Pages

Saturday, May 21, 2011

ரஜினி என்னும் மந்திரம்...!

இதோ...இன்றோ, நாளையோ நீ வந்து விடுவாய் என்று நானும் கவனத்தை வேறெங்கோ செலுத்திக் கொண்டிருக்கிறேன். நாள் தோறும் என் கவனத்தை மீறிய செய்திகள் காதில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. நான் கேட்க விரும்பவில்லை. எனக்கு எதுவும் வேண்டாம் என்று மெளனமாய் நான் கடக்க கடக்க மீண்டும் மீண்டும் காலம் செய்தியாய் என் செவிகளுக்குள் நான் கேட்க விரும்பா செய்தியை ஏன் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற எரிச்சல் வேறு...

நான் எனக்குள்ளே அழுந்தி, அழுந்தி நான் நேசித்த, நேசிக்கும் ஒரு மனிதனின் உடல் நலன் செம்மையாக வேண்டும் என்று நாளும் பிராத்தனைகளை செய்து கொண்டிருக்கிறேன். இன்று மதியம் கூட ஏதோ சிந்தனையில் இணையத்தினை துருவிக் கொண்டிருந்தேன். உன்னைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கின்றனவா என்று....! மருத்துவமனையில் நீ இருக்கும் ஒரு புகைப்படம் பார்த்தால் கூட என் மனது திருப்திப் பட்டுப்போகும் என்று.....

என் விழிகளுக்கு வந்து கிடைத்த உன்னின் ஒரு புகைப்படத்தைப் பார்த்து நான் கண் கலங்கியது உனக்குத் தெரியாது. எனக்கும், எல்லாவற்றையும் இயக்கும் ஒரு பெருஞ்சக்திக்கும் மட்டுமே தெரியும். முடியாத போதும் நீ அழகுதான்!!!! நிற்க முடியாமலா நீ மகளின் மீது சாய்ந்து நின்றாய்....???

உனக்கு உடம்பு சரியில்லையா ரஜினி?

எனக்குள் கேள்வியாய் உள்ளே சென்ற வார்த்தைகள் கண்களில் என்னை மீறி அழுகையாய் எட்டிப் பார்த்தது. மழலையிலிருந்து நான் எப்படி பால்யத்துக்கு மாறினேன் என்று யாரும் சொல்ல முடியாதோ அப்படித்தான் நான் எப்போது உன்னை ரசிக்க ஆரம்பித்தேன் என்றும் சொல்ல முடியாது. உன்னோடு பிண்ணிப் பிணைந்த ஒரு இணைப்பு எப்படி ஏற்பட்டது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

எனக்கு நடிப்பின் சூட்சுமங்களைப் பார்த்து வைகைப்படுத்தி ரசிக்கத் தெரியாது, கதையின் ஆழங்கள் பற்றிக் கணிக்கத் தெரியாது, இசையும், இயக்கமும் என்னவென்றே தெரியாது, வருமானமும், வாழ்க்கையும் தெரியாது ஆனால் திரையில் வரும் உன்னை எனக்கு பிடிக்கும். உன் வேகம் பிடிக்கும், வேகமாய் நீ பேசும் தமிழ் பிடிக்கும், மனிதர்களுக்கு மத்தியில் ஜொலித்த ஒரு நட்சத்திரம் நீ.

நீ எப்போது தலை கோதுவாய் என்று எதிர் பார்த்தே படம் முழுதும் பார்ப்பேன். நீ பேசும் வேகமும், சின்ன கண்களும், அலை பாயும் கேசமும், கவர்ச்சியான கருமை நிறமும் உனது மூக்கில் மத்தியில் இருக்கும் கருமையான ஒரு வெட்டுக் காயமும் முன் நெற்றியில் வலது ஓரத்தில் உனக்கு இருக்கும் ஒரு தழும்பும், இடது பொட்டில் இருக்கும் ஒரு தழும்பும் எனக்கு அத்து படி. நீ சிரித்தால் அது சிம்ம கர்ஜனை

எங்கெல்லாம் உன் புகைப்படம் கிடைக்குமோ அங்கெல்லாம் ஓடி ஓடிப் போய் தேடித் தேடி எடுத்து அது குப்பையாய் இருந்தாலும் கவலையின்றி எடுத்து சேகரித்து வைத்து பார்த்து பார்த்து உன்னை நேசிக்க சினிமா மட்டுமே ஒரு காரணம் என்றாலும் எனது பால்யத்தில் உன்னோடு ஏதோ ஒரு பளீச் என்ற ஒரு பரிச்சயம் இருந்தது போலவே எனக்கு ஒரு உணர்வு.

உன்னிடமிருந்து எனக்கு வந்த முதல் கடிதத்தை காதலோடு இன்னும் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆமாம் அது 1987 ஆம் வருடம் காலம் ஓடினாலும் அது ஒரு பிரிண்டட் கடிதம் என்றாலும் எனக்கு அது பொக்கிஷம்தான்.

உனக்கு உடம்பு சரியில்லையா ரஜினி?

அரைகுறை வெத்து வேட்டுக்கள் எல்லாம் தத்து பித்துவென்று அடித்து பிடித்து அரசியலில் நுழையவும், நுழைந்து ஆட்சியைப் பிடிக்கும் ஆசைகளோடும் நகரும் இந்த ஒரு காலப் போக்கில் நீ உச்சத்தில் நின்று சொச்சமுள்ள அரசியல் தலைகளும் உன் பின் அணி வகுக்க காத்திருந்த போது 1996 களில் அதை உதாசீனப்படுத்த்தி உன் ஆத்ம திருப்திதான் முக்கியம் என்று ஆன்மீக வாழ்க்கைக்குள் சென்றாய்.

நீ எதை செய்தாலும் அரசியலாக்கும் தமிழக ஊடகங்கள் இப்போதும் உன் உடல் நலக்குறைவையும் குறைவில்லாமல் காசாக்கிக் கொண்டிருக்கின்றன. காவிரி பிரச்சினையாயிருக்கட்டும், காயலாங்கடைப் பிரச்சினையாயிருக்கட்டும் உன்னைப் போற்றியும் தூற்றியும் பேசிப் பேசி தம்மை பிரபல்யப்படுத்திக் கொண்டோர் அதிகம்.

நான் நடிப்பது சினிமா, என்னை திரையில் ரசியுங்கள், உங்கள் பெற்றோரை பார்த்துக் கொள்ளுங்கள், உங்களை மகிழ்விக்கும் நடிகன் நான் என் தலையெழுத்து அரசியல்தான் என்றால் நான் வருவதை யார் தான் தடுக்க முடியும் என்று நீ திரும்ப திரும்ப கூறியும், உன்னை திரையில் பார்த்த ரசிகர்கள் மற்றும் உன்னை வைத்து அரசியல் செய்ய ஆசைப்பட்ட அவர்களின் சுயநலனை நீ சுட்டுப் போட்டதால் உன்னை துரோகி என்றனார். கவலைப்பட்டாயா நீ..? இல்லையே....

திரைப்படத்திலேயே பகிங்கரமாய் சொன்னாயே.. சினிமாவில் நான் பேசியது எல்லாம் வியாபர யுத்திக்காக செய்யப்பட்ட வசனங்கள் அதை வைத்து நீங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை தீர்மானிக்காதீர்கள் என்று சொன்னதற்கு உன் கொடும்பாவியை எரித்தனர் சுயநலச் செம்மல்கள். பயந்தாயா நீ?

உன் படம் தோற்றப் போதும் விநியோகஸ்தர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்று பணத்தை திருப்பிக் கொடுத்த வள்ளல் நீ....! அட்டகாசமாய் படம் ஓடி வசூல் செய்த போது இன்னும் கொஞ்சம் பணம் தா என்றா கேட்டாய்...? இல்லையே. ஊரையே அசத்தும் படங்களை கொடுத்து விட்டு நீ கிழிந்த வேட்டியோடு இமயமலைக்குச் சென்று ஏதோ குகையில் ஒரு பிச்சைக்காரனைப் போல அமர்ந்திருப்பாய்.

நீ நடித்தாய், ரசிகன் ரசித்தான், தாயரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் திரைப்பட முதலாளிகளும் கொள்ளை கொள்ளையா லாபம் பார்த்தனர் ஆனால் கடைசியில் தமிழ் நாடு போட்ட பிச்சையில் நீ வாழ்ந்தாய் என்று வக்கிர புத்திகள் கூறிய போதும் நீ அதையும்தானே புன் முறுவலோடு கடந்து வந்தாய்...

என்னாயிற்று என் ரஜினி உனக்கு இன்று? ஏதேதோ சொல்கிறார்கள், நுரையீரல் தொற்று என்கிறார்கள், நுரையீரல் புற்று என்கிறார்கள், நிமோனியா காய்ச்சல் என்கிறார்கள், கிட்னி பெயிலியர் என்கிறார்கள்.....எல்லவற்றையும் மூளை ஏற்க மனது அடித்து விரட்டிச் சொல்கிறதே உனக்கு ஒன்றும் இல்லை என்று.....

மீண்டு வா ரஜினி.....எங்களோடு இன்னும் பல வருடங்கள் நீ இரு...!!! சட்டென்று எங்கள் புத்திகள் ஜீரணிக்கும் முன் நீ படுக்கையிலிருப்பதை நம்ப மறுத்துக் கொண்டே இருக்கிறது மனது....!!! ஒரு நடிகனென்று ஒரு முட்டாள் ரசிகனாய் இதை எழுதவில்லை ரஜினி....நெடுநாள் உன்னைப் பார்த்து, உன்னை மானசீகமாய் ஒரு மனிதனாய் நேசித்து, உன் மனிதநேயத்தால் ஈர்க்கப்பட்டு அடி மனது கொடுத்த உத்வேகத்தில் வார்தைகள் என்னை மீறி வந்து விழுகின்றன கண்ணீரோடு சேர்ந்து..!!!!

வயிற்றுப் பசியோடு இருந்த போது ஈரத்துணியை வயிற்றில் கட்டிப் படுத்திருதேன் என்று சொல்லியிருக்கிறாய், சென்னை அண்ணா சாலையில் வறுமையை கையில் வைத்துக் கொன்டு கனவுகளோடு அலைந்தேன் என்று கூறியிருக்கிறாய்...

வாழ்க்கையில் கட்டாந்தரையிலிருந்து உச்சாணிக் கொம்பேறிய ஜொலிக்கும் உச்ச நட்சத்திரம் நீ....!!!!யாராலும் நெருங்க முடியாத சூப்பர் ஸ்டார் நீ.......

மீண்டும் வா ரஜினி............மீண்டு வா ரஜினி..........!!!!


தேவா. S

பின் குறிப்பு: அறிவோடு சேர்ந்து வாழ்க்கையை அலசுபவர்களும், கருத்துகளோடு தத்துவ விவாதம் செய்ய வருபவர்களும் இந்த கட்டுரையை மெளனமாய் கடந்து சென்று விடுங்கள்.

முட்டாளாகவே என்னைக் கொஞ்ச நேரம் இருக்க விடுங்கள்!

18 comments:

எல் கே said...

மீண்டு வருவார் தேவா .. அவர் குதிரை மாதிரி

அன்புடன்-மணிகண்டன் said...

Get well soon Thalaivaaaa....

S Maharajan said...

பாபாஜி அருளால் அவர் மீண்டு வருவார்

Rathnavel said...

அருமை.
மனந்திறந்து கொட்டி விட்டீர்கள்.
நலம் பெற பிரார்த்தனைகள்.

Anonymous said...

///முட்டாளாகவே என்னைக் கொஞ்ச நேரம் இருக்க விடுங்கள்!////

உங்களைப் போன்ற முட்டாள்கள்தான் தமிழ்நாட்டிற்கு தேவை.

Balasubramanian said...

Awesome......
Really don't have words to praise this post..... Amazing!!!
I pray god for Thalaivar's speedy recovery.

Cheers,
Bala

Balasubramanian said...

///Anonymous said...
///முட்டாளாகவே என்னைக் கொஞ்ச நேரம் இருக்க விடுங்கள்!////

உங்களைப் போன்ற முட்டாள்கள்தான் தமிழ்நாட்டிற்கு தேவை///

Will you please shut your holes??

அருண் இராமசாமி said...
This comment has been removed by the author.
அருண் இராமசாமி said...

///Anonymous said...
///முட்டாளாகவே என்னைக் கொஞ்ச நேரம் இருக்க விடுங்கள்!////

உங்களைப் போன்ற முட்டாள்கள்தான் தமிழ்நாட்டிற்கு தேவை///

dai anonymous... mudittu iruda... enga thalaivar seekiramea vanthuruvar... Raana Rockz very soon

Raja said...

அருமை.
நலம் பெற பிரார்த்தனைகள்.

ganesh said...

arumai nanbare, naan solla ninaithavi ella vaarthaigalum, avar seekiram udal nalamaagi thirumba varuvaar, innum manam oththukolla maatengudhu rajinikku udambu sari illai endru

saravanan said...

kan kalangiviten nanbare ungal pathivai padikum pothu. Ovvoru vaarthaiyum enakkul irunthu edukapattathai ponra oru unarvu. Unmaiyil manathu innum nambavillai en thalaivanukku udambu sari illai enru.
"nirka mudiyamala nee magalin meethu saainthu ninraai?" enna nanbare ithu ippadiyum kuda irukumo :( manathu valikkirathu :'( singa nadai pottu nadanthu varum maaviran allavo en thalaivan! kandippaga ippadi irukamudiyathu nanbare.
Avar ithilirunthu meendu varuvar veeru konda singamaga. Kanneerudan thalaivarin bakthan.

Thameez said...

Great last words. Other Rajini fan none can pay such a tribute. With u joining and p(r)ays the tribute.LONG LIVE RAJINI

MANI said...

கண்களில் கண்ணீர் தளும்ப காத்திருக்கிறோம். தலைவா மீண்டு வா!

உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.

koodalindia said...

கண்களில் கண்ணீர் தளும்ப காத்திருக்கிறோம். தலைவா மீண்டு வா!

உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.thanks once again.......

ARAN said...

வார்த்தைகளின்றி தவிக்கிறேன் வந்துவிடு தலைவா தரிசனம் தந்துவிடு !

Raj said...

hi it was amazing, i have never read blog this is the first time that too.. abt our sir.. great MAN u have done it.. what other fans felt u did it.. the word u said மழலையிலிருந்து நான் எப்படி பால்யத்துக்கு மாறினேன் என்று யாரும் சொல்ல முடியாதோ அப்படித்தான் நான் எப்போது உன்னை ரசிக்க ஆரம்பித்தேன் என்றும் சொல்ல முடியாது. உன்னோடு பிண்ணிப் பிணைந்த ஒரு இணைப்பு எப்படி ஏற்பட்டது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. this was amazing... the same what i felt u wrote... we all love him a lot.. dontworry he will be alright... the same words to me.. so i get convenced... thanks for u r super content..... RAJ Besant NAgar

எப்பூடி.. said...

Hats of to you ; வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்ட கட்டுரை, ரஜினியை ஆத்மார்த்தமாய் நேசிக்கும் நெஞ்சங்களின் சார்பில் நன்றிகள்.


ரஜினிக்கும் எங்களுக்கும் இடையிலிருக்கும் பந்தத்தை விமர்சிக்கிறேன் பேர்வழிகளால் எப்போதுமே புரிந்துகொள்ள இயலாது. நிச்சயமாக இந்த பந்தத்தை அறிவு ஜீவிக போர்வையிலோ, சமூக சீர்திருத்தவாதி போர்வையிலோ இருக்கும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களால் புரிந்து கொள்ள இயலாது, ஆனாலும் அவர்களில் சிலருக்கு தாம் செய்வது கேலிக்கூத்து என்று தெரிந்தும் தமது ஆற்றாமையை வெளிக்கொண்டுவர ரஜினியை கேவலாமாக மட்டுமே விமர்சிக்கிறார்கள். கண்ணதாசன் சொன்னதுபோல "போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்(வேன்)வோம். ரஜினி எப்போதும் எம் இதயத்தில் கலந்த உறவுதான்.