
ஒரு மழைக்காய் செய்த...
காகித கத்திக் கப்பல் காத்துகிடக்கிறது
பள்ளிக்கூட புத்தகத்துக்கு இடையே...!
ஒவ்வொரு நாளும் வானம் பார்த்து
ஏக்கமாய் புத்தகம் பிரிக்கும்
பொழுதுகளில் கண்ணீரோடு
சாய்ந்து கிடக்கும் கத்திக் கப்பல்
ஏனோ இதயத்தை ரணமாக்கி
சோகமாய் முடங்கியே கிடக்கிறது...!
இன்றாவது மழை வருமா?
ஏக்கமாய் வானம் பார்த்து பார்த்து
சுட்டெரிக்கு சூரியனிடம் ஏனோ
ஒரு கோபத்தோடு எப்போதும்
நடக்கிறேன் நிலத்தில் தெரியும்
என் நிழலை எரித்தபடி!
பெய்யாத மழைக்கு வானமா பொறுப்பேற்கும்?
ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் ..
செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால்
எங்கே இருந்து ஜனிக்கும் மழை?
யார் கொடுப்பார் அதற்கு விலை?
மரங்களில்லா பூமியில்
மழை ஒரு கனவுதான்....
கரங்கள் இல்லா மனிதனைப் போல
தட்டுத் தடுமாறி சுற்றும் பூமியில்
எல்லா தப்புகளையும் இழைத்து விட்டு
இயற்கையை குறை சொல்லும்
மனிதனை சுயநலவாதி என்பதா?
இல்லை எப்போதும் பொய்க்கும்..
இயற்கையின் பெயரால் இதை...
இறைவனின் பிழை என்பதா?
காற்றோடு கூடி எப்போது...
மேகமாய் சூல் கொண்டு
மழைக் குழந்தைகளை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்?
கனவுகளோடு வழக்கம் போல...
ஒரு கருவினைப் போல சுமக்கிறேன்
என் பள்ளிக்கூட புத்தங்களையும்...
அதனுள் கண்ணீரோடு ...
தண்ணீரில் தத்தித் தாவ...காத்திருக்கும்
என் கத்திக் கப்பலையும்..!
இன்றாவது பெய்யுமா மழை?
தேவா. S
Comments
வடிப்பது ஒரு கலை...
அக்கலையை அணுவளவும்
குறையாமல் செய்வதில்
நீங்கள் ஒரு காளை...!
...கத்திக் கப்பல் எனக்கும் பழைய நினைவுகளை தூண்டி விட்டதுங்க.. தேங்க்ஸ்.. :-))
மேகமாய் சூல் கொண்டு
மழைக் குழந்தைகளை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்?
...nicely written!
ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் ..
செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால்
எங்கே இருந்து ஜனிக்கும் மழை?
யார் கொடுப்பார் அதற்கு விலை?//
ஒரு ஒரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினையும் இருக்கும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க தேவா ?
இன்றைக்கு மரங்களை வெட்டி மொட்டையடிக்கும் மனிதர்கள் காதுகுத்து வைத்து விழா கொண்டாடாத வரையிலும் விட்டார்களே !!
அருமையான சமூக வெளிப்பாடு..!
ரொம்ப நல்லா இருக்கு...