Pages

Friday, February 18, 2011

வெற்று....!
சமகாலத்து நிகழ்வுகள் நம்மை புரட்டிப் போட்டுக் கொண்டுதானிருக்கின்றன. நிகழ்வுகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு அனுபவத்தின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு இன்னும் கூர்மையனா ஒரு பார்வையோடு நகர முற்படுகையில் எல்லாமே பார்க்கும் பார்வையாளனாக எல்லா சூழலுக்குள்ளும் விரும்பியோ விரும்பாமலோ சென்று வந்துதான் ஆகவேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக நோக்கிக் கொண்டு நகரும் ஒரு மனோநிலையில் அறிவியலை விட ஆன்மீகம் என்னை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு காரணமில்லாமல் இல்லை.

அறிவியல் எப்போதும் படைப்புகளைப் பற்றி ஆராய்கிறது. அதன் போக்கிலேயே தன்னை விரிவாக்கம் செய்து கொண்டு சரி, தவறு என்று ஒவ்வொரு முறையும் தனை சீர்திருத்ததிக் கொண்டு பயணிக்கிறது. விஞ்ஞானம் படைப்புகளையும் அவற்றின் நுட்பங்களையும், கூறுகளையும் அலசிப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆனல் இதை எல்லாம் ஆராயும் விஞ்ஞானியும், விஞ்ஞான ரீதியாக எல்லாவற்றையும் நம்புவேன் என்று சொல்லும் மனிதர்களையும், ஏன் இவர்கள் இப்படி சிந்திகிறார்கள் அல்லது எது இவர்களை இப்படி சிந்திக்க வைக்கிறது என்று தெளிவான பார்வையை விஞ்ஞானம் நமக்கு கொடுத்திருக்கிறதா?

கொடுக்கவில்லை என்பது எனது பார்வை...

கொடுத்திருக்கிறது என்பவர்கள் எனக்கு புரியவைக்க முன் வந்தால் சப்தமின்றி அதை கேட்டுக் கொள்ள நான் தயார் ஆனால் ஒரு விசயம் என்னுடைய சந்தேகங்களையும் தீர்க்கவேண்டும். போதும் போதும் என்ற அளவிற்கு கேள்விகள் கேட்பேன். அதை தீர்க்கும் அளவு பொறுமையிருப்பின் விளக்கலாம். எப்போதும் ஆன்மீகத்தில் ஒரு விசயம் உண்டு... என்ன தெரியுமா? இங்கே தர்க்கம் உண்டு..விவாதம் உண்டு ஆனால் ஒரு நல்ல ஆன்மீகவாதி எதிராளியை கேள்விகள் கேட்கத் தூண்டுகிறான். தன்னிடம் விளக்கம் கேட்பவர்களை சிந்திக்கத் தூண்டுகிறான்....

ஒவ்வொரு மனிதனும் இரைச்சலோடு ஓடிக் கொண்டு இருக்கும் போது ஆன்மீகம் அவனது சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி அவனின் எல்லா பரபரப்புகும் நடுவே ஒரு இடைவெளியை நிரப்புகிறது. ஒரு ஸ்பேஸ் என்று சொல்லக்கூடிய அந்த இடைவெளி இல்லாத மனிதர்களுக்கு தன்னை பற்றியும் தன்னை சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க முடிவதில்லை.

பரபரப்பாய் நடந்து கொண்டிருக்கும் என் தினசரிகளில் அலுவகலத்தில் எள் முனையளவும் சிந்திக்க நேரம் கிடைக்காமல், தொலைபேசி அழைப்புகள், நிமிடத்துகு ஒரு தடவை என்னுடைய பாஸின் அழைப்பு என்ற தொடர் நிகழ்வுகள், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இடையே ஏற்படும் திடீர் பிரச்சினைகள், மின்னஞ்சல்கள், சந்திப்புகள், தொழிற்சாலையில் ஏற்படும் சில விபத்துக்கள்...இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் அன்றாடத்தில்....சட்டென்று ஏதோ ஒரு மணித்துளியில் எல்லாம் நிறுத்தி விட்டு சட்டென்று எழுந்து வெளியில் சென்று விடுவேன்.....

வெளியே இருக்கும் சிறு தோட்டத்தின் நடுவே.... எந்த சலமுமின்றி எல்லாவற்றையும் விடுத்து, சூழலை விடுத்து, என்னை விடுத்து எந்த செயலுமின்றி ஒரு பத்து நிமிடங்கள் அல்லது எனக்குள் உள்ளே மீண்டும் ஒரு அலாரம் அடிக்கும் வரை நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு. ஏன் இப்படி செய்கிறேன்? என்ற கேள்வியும் எனக்குள் எழுவதுண்டு...

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் மனசு எல்லா செயல்களையும் செய்வது தனிப்பட்ட உடலுக்குள் இருக்கும் நான் என்ற படிமத்தினை ரொம்ப எளிதாக கைக்கொண்டு விடும். அதன் பின் அதை வைத்து உலகை பார்க்கும் ஒரு நிலை வந்து விடும். இங்கே என் இயக்கமும்,உங்கள் இயக்கமும் தனித்தது அன்று இது ஒரு பிரபஞ்ச நிகழ்வு (கூட்டு இயக்கம்).

நாம் என்று ஒரு மட்டுப்பட்ட எண்ணம் கொண்டிருப்பது ஒரு மாயை.... எங்கேயோ என்னை இழுத்துச் செல்லும் இந்த நிகழ்வு பிரபஞ்ச நிகழ்வு, நான் என்று எண்ணிக் கொள்வது இந்த நிகழ்வின் ஒரு பகுதி....என்ற உணரல் இப்படி நாம் மிக வேகமாய் இயங்கும் அன்றாடங்களில் சட்டென ஒரு 10 நிமிடம் நம்மை நிறுத்தி பார்க்கும் போது ஓரளவிற்கு எல்லாம் புரியும்...

எப்போதும் அகங்காரங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் ரொம்பவே ஒரு கஷ்டமான வாழ்க்கையை வாழ்வதாகப எனக்குப் படுகிறது. இதிலிருந்து விடுபடுவது, எல்லாவற்றையும் சமமாய் பாவிக்கும் நிலை கொள்வது, வலியையும், சந்தோசத்தையும் ஒரு நிகழ்ச்சியாக பாவிப்பது இப்படி எல்லாம் பக்குவம் கொண்டிருக்கும் ஒரு மனம்தான் விடுதலை அல்லது முக்தி அடைந்த ஒரு மனம் என்று எண்ணுகிறேன்.

முக்தி என்பது ஒரு பெரிய வார்த்தையாகாப் பார்க்கப்பட்டு அதற்கு உடல் நீக்கவேண்டும் காவி உடுத்த வேண்டும், தியானத்தில் தன்னை மறக்க வேன்டும், என்று சொல்லும் கற்பிதங்களை இங்கே சுக்கு நூறாக நான் உடைத்துப் போட விரும்பிகின்றேன்.

தியானத்தின் உச்சத்தில் உடல் விட்டும் அடையும் ஆத்ம முக்திக்குப் பிறகு பிறப்பில்லா ஒரு நிலை எய்த முடியும் என்பது ஒரு கருத்தாக இருக்கட்டும் அதை மறுக்காமல், ஆராயாமல் விட்டு விடுவோம். ஏன் தெரியுமா? அப்படி ஒரு நிலை இருப்பதாக படித்து அல்லது கேள்விப் பட்டுதான் இருப்போம் ஆனால் அதை உணரும் பொழுதில் நாம் விவாதிக்க விரும்பமாட்டோம் அல்லது விவாதிக்கவேண்டிய தேவையில்லை. அது பற்றி இப்போது நமக்கு எதுவும் தெரியாது என்பதால் அதைப் பற்றி விவாதித்தல் அறிவீனம் அதை கொஞ்சம் நகர்த்தி வைத்து விடுவோம்.

உண்டு இல்லை என்று ஆராய அது பற்றிய அனுபவம் தேவை....

ஆனால் இங்கே இருக்கும் என்று சொல்பவர்களும் இல்லை என்று சொல்பவர்களும் அனுமானங்களையே தங்களின் கருத்துக்களாய் பகிர்கிறார்கள். என்னளவில் உணர்ந்ததையும் மூளையின் வீச்சு எட்டிப்பிடித்ததையே என் கருத்தாகவும் பகிரவேண்டும் என்ற ஒரு ரீதியில்தான் என் கட்டுரைகள் நகருமேயன்றி கற்பனைகளையும் என் மன மயக்கத்தையும் எப்போதும் வெளிப்படுத்துவதை நான் விரும்புவதில்லை.

எனது ஆசைகள் என்பது வேறு, கற்பனைகள் என்பது வேறு எதார்த்தம் என்பது வேறு. இதனை பகுக்க முடியாவிட்டால் அல்லது தெரியாவிட்டால் அங்கே ஆணவத்தின் வெளிப்படுகள் வந்து விழுந்து விடும். சொர்க்கம் என்ற ஒன்று இருக்கவேன்டும் அங்கே நல்லவ்ர்கள் எல்லாம் செல்ல வேண்டும் என்று விரும்புவது என் ஆசை, அதை விவரித்துப் பார்ப்பது என் கற்பனை ஆனால் அப்படி ஒன்றூம் இல்லை மேலும் வேறு எதோ ஒன்றை இப்படி சூசகமாய் பெரியவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் எனதை உணர்ந்து அதை விவரமாக தெரியும் வரை தேடலில் இருப்பது எதார்த்தம்.

என்னுடைய கட்டுரைகள் மிகைப்பட்டவர்களுக்கு விளங்கமால் போவதற்கு காரணம், என்னிடம் கதைகள் இல்லை, ஆரம்பம் முடிவு என்ற ஒரு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு நிலை இல்லை. என்ன சொல்லப்போகிறேன் என்று எனக்கே தெரியாத போது வாசிப்பவர்களுக்கு அது பிடிபடுவது கொஞ்சம் கடினம்தான். சரியான மனோநிலை தான் புரிதலை உண்டாக்கும் மற்றபடி எதையாவது எழுத எங்கேயோ நேரம் செலவழித்து இங்கு வந்து கொட்டுவதில்லை.

தோணும் எல்லாம் ஏற்கனவே ஏற்பட்ட வாசிப்பு அனுபவத்தின்
சாரத்தை விளங்கி அதை என் புரிதலில் கொண்டு வந்து கொட்டுகிறது என்றும் சொல்லலாம்....ஆனால் இங்கே ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் வாசிக்கும் போது நீங்கள் ஒரு கிரகிப்பு நிலைக்குப் போய் அதை உள்வாங்கி அசை போட்டு புகையிலையை வாயில் குதக்கி வைத்து அதன் சாற்றை மட்டும் மிடறு மிடறாய் உள்ளிறக்கி ஒரு வித போதையை அனுபவிப்பார்களே...கடைசியில் புகையிலை உருட்டி துப்பி விடுவார்களே அது போல....

புகையிலையின் சக்கை போய்விடும் ஆனால் சாரம் மட்டும் நம்முள் தங்கும். இப்படி வார்த்தைகளை துப்பி விட்டு சாரத்தை கிரகித்து அந்த சாரத்தையும் வெறுமையில் தொலைத்து நமது அனுபவமாக்கி அதன் பின் அது தங்கு தடையின்றி எந்த நோக்கமுமின்றி வெளியில் அனுபவமாய் வந்து விழுகிறது. எல்லா அனுபவத்திற்கு பின்னாலும் ஆட்கள், மனிதர்கள் இருப்பார்கள்தானே ஆனால் இத்தகைய அனுபவத்திற்கு பின்னால் உருவமும் பொருட்களும் இருப்பதில்லை மாறாக வெறுமையும், சூன்யமும்தான் இருக்கிறது.

இல்லாததாய் இருக்கும் வெற்றிலிருந்து எல்லாம் ஜனிக்கிறது. அந்த வெற்று என்னவென்று அறிவியல் அறிஞர்களும் விளக்கமாய் சயின்டிபிஃக் டெஃபினேசன் கொடுப்பார்கள்.....அதுவும் ஒரு பொருள் போன்ற மாயையோடு.....ஹா...ஹா...ஹா...! வேண்டுமென்றால் கேட்டுப்பாருங்கள்.....

சரி ....இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.


அப்போ வார்ர்ர்ட்டா........!


தேவா. S10 comments:

Arun Prasath said...

ஐ நான் தான் முதல்

எஸ்.கே said...

அந்த கடைசி பத்தி....:-)))

Radha said...

"தீவிர தேடல் இருப்பவர்கள், 'ஏன்? எதனால்?' என்று கேள்விகளுக்கு விடை தேடி ஆன்மீக உலகிற்கு நிழைகிறார்கள். அறிவியல் ஏன் என்று கேள்விக்கு விடையாக 'எப்படி' என்று கேள்விக்கான விடையை தான் அளிக்கிறது...The culmination of all logic is the starting point of intuition..." என்று முன்பு எங்கோ படித்த நினைவு.
*****
//இல்லாததாய் இருக்கும் வெற்றிலிருந்து
எல்லாம் ஜனிக்கிறது. //
ஆர்வக் கோளாறில் ஒரு கேள்வி.
"நிர்குணத்தில் இருந்து சகுணம்" என்பது போல எதையாவது படித்ததை(கற்பிதமா?)சொல்கிறீர்களா? இல்லை உணர்ந்து சொல்கிறீர்களா? :-)

dheva said...

ராதா..@ கற்பிதங்கள் கடந்துதான் சொல்கிறேன்......வெறுமையில் இருந்துதான் எல்லாம் ஜனிக்கிறது என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.

கோமாளி செல்வா said...

//வலியையும், சந்தோசத்தையும் ஒரு நிகழ்ச்சியாக பாவிப்பது இப்படி எல்லாம் பக்குவம் கொண்டிருக்கும் ஒரு மனம்தான் விடுதலை அல்லது முக்தி அடைந்த ஒரு மனம் என்று எண்ணுகிறேன்.//

கண்டிப்பா சந்தோசத்தையும் துக்கத்தையும் ஒன்றாக எண்ணும் மனம் முக்தி அடைந்த மனம் என்றே நானும் எண்ணுகிறேன் அண்ணா. .

//முக்தி என்பது ஒரு பெரிய வார்த்தையாகாப் பார்க்கப்பட்டு அதற்கு உடல் நீக்கவேண்டும் காவி உடுத்த வேண்டும், தியானத்தில் தன்னை மறக்க வேன்டும், என்று சொல்லும் கற்பிதங்களை இங்கே சுக்கு நூறாக நான் உடைத்துப் போட விரும்பிகின்றேன்.//

உண்மைலேயே இது எல்லாம் பொய்.என்னைப் பொறுத்த வரைக்கும் முக்தி அடைந்த ஒருவன் கண்டிப்பா அடுத்தவங்களுக்கு போதிக்கனும்னு நினைக்க மாட்டான். அடுத்து அவன் வாழ்க்கையை விரும்பவோ வெறுக்கவோ மாட்டான். பொதுவாக ஒரு விலங்கினைப் போல மரத்தினைப் போல எந்தவித சலனமும் இன்றி வாழ்ந்துவிட்டுப் போய்டுவான் என்பது என்னோட புரிதல் ..

Radha said...

சரி சரி. கோவித்துக் கொள்ள வேண்டாம் தேவா. :-)
பின்னூட்டம் இட்டால் நீங்கள் படிக்கிறீர்களா இல்லையா என்று சந்தேகம் இருந்தது...
தீர்ந்து விட்டது. :-)
~
நட்புடன்,
ராதா

கோமாளி செல்வா said...

//முடிவு என்ற ஒரு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு நிலை இல்லை. என்ன சொல்லப்போகிறேன் என்று எனக்கே தெரியாத போது வாசிப்பவர்களுக்கு அது பிடிபடுவது கொஞ்சம் கடினம்தான். //

ஆனா இப்படி எழுதுறது ரொம்ப சிரமம். ஏன்னா நான் எழுதுறேன்னு சொல்லி அனுபவிச்சிருக்கேன். ரொம்ப சிரமம் அண்ணா.

Radha said...

i really like the sincerity behind your writings...
ஒரு மொக்கை தத்துவம் - there is a very thin line separating sincerity and seriousness. சீரியசா முகத்தை வெச்சிட்டு பொய் பொய்யா சொல்லலாம்.
ஆனா சின்சியரா உண்மை மட்டும் தான் சொல்ல முடியும்.
:-)

Chitra said...

புகையிலையின் சக்கை போய்விடும் ஆனால் சாரம் மட்டும் நம்முள் தங்கும். இப்படி வார்த்தைகளை துப்பி விட்டு சாரத்தை கிரகித்து அந்த சாரத்தையும் வெறுமையில் தொலைத்து நமது அனுபவமாக்கி அதன் பின் அது தங்கு தடையின்றி எந்த நோக்கமுமின்றி வெளியில் அனுபவமாய் வந்து விழுகிறது. எல்லா அனுபவத்திற்கு பின்னாலும் ஆட்கள், மனிதர்கள் இருப்பார்கள்தானே ஆனால் இத்தகைய அனுபவத்திற்கு பின்னால் உருவமும் பொருட்களும் இருப்பதில்லை மாறாக வெறுமையும், சூன்யமும்தான் இருக்கிறது.


.....ஒரு முதிர்ச்சி (maturity) தெரிகிறது. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//எனது ஆசைகள் என்பது வேறு, கற்பனைகள் என்பது வேறு எதார்த்தம் என்பது வேறு. இதனை பகுக்க முடியாவிட்டால் அல்லது தெரியாவிட்டால் அங்கே ஆணவத்தின் வெளிப்படுகள் வந்து விழுந்து விடும்.//

....எவ்வளவு உணர்ந்து படித்தேன் தெரியுமா.. முற்றிலும் உண்மை.

ஆசை எல்லாத்தையும் அடைந்து விட முடிவதில்லை...
கற்பனை அத்தனையும் கடந்து விட முடிவதில்லை...
கடைசியில் எஞ்சி இருப்பது எதார்த்தம் என்ற எசென்ஸ் மட்டுமே..!

....ரசித்து படித்தேன். தேங்க்ஸ் :)