Skip to main content

மகளே.. என் செல்வ மகளே..!


















கல்யாணம் பண்ணிக்கிற அத்தனை ஆம்பளைகளும் ஒரு வித ஈகோவோடதான் பண்ணிக்கிறாங்கனு நான் சொல்ற வார்த்தையில் ஈ.கோன்னு சொல்ற வார்த்தை ரொம்ப பேர சங்கடப்படுத்தலாம் ஆனால், ஈகோன்னு நான் சொல்றது ஒரு வித ஆணுக்கே உரிய ஹீரோத்தனத்தை...

காலம் காலமா சினிமாவுல ஆண்களளை ஹீரோவா பாத்துட்டு, எப்பவும் ஒரு கூட்டத்தையே அடிச்சு துவம்சம் பண்ணி, வயதான அம்மா, அப்பா, அப்புறம் தங்கை, காதலின்னு எல்லோரையும் காப்பாத்தி கை புடிச்சு கூட்டிட்டு ஜம்பமா வரத பாத்து பாத்து...ரத்ததுல ஊறிப்போயி இருக்கற விசயம். ஆண் அப்டின்னு சொன்னா.. எல்லாத்தையும் பாத்துக்குவான் எல்லா பிரச்சினையும் தீத்துடுவான் அப்டீன்னு ஒரு பொது புத்தியோட சேர்ந்த சூழல் நமக்குள்ள ஆழமா பதிஞ்சு போயிடுச்சு.

அதுவும் நாம ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு போலியான கலாச்சாரத்துல பெண் என்பவள் குடும்பத்தலைவியா இருக்குறதுதான் சரி அப்டீன்னு ஒரு முடிவு பண்ணி....இந்த இடத்துல ஒரு சின்ன விளக்கம் கொடுக்க விரும்புறேன்....அதாவது குடும்பத்தலைவின்னா வீட்டு வேலைகள் செய்து, சமைத்து, கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து, வேறு ஆண்களுடன் பேசுவது தவறென்று போதிக்கப்பட்டு, குனிந்த தலை நிமிராமல் வெளியில் செல்லும் போது கணவன் பின்னாலேயே சென்று கணவன் பின்னாலேயே வந்து..இப்படியாக நீளும் இத்தியாதிகளை எல்லாம் ஓரளவிற்கு இப்போ கடந்து வந்திருக்கிறோம் என்றாலும்...

திருமணம் என்ற பந்தத்திற்கு பிறகு அதுவும் மிகுதியாக புதிதாக திருமணமான ஒரு ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்குள் புரிந்தவர்கள் கூட மாட்டிக் கொண்டுவிடும் ஒரு இடம் இருக்கிறது. புரியாதவர்கள் இறுகிப்போய் வாழ்க்கை முழுதும் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். என்ன அந்த புரிதல் என்ன அந்த புரியாமை...?

திருமணம் செய்து கொடுத்தபின் அந்த பெண்ணை தனது சொந்தமாக, தனது காதலாக, தனது உரிமையாக பார்ப்பதில் தவறுகள் இல்லை என்று கொள்ளும் அதே நேரத்தில் அங்கே பொசசிவ்னெஸ் என்ற அரக்கன் சில நேரம் பெண்களிடமும் பழக்கத்தின் காரணமாக பல நேரம் ஆண்களிடம் விளையாட்டுகள் காட்டுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிகுதியான பாதிப்புக்குள்ளாவது பெண்களாயிருப்பதை கணக்குகள் கூட்டி பெண்களை மையப்படுத்தி இக்கட்டுரையை நகர்த்த வேண்டியதை அவசியமாகக் கொள்கிறேன்.

நமது சமூக அமைப்பின் படி பெண் தனது வீட்டாரை விட்டு கணவனோடு வந்துவிடுவது இயல்பான ஒரு விசயமாக பார்க்கப்பட்டாலும் உளவியில் ரீதியாக ஒரு வீட்டில் 23 வருடங்களை ஆடிப்பாடி, கொண்டாடி விட்டு புதிதாய் ஒரு வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களின் மனோநிலை எப்படியிருக்கும் என்று இதுவரைக்கும் சரியான ஒரு பார்வை இல்லாமல் போனதற்கு பின்புலமாய் பெண்ணடிமை மனோபாவம் இருந்ததும் ஒரு காரணம். பெண்ணடிமைத்தனம் முற்றிலுமாய் தீர்ந்து போய்விடவில்லை அதன் கருஞ்சிவப்பு நிறம் வெளுத்துதான் போயிருக்கிறது என்பதற்கு அவரவர் மனசாட்சிகளே சிறந்த ஆதாரம்.

திருமணமான புதியதில் கணவனைக் கைப்பிடித்து ஒரு வீட்டிற்குள் நுழையும் பெண்ணை தனது மருமகளாக அந்த வீட்டின் பெண்ணாக உரிமைகள் கொடுக்கும் அதே நேரத்தில் அவளது பிறந்த வீட்டு பாசத்தையும், பிறந்த வீட்டில் உள்ளவர்கள் பெண்ணின் மீது வைக்கும் பாசத்தையும் தேவையில்லாத ஒரு விடயமாக பார்க்கும் ஒரு கண்ணோட்டம் இயல்பாகவே வந்துவிடுவதற்கு காரணம் இவள் வீடு இனி கரம்பிடித்தவனின் வீடு, அந்த வீட்டின் நலனைப் பற்றியே இவள் இனி நினைக்க வேண்டும் என்ற ஒரு மனோபாவம் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் காலங்களாய் பின்பற்றி வந்த பொது புத்தி.

ஒரு ஆண் தனது குடும்பத்தாருடன் உறவாட, தனது பெற்றோரின் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது கடைமையாக கொள்ளப்படும் ஒரு சமூக கட்டமைப்பில் பெண் தனது பெற்றோர்களைப் பற்றி நினைப்பதும் தன் பிறந்த வீட்டில் தொடர்ச்சியாக ஒரு மாதம் இருந்து வரலாம் என்று எண்ணுவதும் பெரும் குற்றமாக பார்க்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் சில கணவர்கள் அதை தங்கள் தனிப்பட்ட இருவரின் காதலுக்கே எதிரான செயலாக பார்க்கும் மனோ பாவமும் இருக்கிறது.

ம்ம்ம்...கொஞ்சம் நடைய மாத்திக்கிறேன்...

கல்யாணம் பண்ணி மனைவிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நமக்கு புடிச்சதெல்லாம் செய்யணும், நமக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணனும், லிப்ஸ்டிக் போடக்கூடாது, இன்னும் சில இடத்துல கொஞ்சம் பளிச்சுனு ட்ரஸ் பண்ணக்கூடாது....சந்தோசமா சிரிச்சு பேசக்க்கூடாது....!!! இந்த சந்தோசமா சிரிச்சு பேசக்கூடாதுங்கறதுக்கு பின்னால இருக்குற வக்கிரம் என்ன தெரியுமா? வேண்டாம் அது பத்தி விலாவரியா பேசி ட்ராக் மாற வேண்டாம்....

இன்னும் தமிழ் நாட்டின் புற நகரங்களில் எத்தனை வீடுகளில் பெண்கள் வேலைக்கு செல்வதையும், துணிகரமாய் தனித்தியங்குவதையும் ஆதரிக்கும் கணவன்கள் இருக்கிறார்கள்? மாமனார் மாமியார்கள் இருக்கிறார்கள்? மாறிடுச்சுன்னு நாம சொல்றது ஒரு அதிக பட்சமா 30% இருக்குமா பாஸ்...? அதுக்கும் மேலயா இருந்திடப் போகுது?...திருமணம் என்ற சடங்கிற்கு பிறகு நீ மனைவி நான் கணவன், இது நமது சமூகம் இப்படித்தான் இயங்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை முழு மனதோடு ஏற்கும் மனோபாவம் இருவருக்குமே இருக்க வேண்டும். இங்கே திணித்தல்களோ கட்டாயப்படுத்துதலோ இருக்க கூடாதுதானே?

'அம்மாவிற்கு வேலை செய்ய முடியவில்லை அதனால எனக்கு கல்யாணத்துக்கு பெண் பாத்துகிட்டு இருக்காங்க.....'என்று சொல்லும் என் சக தோழர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்....பெண் பார்த்து திருமணம் முடிப்பது என்பது வீட்டு வேலை செய்ய என்று ஒரு மனோபாவத்தை மாற்றுங்கள், திருமணம் செய்வதின் நோக்கத்தை சரியாக கொள்ளுங்கள் , திருமணத்திற்கு பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு உதவுதல் அல்லது வீட்டு வேலைகள் செய்வது என்பது இயல்பாய் நிகழும். இங்கே பெரிய வித்தியாசம் இல்லாதது போலத் தோன்றினாலும் வித்தியாசம் இருக்கிறது. எடுத்துக்கொள்ளும் மனோபாவங்கள் கடைசி வரை நமதுள் நின்று வழி நடத்தும்...என்பது மறுக்க முடியாத உண்மை....!

பெரும்பாலும் ஆண்கள் திருமணத்திற்கு பிறகு செக்யூரிட்டி ஆஃபீசர்களாகவே மாறி விடுகிறார்கள்...இதற்கு ஏற்கனவே மூளையில் ஏற்றி வைத்திருக்கும் கற்பிதங்கள் தப்பாமல் உதவி செய்கின்றன. இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே என்று தடைகள் போடும் அதே வேளையில் கொஞ்சம் பெண்களின் ஆலோசனைகளைக் கேட்டும், தனித்தியங்கச் சொல்லியும் பாருங்கள் ஆச்சர்யப்படும் வகையில் அவை நமது செயல்களை விட சிறப்பாகவே இருக்கும்.

காலப்போக்கில் பெண்களும் இதற்கு அட்ஜஸ்ட்ச் செய்து வாழத்த் தொடங்கி விடுதலும் சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது.

ஆனால்....

மறுமுனையில் இருக்கும் பெற்றோர்...அதுவும் பெண்ணை பெற்று சீராட்டி தாலாட்டி கொஞ்சி குலாவி தலைவருடி, அவள் தவழ்வதைப் பார்த்து, நடப்பதை பார்த்து சிரிப்பதை பார்த்து, ஓடுவதை பார்த்து, தோளோடு கட்டிக் கொண்டு தன் சூட்டில் உறங்க வைத்து....

சூடாமணியே...
என் செளந்தர சுந்தரியே
என் குலம் தழைக்க வந்த
குல விளக்கே...
அம்மா, பெண்ணே, தாயே
என் கண்ணே, உயிரே.....

இரவும் பகலும் ஒரு தகப்பனாய், தாயாய் சீராட்டி, அவள் கண்ணில் தூசு விழுந்தால் இதயம் கசிந்து, கைப்பிடித்து உலகம் சொல்லி, ஊரைச் சுற்றி, அவள் நடக்க, அவள் பேச, அவள் சிரிக்க என்று வாழ்க்கையை எல்லாம் அவளின் அசைவுகளுக்குள் சூட்சுமமாய் நிறைத்து விட்டு.... அவள் மெல்ல வளர்கையில் பிரமித்து, முதன் முதலாய் அவள் நீண்டாதாய் பின்னலிடும் நேரத்தில் வியந்து, வாழ்க்கையின் அர்த்தங்கள் விளங்கி...என் மகளே.. என் மகளே... என்று சீராட்டி பூச்சூடி..........அத்தனை நினைவுகளையும் நெஞ்சுள்ளே தேக்கிவைத்து.. அவளுக்கென்று வரன் பார்த்து....

அம்மா, மகளே....இவள் தானம்மா உன் கணவன், இவன் தானம்மா உன் வாழ்க்கை, நான் உன் தகப்பனம்மா, உன்னை வளர்த்த ஒரு பிரியமுள்ள பித்தனம்மா, உன்னை மறவாமல் என்னுள்ளே வைத்திருப்பேனம்மா, உன் வாழ்க்கை இனி வேறு, உன் உலகம் இனி வேறு உன் கணவனே இனி உனக்கு தாயாய் தகப்பானாய் இருப்பானம்மா...தந்தை என்னும் உறவுக்கு இனி அங்கே வரவொன்றில்லையம்மா...

காலச்சக்கரத்தின் தன் சுழற்சியில் இனி உன்னை தூர நின்றே பார்க்கும் பாக்கியமே அறமாகப் எனக்குப் போனதம்மா...

உன்னை சீராட்டி வளர்த்த
நினைவுகளை எல்லாம்
என்னுள் காலமெல்லாம் சுமக்கும்
ஒரு சந்தோசக் கூலியம்மா
உன் தகப்பன்!

பிஞ்சாய் உன்னை பொத்தி எடுத்து, என் தோள் சுமந்து, உன் வலி பொறுக்க முடியாத போதெல்லாம் உனக்காக கதறியழுது, காலமெல்லாம் உன்னோடு வரும் பாக்கியமற்று இதோ உன்னை கைப்பிடித்து கொடுக்கிறேனம்மா....

அப்பா மகனே, என் மருமகனே....காலமெல்லாம் என் கண்ணுள் சுமந்த கவிதையை, நான் வடித்த அற்புத ஓவியத்தை, என் செப்புச் சிலையை, என் உயிர் சுமக்கும் என் தாயை உனக்கு தாரமாக்கி தந்தேனப்பா...! அவள் கண்கள் சிவந்து அழும் நேரங்களிலெல்லாம் என் உயிரே போய் திரும்புமப்பா...! உள்ளங்கையில் சுமந்த என் குழந்தையை உன்கையில் கொடுக்கிறேனப்பா...."

இதுதான் அந்த மறுமுனை இந்த மறுமுனை பற்றி சொல்லில் கொண்டு வந்து விளக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த மறுமுனை நோக்கி நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன்.. என்னுள் கலக்கமும், ஒரு பயமும் இருக்கிறது. நாளை என் மகளின் கணவன் யாராய் இருப்பான்? எந்த வீடு புகப்போகிறாள் இவள்? அந்த வீடு அவளை அடக்கி ஆளுமா? இல்லை எதார்த்த வானில் சிறகடிக்க விடுமா? தகப்பனாய் என் பாசங்கள் புரிந்து என்னை அவளோடு அளாவளாவ விடுமா? இல்லை பொது புத்திகள் எல்லாம் சேர்ந்து என்னை அவளை காணவிடாமலேயே தடுக்குமா? கண்டாலும் வார்த்தைகளை ஒதுக்கி விட்டு பரஸ்பரம் மட்டுமே பேசவைக்குமா?

எனக்குத் தெரியாது.

என் மனைவியிடம் பல முறை நானே கூறியிருக்கிறேன் ...திருமணமானால் கணவன் தான் எல்லாமே..அப்புறம் என்ன அப்பா, ஆட்டுக்குட்டி என்று....அவளும் என் மீதுள்ள காதலில் மாறிவிட்டாள்....! ஆனால் அந்த தகப்பன்....இன்னமும் தன் மகளுக்கு நேராக தொலைபேசி செய்தால் மாப்பிள்ளை ஏதும் நினைத்து விடுவாரோ என்று எப்போதும் எனக்கு தொலை பேசி செய்து விட்டு பிறகு பக்கதில் என் மனைவி இல்லாவிட்டால்...என்னிடம் அனுமதி பெற்று அவளிடம் பேசும் வழக்கத்தை எனது திருமணமாகிய இந்த ஏழு வருடத்தில் கடந்த ஒன்றரை வருடமாகத்தானே நான் உடைத்துப் போட்டேன்......

நானேல்லாம் படித்தவன், நானெல்லாம் புதிய தலைமுறைகள் பற்றி பேசுகிறேன், நானெல்லாம் முற்போக்குவாதி, நானெல்லாம் ஒரு சீர்திருத்தவாதி, என்று என்னையே எரித்து எரித்து இன்னமும் மாறமுடியாமல் சமுதாய கட்டமைப்பு என்னும் ஒரு முள்வேலி என்னை குத்திக் கிழிக்கிறது, உடலெல்லாம் இரத்தம் வழிய நான் மாற்றத்துக்கு என்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறேன்............

ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.


தேவா. S

Comments

//ஒரு கணவனாய் விளங்காத வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை//

பின்னூட்டமாய் எழுத நினைத்த வரிகளை நீங்களே சொல்லிட்டீங்க. இதற்குமேல் என்ன சொல்ல..

செம இடுகை..
pudugaithendral said…
அமைதிச்சாரலின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

அருமையான அலசல் பதிவு
Mohamed Faaique said…
///பெண் பார்த்து திருமணம் முடிப்பது என்பது வீட்டு வேலை செய்ய என்று ஒரு மனோபாவத்தை மாற்றுங்கள்///

உண்மையான விசயம் அண்ணா.... இந்த பதிவு ரொம்ப பிடித்திருக்கு....
//ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.//
Its True..
அன்பு தேவா, வணக்கம். முதல் முறையாய் உங்கள் வலைப்பூவில் எமது கருத்தினைப் பதிக்கிறேன்.

முதலில் தடுமாற்றத்துடன் தொடங்கி அப்படியே மெல்ல மெல்ல ஒருத் தகப்பனாய் பரிணமித்த அழகு இரசித்தேன். தகப்பனான பிறகு உங்கள் எழுத்துகள் அன்பின் ஆழம் நோக்கிப் பாய்கின்றது. பொங்குகிறது. குலுங்குகிறது. வழிகிறது. வாசம் வீசுகிறது. கண்ணில் நீர் கசிய அன்பின் ஊற்றுகள் திறக்கின்றன.

உயிராக நேசிக்கிறேன் என்பதை விட, தான் நேசிப்பவளுக்கும் உயிர் இருக்கிறது என்பதை உணர்வதே மேல்.
உணர்வுப்பூர்வமாய் நேசிப்பது என்பது காதலனுக்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும் சாத்தியமே. அன்பில் வெவ்வேறு பரிமாணங்கள் அவை. வாழ்வின் படிமம் அன்பு. நேசிக்கத் தெரிந்தால்....

தகப்பானாய் குழைந்து குலுங்கி இருக்கிறீர்கள் நண்பா..

இந்த பார்வையோடு உங்கள் மனைவியை பாருங்கள்...

அவர்களும் உங்களுக்கு ஒரு பெண் குழந்தையாய் தெரிவார்கள். மனம் அன்பை பொழியத் தொடங்குகிற வினாடி நீங்கள் கடவுளாகிப் போகிறீர்கள். அங்கே உருவம், உறவு எதுவும் பெரிதல்ல. அன்பே.. அன்பே...

தொடர்ந்து நேசியுங்கள்...

எல்லா உயிர்களையும்.... ஒருத் தகப்பனாய்.

நன்றி.
sakthi said…
சபாஷ் உங்களின் ஆகச்சிறந்த படைப்பு இதுவென கூறுவேன் தொடருங்கள் தேவா
sakthi said…
பல முறை நானே கூறியிருக்கிறேன்...திருமணமானால் கணவன் தான் எல்லாமே..அப்புறம் என்ன அப்பா, ஆட்டுக்குட்டி என்று....அவளும் என் மீதுள்ள காதலில் மாறிவிட்டாள்....

வேறு வழி ????

பெரும்பாலும் எல்லோருடைய கருத்தும் இது தானே பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ ஒத்துக்கொள்ளத்தானே வேண்டியுள்ளது :(
அண்ணா ஒரு மிக நீநீநீநீநீநீநீநீநீநீநீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச கட்டுரை.

முதல்ல திருமணம் பண்ணின உடனேயோ இல்ல பண்ணுறதுக்கு முன்னாடியோ அந்தப் பொண்ணப் பத்தியும் அவளோட குடும்பம் பத்தியும் ,
அப்புறம் நம்ம வீட்டுல இருக்குற பொண்ணுகள( அக்கா , தங்கச்சி ) நாம எவ்ளோ நேசிக்கிறோம்நும் யோசிக்கணும்.

ஒரு பொண்ணைப் பெற்று வளர்த்து எவ்ளோ அன்பு வச்சிருப்பாங்க .. அத எல்லாத்தையும் மதிக்கணும். நம்ம வீட்டுல இருக்குறவங்க இரண்டுநாள் வெளிய போயிட்டாவே என்னத்தையோ இழந்தது மாதிரி இருக்கு.

ஆனா என்ன பெரும்பாலும் இங்க பொண்ணுங்க எல்லாம் நீ எப்படியும் ஒரு நாள் வேறவங்க வீட்டுக்குப் போகப்போற அப்படின்னு சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுரதால அந்த உணர்வு பெரும்பாலும் வெளிப்படுரதில்லை .. ஆனா எல்லாப் பெற்றோருமே கொஞ்சமாச்சும் அழுதுதான் தீருவாங்க :-)
Harini Resh said…
//ரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை//

hmmmmmmmmm
நிறைய பேரை சிந்திக்க வைக்க கூடிய பதிவு
அருமை அண்ணா :)
..காலமெல்லாம் என் கண்ணுள் சுமந்த கவிதையை, நான் வடித்த அற்புத ஓவியத்தை, என் செப்புச் சிலையை, என் உயிர் சுமக்கும் என் தாயை உனக்கு தாரமாக்கி தந்தேனப்பா...! அவள் கண்கள் சிவந்து அழும் நேரங்களிலெல்லாம் என் உயிரே போய் திரும்புமப்பா...! உள்ளங்கையில் சுமந்த என் குழந்தையை உன்கையில் கொடுக்கிறேனப்பா...."//

மனதின் ஆழத்திலிருந்து வரும் வரிகள் னு புரியுது..

மாறியது குறித்து மகிழ்ச்சி.. அதை சொல்லவும் ஒரு துணிவும் மனமும் வேண்டும்..

நன்று..
priyamudanprabu said…
முதலில் +1
Chitra said…
ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.


...WOW!!!!!! Very touching!!!!
உங்கள் மகள் மேல் வைத்து இருக்கும் பாசமும் கரிசனையும் அன்பும் அக்கறையும் இந்த வரிகளில் தெரிகின்றன. May God bless this beautiful family. :-)
ஹேமா said…
தேவா...உங்களைப்போல அடுத்தவர்கள் மனதைப் புரிந்துகொண்டால் எத்தனை பிரச்சனைகள் கஸ்டங்கள் பறந்தே போகும் !
ஒரு தகப்பனாய் உங்களுடைய பார்வை மாறி இருப்பது மகிழ்ச்சி, "அபி அப்பா?" உங்கள் மனைவியிடமும் உங்கள் பார்வை மாறிப் போகும். இனிய மாற்றங்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால், தகப்பன் ஸ்தானம் இன்னும் பொறுப்புடையது. எதிர்காலத்தில் எங்கள் உறவு எப்படியிருக்கும் என்று பயப்படாமல் , இளவரசி போல் நடத்துங்கள். செல்லம் தர சொல்லவில்லை. எதிர்காலத்தில் ஒரு வீட்டிற்கு மகாராணியாகக்கூடிய பண்புகளை வளர்த்திடுங்கள். அதே பண்புகளை உடைய உங்கள் மனைவி இதை சரிவர செய்வார் என்று தோன்றுகிறது. தவறாக தலையிட வேண்டாம். உங்கள் அன்பு உங்கள் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தரும்.
This comment has been removed by the author.
\\ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.\\
மிக அருமை.
ஆனால் எத்தனை பேருக்கு இப்படி சிந்திக்கும் மனோபாவம் இருக்கிறது?
உங்களின் வெளிப்படையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.
Geetha6 said…
வாழ்த்துக்கள்.
Arumaiyaana nadai....!!! puriya vaikka virumbiya vidham, arpudham.Aan pen iruvarudaiya urimaigalum kadamaigalum ivaidhaan endru sollaamal solli nirkindrandhu. paaraattukkal!!!
//அப்பா மகனே, என் மருமகனே....காலமெல்லாம் என் கண்ணுள் சுமந்த கவிதையை, நான் வடித்த அற்புத ஓவியத்தை, என் செப்புச் சிலையை, என் உயிர் சுமக்கும் என் தாயை உனக்கு தாரமாக்கி தந்தேனப்பா...! அவள் கண்கள் சிவந்து அழும் நேரங்களிலெல்லாம் என் உயிரே போய் திரும்புமப்பா...! உள்ளங்கையில் சுமந்த என் குழந்தையை உன்கையில் கொடுக்கிறேனப்பா...."//

...உங்க பதிவில் நனைந்தேன்.. என் கண்களில் நீர்த்துளி.. என் தந்தையை நினைவு கூர்ந்தேன்.. ஒளிவு மறைவு இல்லாத உங்கள் உன்னத எழுத்துக்களில்... தொலைந்தே போனேன் சில நிமிடங்களில்.....!

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க. தேங்க்ஸ். :-))
Unknown said…
Migavum arumai.. indha thelivu aangalidaye varaverkapada vendiyadhu.. oru siriya varutham, idhu oru thagappanin vaakumulam.. indha mudhirchi varum munne manaivi enappadubaval vandhuviduvaal illaya?
Veru vazhi illai.. Kaalangal aagum.. Samoogamum ungalodu serndhu maara..

Varaverka pada vendiya maatrangal..
Kadaisi 4 varigal, migavum arumai.. Kaneer maraithadhu..
Nanri.. :):)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த