Skip to main content

படம்...!




















படம் பார்க்கும் ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும்...சரி ட்ரெய்லரோட அவசியம் என்ன? ஒரு ஐடியா... என்ன செய்ய போறோம் எது பத்தி பேசப்போறோம்னு ஒரு பிரிவியூ அவ்ளோதான்...!

கலாச்சாரம் (அப்பாடா....... தமிழ்ல எழுதியாச்சு..) பற்றி மொத்தமாக பேசுகிறோமா.. ? கலாச்சார குழப்பங்களைச் சாடுகிறோமா? இல்லை.. அதன் ஒரு பகுதியான வாழ்வியல் நெறிகளைப் பற்றி பேசுகிறோமா? என்ற ஒரு தெளிவின்றி தோட்டாக்கள் எம்மவர் மீது பாய்ந்துள்ளது முதற்கண் கண்டனத்துக்குள்ளாகிறது.

மேலும் நமது சமுதாய குறைபாடுகளைச் சாடும் நம்மவர்களின் கண்கள் வேற்று சமுதாயத்தின் மீதும் ஆழமாக பதிந்திருக்கிறதா என்ற கேள்வியையும் பொதுவில் வைக்கிறேன். ஆழமாக என்ற பதத்தை யாம் உபயோகம் கொள்வதற்கு பின்னால் ஆழ்ந்த பொருள் உள்ளது எம் தோழர்காள்......

குறைபாடுகள் இல்லாத மனிதனோ, சமுதாயமோ, நாடோ இருக்கவே முடியாது என்பது திண்ணமான ஒன்று என்று கருத்தில் கொள்ளும் அதே சமயத்தில்..எமது சமுதாயமும் அதற்கு விதிவிலக்கன்று என்ற பிரபஞ்ச உண்மையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த வருத்தமோ அல்லது குற்ற உணர்ச்சியோ கிடையாது.

நமக்குள் இருக்கும் குறைபாடுகள் அல்லது குறைபாடுகள் என்று நினைக்கப்படுபவை எல்லாம்….

“ ஆராய்ந்து சீரமைக்கப்படவேண்டியவையா? அல்லது எள்ளி நகையாடி அடுத்த தலைமுறைக்கு அச்சமூட்டப்பட வேண்டியவையா?

நமக்கு எது தேவை என்று உட்பொருளோடு கருத்துக்கள் வெளியிடுதல் சிறந்ததா? அல்லது....

நமது ஆக்ரோசத்தில் ஒட்டுமொத்தமாய் ஒரு சந்ததியினரை கிழித்தெறிவது சிறந்ததா? “

ஆண் பெண் சேர்ந்து வாழ்தல் மட்டுமல்ல கலாச்சாரம் என்பது..! நண்பர்களே.... தயவு செய்து அந்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எமது கலாச்சாரத்தை உற்று நோக்காதீர்கள்..அந்த கண்ணாடி உங்களின் தனிப்பட்ட கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு வந்து வேறு தளத்திற்கு பயணிக்க வைத்து விடும்.

மிக ஆழமாக இதனுள் பயணிக்கும் முன்பு ஒரு சம்பவத்தை சொல்லிக்காட்டுவது சாலச் சிறந்ததாக இருக்குமென நினைக்கிறேன்.

ஒரு விடுமுறை தினத்தில் அமீரகத்தில் இருக்கும் ஒரு பெரிய பூங்கா ஒன்றுக்கு நாங்கள் ஒரு 7 குடும்பங்கள் சென்றிருந்தோம். ஆண்களும் பெண்களும் நிரம்பியிருந்த அந்த பூங்காவில் கண்ட காட்சிகள் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டுவதாய் இருந்தது...

நாங்களனைவரும் இந்தியர்கள்...ஒரு பக்கம் பெண்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க.. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க.. ஆண்கள் நாங்கள் அனைவரும் பார்பிக்யூ சிக்கன் சமைத்துக் கொண்டிருந்தோம்.

அவ்வப்போது பெண்களும் வந்து செல்ல...நாங்களும் அவர்களுடன் கலந்து பேசி சிரிக்க... ஒருவருக்கொருவர் இறுக்கமின்றி.. மிகத் தளர்வாக...ஒரு கட்டுக் கோப்புடன்.. அண்ணா... தம்பி , அக்கா என்று உறவுகள் சொல்லி கூப்பிட்டு வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களை அளாவளாவி வந்தோம்......அங்கே சூழல் மையப்பட்டு இருந்தது....

எமக்கு பக்கத்தில் ஒரு பிலிப்பினோ கூட்டம்..அரை குறை ஆடைகளுடன்....ஆணும் பெண்ணும் தொட்டு விளையாடி.. சிரித்து அடித்து.. இன்னும் நம்ம ஊர் ஸ்டுடியோல இருப்பது போல ஸ்டான்டில் கேமரா வைத்து போட்டோ எடுப்பதும்.. அவர்கள் அடித்து இருந்த டெண்ட்-க்கு முன்னாலேயே பொது வெளியில் உடைகள் மாற்றுவதும்... உணவினை பங்கிட்டு.. உண்பதுமாக இருந்தனர்.. அங்கே...கேளிக்கை மையப்பட்டு உச்சகதியில் இருந்தது.

கோணத்தை மாற்றுங்கள்...இந்தப்பக்கம். .ஒரு சூடானி கூட்டம்...மொத்தமாக வந்தார்கள் உணவினை சமைத்தே கொண்டு வந்திருந்தார்கள்... வந்தவுடன்.. 20 பெண்கள் வட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்கள்... நடுவே உணவு.. இருந்தது...! அவர்களைச் சுற்றி அவர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்....! இவர்கள் அனைவரும் உடல் முழுதும் சுற்றிய கலர் கலரான ஆடை அணிந்து முக்காடிட்டு இருந்த பெண்கள்....சரியா....!

இவர்களின் கணவர்களும் மற்றும் பதின்ம வயதை அடைந்த பையன்களும் கொஞ்சம் தூரம் தள்ளி இவர்களோடு சம்பந்தப்படாமல்... சுற்றி வட்டமாய் அமர்ந்து கொண்டு சிரித்து பேசி உணவருந்திக் கொண்டிருந்தார்கள்....அங்கே ஒன்று கூடல் மையப்பட்டு இருந்தது....

சரி தோழர்களே... பார்வையை இன்னும் கொஞ்சம் நீட்டித்து பூங்காவை ஒட்டிய கடற்கரையைப் பாருங்கள்.... ஆமாம் அரைகுறை ஆடையையும் தாண்டிய நிலையில் உடை அணிந்து வெட்டவெளி கடற்கரையில் கோக் குடித்துக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு வெள்ளையாக காட்சியளிப்பவர்கள்....மேற்கத்திய நாட்டை சேர்ந்தவர்கள்...அங்கே சூழலும், கேளிக்கையும், ஒன்று கூடலும் மையப்பட்டு இல்லை.. மாறாக ஓய்வு மையப்பட்டு இருந்தது....

இவற்றை காட்சிப்படுத்தலுக்கு பின் புலம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள் தோழர்களே...?

ஒரு விடுமுறை நாள் .. ஒரே பூங்கா....எத்தனை விதமான விருப்பங்கள்....? வேறுபட்ட நோக்கங்கள்..? ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை? ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு இருக்கின்றனரா? இல்லை எது இவர்களை வார்த்தது?

வியாக்கியானங்கள்...பேசுவதாய் இருந்தாலும் ஒவ்வொரு கூட்டத்தையும் பற்றி ஏழு எட்டு கட்டுரைகள் எழுதலாம்...? ஆனால் அறிவின் தெளிவு என்பது.... எப்போதும் விவாதங்கள் செய்வதிலேயே இருக்க விரும்புவது இல்லை.. மாறாக அது தீர்வுகளை நோக்கிப் பயணிக்கவே விரும்புகிறது....சரிதானே...?

இப்போது பகிரங்க கேள்வி ஒன்று வைக்கிறேன்....கலாச்சாரம் தவறு என்று சொன்னவர்களில் எத்தனை பேர்.. அவற்றுக்கு தீர்வு சொன்னார்கள்?

வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....

குற்றம் சொல்பவர்களா வரலாற்றின் நாயகர்கள் ???? அல்லவே...வழிக்காட்டியவர்களும் தீர்வு சொன்னவர்களும் தானே வரலாற்றின் பக்கங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள்...?

விரிவான பார்வைகளோடு.......காத்திருங்கள்....உறவுகளே!

திரைப்படம் தொடரும்....


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா...!


தேவா. S

Comments

இன்னிக்கு வடை எனக்கு....
//
வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....//

உண்மைதான்...
படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
Chitra said…
வியாக்கியானங்கள்...பேசுவதாய் இருந்தாலும் ஒவ்வொரு கூட்டத்தையும் பற்றி ஏழு எட்டு கட்டுரைகள் எழுதலாம்...? ஆனால் அறிவின் தெளிவு என்பது.... எப்போதும் விவாதங்கள் செய்வதிலேயே இருக்க விரும்புவது இல்லை.. மாறாக அது தீர்வுகளை நோக்கிப் பயணிக்கவே விரும்புகிறது....சரிதானே...?


......அப்படி போடுங்க அருவாளை!
dheva said…
எல்.கே @ அட எடுத்த உடனே கிளைமாக்ஸ் வச்சா நல்லாவா இருக்கும்...!
Kousalya Raj said…
ஒரு பூங்காவிற்கு எங்களையும் அழைத்து சென்று, அந்த காட்சிகளை கண் முன்னால் விவரித்தது திரைப்படம் பார்க்கும் உணர்வை தந்தது...

//அறிவின் தெளிவு என்பது.... எப்போதும் விவாதங்கள் செய்வதிலேயே இருக்க விரும்புவது இல்லை..//

விவாதம் செய்தாலும் முடிவிலாவது தீர்வு ஒன்றை சொல்வதில் தான் இருக்கிறது அறிவின் திண்ணம்...
எனக்கும் பேச தெரியும், கேள்வி கேட்க தெரியும் என்பதில் நிச்சயம் மமதைதான் இருக்கும்.

வாழ்க்கை முறை தவறு என்று மேலோட்டமாக சொல்லி தங்களை சிறந்தவர்கள் என்று காட்டி கொள்வதை விட அதை எப்படி சரி படுத்தலாம், அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எடுத்து கூறவேண்டும்....

தீர்வுகளை எடுத்து சொல்வதற்கும் பகுத்தறியும் எண்ணங்கள் வேண்டும்...

தொடரும் பதிவிற்காக வெய்டிங்...

நன்றி தேவா...
Balajisaravana said…
டைட்டில் கார்ட் போட்டாச்சு.. :)
dheva said…
சித்ரா..@ அருவாள் எல்லாம் ஒண்ணுமில்லீங்க..! அமைதி விரும்பிகள்தானே நாம... ஹா..ஹா.. ஹா.!
dheva said…
கெளசல்யா..@ ஆமாம் கெளசல்யா.. ! காச் மூச்ன் கத்தி நம்ம பி.பி ஏன் மேல போகணும்.... நிதானம் உடம்புக்கு ரெம்ப நல்லதுன்னு நம்மூர்ல ஏகப்பட்ட பேரு சொல்லியிருக்காங்களே...!
dheva said…
சங்கவி..@ பருப்பு வடைங்களா இல்லை மெதுவடைங்களா.. ?
dheva said…
சங்கவி..@ பருப்பு வடைங்களா இல்லை மெதுவடைங்களா.. ?
dheva said…
பாலாஜி சரவணா.. @ ஆமாங் கண்ணு...போட்டாச்சி..!
இப்போதான் எழுத்து ரீல் முடிஞ்சி இருக்கா?

தொடருங்க... இடைவெளில பாப்கார்ன்னும் கோன் ஐஸ்சும் வந்துடனும்
அண்ணா... தாங்கள் அபுதாபியிலா அல்லது துபாயிலா?
தீர்வுகளை நோக்கி பயணிக்கும் உங்கள் கட்டுரையின் அடுத்த பக்கத்திற்காக காத்திருக்கிறோம்...
dheva said…
குமார்..@ நான் துபாயில்.. இருக்கிறேன்..! தாங்கள்...?
எடுத்து காட்டுகளும் அதன் பின் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கவுறையும் அப்புறம் நச்சுன்னு மண்டைல உறைகிற மாதிரி கேள்விகளும் அருமை ,,,,,,,,,
இருங்க பாப்கார்ன் வாங்கிட்டு வந்திடுறேன். செல்வா உனக்கு வடை வேணுமா?
இப்போ படம். அடுத்து பலான படமா?
Ramesh said…
//ஒரு விடுமுறை நாள் .. ஒரே பூங்கா....எத்தனை விதமான விருப்பங்கள்....? வேறுபட்ட நோக்கங்கள்..? ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை? ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு இருக்கின்றனரா? இல்லை எது இவர்களை வார்த்தது?

நியாயமான கேள்விகள்...


டைட்டில் கார்டு சூப்பரா போட்டுட்டீங்க.. ஓட்டுங்க.. ஓட்டுங்க.. தொடர்ந்து பாக்குறோம்...
படம் சரியான பாடமா இருக்கும் போல அண்ணா .,
அதே மாதிரி சன் பாத் என்பது மேற்க்கத்திய நாடுகளில் இருக்கிறது
அதனை இங்கே பார்க்கும்போது அது நமக்கு சற்று அருவருப்பாக தெரிகிறது...!
சரி அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் .. விரிவாகப் பேசுவோம் அண்ணா .!!
ஆமினா said…
//வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....

//

ஏன் என்பதை கேட்காமலேயே இருந்துபழகிவிட்டோமே! அதான் அவர்கள் சொன்னதுக்கும் தலையாட்டுகிறோம்.
@தேவா

மாப்ஸ் ட்ரைலர் ரொம்ப போடறியே படம் மொக்கையா இருக்கும் நினைச்சேன். பரவாயில்லை. நல்லா தான் இருக்கு.. ஆன உன்னை இதுக்காக எல்லாம் வாரம் வாரம் லீவ் விட்டு மம்சர் பார்க் அனுப்ப முடியாது மாப்பு... :)))
ஹேமா said…
தேவா...உங்கள் ஒவ்வொரு பதிவும் உங்கள் கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் சிந்திக்கத்தான் வைக்கிறது !
Padmahari said…
சிறு குழந்தையும் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும்படி எளிமையாக காட்சிப்படுத்தப்பட்ட எழுத்துப்படம்! வாழ்த்துக்கள் சகோ....

//இப்போது பகிரங்க கேள்வி ஒன்று வைக்கிறேன்....கலாச்சாரம் தவறு என்று சொன்னவர்களில் எத்தனை பேர்.. அவற்றுக்கு தீர்வு சொன்னார்கள்?

வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....//

இதுக்கெல்லாம் பதில்/வழி சொல்லிட்டா சண்டை ஏன் வருது, ஆரோக்கியமான விவாதம்தானே வரனும்?! அதை இந்த வலையுலகம் செய்ய முயற்சிக்கும் என நம்புவோம்.

அடுத்த காட்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்....

நன்றி,
பத்மஹரி.
http://padmahari.wordpress.com
படம் ஹிட்..!! இப்பவே நோட் பண்ணிக்கோங்க..!!
//இப்போது பகிரங்க கேள்வி ஒன்று வைக்கிறேன்....கலாச்சாரம் தவறு என்று சொன்னவர்களில் எத்தனை பேர்.. அவற்றுக்கு தீர்வு சொன்னார்கள்?//
இது ஒரு endless வினா தேவா...பதில் அப்படிங்கிறது அவங்க அவங்க சாதகமான யோசனையை,சூழலை பொறுத்து கூட அமையும்...நீங்களே சொன்னிங்க இல்லையா..அவங்க அவங்க உற்று நோக்கும் பார்வை!!...கலாச்சாரம் தவறுன்னு சொல்றவங்க பார்வையில் நீங்க இருந்த பார்க் கில் இருக்கும்போது பார்த்த கண்ணோட்டத்தை விட ,அவங்க பார்வையில் கலாச்சார மீறல்களை பட்டு எரிச்சல் அடஞ்சுருக்கலாம்...இது Individuality னு வகைபடுதவும் முடியாது..instinct னு நெறிபடுதவும் முடியாது...அவங்க அவங்களுக்கு ஒத்துவரும் வாழ்க்கை நெறியில் இருந்துக்க வேண்டியது தான்..:))) இப்போலாம் வாழ்க்கை கோட்பாடுகள் ease ஆய்ட்டு வருதோ..?:)) இதுவும் ஒரு endless பதில் தேவா...:)) உங்கள் பகிர்வுக்கு நன்றி..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...