Skip to main content

காதலா...?


















உன் நினைவுகள்
விழுங்கிக் கொள்கின்றன..
என் இரவு உறக்கங்களை...
எப்போதாவது கண்ணயரும்..
சில நிமிடங்களிலும்...
கனவுகளில் ஆக்கிரமிக்கும்..
உன்னை என்னடி செய்வது?

***

மழைபெய்யும் பின்னிரவு..
உறக்கம் கொடுக்க முடியா..
தோல்வியில் கிளைத்த..
வெட்கத்தில் என் படுக்கை....!
இறுமாப்புடன்...எக்காளமாய் சிரிக்கிறது...
அடாவடியாய் என்னை ஆக்கிரமித்திருக்கும்...
உன் நினைவுகள்!!!

***

எங்கிருந்தோ காற்றில்....
தவழ்ந்து வந்த புல்லாங்குழலின் இசை...
கூடவே கூட்டிச் சென்று விட்டது...
என் மனதையும்....!

***

பாலையின் மழையாய்
நீ இல்லாத பொழுதுகளில்
எனக்குள் காதலை...பெய்விக்கின்றன
உன் நினைவு மேகங்கள்....!

***














கண்களால் கேள்வி கேட்கிறாய்..
மெளனத்தால் பதில் சொல்கிறாய்
மெலிதான புன்னகை வீசி
என் உயிர் கவர்ந்து செல்கிறாய்
உன்னையே என்னை சுற்ற வைத்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஒய்யாரமாய் நடக்கிறாய்.....
கையெழுத்தே போடத்தெரியாதவன்
இப்போது கவிதை எழுதுகிறேன்...
மொத்தமாய் சொல்லடி....
என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?


தேவா. S

Comments

க ரா said…
மொத்ததுல சொல்றேன்.. அண்ணி ரொம்ப கொடுத்து வெச்சவங்கண்னா !
ஹம்ம்ம்ம்...

இல்லாத நேரங்களில் உங்களை
இயக்கும் நினைவுகள் அழகு....

என்ன செய்யப் போகிறாய்?? ன்னு கேட்டு முடிச்சிட்டீங்க..

Lovelyyyy :-))
க ரா said…
டெய்லி மிளகா பஜ்ஜில்லாம் செஞசு கொடுத்து உங்கள எப்படி எல்லாம் கவிதை எழுத வைகிறாங்க :)
Chitra said…
பாலையின் மழையாய்
நீ இல்லாத பொழுதுகளில்
எனக்குள் காதலை...பெய்விக்கின்றன
உன் நினைவு மேகங்கள்....!


..... Cho chweet! உங்கள் கவிதைகளில் எப்பொழுதும் மென்மையும் அழகும் நிறைந்து இருக்கும். இதிலும் அபாரம்!
ஏதேதோ உணர்வுகள்....
அழகு..
ஹேமா said…
காதலை எப்படிச் சொன்னாலும் அழகுதான்.ஒவ்வொரு வரிகளிலும் ரசனை !
கண்களால் கேள்வி கேட்கிறாய்..
மெளனத்தால் பதில் சொல்கிறாய்
மெலிதான புன்னகை வீசி
என் உயிர் கவர்ந்து செல்கிறாய்
உன்னையே என்னை சுற்ற வைத்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஒய்யாரமாய் நடக்கிறாய்.....
கையெழுத்தே போடத்தெரியாதவன்
இப்போது கவிதை எழுதுகிறேன்...
மொத்தமாய் சொல்லடி....
என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?///

இந்த வரிகள் எல்லாம் சூப்பரோ சூப்பர் அண்ணா. என்ன கேள்வி கேட்குறாங்க.....


என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?/

என்ன செய்வது னா சாப்பாடு தானே
Unknown said…
கையெழுத்தே போடத்தெரியாதவன்
இப்போது கவிதை எழுதுகிறேன்.//
அருமையான வரிகள்.
Anonymous said…
//பாலையின் மழையாய்
நீ இல்லாத பொழுதுகளில்
எனக்குள் காதலை...பெய்விக்கின்றன
உன் நினைவு மேகங்கள்....! //
ரொம்பப் பிடித்தது இக்கவிதை அண்ணா!

உண்மையின் அரவணைப்பைப் போல உருவகங்களின் நிழலும் கூட குளுமை கொடுக்குமே! :)
ஏதேதோ உணர்வுகள்....
VELU.G said…
மிக மென்மையாக நகரும் வரிகள் காதலை உணர்ச்சிப்பூர்வமாய் இயல்பாகவே ஆக்கிவிடுகிறது


ஆமா....இந்த விஷயம் என்னோட சகோதரிக்கும், மருமகளுக்கும் தெரியுமா?. இல்ல நானே போன் பண்ணிடவா?
Anonymous said…
//உன்னையே என்னை சுற்ற வைத்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஒய்யாரமாய் நடக்கிறாய்.....//


அட.. அட..
பயபுள்ள என்னமா யோசிக்கிது.
எங்கயோ மாட்டிக்கிட்டீங்க போல..
ம்ம்ம் வாழ்த்துக்கள்.