
சுவாசம் தப்பப்போகும்
நீண்ட இரவொன்றில்
கலைதலாய் புரட்டுகிறேன்
பழுப்பேறிய என் வாழ்வின்
பக்கங்களை...படிந்திருக்கும் தூசுகள் தட்டி...
வலிவாய், சப்தமாய்
உடலின் முறுக்குகள் காட்டி...
குறுக்காய் நெடுக்காய் யோசனைகளில்
அலைந்து அலைந்து அகங்காரத்தில்
காட்சி மாற்றம் ஆன நாட்கள்
ஒரு போதும் சொல்லவில்லையே
அந்திமத்தின் அவஸ்தைகள் பற்றி?
கடவுள் உண்டு, இல்லை
வாதிட்ட வாதங்கள் எல்லாம்
நினைவுப் பகுதியில் செத்துப்போய்
உயிர் இருக்குமோ போகுமோ
என்ற ஒற்றைப் புள்ளியில்
மல்லாந்து கிடக்கிறதே என் மூளை!
செல்லரித்த புத்தகங்களும்
செத்துப் போன தத்துவங்களும்
பல்லிளித்து கிடக்கின்றன
பரண்களின் உச்சியில்....
பகுத்தறிவு மூளைக்கோ
இதுவரை தெரியவில்லை
அடுத்த கணத்தின் என் .....
வாழ்வின் நகர்தல் பற்றி...!
கனத்த இமைகளை ...
கலவரமாய் மூடுகையில்
எருமை வாகனத்தில்.. மீசைமுறுக்கி
வருகிறான்...மதம் மனதில்....
ஏற்றி வைத்த அடாவாடி எமன்....
எரிப்பதிலும் புதைப்பதிலும் ..
விவாதங்களாய் பேசி
காத்திருக்கும் உறவுகளுக்குத்
தெரியுமா விழித்திருக்கும்
என் செவிகள் பற்றி....
செத்துக் கொண்டிருக்கின்ற..
என்னுள் செல்களும் திசுக்களும்....
வற்றிக் கொண்டிருக்கின்றன
நினைவுகளில் தீராது...
என்றெண்ணிய என் வாழ்க்கை.....
தொடர்கிறது நெடிய...
கனத்த இரவின் நிமிடங்கள்
என்னின் சப்தநாடிகள் ....
அடங்கும் ஒரு உற்சவமாய்
உடலுக்குள் கூடிப் பரவுகிறது...
ஒருவித திண்மை...
சுவாசம் தடுமாற.....
நரம்புகள் இழுக்க
நா வரள....
புத்தி அழிய...
மனம் வெருள
நிலை குத்தி நிற்கிறது...
என் கண்கள்....
விடியலைக் காணா இரவோடு...
இதோ......இறந்தே விட்டேன் நான்..................!
தேவா. S
Comments
செத்துப் போன தத்துவங்களும்
பல்லிளித்து கிடக்கின்றன
பரண்களின் உச்சியில்....
பகுத்தறிவு மூளைக்கோ
இதுவரை தெரியவில்லை
அடுத்த கணத்தின் என் .....
வாழ்வின் நகர்தல் பற்றி...!//
நிதர்சன வரிகள்! என்ன தத்துவம் பேசினாலும் விவாதம் பண்ணினாலும் அடுத்த கணம் என்ன நடக்கப் போகுதுனு யாராலும் சொல்லமுடியாது தான்...! நினைச்சுப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு தேவா.
இதோ......இறந்தே விட்டேன் நான்..................!//
ஒவ்வொரு இரவைக் கடந்து விடியலில் விழிக்கும்போதும் ஒரு புதுபிறவி எடுத்தது போல் தான் :-)
- Helen Keller
- Leonardo da Vinci
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
'ஒன்றுமில்லை.......அலட்டிக்காதீங்க............எங்கேயும் போய் நீங்கள் சேரப் போவது இல்லை நிதானமா வாழுங்க '
-----DHEVA
கோடிட்ட இடத்தை நிரப்புக ச்சீ புள்ளி வைத்த இடத்தை நிரப்புக..
உள்ளே நடப்பதும் நிற்பதும் கரங்களில் இல்லை...
வாழ்வின் ரகசியங்கள் முடியும் தருணம் தழைக்கும் இன்னொரு வாழ்வு...
விவாதங்களாய் பேசி
காத்திருக்கும் உறவுகளுக்குத்
தெரியுமா விழித்திருக்கும்
என் செவிகள் பற்றி....//
மனதில் எதிரொலிக்கும் வரிகள். நல்பதிவு.
அருமை தேவா.....\\
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...
விவாதங்களாய் பேசி
காத்திருக்கும் உறவுகளுக்குத்
தெரியுமா விழித்திருக்கும்
என் செவிகள் பற்றி....///
இந்த்தகவித்தையும் எனக்கு புரிஞ்சிடுச்சு அண்ணா .
ஹி ஹி ஹி .. ஒருவேளை நான் வளர்ந்துட்டு இருக்கேமோ .?!