Pages

Friday, March 4, 2011

முக்தி...!

'கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ '

எல்லாமாய் இருக்கும் அந்த ஒன்றே கேள்விகள் கேட்கிறது......அதுவே பதிலும் சொல்கிறது!

வாருங்கள் அடுத்த கேள்விக்குள் புகுந்து வெளி வருவோம்.....

ஆன்ம முக்திக்கு உங்களின் சொந்த நாட்டிற்கு வரவேண்டும் என்று சொல்கிறீர்களே? ஏன் இந்தியாவைத் தவிர வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு ஆன்மா இல்லையா? உங்கள் சொந்த நாட்டை விடுத்து வசிக்கும் நாட்டிலேயே ஆன்ம முக்திகான வழி இல்லை அல்லது பெற முடியவில்லையெனில் உங்களின் தேடல் வீண்தானே?

இந்த கேள்விக்கான ஒரு பதிலுக்கு போறதுக்கு முன்னால ஆன்ம முக்தினா என்னனு தெரியணும். கற்பனைகளையும் தேவையில்லாத கட்டுக்களையும், பயங்களையும், உள்ளடக்கி, எதிர்த்த வீட்டுக்காரனுக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பயந்து பயந்து தன்னை தானாக காட்டிக்காம, வாழ்க்கையை வாழாம, கற்பனைக் கடவுளர்களை மனதில் கொண்டு பயந்து பயந்து நாளை இறக்கும் முன்னால எமதர்ம ராசா எருமை மேல வருவாரா? பாசக்கயிறை வீசி என்னை கொன்னே போடுவாரா என்று பயப்படாமல்.....

கடவுள் இல்லை கடவுள் இல்லைனு சொல்லிகிட்டே ஏதாச்சும் ஒண்ணு இருக்குமோன்னு உள்ளுக்குள்ளே யோசிச்சுகிட்டே பகுத்தறிவின் உச்சத்திற்கு செல்லமுடியாமல் பாதியில் மாட்டித் தவிக்காமல்,

வெற்று ஜம்பங்களும் ஆணவப் பேச்சுக்களும் பொய், எங்கிருந்தோ வந்தோம்... மீண்டும் எங்கோ செல்லப் போகிறோம்..இடையிலே கிடைக்கும் எல்லாம் தனிப்பட்ட என்னின் முயற்சி தாண்டி.... சுற்றி வாழும் மனிதர்களாலும், சூழலாலும், இயற்கையாலுமே கிடைத்தது என்ற புரிதலோடு......தேவையின் அடிப்படையில் எல்லாம் அனுபவித்து, விலக்க வேண்டியதை விலக்கி, சேர்க்கவேண்டியதை சேர்த்து கொடுக்கப்பட்ட வேலையில் கவனம் கொண்டு, சீரான மனோநிலையோடு மாயையின் எல்லா பாகமும் உணர்ந்து.........

மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லா கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும், மதங்களும், கடவுள்களும் தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன..சூழ்நிலை பொறுத்துதான் எல்லா முடிவுகளும் செயல்களும் என்று விளங்கி....

நான் இந்த கூட்டம், இந்த குலம், இந்த சாதி, இந்த இயக்கம், இந்த சித்தாந்தம், இந்த வழிமுறையை பின்பற்றுபவன் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் எல்லாம் உணரப்பயின்று எல்லாம் உணர துறந்து, காமத்தின் மூல உண்மையையும், கடவுள் என்று சொல்லப்பட்டதின் மூல உண்மையையும் உணர்ந்து ஒரு காற்றைப் போல கட்டுப்பாடுகள் இன்றி பயனோடு வாழும் ஒரு ஆன்மா முக்தி அல்லது விடுதலை அடைந்த ஆன்மா எனக் கொள்க அல்லது நான் கொள்கிறேன் என்று கொள்க.

சரி... இதையெல்லாம் பெறுவதும், நான் ஒரு சுதந்திரமான மனிதனாய் எல்லோரையும் மதித்து வாழ்வதும் தான் ஆன்ம முக்தியா? ரொம்ப ஈசியா இருக்கேன்னு நினைக்கிற அத்தனை பேரும்....தனியா உக்காந்து யோசிச்சு பாத்தா தெரியும் நாம எப்டி இருக்கோம்னு.....

எனக்குள் இருக்கும் ஜீன்களில் இருக்கும் டி.என்.ஏக்களில் என்ன இருக்கிறது.......?எதை பிரதியெடுத்து வைத்திருக்கிறது....? என்னுள் இருக்கும் குரோமசோம்களில் இருக்கும் குணாதிசயங்கள் எங்கிருந்து வந்தது? எனது மிகைப்பட்ட அனுபவச்சாரத்தின் விதை எங்கிருந்து தூவப்பட்டது? எது என்னை பாதிக்கும்? ஏன் பாதிக்கும்?

இந்த ஒட்டு மொத்த கேள்விக்கும் பின்னால் ஒளிந்திருப்பது நமது மூதாதையரின் வித்து நம்முள் குணாதிசயமாய் விரவிக் கிடப்பதுதான்.....! ஏற்கனவே ஒரு வலை தளத்தில், எனது மண், எனது காற்று, என்று சொன்னது நகைப்புக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது.....! ஆமாம் மேலோட்டமாக பார்த்தால் அது நகைப்பிலும் கேலியிலும் கொண்டு போய் விடும்.

ஆனால்...

எனது விருப்பங்கள் என்பது என்னுள் இருக்கும் உயிர் அணுக்களில் எப்போதோ பதியப்பட்டது அல்லது அது ஒட்டு மொத்த என் மூதாதையர்களின் குணங்களின் சாரம். இப்படி எனது ஆன்மா ஒரு பக்குவ நிலைக்கு வர.. என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் எனக்கு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு... ஒரு பாதிப்பு ஏற்பட்டு, அதனால் ஒரு அனுபவம் ஏற்பட்டு அந்த அனுபவத்தில் ஒரு உணர்தல் ஏற்பட்டு ஒவ்வொரு கட்டாய் உடைய .....ஒரு வித புரிதலில் ஏற்படும் தெளிவே விடுதலை அல்லது முக்தி....!

இங்கே மேலும் கவனமாக உற்று நோக்க வேண்டிய இன்னொரு விசயம்...இவையெல்லாம் தெளிவான பார்வை உள்ள ஒரு ஆன்மாவுக்கு மட்டுமே.......இந்த தெளிவினை எப்படி எய்துவது அல்லது எப்படி ஆன்மா எய்துகிறது என்பதை அறிவியல் பூர்வமாவே விளக்கி இந்த கர்மா என்னும் கான்சப்ட்டினை வேறு பதிவில் சொல்கிறேன்.

வெளி நாட்டில் நான் வசிக்கும் போது இங்கே நிகழும் நிகவுகளில் எனக்கு ஒட்டுதல் ஏற்படாமல் போவதற்கும் என் நாட்டின் மீதான பற்று இருப்பதற்கும் பின்னால் இருக்கும் காரணம் உளவியல் ரீதியானது. உளவியலுக்கு என்னுள் இருக்கும் ஏற்கனவே பதியப்பட்ட மூதாதையரின் வித்து காரணமாகிறது. காலம் காலமாய்....சேற்றிலும் சகதியிலும், வயலிலும், கோவிலிலும் குளத்திலும் ஆற்றிலும், தோப்பிலும் சுற்றிய மனிதர்களின் மொத்த சாரம் என்னுள் விரவிக்கிடக்கிறது...

சொந்த ஊரில் நடக்கும் நிகழ்வுகள் மிக வேகமாய் என்னுள் ஊடுருவி பாதிப்பினை கொடுக்கும் அப்படி பாதிப்பினை கொடுப்பது வேகமாய் ஒரு தாக்கம் கொடுக்க அந்த அனுபவம் உள்ளே ஊடுருவிப் பாய..ஒரு ஒட்டுதலோடு கூடிய புரிதல் கிடைக்கும். அதே சமயத்தில் வேறு தேசத்தில் இதன் வீரியம் குறைவாகவே இருக்கும்..........காரணம் புறச்சூழல் என்னுள் இருக்கும் ஏதோ ஒன்றுடன் பந்தப்படாதது.

புறச்சூழலின் அனுபவம் பெற்று கடைத்தேறத்தான் ஆன்மா பிறப்பெடுக்கிறது என்பதை நினைவு கொள்வதோடு.........தேடல் என்பது ஏற்கனவே நமது முன்னோர்களின் வழிக்காட்டுதல் நிறைந்த அனுபவமும் ஆத்மார்த்தமும் நிறைந்த பிடிப்பு மிகுந்த அவரவர் மண்ணில் எளிதாய் கை கூடக்கூடியது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இல்லையெனில் இருட்டில் தொலைத்து விட்டு வெளிச்சத்தில் தேடியவன் கதைக்கு நாமே உதாரணமாய் ஆகி விடுவோம்தானே....????

இந்தக்கட்டுரையே ஆன்மா என்ற ஒன்று உண்டு என்று நம்புபவர்களுக்கும், உணர்ந்தவர்களுக்கும்தான் என்பதையும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அப்படி இல்லை என்று கூறுபவர்கள் கட்டுரையை புறக்கணித்து விடுங்கள் என்று கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வேன்.

கேள்விகளுக்கு பதில் சொல்ல முயலும், ஆரோக்கியமான பதில்களில் பாடம் கற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் விதாண்டாவாதங்களில் இருந்து விலகியே இருக்க விரும்புகிறேன்.

மன அமைதியே எல்லாவற்றிலும் சிறந்த செல்வம்.


அடுத்த கேள்விக்கான பதில் நாளை.........!


தேவா. S

5 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆன்ம முக்திக்கும், அதை அடைய அதற்கு ஏற்ற இடத்தினைப் பற்றியும்... விரிவான விளக்கம்/அலசல் தான்.

எஸ்.கே said...

//மன அமைதியே எல்லாவற்றிலும் சிறந்த செல்வம்.//
இது முற்றிலும் உண்மை!

Chitra said...

சொந்த ஊரில் நடக்கும் நிகழ்வுகள் மிக வேகமாய் என்னுள் ஊடுருவி பாதிப்பினை கொடுக்கும் அப்படி பாதிப்பினை கொடுப்பது வேகமாய் ஒரு தாக்கம் கொடுக்க அந்த அனுபவம் உள்ளே ஊடுருவிப் பாய..ஒரு ஒட்டுதலோடு கூடிய புரிதல் கிடைக்கும். அதே சமயத்தில் வேறு தேசத்தில் இதன் வீரியம் குறைவாகவே இருக்கும்..........காரணம் புறச்சூழல் என்னுள் இருக்கும் ஏதோ ஒன்றுடன் பந்தப்படாதது.


........ம்ம்ம்ம்....... ஆழ்ந்து சிந்திக்க நிறைய கருத்துக்கள் தந்து இருக்கீங்க... You are few steps ahead of us.

மதுரை சரவணன் said...

//வெளி நாட்டில் நான் வசிக்கும் போது இங்கே நிகழும் நிகவுகளில் எனக்கு ஒட்டுதல் ஏற்படாமல் போவதற்கும் என் நாட்டின் மீதான பற்று இருப்பதற்கும் பின்னால் இருக்கும் காரணம் உளவியல் ரீதியானது. //

true... thanks for sharing.

Kousalya said...

// தெளிவான பார்வை உள்ள ஒரு ஆன்மாவுக்கு மட்டுமே...//

இது தான் முக்கியம்...அது என்ன தெளிவான பார்வை என்பதே தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதை பற்றி நீங்க விளக்காம விட்டுடீங்க என்றால் தொடர்பு இருக்காது...அந்த தெளிவை எட்டுவது எவ்வாறு விரைவில் விளக்கினால் நல்லது.

ஏன் இதையே அடுத்த பதிவா எழுதக்கூடாது...? யோசிங்க... :))))