Skip to main content

காந்தி தேசமே! கருணை இல்லையா...?



















தங்கபாலு என்ற தகர டப்பா வாய் திறந்து நேற்று தத்து பித்து என்று உளறியிருக்கிறது. பிழைப்பிற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு தனது சுகங்கள் எள் அளவேனும் குறையக் கூடாது என்று அடைக்கலம் புகுந்திருக்கும் திருவாளர் தங்கபாலு நேற்று மீடியாக்களின் முன் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேரையும் தூக்கிலிட்டே ஆகவேண்டுமாம். அப்படி செய்தால்தான் ஜனநாயகம் காப்பற்றப்படுமாம். என்னே அறிவு...! என்னே புலமை! மெச்சி மெச்சி பாராட்ட வேண்டுமோ இந்த முட்டாள்தனத்தை...?

நீதிகள் என்பவை சாட்சிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுபவை என்பதை இந்திய தேசத்தில் பாமர மனிதனும் அறிவான். சாட்சிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை பச்சைப் பாலகர்களும் அறிவர்.

ஜனநாயகத்தினைப் பற்றி பேசும் திருவாளர் தங்கபாலு...எந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ கைது செய்யாமல் மல்லிகையில் வைத்து பேரறிவாளனை 8 நாட்கள் சித்ரவதை செய்து அதன் பின் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்கள் என்று கூற முடியுமா?

முன்னுக்கு பின் முரணாக செய்திகள் இருக்கும் ரகோத்தமனின் அதிகாரப்பூர்வ கருத்துக்களை தங்கபாலுகள் வாசிக்கவில்லையா இல்லை வாசிக்கத் தெரியாதா? ராஜிவினைக் கொல்ல பயன்பட்ட வெடிகுண்டின் பெல்ட்டினை செய்தது யார்? என்று இதுவரைக்கும் துப்பு துலக்க முடியாத துப்பு கெட்ட புலனாய்வுத் துறை பேரறிவாளன் அதற்குத்தான் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்று கூறுவது அபத்தத்திலும் அபத்தம்.

விடுதலை பத்திரிக்கைக்காக பணி புரிந்த பேரறிவாளனும், அய்யா பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி வந்த பேரறிவாளனின் குடும்பத்தினரும் மட்டுமல்ல இன்னும் தமிழகத்தில் இருக்கும் லட்சோப லட்ச மக்களும்தான் விடுதலைப்புலிகளையும் அவர்களின் ஈழப்போரட்டத்தையும் ஆதரித்தார்கள். அப்படி ஆதரித்த அத்தனை பேருக்கும் தெரியுமா விடுதலைப்புகள் இராணுவ நடவடிக்கையாக ராஜிவினைக் கொல்லபோகிறார்கள் என்று...?

1991க்கு முன்பு இருந்த தமிழகத்தின் நிலையை சற்றே அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஈழப்போராட்டம் என்பது இந்திய அரசால் ஊக்குவிக்கப்பட்டதும், விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகள் கொடுக்கப்பட்டதும், இராணுவ பயிற்சிகள் கொடுக்கப்பட்டதும் என்று குறையற நடந்தேறியதை யாராலும் மறுக்க இயலுமா?

தங்கபாலுகளின் சொந்தங்களில் யாரேனும் ஒருவர் வேளச்சேரிக்கு செல்லும் பேருந்துக்கு யாரேனும் ஒரு விடுதலைப்புலிக்கு வழிகாட்டியிருந்தால் அவர்களை தூக்கில் போடலாமா? பசிக்கிறது எங்கே சாப்பாடு கிடைக்கும் என்று ஒரு ஈழத்தமிழர் கேட்டால் உணவு கொடுத்தவருக்கு தூக்கு என்று சொல்வது என்ன நியாயம்? இது என்ன மானங்கெட்ட ஜனநாயகம் இதற்கு நீங்கள் கொடிபிடிக்கிறீர்கள்.

ராஜிவ் கொலையினைப் பற்றி மூன்றே பேருக்கு மட்டும்தான் தெரியும் என்று காதுகள் செவிடாகும் படி சிபிஜ கூறுகிறதே....? தங்கபாலுவின் காது என்ன செவிடா? அல்லது வேண்டுமென்றே தமது வசதிக்காக செவிடைப் போல நடிக்கிறாரா? யாருக்குமே தெரியாது என்று இந்திய புலனாய்வு தனது மூளையை செதுக்கி வெளியிடும் அறிக்கைகளையும் தாண்டி, இந்தக் கொலையினை அறிந்தேதான் பேரறிவாளன் உதவினார் என்று கூறுவது எவ்வளவு பெரிய மடத்தனம்...?

கொலை செய்யவேண்டும் என்பவன் கொலை செய்யும் போது மூளைகள் மடங்கி உணர்ச்சியின் உந்துதலில் மிருகத்தனமாய் ஒரு படுகொலையைச் செய்கிறான். அவன் மனிதனல்ல மிருகம்....என்றே வைத்துக் கொள்வோம். கொலையானவர் தான் கொல்லப்படுகிறோம் என்றறியாமலேயே கொல்லப்படுகிறார்.

இப்படியான சூழலில் இதனோடு தொடர்பு கொண்டவர் என்று தண்டித்து தூக்கிலேற்றப் போகும் ஒருவர் கொலைக்குற்றத்தோடு நேரடி தொடர்புடையவர் அல்லது கொலை என்று தெரிந்தே நோக்கத்தில் குற்றத்தை ஏந்தியிருப்பவர் என்றால்...கூட....தெரிந்தே நாம் சட்டத்தின் மூலம் ஒரு கொலையைச் செய்வது சரியா?

பேரறிவாளன் என்பவர் குற்றத்தோடு நேரடி தொடர்பில்லாதவர். குற்றம் நடக்கப்போகிறது என்றே அறியாதவர். இவருக்குத் தூக்கு என்பது....

மறுக்கப்பட்ட நீதி...!

தங்கபாலு போன்ற அரசியல் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு விசுவாசமாய் நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு ஜனநாயகத்திற்கு புது வடிவங்கள் கொடுக்க முயலலாம்.

தான் இறக்கப் போகிறோம் என்று அறியாமல் ஒரு உயிர் பிரிவது வேறு. அதற்கு நாள் நட்சத்திரம் குறித்து நேரம் குறித்து துள்ளத் துடிக்க உலகறிய தூக்கிலிடுவது வேறு. அடிப்படையில்....மன்னிக்கவும், குற்றவாளிகளை குற்றத்தின் தன்மையை உணர்ந்து கொள்ளவும் செய்யும் வகையில் தீர்ப்புக்கள் இருக்க வேண்டும். ஆயுள் வரை, இறக்கும் வரை ஒரு மனிதனை சிறையிலடைக்கலாம், கடுமையான வேலைகளைச் செய்யச் சொல்லி அவன் மூலம் ஏதேனும் உற்பத்திகளைப் பெருக்கலாம்...

ஆனால் உயிர் எடுக்கும் தூக்கு தண்டனை என்பது, மனோநிலை குன்றிய ஒரு சமுதாயத்தில் எவனோ எழுதி வைத்து விட்டுப் போன பழிக்குப் பழி வாங்கும் ஒரு குரூரம்.

துள்ளத் துடிக்க உயிர்களுக்கு (பெயர், ஊர், நாடு, மொழி, எல்லாம் நீக்கி விடுக) உங்களைக் கொல்லப்போகிறோம் தயாராகுங்கள் என்று கூறுவது மிகப்பெரிய மனிதக் கொடூரம்....!

உயிர்கள் வாழப் படைக்கப்பட்டவை அதை எந்த மனிதனாயினும் ஒரு மனிதனின் உடலில் இருந்து பிரிக்க அனுமதியில்லை. அப்படி சிலர் செய்கிறார்கள் என்றால் அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். எனது நாடும் அரசாங்கமும் மக்களும் கோடாணு கோடி ஆண்டுகள் சுபிட்சமாய் வாழ வேண்டும். எனது சமுதாயத்தின் மீது எந்த ஒரு கறையும் படியக்கூடாது...என்ற எண்ணம் கொண்டோரெல்லாம் இந்தக் கொலைகளுக்கு எதிராய் போராடித்தான் ஆகவேண்டும்.

சகிப்புத்தன்மையையும், சத்தியாகிரகத்தையும் கற்று கொடுத்த தேசப் பிதாவினை ஈன்ற தேசம் இது. ஆயிரம் இன்னல்களுக்கு மத்தியிலும் அறப்போராட்டங்கள் செய்து வளர்ந்த நாடு இது....

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய ஜீவகாருண்ய பெருமான் வள்ளலாரையும், கொல்லாமை என்னும் அதிகாரம் கொண்ட வள்ளுவப்பெருந்தகையும், உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றும் கூறிய புத்த பெருமானும் கூறிய கருத்துக்களால் தெளிர்ந்து மிளிர்ந்து நிற்கும் தேசமிது.

தேவையின் அடிப்படையில் தர்மத்தை நிலை நாட்ட கத்தியினை எடுக்கலாம் என்று பயிற்றுவித்திருக்கும் ஒரு ஆத்மார்த்த பூமியில் அதனை தவறாக கற்பிதம் கொண்டு அப்பாவிகளை அடித்து உதைத்து சித்ரவதை செய்து 20 வருடங்களாக வழக்கினை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சீரழித்து...

மனித மனங்களை உடைத்து, தனிமைச்சிறையில் அடைத்து, வேதனைப்படுத்தி தினம் தினம் சாகடித்து, உற்றோர், பெற்றோர் உறவினர், சக தேசத்து மக்கள் என அனைவரையும் கலங்கடித்து, அவர்களின் இளமையும், வாழ்க்கையும் அட்டையாய் உறிஞ்சிக் கொண்டு....

ஒரு நடை பிணமாய் கூட சிறைக்குள் வாழ அனுமதிக்காமல் ஒரு தேசம் அவர்களை தூக்கில் போடுமெனில் அது எப்படி தர்மமாகும்...?

இதுதான் நீதியா? தர்மமா? சத்தியமா?

காலத்தின் கைகளில் இந்தக் கேள்விகளை ஒப்படைத்து விட்டு...மெளனமாய் காத்திருக்கிறேன்... உங்களோடு நானும்...!


தேவா. S

Comments

காலத்தின் கைகளில் இந்தக் கேள்விகளை ஒப்படைத்து விட்டு...மெளனமாய் காத்திருக்கிறேன்... உங்களோடு நானும்...!

காலம் மாறும்!
அதற்கு உணர்ச்சிமிக் எழுத்துக்கள் துணை நிற்கும்!!!!
காந்திமகான் கண்ட இயக்கத்தில் உள்ள மாநிலதலைவரின் உணர்ச்சியற்ற,மனிதாபிமானமற்ற பேச்சு..!!
Anonymous said…
naam ini enna seyalam yaravadhu koorungal
தங்கபாலு என்ற நாயை ஏன் இன்னும் தமிழகத்தில் விட்டு வைத்திருக்கிறீர்கள்...
Unknown said…
பகிர்வுக்கு நன்றி நண்பா!
Thennavan said…
//naam ini enna seyalam yaravadhu கூறுங்கள்//
வழக்கு நடைபெறும் சென்னை உயர் நீதி மன்றம் முன்பு சாதி , மதம் , கட்சி வேறுபாடுகளை கடந்து மனிதாபிமான அடிப்படையில் ஒன்றினைவோம்.
மொக்கை பதிவுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு சற்று ஆக்கபூர்வமாக இந்த வழக்கை பற்றி பதிவர்கள் பதிவிடலாம்.
மாற்று கருத்து உள்ள பதிவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சற்று ஒதுங்கி நில்லுங்கள். மறுக்கப்பட்ட நீதியினால் ஊசலாடும்
மூன்று உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை . (அப்போ ராஜீவ் உயிர் என்ன மயிற என்ற வாக்குவாதம் வேண்டாம்)
Anonymous said…
இது இது தான் தேவா அண்ணாவின் எழுத்து. தூக்கை எதிர்த்து நீங்கள் எழுதியதற்காக அல்ல. வார்த்தைகள் மனதில் இருந்து வந்தவையாகவே தோன்றும் படி ஒவ்வொரு வரிகளிலும் கோவம்+வருத்தம் சரியாக கலந்து எழுதுவது.

//ஈழப்போராட்டம் என்பது இந்திய அரசால் ஊக்குவிக்கப்பட்டதும், விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகள் கொடுக்கப்பட்டதும், இராணுவ பயிற்சிகள் கொடுக்கப்பட்டதும் என்று குறையற நடந்தேறியதை யாராலும் மறுக்க இயலுமா? //

அதுக்கு தண்டனை கொடுக்க மாட்டாங்களா? அப்பவும் காங்கிரஸ் தானே ஆண்டது. பேரறிவாளனுக்கு தூக்கு என்றால் அந்த நேரம் ஆண்டவர்களை நூறு தடவைகள் திருப்ப திருப்ப தூக்கில் போட வேண்டுமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இருபது வருடங்கள், ஒருவரின் மிகச்சிறந்த வருடங்களான 20களும் 30களும் சிறையிலேயே கழிந்துவிட்டது. அதை விட பெரிய தண்டனை என்ன இருக்கிறது. பேரறிவாளனின் முகத்தைப் பார்த்த போது கூட இரக்கம் வரவில்லையோ இவர்களுக்கும்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த