நீங்களாய் இருந்தால் அந்த நொடியில் கடவுள் உங்களுக்குள் பிரசன்னமாவதை யாரலும் தடுக்க முடியாது. கடவுள் எங்கோ இல்லை..உங்கள் தத்துவங்களும் கருத்துக்களும் மதமும், கோட்பாடுகளும் அவரை அழுத்திப் பிடித்து கீழே வைத்திருக்கின்றன. அவற்றை எல்லாம் தள்ளிவிட்ட பிறகு மிச்சமிருப்பது எதுவோ அதுவே கடவுள். இதை ஆன்மீகத்தில் நேதி.. நேதி நேதி என்று சொல்வார்கள். இதுவல்ல, அதுவல்ல. அதுவுமில்ல என்று எல்லாம் புறம் தள்ளி மிச்சமிருப்பதுதான் கடவுள்.

ஒரு புதிய எழுத்தை படைப்பவனும், ஓவியம் வரைபவனும், சினிமா எடுப்பவனும், புதிதாய் செய்யும் எல்லா அறிவும் நேரிடையாக அவனது கற்பனையில் இருந்து வருகிறது. கற்பனையின் மூலம் சூட்சுமம், சூட்சுமத்தின் மூலம் ஆதி, ஆதியின் மூலம் அனாதி ஆனாதியின் பெயர்...........கடவுள்.

இப்போ சொல்லுங்க ….படைப்பாளி என்பவன் மதிக்கப்பட வேண்டியவனா இல்லையா...?

அதிகம் பேசி விட்டேன். வாசித்து விட்டு.........இதையும் மறந்து விட்டு மெளனியுங்கள்...உங்களிடமும் கடவுள் பிரசன்னமாவார் என்பது நிதர்சனம்.!

அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!


தேவா. S

34 comments:

சௌந்தர் said...

என்ன தேடலா

சங்கவி said...

அழகான படைப்பு...

ம.தி.சுதா said...

super... very nice

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

சுபத்ரா said...

//முதன் முதலாய் மூளைக்குள் ஏறும் எந்த செய்தியும் நமக்குப் பிடிபடுவதில்லை. அது... விளங்கிப் புரிந்து கொள்ளவேண்டியதாகவே இருக்கிறது.//

அதனால் தான் சிறு வயதில் எதற்கெடுத்தாலும் நாம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறோமா?

//இது புரியாத அல்லது உணராத மூன்றாமவருக்கு அவர்கள் இருவரும் பைத்தியக்காரர்கள் பொய்யர்கள் என்றாகிப் போவார்கள் சரிதானே...?//

சரிதான்.

//இப்படி பயமுறுத்தும் பொருளாகவே கடவுள் இருந்து விட்டதால்.. அதை மனிதன் ஆராய்ந்து கேள்விகள் கேட்டு அந்த பொய்யை உடைத்துக் கொண்டும் உடைப்பதிலேயும் மும்முரமாயிருக்கிறான்.//

நியூட்டனின் மூன்றாம் விதியா தேவா?

சேலம் தேவா said...

// நீங்கள் நீங்களாய் இருந்தால் அந்த நொடியில் கடவுள் உங்களுக்குள் பிரசன்னமாவதை யாரலும் தடுக்க முடியாது.//

உண்மைதான்..!! நல்ல சிந்தனை..!!

dheva said...

சுபத்ரா.@ உண்மைதான்..அறிவில் பதியப்படாத விசய்ங்கலை சிறுவயதில் இருக்கும் ஒரு வெகுளித்தனதால் கேள்விகள் கேட்டு அறிந்து கொள்ள முற்படுகிறோம்.

ஆனால் வளர்ந்த பின் புரியாத விசயங்களில் உள் செல்லாமல் விட்டு விடுகிறோம். அங்கே கேள்விகள் இல்லை அதனால் பதில்களும் இல்லை.

ஆமாம். நியூட்டனின் மூன்றாம் விதியேதான்.!

புரிதலுக்கு நன்றிகள் சுபத்ரா!

dheva said...

செளந்தர்..@ தேடலேதான் தான் தம்பி..!

சௌந்தர் said...

@@@சுபத்ரா
அதனால் தான் சிறு வயதில் எதற்கெடுத்தாலும் நாம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறோமா?////

அதான் நீ இன்னும் சின்ன பொண்ணு தான்

சரிதான்///

டீச்சர் சொல்லிட்டாங்க

நியூட்டனின் மூன்றாம் விதியா தேவா?///

ஆமா அந்த படம் தான்

மங்குனி அமைச்சர் said...

மனிதர்கள் பின்பற்ற வேண்டுமென்று இவர்களை எல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி பயமுறுத்தி வைத்தது மகா அயோக்கியத்தனம். /////

இங்க தான் பிரச்சனையே ஆரம்பிக்குது

கோமாளி செல்வா said...

// இன்னும் எவ்வளவோ ஆனால் ஒரு படைப்பு என்பது முற்றிலும் இதற்கு முன் இருந்தவைகளோடு ஒத்துப் போகாததாகவும் புதுமையான உணர்வுகளைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.///

உண்மைதான் அண்ணா ., என்னோட மொக்கையின் பிறப்பு மாதிரி .. ஹி ஹி ஹி ..

கோமாளி செல்வா said...

//இப்படி பயமுறுத்தும் பொருளாகவே கடவுள் இருந்து விட்டதால்.. அதை மனிதன் ஆராய்ந்து கேள்விகள் கேட்டு அந்த பொய்யை உடைத்துக் கொண்டும் உடைப்பதிலேயும் மும்முரமாயிருக்கிறான்.
//

இந்த விஷயம் தான் அண்ணா நாம் கண்காணிக்க வேண்டியது .. பொதுவாக ஒரு நாத்திகர் அல்லது கடவுள் இல்லையென்று சொல்ல்பவர் இருக்கிறார் என்றால் அவரிடம் கடவுளை நம்புகிறேன் என்று சொல்லும் ஒருவர் " நீ கடவுளை நம்பு , இல்லையென்றால் கடவுள் உன்னை தண்டிப்பார் " என்று வாக்குவாதம் செய்கிறார் .. ஆனால் அதை கடவுள் இல்லையென்று சொல்பவர் மறுக்கிறார் .. கடவுளை நம்புவரும் சில காலங்கள் மத தலைவர்கள் கூறித்து போல கடவுளை நம்புகிறார் .. அவரைப் பொறுத்த வரை கடவுளை நம்பினால் இங்கே நல்லது அதாவது பணம் , பொருள் போன்றவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடவுளை நம்புகிறேன் என்று கூறிவிட்டு கோவில்களுக்கு செல்வதும் பூஜைகள் செய்வதுமாக இருக்கிறார் .. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு இவரது எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவது இல்லை .. இதனால் அவரும் கடவுள் இல்லை என்ற கோட்பாட்டிற்கு வருகிறார் .. இங்கே இருவருமே சரியான பதில் செல்லவில்லை என்பதே கொடுமை ..!!

சுபத்ரா said...

//பவித்ரமான பரிசுத்த சத்திய இறை என்னும் பொருளற்ற பொருள், அன்பு ரூபம் எல்லாமான பெருஞ்சக்தி//

சமுதாயத்தில் உயர்வு தாழ்வு பேதங்கள் இருக்கும்வரை கடவுளை அன்பு ரூபமுடையவர் என்பதை எல்லோராலும் ஒத்துக்கொள்ள இயலவில்லையே. ஒருவன் செல்வச்செழிப்புடன் பிறக்கிறான். எல்லாச் சுகங்களையும் அனுபவிக்கிறான். அவனுக்கு அருகே மற்றொருவன் பிச்சைக்காரனாகப் பிறக்கிறான். சிலர் ஊனமாய்..சிலருக்கு வாழ்வே பிரச்சனைகள் மிகுந்ததாய்.. இப்படி இருக்கும் போது, கடவுள் அன்புரூபமானவர் என்று கூறினால் மனிதனால் ஒத்துக்கொள்ள முடியாமல் போகிறது.

பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” படித்துப் பார்த்தால் கடவுளின் இருப்பு பற்றிய நிறைய கேள்விகள் நம் மனதில் எழும் தேவா.நீங்கள் அந்தப் புத்தகம் படித்ததுண்டா?

சுபத்ரா said...

//பல புத்கங்களைப் படித்தவர் அறிவியல் அறிவில் கில்லாடி, நவீன செய்திகளால் தன்னை நிறைத்து வைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய அறிவாளி, சித்தாந்தகளை எல்லாம் கரைத்துக் குடித்த சிந்தனைவாதி//

நாத்திகர்களில் நிறைய பேர் இதைப் போல மெத்த படித்தவர்களாக இருப்பதை நான் பார்க்கிறேன் தேவா.

சுபத்ரா said...

//புத்திசாலிகள் அமைதியாயிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் கற்றதெல்லாம் குப்பை என்று//

HMMM..GREAT! :-)

//அதாவது உங்கள் தலையில் இருக்கும் லைப்ரரியை ஒன்று எரித்து விடுங்கள் இல்லை உங்களை விட்டு தூர வைத்துவிட்டு வாருங்கள் என்று சொன்னேன்...........!//

சூப்பர்.

//அவற்றை எல்லாம் தள்ளிவிட்ட பிறகு மிச்சமிருப்பது எதுவோ அதுவே கடவுள்//

செம...செம.. :-)

//படைப்பாளி என்பவன் மதிக்கப்பட வேண்டியவனா இல்லையா//

போற்றப்பட வேண்டியவன்.
மொத்தத்தில் அழகான பதிவு. நன்றி..

dheva said...

சுபத்ரா..@

நான் படிச்சது இல்ல ஆன கண்டிப்பா படிக்கிறேன். அறிமுகம் செஞ்சு வச்சதுக்கு மிக்க நன்றி.

ஒரு விசயம் சொல்றேன்....சமுதாய ஏற்றத்தாழ்வு என்பது வாழ்வியலின் ஒரு பகுதி. கடவுள் இருக்குன்னு சொல்றவங்க இல்லேன்னு சொல்றவங்க, தப்பு பண்றவங்க நல்லது பன்றவங்க எல்லாமே சேர்ந்ததுதான் இருப்பு நிலை. நல்லா யோசனை பண்ணி பாத்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமே.. மனித மனம்தான். மற்ற ஜீவராசிகளில் ஏற்றத்தாழ்வு இல்லை.

ஏற்றத் தாழ்வினை சரி செய்ய சித்தாந்தங்கள் பேசினால் படித்தால் மட்டும் போதது..மனங்கள் சீரமைக்கப்பட வேண்டும். அதனால்தான் மேற்கத்திய நாடுகள் அறிவியலும் தத்துவங்களும் பயின்று முன்னேறிய காலத்தில் கிழக்கத்தியர்களாகிய நாம் அகம் நோக்கி சென்று ஓராயிரம் மனோதத்துவ முறைகளைக் கொண்டு வந்து தியானம், யோகா என்று சொல்லி மனிதனின் மனதைப் பக்குவப்படுத்தப் பார்த்தோம். அதுவு முழு வீச்சில் செயல்படாமல் மத்திய கிழக்கு ஆசியாவில் இருந்து வந்த மக்களின் தங்களின் வேதங்களை திராவிடர்கள் மீது ஏவ எல்லாம் சிதிலமாகிப் போனது.

கடவுள் என்பவர் அறியப்படவேண்டியவர் அல்ல மாறாக ஒரு சுவாசத்தினைப் போல உணரப்படவேண்டியவர். புரிதலும் விளங்குதலும் தெளிவான சூழலை உருவாக்கும் ஆனால் ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் எக்காலத்திலும் இருக்காது ஏனென்றால் அது பிரபஞ்ச நியதி.....முரண் இருந்தால்தான் கேள்விகள் எழும்..அப்போதுதான் பதில்களும் தெளிவுகளும் ஏற்படும்....அதுதான் பிரபஞ்ச ரகசியமும் கூட..!

சே.குமார் said...

அழகான படைப்பு. நல்ல சிந்தனை.

சுபத்ரா said...

Thank you Dheva.. Just check the below link when u r free to.

http://www.boloji.com/spirituality/051.htm

:-)

dheva said...

நன்றி சுபத்ரா..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ சுபத்ரா..!

Thaankalukku enna purinthatho vilakkavum...

கிளியனூர் இஸ்மத் said...

தேவா சூப்பரா கலக்குறீங்க சீக்கிரமா துபாயில ஒரு ஆசிரமம் திறந்திடுவோம்...

சுபத்ரா said...

//////சௌந்தர் said...

@@@சுபத்ரா
அதனால் தான் சிறு வயதில் எதற்கெடுத்தாலும் நாம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறோமா?////
அதான் நீ இன்னும் சின்ன பொண்ணு தான்
சரிதான்///
டீச்சர் சொல்லிட்டாங்க//////

ஐயோ...நீ மட்டும் என்ன பெரிய தாத்தாவா?

//////நியூட்டனின் மூன்றாம் விதியா தேவா?///

ஆமா அந்த படம் தான்//////

:-) :-)

எஸ்.கே said...

//ஒரு புதிய எழுத்தை படைப்பவனும், ஓவியம் வரைபவனும், சினிமா எடுப்பவனும், புதிதாய் செய்யும் எல்லா அறிவும் நேரிடையாக அவனது கற்பனையில் இருந்து வருகிறது. கற்பனையின் மூலம் சூட்சுமம், சூட்சுமத்தின் மூலம் ஆதி, ஆதியின் மூலம் அனாதி ஆனாதியின் பெயர்...........கடவுள். //
வித்தியாசமான சிந்தனை! அருமை1

சுபத்ரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ சுபத்ரா..!

Thaankalukku enna purinthatho vilakkavum...//

தங்களுக்கு எதுவும் புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது... :)

அதற்காக நான் பரிந்துரை செய்வது, “பதிவைப் படித்துப் பார்க்க வேண்டும்” என்பது :-)

கோமாளி செல்வா said...

// கிளியனூர் இஸ்மத் said...
தேவா சூப்பரா கலக்குறீங்க சீக்கிரமா துபாயில ஒரு ஆசிரமம் திறந்திடுவோம்..///அவரு ஆசிரமம் திறக்கறதே தப்புப்பா ., போய் புள்ள குட்டிங்களா படிக்க வைங்க அப்படின்னு சொல்லுறார் .. நீங்க போய் இதெல்லாம் சொல்லிக்கிட்டு ..!!

Arun Prasath said...

அன்பு ரூபம் எல்லாமான பெருஞ்சக்தி மிகச்சிலராலேயெ கண்டு கொள்ளப்பட்டு விளக்கங்கள் கொடுக்க இயலாமல் இரகசியமாய் போய்விட்டது.///

நீங்க எப்டி அண்ணே? சீரியஸ்சா கேக்கறேன், காமெடின்னு நெனசுகாதீங்க :)

Kousalya said...

//பெருஞ்சக்தி மிகச்சிலராலேயெ கண்டு கொள்ளப்பட்டு விளக்கங்கள் கொடுக்க இயலாமல் இரகசியமாய் போய்விட்டது//

பல ஆர்ப்பாட்டமான அலங்காரங்களுக்கு முன் எடுபடவில்லை அவ்வளவே... மாறாக கண்டுகொண்டவர்கள் நிம்மதியாகவே இருக்கிறார்கள்.

//பல கருத்துக்களோடு இருப்பவருக்கு எப்படி உணரவைப்பது? நீங்கள் நீங்களாய் இருந்தால் அந்த நொடியில் கடவுள் உங்களுக்குள் பிரசன்னமாவதை யாரலும் தடுக்க முடியாது.//

இந்த மாதிரி ஒரு நிலைக்கு மனிதன் வருவது சுலபம் இல்லை...அப்படி வந்தவர்கள் ஒத்துகொள்கிறார்கள் எனக்குள் கடவுள் இருக்கிறார் என்று...

Kousalya said...

படைப்பாளி என்பவன் யார் என்பதையும் அவனது படைப்புகள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்விகளுக்கு பதில் இந்த பதிவில்.... ஒவ்வொரு படைப்பாளியும் மதிக்கப்பட வேண்டியவன் தான்.

நம்மை நமக்குள் தேட இந்த தேடல் நிச்சயம் உதவும்...

நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

காலைல லிங்க் தந்துலலிருந்து மூன்று வாட்டி படிச்சிட்டேன் .....இப்ப தான் லைட்அ எறும்பு கடிச்ச மாதிரி புரியுது ............இன்னும் ரெண்டு வாட்டி படிச்சிட்டு வரேன் .வ ர்ர் ர் ர் r டட ட ட

இம்சைஅரசன் பாபு.. said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ சுபத்ரா..!

Thaankalukku enna purinthatho vilakkavum...//

என் இனம் டா நீ

jothi said...

nice

வினோ said...

நமக்குள் பல கேள்விகளை கேட்டு பதில்கள் சொல்லும் பதிவு.. அண்ணா, படைப்பாளியும், படைப்புகளும் மதிக்கப் பட வேண்டும்...

ஹேமா said...

தேடலையே தேட வைக்கிறீர்கள் தேவா.படைப்பாளி படைப்பின் தரத்தை வைத்தே மதிக்கப்படுகிறான் !

rk guru said...

///புத்திசாலிகள் அமைதியாயிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் கற்றதெல்லாம் குப்பை என்று///

சரிதான் நானும் அமைதியாத்தான் இருக்கேன்...நீங்களும் அமைதியாத்தான் இருகீரிர்கள். நல்ல பதிவு

Anonymous said...

நான் யார் என்ற தேடல் மனிதனுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. இது பலருக்கு அவசியமுமில்லை, தேவையுமில்லை.
மகிழ்ச்சியும், துக்கமும் இயல்பாக வருவது. தேடத்தேட இரண்டையும் தொலக்கக்கூடிய அபாயமும் இருக்கிறது.
நீண்ட ஆயள் வேண்டுமென்ற ஆசை சிறுவயதில் உண்டு. அதன் கூடவே ஒரு சந்தேகமும் வந்தது. நமக்கே வயதானால்
நம்முடைய அம்மா அப்பாவுக்கும் வயதாகி இருக்குமே? வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்? கேள்வி அடுத்து ஒரு கேள்வி!
ஏன் என்ற கேள்வி என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
கண்ணதாசன்'
சுவாரசியமாகத் தொடர்கிறேன்