Skip to main content

கிறுக்கல்....!



















சப்தம்

விரிப்பில் அவ்வப்போது
விழுந்து கொண்டிருந்த
நாணயங்களின் சப்தங்களில்
ஒளிந்திருந்தது..தெருவோர
பிச்சைக்காரனின் வாழ்க்கை..!

***

மாயை

அடிக்கடி தலைவாரும்
எதிர் வீட்டு இளைஞன்...
அடிக்கடி தாவணி மாற்றும்
பக்கத்து வீட்டுப் பெண்
ஒளிந்து கொண்டு....
பல்லிளிக்கும் பதின்மம்....!

***

கோபம்

சாவு வீட்டில் வரும்
ஞானம்
சண்டைகளின் போது
எங்கே போய் தொலைகிறது?

***

யுத்தி

ஒரு டீக்கடை பெஞ்சும்
தினத்தந்தி பேப்பரும்....
துக்குணூண்டு அரசியலும்
டீக்கடை கல்லாவில்
சில்லறையாய்!

***

வேசம்

சேரிகளுக்குள்
வெள்ளைச் சட்டைகளின்
கும்பிடுகளும் பல்லிளிப்புகளும்
சொல்லாமல் சொல்லின
நெருங்கி வரும் தேர்தலை!

***

பக்தி

எப்பவோ நேந்துகிட்டது...
அடுப்பில் கொதிக்கும் ஆடு...
சலமின்றி அய்யனாரும்..
பசியோடு உறவுகளும்..!

***

நிதர்சனம்

ஒரு பேருந்து கிளப்பிச்
சென்ற புழுதி மறைந்த
பொழுதில் கடந்து சென்ற...
ஒரு மரண ஊர்வலம்...
கலைந்து கிடக்கும் வாழ்வுக்கு
மெளனமாய் சொல்லாமல்..
சொல்லிச் சென்றது ...
ஏதோ...ஒரு பதிலை...!


தேவா. S

Comments

சப்தம், பக்தி, நிதர்சனம் சூப்பர்!
சப்தம்....ரொம்ப சூப்பர்

மாயை....உண்மையான மாயை

கோபம்..ஆமா அதுஎன்ன எல்லா சாவுவீட்டில் சண்டை வருது....
தேவா அண்ணா நான் ஒரு கிறுக்கல் சொல்லுறேன் .........பாருங்க .....
ஏன் இப்படி ஓடுறீங்க வெயிட் அண்ட் சி ..
நிலவையும் வான்மேகங்களையும் பிரிப்பது
அம்மாவாசை ...!
உன்னையும் என்னையும் பிரிப்பது
அவள் அம்மாவின் ஆசை ....!
இது எப்படி இருக்கு ......ப்ளீஸ் ஓடாதீங்க ..........
நாங்களும் கிறுக்கல்கள் எழுதுவோம்ல
சப்தம் - சோகம்
மாயை - வாழ்க்கை
கோபம் - மடமை
யுத்தி - வியாபாரம்
வேசம் - மோசம்
பக்தி - வேடிக்கை
நிதர்சனம் - நிசம்

ரசிக்க வைத்தன...!
எல்லாமே எதார்த்தம். குறிப்பாக இரண்டாவதும் கடைசியும் அருமை.
//அடிக்கடி தலைவாரும்
எதிர் வீட்டு இளைஞன்...
அடிக்கடி தாவணி மாற்றும்
பக்கத்து வீட்டுப் பெண்//


அப்போ வேற வேலை சோலி ஒன்னும் இல்லை போல......
இதைதான் கவனிச்சுட்டு இருக்கீரோ ஹா ஹா ஹா ஹா...
கவிதை அருமை....
ஹேமா said…
கிறுக்கல்களில் எதுவும் கிறுக்க்ல் இல்லை தேவா !
அர்த்தமுள்ள கவிதைகள்..!! ஆழமான கருத்துகள்..!!
Chitra said…
கலக்குறீங்களே! கவிதை புத்தக தொகுப்பு என்னாச்சு? Don't forget about it... :-)
அனைத்து கவிதைகளுமே சூப்பர்...
Radha said…
சப்தம்
உலகைத் துறந்தோர்க்கு தர்மம்
உலகம் துறந்தோர்க்கு அதர்மம்

கோபம்
ஞான மறதி

மாயை
அற்ப சந்தோஷம்
அநித்யம் - ஆனாலும்
அப்போதைய நிஜம்

பக்தி
மாமிசம்
தாமசம்

வேஷம்
வாடிக்கையான
வேடிக்கை

நிதர்சனம்
மௌனத்தில் வெளிவரும்
தரிசனம்
******
நாங்களும் கிறுக்குவோம். :-) நிற்க, படத்தில் ஒரு ஆங்கில கவிதை ஒளிந்துள்ளது. :-)
dheva said…
ராதா..@ எப்டிங்க இப்டி எல்லாம்...????? சூப்பர்ப்...

என்ன கவிதை...? நிஜமாவே எனக்குத் தெரியலை...
@ Radha
கலக்குறீங்க :-)
Radha said…
@சுபத்ரா,
உங்கள் "தலைப்பு - ஒரு வார்த்தை" ஸ்டைல் பின்னூட்டம் பார்த்தவுடன் இது போல எழுத தோன்றியது. :-)
Radha said…
//ராதா..@ எப்டிங்க இப்டி எல்லாம்...????? சூப்பர்ப்...
என்ன கவிதை...? நிஜமாவே எனக்குத் தெரியலை...//

@தேவா
நன்றி. :-) ஒரு சின்ன கதை அல்ல...நிஜம்.
சமீபத்தில் எனது நண்பனுடன் ஒரு விவாதம் செய்து கொண்டிருந்தேன். "என்ன தான் படித்து கிழித்திருந்தாலும் புற அழகை தாண்டி பெண் பார்க்கும் பக்குவம் எல்லாம் எனக்கு இல்லை. காமம் சார்ந்த செலெக்ஷன் சரியா வராது. என்னையும் ஏமாற்றி அந்தப் பெண்ணையும் ஏமாற்றி இருவர் வாழ்வும் வெளங்காம போயிரும்..." இப்படி நான்.
"கல்யாணம் ஆன பின்னாடி அக அழகு தெரிந்தால் கசக்குமா என்ன? முதலில் கல்யாணம் பண்ணி பாரு. பின்னாடி பேசலாம்" இப்படி என் நண்பன்.
முடிவில்லா விவாதம். ஒரு நேரத்தில் எனது நண்பன் "இத பாரு. என் பொண்ணு எழுதிரிக்கிற கவிதை. இதெல்லாம் புரியணும்னா கல்யாணம் பண்ணு" என்று சொன்னான்.
*****
என் நண்பனுடைய மகள் u.k.g படிக்கிறாள். :-) சில பேரை பார்த்தா ரொம்ம்ம்ப நல்லவங்களா தோணும். சும்மா வம்பு இழுத்து பார்க்கலாமேன்னு கொளுத்தி போட்டேன் தேவா...அடி வாங்கறதுக்கு முன்னாடி எஸ் ஆயிடறேன். :-)
@ Radha
சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து :-)
BTW, நீங்க ஹைக்கூ எழுதுவீங்களா ?
அன்ன எனக்கு மாயை , யுத்தி , வேசம் , பத்தி இந்த நாளும் ரொம்ப பிடிச்சிருக்கு . கவிதை அப்படின்னு பார்த்ததும் ஓடிரலாம்னு நினைச்சேன் .. ஆனா இந்த மாதிரி எழுதினா கண்டிப்பா பிடிக்கும் .
Radha said…
ரொம்ப நினைப்பில் திரியற கேஸ் என்று எண்ணாமல் வாழ்த்தியமைக்கு நன்றி சுபத்ரா...:-)
ஹைக்கூ...
"குன்றம் எடுத்த
குணக் குன்று!
கிரிதாரி"
மேலே உள்ளது ஹைக்கூ என்றால் இது தான் எனது முதல் ஹைக்கூ. :-) படிப்பேன், ரசிப்பேன், எழுதியது இல்லை.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த