Pages

Monday, December 6, 2010

தழல்...!

சுற்றி எழும் நெருப்பின்
பொசுங்கலின் வீச்சம்
காற்றில் பரவவிடுகிறது
மனித மமதைகளை!

தெறித்து விழுந்து...
ஜுவாலைகளில் பொடிந்து
காற்றில் கால்சியத்தையும்
மெக்னீசியத்தையும் கலக்கிறது
உருவங்களை கட்டிக்காத்த
எலும்புக் கூட்டம்...!

அக்னியின் ஒற்றைச் சீற்றம்
அழைத்துப் போகிறது
வெள்ளை மூளைகளை
பஸ்பங்களின் படிமாணத்துக்குள்!

சுருங்கிய தோல்கள்
கழன்றனவா? இல்லை கருகினவா?
அடையாளம் சொல்லக்கூட
ஆளில்லாமல் காற்றில்
எரிந்து போகின்றன
மனித உடல்கள்...!

எல்லாம் பொழிந்து
நொறுங்கும் பிணமெரியும்
அர்த்த ராத்திரிகள்...எல்லாம்
எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?


தேவா. S

31 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

I am FIRST

LK said...

//எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?
//

விடை இல்லை

இம்சைஅரசன் பாபு.. said...

யாரயோ நீ ஒரு செத்த பிணம் .உன்னை எரிச்சிருவேண்டா ன்னு சொல்லுறீங்க யாரைன்னு தெரியல .............

dheva said...

பாபு...@ சரி கண்டுபிடி...பார்ர்போம்...!

sakthi said...

எல்லாம் பொழிந்து
நொறுங்கும் பிணமெரியும்
அர்த்த ராத்திரிகள்...எல்லாம்
எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?

விடையறியா கேள்வியிது

dheva said...

பிணம் அர்த்த ராத்திரியில்தான் எரிய வேண்டும் என்று அவசியமில்லை...என்றாலும்.. மிகையாய் எரியூட்டல் இரவுகளில் நிகழ்வதால் அந்த பதத்தை கையாண்டு கொண்டேன்.

யாரும் கேக்கலேன்னு விட முடியாது.. மாப்ஸ் டெரர் கேப்பான்ல... கேப்பான்ல.. அதன் அட்வான்ஸா சொல்லிட்டேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva said...

//விடையறியா கேள்வியிது//

சக்தி நிஜமா விடையில்லையா இல்லை நமக்குத் தெரியலையா?

LK said...

தேவா, இந்தக் கவிதையில் நீங்கள் பிணம் எரிதலை குறியீடாக பயன்படுத்தி இருகீர்களா இல்லை வெளிப்படையான பொருளிலா ? அதை சொல்லுங்கள். அதன் பின் நாம் அந்த கேள்விக்கு செல்லலாம்

dheva said...

எல்.கே...@ வெளிப்படையான பொருளில்தான்....

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//சுருங்கிய தோல்கள்
கழன்றனவா? இல்லை கருகினவா?
அடையாளம் சொல்லக்கூட
ஆளில்லாமல் காற்றில்
எரிந்து போகின்றன
மனித உடல்கள்...!//

என்னமோ சொல்ல வரீங்க ., ஆனா என்னனுதான் புரியல ..!

Arun Prasath said...

என்னமோ சொல்ல வரீங்க ., ஆனா என்னனுதான் புரியல ..! //

எனக்கும் தான்...

LK said...

தேவா , நமது மனம் என்று உடலில் தனியாக எதுவும் இல்லை. மூளையில்தான் அனைத்தும் பதிவாகின்றன (விஞ்ஞான கூற்று ). அந்த மூளை செயல்படுவதை நிறுத்தினாலே ஒருவன் இறந்தவன் ஆகிறான் . மூளையில் உள்ள செல்கள் இறக்கும் பொழுது அவனது சிந்தனைகளும் இறக்கின்றன

dheva said...

எல்.கே. @ இறப்பிற்கு பின் மனம் என்ற ஒன்று இல்லை என்கிறீர்களா...? மனிதன் இறந்தவுடன் ஒன்றுமில்லை...அவ்வளவுதானா?

பிரியமுடன் ரமேஷ் said...

//தெறித்து விழுந்து...
ஜுவாலைகளில் பொடிந்து
காற்றில் கால்சியத்தையும்
மெக்னீசியத்தையும் கலக்கிறது
உருவங்களை கட்டிக்காத்த
எலும்புக் கூட்டம்...!

அருமை...

//எல்லாம் பொழிந்து
நொறுங்கும் பிணமெரியும்
அர்த்த ராத்திரிகள்...எல்லாம்
எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?

பயங்கரம்.. நடுங்குதுங்க.. ஒரு மாதிரி பயமா இருக்கு இப்பவே..

LK said...

தேவா , ஆன்மா அது இருந்த உடல் என்று பார்த்தாலும், நினைவுகள் அற்று விடுகின்றன. பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப அதற்கு வேறு உடல் கிடைக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சுற்றி எழும் நெருப்பின்
பொசுங்கலின் வீச்சம்
காற்றில் பரவவிடுகிறது//

உங்க ஊர்ல ரூம் ஸ்பிரே இல்லியா?

dheva said...

எல்.கே. @ நாம் உறங்குகிறோம் அந்த நேரத்தில் மூளை வேலை செய்யுமா? சரி. அப்படியே வேலை செய்தாலும் மூளையில் பதியப்பெறாத புதுவிசங்கள் கனவுகளாக வருகிறதே...அது எப்படி?

dheva said...

//உங்க ஊர்ல ரூம் ஸ்பிரே இல்லியா?//

ரமேஷ்..@ வந்துட்டான்யா... வந்துட்டான்யா...!

வெறும்பய said...

அண்ணே நால்லாயிருக்கீங்களா...

நீங்க சாதரணமா தேடினாலே கண்டு பிடிக்கிறது கஷ்டம்.. இப்போ தொலைந்த மனித மனைகளை வேற தேடுறீங்க...


அப்போ நான் வர்ர்ரர்ட்ட்டா

சௌந்தர் said...

எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?////

இதை தான் பல சாமியார்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள்....

மனம் சொந்தகாரங்க கிட்ட தான் இருக்கும் ....இறந்தவர் நல்லது செய்தால் நல்ல நினைவா இருக்கும் கெட்டது செய்தால் கெட்ட நினைவா (மனம்) இருக்கும்

வினோ said...

இந்த தேடுதலுக்கு பல விடைகள் கிடைக்கும் என்கிறேன்.. சரியா அண்ணா?

Chitra said...

சில கேள்விகளுக்கு பதில்களை தேடியே வாழ்க்கை கடந்து செல்கிறது. நல்லா எழுதி இருக்கீங்க.

கே.ஆர்.பி.செந்தில் said...

அமர்க்களமான கவிதை தேவா...

nis said...

இறுதி கவி வரிகள் மிரட்டுகிறது

எஸ்.கே said...

அருமை! மிரட்டலான கவிதைதான்!

LK said...

தினமும் தூங்குவதற்கும் , இறுதி தூகதுக்கும் வித்யாசம் இருக்கே பாஸ்

Ananthi said...

எரித்து விடும் தழலில்..
எரிந்து விடும் மனித உடலுடன்..
எக்காளமிட்ட மமதைகளும்....
எரிந்து பொசுங்குவதே...
எங்கும் வியாபித்திருக்கும்
எட்டாத உண்மை... அதனை
எளிதாய் கவிதையில் வடித்து..
எமக்கு அதைக் கொடுத்ததற்கு....

ரெம்ப நன்றிங்கோ... :-))) (நாங்களும் சீரியஸ்-ஆ இருப்போமில்ல..... :-) )

(ஸூஊஊஊஊஊஊ ..... எம்புட்டு நேரம் தான் தூய தமிழ்-ல பேசுறது........

ஆமா.. எனக்கு ஒரு சந்தேகம்... இங்க மட்டும் தான் இப்புடியா.. இல்ல வீட்டுலயும்.... இப்படி தான் சீரியஸ்-ஆ பேசுவீகளா........??

ஆத்தாடி.. கம்பு வருது.. நா இல்ல.. நா இல்ல... ஏதோ எனக்கு வேண்டாத பயபுள்ள, என்ன மாதிரியே போடுதுங்க.....):D :D

Ananthi said...

////சுற்றி எழும் நெருப்பின்
பொசுங்கலின் வீச்சம்
காற்றில் பரவவிடுகிறது//

உங்க ஊர்ல ரூம் ஸ்பிரே இல்லியா?///

//உங்க ஊர்ல ரூம் ஸ்பிரே இல்லியா?//

ரமேஷ்..@ வந்துட்டான்யா... வந்துட்டான்யா...! ////ஹா ஹா ஹா... :D :D :D

ROFL...!!

ஹேமா said...

மனங்கள் அடுத்தவர் மனங்களுக்குள் வாழும்தானே தேவா.கவிதை அற்புதம் !

விக்கி உலகம் said...

அருமை

இப்படிக்கு யாரு வரலன்னாலும், ஓட்டு போடலைன்னாலும் தளம் அமைச்சி ஓட்டு போடுவோர் சங்கத்து பிரஜை.
http://www.vikkiulagam.blogspot.com/

பால் [Paul] said...

மிக நன்று..!!பல வரிகள் நிறைய யோசிக்க வைக்கிறது..!!