Skip to main content

தூசு....!





















ஏனோ தெரியவில்லை...மனம் எங்கேயும் செல்லாமல் என்னை உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட தருணங்களில் நான் எப்போதும் நடுங்கிக் கொண்டேதான் இருப்பேன்... ! நானும் தப்பித்து அங்கும் இங்கும் என்று புத்தியை மாற்றி நகர வைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை.....! எங்கே திருப்பினாலும் மீண்டும் திரும்பி என்னை உள்நோக்கி முறைக்கும் மனம் முழுக்க முழுக்க ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது.

உற்று நோக்கும் உக்கிரத்தில் நெற்றிக் கண்ணே திறந்து நான் பஸ்பமாகிவிடுவேனோ என்று கூட பயமாயிருக்கிறது. சுற்றி சுற்றி நகரும் வாழ்வில் பெருமைகளும் மமதைகளும் அவ்வபோது கொள்ளும் மனதை, என் செயல்களுக்கு எல்லாம்...நான் என்ற தனிப்பட்ட உருவம் தான் காரணம் என்று ஆர்ப்பரித்த புத்தியை, உள் முனைப்பு சொல்வதை கேட்காமல் அவ்வப்போது எதிர் பதில்கள் சொல்லி புறத்தில் காய்கள் நகர்த்தி செருப்படி வாங்கி சிதிலமடைந்து ஓய்ந்து கிடக்கும் என்னை எரிக்காமல் என்ன செய்யுமாம் என் உள் முனைப்பு...

முழுதுமான ஒரு சரிபார்த்தல் துரித கதியில் நடந்து கொண்டிருக்கும் போது, தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டு பிடிக்கப்பட்ட ஓராயிரம் ஓட்டைகளை சரி செய்ய வேண்டிய இடம் தியானம் என்று உணர்ந்து அதற்கான நேரமின்மையை மனம் நியாயப்படுத்திய போது கணிணி முன் கட்டுப்பாடுகளின்றி மன மயக்கத்தில் இல்லாத ஏதோ எல்லாம் இருப்பதாக விவரித்து, பொய் வாழ்க்கையில் நேரம் கழிக்கிறாயே அது என்ன? என்ற கேள்விக்கு முன்னால் மண்டியிட்டு அழத்தொடங்கியிருந்தது மனம்.....

சம காலத்து நிகழ்வுகள்....
நெருப்பாய் நம்மை ...
கொளுத்தி எரிக்கும் போது
மாயையில் மழையில்
நனைகிறேன் என்று எண்ணுவது
மடத்தனம் தானே?

கண்களை மூடி ஏதோ ஒரு விருப்பப் பாடலை கேட்டு ரசித்து மெய் மறந்து கண் திறக்கும் போது எதார்த்த வாழ்க்கை எல்லா ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு நிற்கிறதே.... ஏன் இந்த அபத்தம் என்று புரியாமல் நகரும் கூட்டத்தில் நீயும் ஒருவனா? கேட்ட கேள்விகளுக்கு பதிலாய் மெளனத்தை சமர்ப்பித்த மனம் என்னை எவ்வளவு ஏமாற்றி விட்டது... என்று மனதை வேறொன்றாக பாவித்து மனமே நினைத்தது.

எதார்த்தை எதிர்கொள், நிதர்சனத்தில் கவனம் செலுத்து, எதிரிகளை துவம்சம் செய்.....உனக்கென்று ஒரு கனவுலகமே தேவையில்லை...எப்போதும் ஏகாந்தத்திலிருப்பாய்.....என்றது என் உள் முனைப்பு....!

" செயல் படு " என்ற ஒற்றை வாக்கியத்தின் விரிவாக்கம் தானே பகவத் கீதை?

அக்கிரமங்கள் கூடிப் போய், மூட நம்பிக்கைகள் அதிகரித்த போது நிகழ்த்தப்பட்டவைதானே ரசூலல்லாவின் (ஸல்) போர்கள்? செயல்.. செய்யும் போது கற்பனைகள் இல்லைதானே....? ஆனால் கற்பனைகளில் செயல் செய்வதாய் கருதுகிறோமே அது அறியாமையின் உச்சம்தானே?

செயல் புரி என்ற கட்டளையை கேட்டாலே அலர்ஜியாகிப் போகும் அளவிற்கு புரையோடிப் போய் கிடக்கிறது மனம். நாம்தான் வெற்று அரற்றலிலும், பந்தாவிலும், உலகைத் திருத்தும் உத்தமர் வேசம் போட்டுக் கொண்டிருக்கிறோமே? நாம் எப்படி செயல்புரிவது.

இந்திய அரசியல் அமைப்புச்ச் சட்டத்தையும், அரசியல்வாதிகளின் போக்கையும், தெருவோரம் ஒதுங்கிக்கிடக்கும் சாக்கடையையும் பற்றி வீட்டுக்குள்ளோ அல்லது வசதியான ஒரு இடத்திலோ உட்கார்ந்து உலகில் இருக்கும் தத்துவங்களையும், விதிமுறைககளையும் உதாரணம் காட்டிப் பேசிப் பேசி இந்த உலகம் உருப்படாது என்ற முடிவுக்கு வந்து கருத்தை உமிழ்பவர்களதாமே மனிதர்கள்......

என்னுடைய செருப்பில் அழுக்கிருக்கிறதே? அதை துடைத்துப் போட நினைத்திருப்பேனா? நான் தலைவாரும் சீப்பு அழுக்காயிருக்கிறதே அதை சுத்தப்படுத்த என்றாவது எண்ணியிருப்பேனா...? என் வீட்டு தலையணை பெட்சீட் சுத்தமாயிருக்கிறதா? என் வீட்டுச் சுவர் தூய்மையாயிருக்கிறதா.....? வீட்டில் இருக்கும் ஒட்டடை அடித்து வீட்டை பளிச்சென்று வைத்திருக்கிறேனா? அட அது எல்லாம் விடுங்கள்...அன்றாடம் நான் பார்க்கும் கண்ணாடி.........அதை அழகாக துடைத்து வைத்திருக்கிறேனா? தினமும் வீட்டை தூசு தட்டி டஸ்டிங் செய்திருக்கிறேனா.....? எதுவுமே இல்லை

ஆனால்....

உலகம் திருந்த வேண்டும்...என்று ஒப்பாரி வைக்கிறேனே? என்னே மடைமை இது..?

என் வசதிப்படி நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், எனக்குள் ஆயிரம் அசிங்கங்களை கடை பரப்பி வைத்துக் கொண்டு அதை மறைத்து அழகாக உடுத்தி, நறுமணம் பூசி, வெளியே வந்து பல்லிளித்து ....உலகப்பொதுமுறை எழுதிய வள்ளுவனுக்கே வழிமுறைகள் சொல்வேன்...? அறியாமையா இல்லையா இது.....

ஒரு தெருவில் வசிக்கும் மனிதன், தெருவில் குப்பைகள் கூளங்கள் கிடந்தால் என்ன செய்யவேண்டும்? தெரியுமா? சரி அதை விட்டுத்தள்ளுவோம் என்ன செய்கிறோம்....தெரியுமா?......இந்தியப் பிரதமரையும், மாநில முதல்வரையும் இன்ன பிற அரசியல்வாதிகளையும் குறை சொல்லிய படியே இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று நாட்டுக்கு நடுவில் நமக்கென்ன என்று நின்று கொண்டு சொல்வோம்.....

எல்லா வழிமுறைகளும், நெறிகளும் வகுத்தளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அதை பின்பற்ற வக்கற்ற மக்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது. தெருவில் குப்பைகள் இருந்தால் நமது தெருவிலேயே நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினரிடம் எத்தனை தடவை முறையிட்டு இருப்போம்.....? அவரிடம் சொன்னால் அவர்தானே.. பேருராட்சியில் சொல்லி முட்டி மோதி ஏதாவது செய்ய முனைவார்?

நாமே மனிதர்களை நமது பிரதிநிதிகளாக்குவோம்.....ஆனால் அவர்களிடம் நேர்மையாக முறையிட்டு செய்து கொடுங்கள் என்று கேட்க மாட்டோம். எடுத்த எடுப்பிலேயே...தமிழ் நாட்டின் தலைமையை குறை சொல்வோம்.

படிநிலைகள் இருக்கின்றனவா இல்லையா? அதன் படி ஏன் அணுகக்கூடாது? நமக்குத்தான் பொறுமையில்லையே.....! நாம்தான் உலக அரசியல் படித்திருக்கிறோமே....? நமக்குத்தான் முற்போக்கு சிந்தனை இருக்கிறதே.. ? நாம்தான் பெரிய.....பெரிய.. தலைகள் கொண்டிருக்கிறோமே?...........

என்னை போட்டுத் தாளித்துக் கொண்டிருந்த என் உள் முனைப்பு என் முகத்தில் காறி உமிழாதது மட்டுமே குறையாக இருந்தது. அமைதியாய் எல்லாவற்றையும் நான் வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஆமாம்.. அதிக பிரசங்கித்தனமாய் ஊரில் நடக்கும் பிரச்சினைகளை அந்த அந்த ஊரில் இருக்கும் காவல்துறை தலைவர்களுக்கு மரியாதை கொடுத்து நாம் பிரச்சினைகளை தீர்திருக்கிறோமா? இல்லை...........ம்ம்ம்ம் என்றால் மாநில மந்திரி? ம்ஹீம்ம்ம்ம்ம் என்றால் மத்திய மந்திரி..என்று நமது பலத்தை காட்டத்தானே முயன்றிருக்கிறோம்?

இப்படி குப்பனும், சுப்பனும், மாறனும் முனியாண்டியும்.......தொட்டதுக்கெல்லாம்...சப்போர்ட்டுக்கு ஆள கூப்பிட்டு கூப்பிட்டு....கடையில அரசின் நிர்வாகம் சீர்கெட்டுப் போக ஒரு காரணமா இருந்து விட்டு.....ஒட்டு மொத்த உலகத்தையும் பழிக்கிறது கேவலமா இல்லையா?...........

நாலு வரி எழுதி என்னத்த உலகத்தை கிழிக்கப்போறேன்...? இதைப் படிச்சுப்பார்க்க பத்து பேரு வர்றதுக்கே நூறு பேரு எழுதுனதுக்குப் போய் நான்...மொய் எழுதணும்....விளம்பரம் செய்யணும்.....! (நல்ல பதிவுகளை வாசிப்பதும், ஊக்குவிப்பதும் எப்போதும் வரவேற்கத்தக்கது....என்பதையும் குறிப்பிட விரும்பிகிறேன்)

........என்னது நான் எங்க போறேனா...? என்னோட ஷூ க்கு பாலிஸ் போடங்கண்ணா.......ஒரே தூசு...!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்டா.....!


தேவா. S





Comments

//சரி அதை விட்டுத்தள்ளுவோம் என்ன செய்கிறோம்....தெரியுமா?......இந்தியப் பிரதமரையும், மாநில முதல்வரையும் இன்ன பிற அரசியல்வாதிகளையும் குறை சொல்லிய படியே இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று நாட்டுக்கு நடுவில் நமக்கென்ன என்று நின்று கொண்டு சொல்வோம்.....//

அண்ணா மறுபடியும் யார போட்டு தள்ளிருக்கீங்க ? ஹி ஹி .. எனக்கு கமென்ட் போடவே பயமா இருக்கு .. எது எப்படியோ மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் அது நம்மிடம் இருந்தே வரவேண்டும் .. நம்மால அது முடியாதுனா அடுத்தவங்கள குறை சொல்லக்கூடாது .. அரசியல் வாதியயோ இல்ல மக்களையோ குறைகூறுவதற்கு முதல்ல நம்ம பிரச்சினைய அவுங்ககிட்ட தெரியப்படுத்தணும் ..
U have said everything in first person...and have slapped everyone's face with his/her own hand.... The message is conveyed anyhow. Let us all think about it..
செருப்படி.....ச்சு, தப்பா சொல்லல நான் என் செருப்புல தூசு அதிகமா இருக்குறதால நல்லா அடிச்சு சுத்தம் செய்யப்போறேன்.
நான் இன்னைக்கு காலை தான் எங்க வீட்டு செல்ப் கண்ணாடி எல்லாம் துடைத்தேன் அதை பார்த்து இவர் பதிவு எழுதி இருக்கிறார் .......
Unknown said…
இந்திய தேசத்தின் அரசியலை பற்றிய தெளிவான பார்வை இந்தக்கட்டுரையில் இல்லை.

நிர்வாகம் செய்யத்தான் நமது பிரதிநிதிகளாக அவர்களை நியமித்துள்ளோம். அவர்கள் எப்படி அரசாங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என்கிற தெளிவான புரோட்டாகால் உண்டு. அதன்பிறகும் வேலை நடக்கவில்லை என்றால் நமக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்துகொண்டு கேள்வி கேட்பதுதான் ஜனநாயகம்..

என் தெருவின் குப்பை உட்பட இதிய தேசம் முழுதம் குப்பை அகற்றப்படுவதற்கு நிர்வாகம், ஊழியர்கள் என அனைத்து கட்டமைப்புமே இருக்கிறது. இவர்கள் சரியாக செய்யவில்லை என்றால் நாம போய் கூட்டனும் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு இந்தக்கட்டுரை..

சாரி தேவா..
Chitra said…
என் வசதிப்படி நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், எனக்குள் ஆயிரம் அசிங்கங்களை கடை பரப்பி வைத்துக் கொண்டு அதை மறைத்து அழகாக உடுத்தி, நறுமணம் பூசி, வெளியே வந்து பல்லிளித்து ....உலகப்பொதுமுறை எழுதிய வள்ளுவனுக்கே வழிமுறைகள் சொல்வேன்...? அறியாமையா இல்லையா இது.....


......உலகம் சீர் பட - ஒரு துரும்பையாவது தூக்கி போட வேண்டும்.... வெறும் வெட்டி பேச்சில், எதுவும் இல்லை என்பதை சொல்ல வந்து இருப்பது புரிகிறது. அரசியல் சீர்பட..... ம்ம்ம்ம்ம்ம்....... யோசிக்க வேண்டியதுதான்.
dheva said…
//எல்லா வழிமுறைகளும், நெறிகளும் வகுத்தளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அதை பின்பற்ற வக்கற்ற மக்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது. தெருவில் குப்பைகள் இருந்தால் நமது தெருவிலேயே நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினரிடம் எத்தனை தடவை முறையிட்டு இருப்போம்.....? அவரிடம் சொன்னால் அவர்தானே.. பேருராட்சியில் சொல்லி முட்டி மோதி ஏதாவது செய்ய முனைவார்?

நாமே மனிதர்களை நமது பிரதிநிதிகளாக்குவோம்.....ஆனால் அவர்களிடம் நேர்மையாக முறையிட்டு செய்து கொடுங்கள் என்று கேட்க மாட்டோம். எடுத்த எடுப்பிலேயே...தமிழ் நாட்டின் தலைமையை குறை சொல்வோம்.//

நாமே எல்லாவற்றையும் செய்யலாமென்ற கருத்தினை நானும் ஏற்கவில்லை செந்தில். ஆனால் வழிமுறைகளின் படி யாரும் முயற்சிகள் மேற்கொள்வது இல்லை. வெறுமனே குறைகள் சொல்வதிலேயே....பொழுது போகிறதேயன்றி....! அரசு இயந்திரத்திடம் எப்படி அணுகுவது, எப்படி செயல்படுத்துவது அப்படி நியாயம் கிடைக்கவில்லையெனில் எப்படி அதை நீங்கள் சொல்வது போல ஊடகங்கள் மூலம் வெளிக் கொணருவது என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதுதான் கட்டுரையின் சாரம்.

இன்னும் சிலருக்கும் இப்படி வரப்போகும் ஐயத்தை தீர்க்க உதவும் வகையில் உங்கள் கருத்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றிகள் செந்தில்!
"கண்களை மூடி ஏதோ ஒரு விருப்பப் பாடலை கேட்டு ரசித்து மெய் மறந்து கண் திறக்கும் போது எதார்த்த வாழ்க்கை எல்லா ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு நிற்கிறதே..."

ய‌தார்த்த‌ வாழ்க்கையின் ஒவ்வொரு நாளின் நிக‌ழ்வுதானே இது? க‌ன‌வுக‌ள் எப்போதுமே அற்புத‌ம் தான். நிக‌ழ்கால‌ நிக‌ழ்வுக‌ள் அர‌சிய‌லிலும் ச‌ரி, ச‌முதாய‌த்திலும் ச‌ரி‍, யாராலும் சரிப்படுத்த முடியாதபடிதானே இயங்குகிறது! அதுவும் தற்போதைய மின்வேக வாழ்க்கையில், அவசர யுகத்தில் யாருக்குமே போராட நேரமில்லை. போராடி அவரர் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களை வீணாக்க மனமுமில்லை. எதிர்காலத் தலைமுறையினர் கைகளில்தான் அத்தனை சீர்திருத்தங்களும் இருக்கின்றன!
Radha said…
சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்...
************
இரண்டு வார்த்தைகளில் சொல்வதானால் கீதை - "செயல் படு" என்பதை விட "சும்மா இரு" என்பதன் விரிவாக்கம்...என்று தோன்றுகிறது.
[In terms of action என்றால் - "பற்றதல் அற்று செயல் படு" அல்லது "இறை அர்பணமாக தொழில் செய்" ]
இராமகிருஷ்ண பரமஹம்சர் கீதையின் சாரம் "கீதா" "கீதா" என்று சில முறை திருப்பி திருப்பி சொன்னால் கிடைத்துவிடும் என்கிறார். அது ஒரே வார்த்தை - "தாகீ". Gita teaches us to renounce and become a thyagi. கண்ணன் செயலில் செயலின்மையும் செயலின்மையில் செயலையும் காணச் சொல்கிறான்.எல்லா காரியங்களையும் அவனுக்கு அர்பணமாக செய்ய சொல்கிறான். "mayee sanyasya sarvaani karmaani" - so says the Lord at several places in the Gita.
*********
well, this is all bookish. :-) to put them into practice is what we all are striving at...நடைமுறை படுத்தினால்... தீயினில் தூசாகும்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த