Pages

Wednesday, January 19, 2011

கேள்வி...?

தன்னை உணர்ந்த ஞானிகள் என்று சொல்பவர்கள் அதாவது ஞானமடைந்தவர்கள் (கௌதம புத்தர் முதல் கொண்டு இன்று இருக்கும் ஜக்கி வாசுதேவ் வரைக்கும்) மக்களை நல்வழிபடுத்த வேண்டும் என்று கிளம்பிவிடுகிறார்களே?. தன்னை உணர்ந்தவனுக்கு இங்கே என்ன வேலை. எதற்காக மக்களை திருத்துகிறேன் என்று கிளம்புகிறார்கள்.

புத்தரிடம் இருந்து கிளம்பிய யாரும் ஒரு ராமசாமியாகவோ, குப்புசாமியாக(அவர்கள் அவர்களாக) ஞானமடைவதில்லை. எல்லோரும் புத்தராக வேண்டும். எல்லோருக்கும் யார் குருவோ அவர்கள் மாதிரியே ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். நான் அவர்களின் சீடன் என்று சொல்லி பெருமைப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதை கிரகித்து அதை தத்துவமாக வைத்து அதையே வாழ்க்கையாகவும் கொள்கிறார்கள். இதுதான் தன்னை உணர்தலா?. இப்படி ஒரு கூட்டத்தை வைத்திருக்கத்தான் இவர்கள் தன்னை உணர்ந்தார்களா?.

தன்னை உணர்ந்த ஞானிகள் மக்களை விட்டு விலகி செல்லமாட்டார்களா?

- வேலு


வேலு உங்கள் கேள்வியின் கூர்மை என்னை ஆழமாகவே பயணிக்கவைத்தது.. இதற்கு பதிலை கருத்த்துப் படிவத்திலேயே கூட நான் போட்டிருக்கலாம் ஆனால்.... இதை ஒரு பதிவாக இட்டால் இன்னும் சிலருக்கு போய்ச்சேருமே என்று என் உள்முனைப்பு கூறியதின் விளைவாய் இதை தனிப்பதிவாகவே இட்டுள்ளேன்.

ஞானம் அடைதல் என்னு நிலையை எய்திய பின் ஏன் இவர்கள் மக்களிடம் இருந்து கொண்டு கூட்டத்தை கூட்டிக்கொண்டு இருக்கவேண்டும்...

பிரம்மத்தை உணர்ந்த பின்னரும் பிரம்மத்தின் தேவையாகவே சில பேர்களுக்கு, எல்லோருக்கும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிச் சொல்லகூடிய புத்தர்கள் தாங்கள் போதிப்பதின் சிறப்பினை தனியே எடுத்துக் கொள்வது இல்லை.. அதுவும் ஒரு பிரபஞ்ச நிகழ்வாகவே அமைந்து விடுகிறது. ஆனால் அந்த பிரபஞ்ச தேவை எல்லோரின் மூலமாகவும் செயல்படுத்தப்படுவது இல்லை.... பல நேரங்களில் ஆன்மீக உச்சத்தை அடந்தவர்கள் கூட மனதினைக் கொண்டு வழிநடக்கும் வழுக்கல்களும் சறுக்கல்களும் நிகழ்ந்துவிடுகின்றன....

இஸ்லாத்திலே சொல்லப்பட்டிருக்கும் ஸிராத்துல் முஸ்தகீம் என்ற மெல்லிய மயிரினும் நுண்ணிய (பாலம்)வழி போலத்தான் ஆன்மீகமும் அதன் உச்சநிலையான பரம் பொருளை அடையும் நிலையும் இங்கே போய்ச் சேர்பவர்களை விட வழுக்கி விழுந்து விடுபவர்கள் அதிகம்.

ஜக்கியும், புத்தரும் போதிக்கிறார்கள் அவ்வளவே.. என்னை துதியுங்கள்... என்னிடமே இருங்கள் என்று எதிர்பார்க்கமாட்டார்கள் என்று கொண்டாலும்.. இவர்களை பின்பற்றுவது யார்? சாதாரண மக்கள் இவர்கள்தான் சீராட்டுகிறார்கள் பாராட்டுகிறார்கள் போற்றூகிறார்கள்.. புத்தர்கள் என்று சொல்லக்கூடிய ஞான குருக்கள் பெரும்பாலும் எதனையும் போதிப்பதே இல்லை. மாறாக மனிதன் கொண்டிருக்கும் கற்பிதங்களையும், எதிர்பார்ப்புகளையும் உடைக்கவே முற்படுகிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை ஆன்மீகம் எனப்படுவது பெரும்பாலும் கற்றுக் கொடுப்பது அல்ல மாறக தன்னிடம் வருபவரின் கேள்விகளை அழித்து அவரை இயல்பாக்குவது. ஓஷோ சொல்வது போல ஞானமும், இறைத்தன்மையும் எங்கேயோ இருக்கிறது என்று அதை நாம் தேடி அடைய வேண்டும் என்று எண்ணுவதே தவறு... அது எங்கேயோ இல்லை.. நம்மிடமே இருக்கிறது நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது அகக் கண்களை திறக்க வேண்டியது மட்டுமே....!

தத்துவங்களையும், கருத்துக்களையும் தெரிந்து கொண்டு அதை பத்து பேரிடம் சொல்லி தான் பின்பற்றுகிறேன் என்று சொல்பவரை விட.. தன் உள் முனைப்பின் படி வாழத்தெரிந்தவரே.. தன்னையுணர்ந்தவராகிறார். அதே தன்னையுணர்ந்தவர் பிரம்மத்தை உணரவேண்டுமெனில் தன்னை உணர்ந்ததையும் மறக்கவேண்டும்.....தன்னை தன்னுள் வைத்து மட்டும் பார்க்காமால் எல்லாமே தானாய் உணரும் நிலைதான் புத்தரின் நிலை...

பார்வையின் கோணம் மாற்றப்பட்டால் சத்தியம் வெளிப்பட்டே தீரும். இதனால்தான் தன்னில் இருக்கும் ஒன்றை எலோரும் வெளியில் தேடித் தேடி கடைசி வரை அந்த பொருள் கிடைப்பதே இல்லை....தேடும் பொருள்தான் கிடைக்கவேண்டிய பொருளுமாய் இருக்கும் பட்சத்தில்.. அதை வெளியில் தேடி தேடி இல்லை என்ற முடிவுக்கு வந்து விடும் இடத்தில்தான்... தத்துவங்கள் பிறக்கின்றன்....

நன்றாக யோசித்துப் பாருங்கள்....எல்லா தத்துவத்தையும் வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது? எல்லாமே குப்பைகள்....சூரியன் உதிப்பதில் என்ன தத்துவம் இருக்கிறது? ஒரு பூ பூப்பதில் ஒரு மழை பெய்வதில், குழந்தை சிரிப்பதில் என்ன தத்துவம் இருக்கிறது? அல்லது அங்கே தத்துவம் தேவைதானா?

புத்தர்கள் எப்போதும்...தன்னைப் போலவே ஒருவரை உருவாக்க முயற்சிகல் கொள்வதில்லை மாறாக...இயல்பாய் மனிதரை இருக்கவைக்க அவர்களைக் கொண்டே அதை செய்ப்பிக்கிறார்கள் ஆனால் பின் பற்றும் மனிதர்கள்தான் அப்படி வேசமிட்டு...அவரைப் போலவே.. இருக்க ஆசைப்படுகிறார்கள். பெரும்பாலான சித்தர்களும், ஞானிகளும் தானே தன்னுள் உணர்ந்து சமாதி நிலை எய்தி பரப்பிரம்மத்தில் பரபிரம்மமாய் கலந்து விடுகின்றனர்... அதுவும் பிரம்மத்தின் நோக்கம்தான்.

இப்படி மக்களுக்கு சொல்லவேண்டிய செயலைச்செய்வதும் பிரம்மமே.....

தன்னை உணர்ந்தபின் மக்களுக்கு சொல்வதும் தனிப்பட்ட உடலின்றி பிரம்மத்தின் நோக்கமாகவே சொல்வது சிலருக்கு அமைகிறது.. - அதுவும் பிரபஞ்ச நோக்கத்தில்

தன்னை உணர்ந்து தானே தன்னில் தானகும் நிலை சிலருக்கு உருவாகிரது - இதுவும் பிரபஞ்ச நோக்கில்...தான்...

மேலே சொன்ன இரண்டிலும் மனித மனம் பெரும்பாலும் விளையாடி விடுவது முதல் நிலையில் அமைந்து விடுகிறது.... அதனால்தான் போலி சாமியார்கள் உருவாக்கம் கொண்டு அதே பிரபஞ்சத்தால் தண்டிக்கவும் படுகிறார்கள்....!

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லவரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!

கேள்வியின் மூலம் ஆழமாய் என்னை அழைத்துச் சென்ற நண்பர் வேலுவிற்கு.. எனது அனேக நம்ஸ்காரங்கள்.


தேவா. S

13 comments:

sakthistudycentre-கருன் said...

உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு ..But im not able to understand. hehe

தினேஷ்குமார் said...

உள்ளில் உன்னை உணர்வதே உண்மை என உணர்த்தும் பதிவு ஆழம் அறிய ஆவல் ஆழம் அறிய அறிய புதிதாய் பிறக்கும் குழந்தையாய் அவர்களை உணர்வார்கலாமே உண்மையா அண்ணா

அரபுத்தமிழன் said...

//இஸ்லாத்திலே சொல்லப்பட்டிருக்கும் ஸிராத்துல் முஸ்தகீம் என்ற மெல்லிய மயிரினும் நுண்ணிய (பாலம்)வழி போலத்தான் ஆன்மீகமும் அதன் உச்சநிலையான பரம் பொருளை அடையும் நிலையும் இங்கே போய்ச் சேர்பவர்களை விட வழுக்கி விழுந்து விடுபவர்கள் அதிகம்.//

True / correct / Super Deva.

பதிலின் மூலம் பலரை ஆழமாய் அழைத்துச் சென்ற நண்பர் தேவாவிற்கு நன்றிகள் பலப்பல‌

ஜீவன்பென்னி said...

அண்ணா தெளிவா விளக்கிட்டீங்க நன்றிகள்ணா.

இம்சைஅரசன் பாபு.. said...

தேவா அண்ணா வர வர நீங்க புரியுறது மாதிரி எழுதுறீங்க ........நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன் (எனக்கு ஹிப்ப்று மொழி மறந்திரும் இப்படி எழுதினா )

மங்குனி அமைச்சர் said...

..எல்லா தத்துவத்தையும் வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது? எல்லாமே குப்பைகள்...///

நல்ல கேள்வி ......................

Chitra said...

அருமையான சிந்தனை.

SASIKUMAR said...

hi dheva you mentioned about the person who can servive(limited needs) reacts with meaning full smile and continue his life smoothly... am i right?

Kousalya said...

கேள்வி கேட்ட வேலு அவர்களுக்கு நன்றி...

இப்படி ஒரு விரிவான பதில், விளக்கம் கொடுத்த உங்களுக்கும் என் நன்றிகள்.

ஆன்மிகம் ஏதோ புரியாத ஓன்று என்பதுபோல் சிலர் சித்தரித்து பேசி கொண்டிருக்கும் அதே நேரம் மிக எளிமையாக அதை புரிந்து, உணர்ந்து, உள்வாங்கி கொள்ளும் படியாக எழுதி வரும் நண்பருக்கு பாராட்டுகள்.

கோமாளி செல்வா said...

//தன்னைப் போலவே ஒருவரை உருவாக்க முயற்சிகல் கொள்வதில்லை மாறாக...இயல்பாய் மனிதரை இருக்கவைக்க அவர்களைக் கொண்டே அதை செய்ப்பிக்கிறார்கள் ஆனால் பின் பற்றும் மனிதர்கள்தான் அப்படி வேசமிட்டு...//

இந்தப் பதிவில் இருக்கும் சில விசயங்களும் , எனது குழப்பங்களும் தான் அண்ணா என்னோட அடுத்த பதிவு ( ஆன்மீகம் (தேவா ஸ்டைல்)) ..

VELU.G said...

நல்ல தெளிவான பதிவு தேவா

நன்றி

தோழி பிரஷா said...

அருமையான சிந்தனை தெளிவான பதிவு சகோதரா..