Skip to main content

அய்யனாரே...!



















பள்ளியோடத்துக்கு போய்ட்றேம்மோவ்.....தோளில் பைக்கட்ட மாட்டிக்கிட்டி பள்ளியோடத்துக்கு போற நாளு என்னிக்கி மாறுமோ? பெரிய பள்ளியோடத்துல படிக்கிற பயலுவ எல்லாம் ரெண்டு நோட்டு புத்தவம்தான் கொண்டு போறானுவ... இவனுவள பாத்துபுட்டு ஒரு நா நானும் ரெண்டு நோட்டை கொண்டுகிட்டு போனதுக்கு.... அந்த கணக்கு வாத்தி முருயேசன் மொத்து மொத்துனு மொத்திபுட்டான்.

மனசுக்குள் பேசிக் கொண்டே வீட்ட விட்டு நடந்து கொன்டிருந்தவனை பாசுகரு பாசுகருன்னுன்னு பயலுவ எல்லோம் கூப்பிடுவானுவோ ஆனா அவனுக்கு அவன ரசினியாந்துன்னு சொல்லிகிறதுதலலதான் சந்தோசம்.

ஏம்பி.... எங்காளு எப்டி அடிப்பாரு தெரியுமுல்ல எந்த கமினட்டியும் எங்க ஆளுகிட்ட வரமுடியதுல்லன்னு சொல்லிகிட்டு ரசினிக்கு கொடி புடிக்கிற பயவுள்ள அதே நேரத்துல கமலதாசன காலிப்பயன்னும் சொல்லி சண்ட போடும். ஏலேய்...ஏன்டா அப்புடி சொல்றன்னு கேட்டா ஆமாம் காலிப்பயதான அவன் எப்ப பாத்தாலும் காதலிச்சுகிட்டே இருப்பான் எங்காளு மாறி சண்டையெல்லாம் போட வருமான்னு நம்மளையே திருப்பி கிட்டு கேப்பான்....

எட்டாவது படிக்கையில் உனக்கு என்ன நடிவரு சினிமான்னு போட்டு ஒரு நாளு பாசுகரு பய அப்பாரு அடி வெளுத்து கூட இருக்காரு, அவரும் எம்புட்டு நாளுதான் கண்ணுல வெளக்கண்ணைய ஊத்திகிட்டு பாப்பாரு...அவரு வார நேரம் போற நேரம் ..எலேய் பாசுகரு என்னடா பண்ணுறன்னு கேப்பாரு.... இவனும் வெறப்பா... ' படிக்கிறமுன்ன' ன்னு சத்தமா சொல்லிபுட்டு... எப்ப பாரு ஏவுட்டு பையிலயே கைய வுட்டு பாக்குறதுதான் இவுருக்கு வேல நல்ல அப்பாரு வந்தாரு..எனக்குன்னு...

பேயாமா மள்ளிய கடையிலயே இருக்க வேண்டியதுதானே.. வூட்டுக்கு எதுக்கு வர்றவோ....ன்னு நினைப்பான். பாசுகருகிட்ட கிடந்து அடிவங்குறது அவன் தங்கச்சி மீனாதான்.. ஏச்சு...ஏச்சு.. ஏய் ஆயி... ஏய் ஆயி... காசு கொடுலே..அப்பா சாங்காலம் வருவோல்ல அப்ப எனக்கு காசு கொடுப்போ அப்ப உனக்கு முட்டாயி வாங்கியாந்து தாரேன்னு சொல்லியே ஏச்சு ஏச்சு நொட்டிபுட்டு அடிக்க வேற செய்வான்....

அவன் பள்ளியோடத்துக்கு போகும் போதே பயந்து கழிஞ்சுகிட்டுதான் போவான். பாசுகருக்கும் அவன் கணக்கு வாத்திக்கும் ஏழாம் பொருத்தம். கணக்கு இவனுக்கு வரவே வராது கணக்கு வாத்திக்கா கோவம் வந்தா போகவே போகாது.

'ஏன்டா சுரேசு வீட்டுக்கணக்கு செஞ்சியாடா ' மெலிசான குரல்ல கேட்டான் பாசுகரு... இல்லடா வாத்தியாரு சொல்லிக்கொடுக்கவும் மாட்டேன்றான் வீட்லயும் எல்லாரும் சும்மா திட்றாவோ.... சொல்லிக் கொடுக்கவும் மாட்றாவோ? என்னடா பண்றது பாசுகருன்னு கோயில்ல நேந்துகிட்டு முடி இறக்குறப்ப அழுவுற புள்ள மாறி மூஞ்சிய வச்சிகிட்டு கேட்டான் சுரேசு........

சரிடா இன்னிக்கு கணக்கு புரியல சார்ன்னு அவுர்ட்ட தான கேப்போம்டா, அவ்வோ தானே டீச்சரு தெரியலேன்னா சொல்லனுமுன்ன ...வா.. வான்னு மணி அடிச்சுட்டாவோ...ன்னு சொல்லிட்டு அவன் கைய புடிச்சு இழுத்த்துட்டு ஒட்டாமா பள்ளியோடத்துக்கு வந்தான்.

முத பீரியடு தமிழு முடிசஞ்சு ரெண்டாவது அறிவியலு முடிஞ்சு மூணாது பீரியடு கணக்கு
முருயேசன்ஞ்சாரு வந்து உள்ள நொழையுறதுக்கு முன்னால மூங்கி கம்பு வந்து நொழைஞ்சுச்சு..கிளாசுக்குள்ள. ஏண்டா பயலுவளா.. கணக்கு போட்டியளாடா...எங்க நேத்து கொடுத்த வீட்டு கணக்கெலாம்.. ?

தொண்டய கனச்சு கிட்டு அவரு சாதரணமாத்தான் செருமினாரு.. நம்ம பயலுவ பாசுகருக்கும், சுரேசுக்கும் காட்டெருமை செருமறது கனக்கா ஒரு நெனப்பு ரெண்டு பயலுவளும் காதுகுள்ள சொல்லி சிரிக்கிறானுவ ஆன கணக்கு போடலன்றத மறந்துட்டானுவ..

வருசயா ஒரு, ஒருத்தனா போயி முருகேசஞ்சாரு கிட்ட ரைட்டு வாங்கிட்டு போறானுவ கடசில நம்ம பயலுவ ரெண்டு பேரு நிக்கிறானுவ வெத்து நோட்ட வச்சிகிட்டு.....

" ஏய் எருமையளா எங்கடா கணக்குன்னு' கேட்டாரு முருகேசஞ்சாரு...ரெண்டு பயலுவளும் முழிக்கிறானுவ.. பேச்சு வரல.... ரெண்டு கமினெட்டியும் இங்கிட்டு வா...காலைல சோறு தின்னீயல்ல மறந்தா போனீய்? கணக்கு போட ஏன்டா மறந்தீய ங்கொப்பாரு மவனுவளா... நீ அவனை அறைடா கன்னத்துல... அவன் உன்னை அறையட்டும்ன்னு காட்டுக் கொரங்கு கனக்க கத்தினாரு கணக்கு சாரு...

ரெண்டு பயலுவளும் நேர் நேர நின்னுகிட்டு அறைஞ்சு கிட்டானுவோ.... இரண்டு பயலுவளையும் கிளாசுல இருக்குற எல்லா பயலுவலும் பாத்துட்டு சில பயலுவ பயப்படுறானுவோ, சில பயலுவோ சிரிக்கிறானுவோ....பாசுகருக்கும் சுரேசுக்கும் அது எல்லாம் கவலை இல்ல... பொம்பளை புள்ளைய முன்னிக்கி வச்சுகிட்டு அடிக்கிறவொளே நாளைக்கு பாத்து பாத்து சிரிப்பாளுவோளேன்னு கொஞ்சம் கவலைப்பட்டானுவ..

என்னடா அடிச்சுகிறீய? தொட்டா விளையாடுறியன்னு கேட்டுகிட்டே ரெண்டு கையிலயும் ரெண்டு பேத்து தலை மயித்தையும் புடிச்சு வெளு வெளுன்னு வெளுக்குறாரு முருகேசன்ஞ்சாரு ... பயலுவ அழுவுறானுவோ கத்துறானுவோ ம்ம்ம்ம்ஹூம்... முட்டிக்காலு போடச்சொல்லி லாடம் கட்டுறேன்ட பயலுவளா உங்களுக்கு......

ஏம்பி எஞ்சேதி தெரிஞ்சே இப்பாடி வரிய்யன்னா உங்கள என்னடா செய்யலாம்னு சொல்லிகிட்டே..." உங்க ஆயி அப்பான் படிக்க அனுப்புறவ்வோ...நீங்களுவோ நல்லா தின்னு புட்டு ஏய்க்கிறியலாடான்னு குரப்பயலுவளா'ன்னு சொல்லி வெளு வெளுன்னு வெளுக்கிறாரு.......

பள்ளிக்கூடமே அதிந்து போற நிலைமைக்கு பயலுவ கத்துறானுவோ...! அடிய நிறுத்திபுட்டு சரி ....இப்போ என்கிட்டன்னு சந்தேகத்த கேளுங்க பன்னியளா.... சொல்லிட்டு வாத்தியாரு அடிச்ச களைப்புல ஒரு சொம்பு தண்ணிய குடிச்சு புட்டு.....எட்டாபுலயே உசரமான பய பிரபாகரு அவன கூப்பிட்டு .......ஏலேய்... மணி கடைல போயி கணக்கு சாருக்குன்னு சொல்லி நல்ல டீ ஒண்ணு வாங்கிகிட்டு ரெண்டு பருப்பு வடை வாங்கிட்டு வெரசா வா... இந்த பயலுவல சத்தின சாத்துல எனக்கு மயக்கம் வருதுன்னாரு....

கணக்கே புரியாத பயலுவ ரெண்டு பேரும் சந்தேகத்த எப்படி கேப்பனுவ...? மறுவடிக்கி சொல்லித்தாங்க சார்னு பாவமா கேட்டானுவ... வாத்தியாருக்கு வந்துச்சு வெலம்...ஏன்டா...****ஆன்டிகளா? என்ன என்ன மொட்டப்பயனு பாத்தியளா ? போயி எங்குட்டாச்சும் சாணி அள்ளி பொழச்சுக்குங்க.. நாளைக்கு வரும் போது கணக்கு போட்டுட்டு வரல அப்புறம் கொன்னே புடுவேன் படுவாங்களா...

கண்ணாம் முழி ரெண்டையும் விட்டு புட்டு தோளை உரிச்சே புடுவேன்....கிளாசு முடியற வரைக்கும் ரெண்டு பேரும் முட்டி போடுங்கடானு சொல்லி முட்டி போடவச்சாரு.. காலு கடுக்க பயலுவ அடிய வாங்கிபுட்டு முட்டி வலிக்க நின்னுகிட்டு நாளைக்கு எப்படி கணக்க போடுறதுன்னு மிரண்டு போய் நின்னானுவா.....

பொழுது சாஞ்சு போச்சு.. ராத்திரி முழுசா பாஸ்கரு போர்வைய போத்திகிட்டு " அய்யனாரே நாளைக்கு கணக்கு வாத்தி வரக்கூடாது பள்ளியோடத்துக்கு இந்த வருசம் திருவிழவுல மொட்டையடிச்சிக்கிறேன் அப்படியே அவரு வந்தாலும் என்னைய ஒண்ணும் செய்யக்கூடாது சாமி...

பக்கத்தூட்டு பாபு இங்கிலீசு பள்ளியோடத்துல படிக்கிறான்.. கருப்பு பூடிசு எல்லாம் போட்டுகிட்டு....கழுத்துல டையி எல்லாம் போட்டு கிட்டு போறன்..அவனையெல்லாம் பள்ளியோடத்துல அடிப்பாவோலா மாட்டாவளா?

சிரிச்சிகிட்டே போறன் சிரிச்சுகிட்டே வாரான்...! ம்ம்ம்ம் அப்பாரு கிட்ட அதுல சேத்தி விடுங்கண்னு சொன்னா...ஏலேய் பாபு அப்பாரு சிங்கப்பூருல இருக்காரு காசு நெறய வச்சுருக்காவோ...ன்னு என்னிய திட்டி புட்டாரு....! ஏன் இவர யாரு மளிய கட வைக்க சொன்னது... சிங்கபூரோ மங்கபூரோ அங்க போவெண்டியதுதானே...

ம்ம்ம் பள்ளியோடத்துக்கு பேரல்லாம் சொல்றாவொ நம்ம பள்ளியோடத்துக்கும் பேரு வச்சிருக்கவொலே..ஊராச்சி ஒன்றிய நடு நிலை பள்ளின்னு....நல்லதா ஒரு பேர் வெச்சா என்ன?

பாபு பள்ளியோடத்துல யாரு டீ வாங்கியாந்து கொடுப்பா......?

கையி வலிக்கி..முட்டி வலிக்கி...முதுகு வலிக்கி.....அய்யனாரே........நாளைக்கு எனக்கு ஒண்ணும் ஆகக் கூடாது வாத்தியாரு லீவு போட்ருணம்னு இல்ல என்னிய ஒண்ணும் கேக்கப்புடாது...'

போர்வைய போட்டு போட்டு போத்திகிட்டு பொலம்பி கிட்டே இருந்தான் பாசுகரு. பொழுது விடிச்சு ரொம்ப நேரமாயியும் அவன் போத்திகிட்டே கிடந்தான். " ஏன்டா பாசுகரு பாசுகரு பள்ளியோடத்துக்கு போக நேரமாச்சு கெளம்புடான்னு' அவன் அம்மா மரகதம் போர்வைய வெலக்கி பாத்துட்டு பதறிப் போனா...சொரத்துல நடு நடுங்கி கண்ணு தொறக்க முடியாம கிடந்தான் பாசுகரு...

சுரேசு பயலுக்கும் காச்ச வந்தாலும் வந்துருக்கும், இல்லாட்டி பள்ளியோடத்துக்கு போயி மறுபடிக்கி அடி வாங்குனாலும் வாங்குவான்..

பாசுகருக்கு காச்ச ரெண்டு நாளுல டாக்டரு கிட்ட காமிச்ச சரியாப் போகும்...அவன் பள்ளியோடத்தையும் முருயேசஞ்ச்சாரையும் யாரு சரி பண்ணுவா?


அய்யனாரு சாமியா......?


தேவா. S

Comments

எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா..
அதுக்குள்ள ரெண்டு பேரு வந்திட்டாகளே..
வாத்தியாருங்க, மாணவர்கள் ஸ்கூலுக்கு வர்றதுக்கு ஆர்வத்த வளக்கணும்.. அது ரொம்ப முக்கியமுங்கோ..

கிராமத்து வார்த்தைகளை இயற்கையாக கையாண்டதற்கு பாராட்டுக்கள்.
நீங்க எழுதி இருந்த, விதம்.. மனதைத் தொடுற மாதிரி இருக்குங்க...

வரி வரியாக படித்ததில்.. ஒரு கிராமப் பள்ளியில் நடக்கும்.. விஷயம்.. அப்படியே கண் முன்னே கொண்டு வந்தீங்க.. உங்க எழுத்தில்..!!

ரசித்து படித்தேன்.. நன்றி..! :-))
///பாசுகருக்கும் அவன் கணக்கு வாத்திக்கும் ஏழாம் பொருத்தம். கணக்கு இவனுக்கு வரவே வராது கணக்கு வாத்திக்கா கோவம் வந்தா போகவே போகாது.///

....இது செம செம.. எப்படிங்க இப்படி..?? :-)))

//பாசுகருக்கு காச்ச ரெண்டு நாளுல டாக்டரு கிட்ட காமிச்ச சரியாப் போகும்...அவன் பள்ளியோடத்தையும் முருயேசஞ்ச்சாரையும் யாரு சரி பண்ணுவா? அய்யனாரு சாமியா?//

...ஹ்ம்ம்.. கண்டிப்பா..சரி பண்ணுவாங்க.. பண்ணனும் :-))
அய்யனாரு சரி பண்ணுவாரா!!.. பெரம்ப கண்டதும் அவருக்கும் காச்ச வந்துட்டா????
அருமையான கதை.. வட்டார நடையில். பாராட்டுகள்..
எப்பாட படிச்சி முடிச்சிட்டேன் .....சும்மாவே புரியாது இதுல வேற வட்டார மொழி நடைல வேற எழுதி புட்டீக ..வாசிக்கிறதுக்கு ரொம்ப சங்கடமா இருக்குதுல ....என்னையும் இந்த பாபு மாதிரி ஆங்கில வழி பள்ளில படிக்க போட்டாக .....இப்ப பாருங்க ஆங்கிலமும் வர மாட்டுது ....டமிலும் வர மாட்டுது.......அங்க பாதி இங்க பாதி .........
semma flow annae....

கதையும் நல்லா இருக்குது
Anonymous said…
ரொம்ப அருமையா இருக்கு அண்ணே! ஊர் வழக்கு மொழி கேட்டு எம்புட்டு நாளாச்சு! :)
பாபு பள்ளியோடத்துல யாரு டீ வாங்கியாந்து கொடுப்பா......?//

பாபு டீ வாங்கி கொடுக்குற பயதான்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?
அய்யனாரு சாமி இந்த பதிவில் இருந்து இவர் கேள்வி கேட்க்க கூடாது சாமி
வட்டார வழக்கில் ஒரு இயல்பான கதை, வாழ்த்துகள், தேவா!
கிராமத்து பேச்சு வழக்கில் கதை வித்தியாசமா இருந்தது!
வட்டார வழக்கில் ஒரு இயல்பான கதை.
Kousalya Raj said…
கதை நன்றாக இருக்கிறது.
ஆத்தீ.. இதக் கேட்டு எம்புட்டு நாளாச்சு..... !
dheva said…
ஆமால்ல....

வட்டார வழக்குல கதை நல்லாதான் இருக்கு.
//ஆமால்ல....

வட்டார வழக்குல கதை நல்லாதான் இருக்கு. //

...ஆமாங்க.. நல்லா இருக்குங்க.. :-)
vinthaimanithan said…
எனக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பஞ்சநதிக்குளம் கிழக்கும், செல்லத்துரை வாத்தியாரும் ஞாபகம் வராங்க

"A Story by Dheva" அப்டீன்னு இனிமே போட்டுக்கலாம் :))
ஹேமா said…
தேவா...எப்பவும்போல ரசிக்க வாசிக்க !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த