Skip to main content

வெற்றி...!



















கொஞ்சம் நின்னு யோசிச்சுப் பாத்தா ஒவ்வொரு தடவை இங்க எழுதறதுக்கும் மன நிம்மதிக்கும், மன ஒருநிலைப்பாட்டுக்கும் ரொம்பவே நெருக்கம் இருக்கு. காரணம் எழுத்துக்களை தேடி வெளில ஓடுற இடம் இல்லை இது,எழுத்துக்களை எனக்குள்ள தேடுற இடம்.

நேராவே சிந்திச்சு நேராவே வாழ்றது எப்பவுமே ரொம்ப கஷ்டமான விசயம்னு சின்ன வயசுல இருந்து படிக்கும் போதும் சரி, வேற பெரியவங்க அதை சொல்லும் போதும் சரி அது கொஞ்சம் விளையாட்டாத்தான் தெரிஞ்சுச்சு, ஆனா சரிய சரின்னு சொல்லி, தப்ப தப்புன்னு சொல்லி, டக்கு டக்குன்னு நம்மள சத்தியத்தோட ஒத்துப் போக வச்சு வாழ்ற ஒரு வாழ்க்கை நமக்கு ஈசியா வேணா இருக்கலாம் ஆனா கூட வாழ்ற மனுசங்களுக்கு அது ரொம்ப தொந்தரவா இருக்கு.

ஏதேதோ சொல்றோம், ஏதேதோ எழுதுறோம் ஆனா கனவுலயும் கூட அடுத்த மனுசன தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு ரொம்ப கவனமா போகும் போதே பளீச்னு தலையில அடிச்சு காலம் சொல்லிக் கொடுக்குது " டே.....மடையா....சத்தியத்த தான்டா சத்தியத்தால சந்திக்கணும். அநியாயத்த அட்டூழியத்த, வன்முறைய நீ அதே ரேஞ்ச்ல தாண்டா போயி ஃபேஸ் பண்ணனும்னு ....

வாழ்க்கையில் எல்லாத்துக்கும் ஒரு விளைவு இருக்குங்க...! கட்டைய தொட்டாலோ, சுவத்த தொட்டாலோ அதுக்கு ஒரு விளைவு, ஆனா அதே மூட்ல கரண்டையோ அல்லது நெருப்பையோ தொட்டா அதுக்கு ஒரு விளைவுன்னு கண்டிப்பா ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு மாதிரியான விளைவை வாழ்க்கை தெளிவா திருப்பிக் கொடுத்துட்டுதான் இருக்கும்.

பூனை வால மிதிச்சா அது மியாவ்னு கத்திட்டு வாலை சுருட்டிக்கிட்டு ஓடிடும். அதே சமயம் புலி வால மிதிச்சா, வாலை சுருட்டிகிட்டு ஓடுமா...என்ன? நெவர்.....ஒரே பாய்ச்சல்ல குரல்வளைக்குத்தான் போகும் புலியோட பல்லு...!

எப்பவுமே வாழ்க்கை கத்துக் கொடுக்குது. இப்பவும் அதான் செஞ்சுட்டு இருக்கு. ஒரு எலிக்கு பூனைதான் பலசாலின்னு தெரியும். அதுக்கிட்ட போயி ஓராயிரம் தடவை அதுகிட்ட பூனையவிட புலி பலசாலின்னு சொன்னா...எலிக்குப் புரியாது. காரணம் பூனைதான் எலிய பிடிக்குது, அதனால பூனையைப் பார்த்தான் எலிக்கு பயம். புலிக்கு எலிய பத்தி கவலையே இல்லை. எலிக்கும் புலிய பத்தி கவலையும் இல்லை.

காரணம் இரு வேறு நோக்கங்கள். இரண்டும் இரண்டி நோக்கத்தையும் இன்னொன்னு கிட்ட நிறுவ வாதடினிச்சுன்னு வச்சுக்கோங்க சாகுற வரைக்கும் ரெண்டுக்கும் ரெண்டோட நோக்கமும் நிறைவேறப்போறது இல்லை. பெஸ்ட் புலி, எலிய மறந்துட்டு....தன் இரையைத் தேடிப் போறதுதான்...!

இப்படித்தான் பல நேரங்கள்ல நாம யாரு? நம்ம நோக்கம் என்ன அப்டீன்னு தெரிஞ்சு இருந்தும் தேவையில்லாத வேலைகளை நிறையவே பாத்துகிட்டு இருப்போம். அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் குணம் என்ற விசயம் இருக்கிறது. அந்த குணம் என்ற விடயம் குரோமோசோம்களில் ரொம்ப ஸ்ட்ராங்கா பதியப்பட்டு காலம் காலமா மூததையர்கள் மூலமா ஜீன்களா நமக்குள்ள இருக்கு...

அது மட்டும் இல்லாம ஒவ்வொரு தனி மனுசனையும் இந்த ஜீன்களின் தாக்கத்தையும் தாண்டி புறச்சூழல்னு ஒரு விசயமும் ச்ச்சுமா அப்டியே புரட்டிப் போட்டுது. காலெமல்லாம் எல்லாமே வாழ்க்கையில மறுக்கப்படாம கிடச்சு இருந்துச்சுன்னா அவனோட குணம் ஒரு மாதிரியாவும்...

அடிச்சு தொரத்தி அநீதி இழைக்கப்பட்டவனோட குணம் ஒரு மாதிரியாவும், எப்பவுமே எல்லாமே கிடைச்சு வாழ்றவனோட குணம் ஒரு மாதிரியும்னு சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கு. எல்லோரும் சமமாய் இருக்க முயற்சி பண்ணலாம்..........வாழ்க்கையின் தரங்களில் எல்லோரும் சுபிட்சமாய் இருக்கவேண்டும் என்று முயற்சி பண்ணலாம்...

ஆனால்....நெஞ்சு நிமித்தி பிரச்சினைய எதிர் கொண்டு வா.....என்று கூப்பிடுவேன் மேலும் எதுவா இருந்தாலும் என்னிடம் வந்துதானே ஆகவேண்டும் அப்படி ஒரு பிரச்சினை வரும்போது நேருக்கு நேராய் நான் போராடி பாத்துக்குறேன்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க....

ஓ.. நீ என்ன இப்டியா சொன்ன.. இரு இரு.. உன்னை என்ன பண்றேன் பாருன்னு முன்னால் போகும் போது முதுகுல குத்திட்டு போறவங்களும் இருக்காங்க...

வாழ்க்கை எல்லாம இருக்கு, எல்லோருமா இருக்கு. இங்க எது தேவையோ அதை அந்த சூழலுக்கு ஏற்ப நாம படிப்பினையா எடுத்துக்குறோம். எப்படித்தான் வாழ்ந்தாலும் பெரிய வீரனாய் இருந்தாலும் பணக்காரனாய் இருந்தாலும், அதிகாரம் கொண்டவனாய் இருந்தாலும்..

ஊரே ஒருத்தனை பார்த்து நடு நடுங்கினாலும் கடைசியில் இடுப்புல இருக்குற அரைஞான் கயிறையும் அறுத்தெரிஞ்சுட்டு மண்ணப் போட்டு புதைக்கவோ அல்லது எரிக்கவோ போறாங்க. அந்த டைம்ல போயி, இல்ல... இல்ல இவரு பெரிய ஆளு, இவரு இவ்ளோ ஜெயிச்சு இருக்காரு அல்லது இவ்ளோ தோத்து இருக்காரு இவரு மேல மண்ணு போடாதீங்க, இவரு பெரிய் கோடிஸ்வரன் இவர எரிக்காதீங்கன்னு சொன்னா அதுல லாஜிக் இருக்கா?

காலம் மாவீரர்களையும், திருடர்களையும், பணக்காரர்களையும் தனித்தனியே பார்ப்பதில்லை மாறாக சமமாய் விழுங்கிக் கொண்டேதான் செல்கிறது. யாரும் மிச்சமாக முடியாது.

லைஃப் வில் சூட் ஈச் அண்ட் எவரி இன்டிவிஜுவல்...

சாகுறதுக்கு முன்னால ஒரு மனுசனோட அந்திமத்துல கண்ண மூடினா, அங்கே மனமற்ற ஒரு தியான நிலையில் உடல் கடந்த ஒரு பேரனுபவம் வரவேண்டும். அப்போ போய் சிக்கன் பிரியாணி சாப்பிடலையே...இப்போ இருந்தாலும் சாப்பிட முடியாதே....! ஊரெல்லாம் இடம் வாங்கிப் போட்டேனே யாரு அதையெல்லாம் அனுபவிப்பா....! எவ்ளோ பெரிய வீடு கட்டினேன் இதை எல்லாம் விட்டுட்டு போகப் போறேனே ஐயோ......நான் என்ன செய்வேன்...

அங்க இப்டி பொய் சொன்னேனே, இங்க இப்டி பந்தா பண்ணினேனே, எப்பவுமே மமதையில் மனுசங்க முகத்தைப் பாத்தா சிரிக்க கூட இல்லையே...இப்ப நான் திரும்ப வாழ முடியுமா? எப்ப பாத்தாலும் தலைக்கனத்தோட இருந்துட்டேனே....! எத்தனை பேரப் பாத்து புறம் பேசி இருப்பேன்..எத்தனை பேரை கிண்டல் பண்ணி இருப்பேன், எத்தனை பேரு குடிய கெடுத்து, ஊரை அடிச்சு உலையில போட்டேன்...ஐயோ நான் யாருக்குமே நல்லது பண்ணலையே.....

கை வலிக்குதே... கால் வலிக்குதே.. உயிர் எப்டி போகும்? எமன் எருமையில் வருவானா? இல்லை ஏரோப்பிளேன்ல வருவானான்னு யோசிச்சுக்கிட்டே...காலமெல்லாம் மனதைக் கட்டுப்படுத்து கட்டுப்படுத்துன்னு எத்தனையோ பேரு சொன்னாங்களே... ! ஒரு நாளாச்சும் நான் என்ற் அகந்தை இன்றி சம்மண கால் இட்டு என்னையே நான் உத்து பாத்து இருப்பேனா..

கண்ணு இருட்டுதே, தொண்டை வரளுதே, பேச முடியலையேன்னு, புத்தியில இருக்குற நினைவு எல்லாம் கடந்த கால தவறுகளை நினைத்து நினைத்து ஏங்கி ஒரு துன்பத்தை கொடுக்குது பாத்தீங்களா....

இது போக தனியா ஒரு நரகம் வேணும்னு நினைக்கிறீங்க?

குறைந்த பட்சம் வாழ்க்கையின் நிலையாமை என்னனு தெரிஞ்சு போச்சுன்னா, அடுத்தவங்களை நிந்திக்கிறத நிறுத்திட்டு, நாம ஊர்ல இருக்கவன் எல்லாம் பாத்து நம்மள பெரிய ஆளுன்னு சொல்லணும்னு வாழமா நம்ம ஆத்ம திருப்திக்காக வாழ ஆரம்பிச்சுடுவோம்...

அப்டி இருக்கும்போது மரணம்னா என்னனு தெரியும்....! உடலின் வலிகளையும் சேத்து உள்வாங்கி திருப்தியா வாழ்ந்த நினைவுகளோடு...மனதை சாந்தப்படுத்திக்கிட்டே....

நான் வாழ்றதுக்காக பொறந்தேன்.......நல்லா வாழ்ந்துட்டேன் போங்கடா.... இனி என்ன ஆனா என்ன? அப்டீன்னு ஒரு நிம்மதியோட போய்ச் சேருவோம் பாத்தீங்களா... அது தாண்டி ஒரு சொர்க்கம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே...! இங்கே அடுத்தவர்களை நிந்திக்காமல் நிம்மதியாக நிறைவாக வாழ்ந்துட்டு போறவங்கதான் நிஜமா ஜெயிக்கிறாங்க..! அப்டி இல்லாம ஓடி ஓடி பணம், பொருள் எல்லாம் தேடினாலும்...நிம்மதியில்லாம வாழ்ந்துட்டு....மனசு அலைஞ்சு திரியும்போது வாழ வந்த வாழ்க்கையை முழுமைய வாழாம தோத்துப் போயிறாங்க...!

நான் வாழப் பிறந்திருக்கிறேன்....! அதனால் முழுமையாக வாழ்க்கையை வாழ்கிறேன்.

தேவையும் அவசியத்தோட நான் செய்ற செயல்கள் எல்லாமே எனக்குள்ள ஆணவமா பதியறது இல்லை...! எல்லாத்தையும் கடந்து போய்கிட்டே இருக்கேன்...அப்டீன்னு நினைச்சுகிட்டு வாழ்க்கையைப் பக்குவமா வாழ முயலும் இந்தத் தருணம்...ரொம்ப சேலஞ்ச் ஆனது..! ஏன்னா அது நம்ம நிம்மதிய கெடுக்குற செயல்களை எப்போதும் நம்ம முன்னாடி இறைச்சுக்கிட்டேதான் இருக்கு....

ஆனா....

நான் வாழ்க்கையை முழுமையா நிம்மதியா வாழணும்..அப்பத்தான் நான் ஜெயிச்சவன் ஆகிறேன்...!

அட என்ன இது நான், நான்னு பேசிட்டு இருக்கேன்.......அது தப்புங்க... நாமன்னு சொல்லணும்ல. நாம வாழ்க்கைய வாழப் பிறந்து இருக்கோம், கண்டிப்பா நிம்மதியா வாழ்வோம் இந்த வாழ்க்கையை ஜெயிப்போம்....!

அதுதான் வெற்றி...!


அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா!!!!


தேவா. S



Comments

///அதுக்கிட்ட போயி ஓராயிரம் தடவை அதுகிட்ட பூனையவிட புலி பலசாலின்னு சொன்னா...பூனைக்குப் புரியாது. காரணம் பூனைதான் எலிய பிடிக்குது. புலிக்கு எலிய பத்தி கவலையே இல்லை. எலிக்கும் புலிய பத்தி கவலையும் இல்லை.////

அண்ணே நீங்க புலியா இல்ல எலியா ? :)
////ஊரே ஒருத்தனை பார்த்து நடு நடுங்கினாலும் கடைசியில் இடுப்புல இருக்குற அரைஞான் கயிறையும் அறுத்தெரிஞ்சுட்டு மண்ணப் போட்டு புதைக்கவோ அல்லது எரிக்கவோ போறாங்க. அந்த டைம்ல போயி, இல்ல... இல்ல இவரு பெரிய ஆளு, இவரு இவ்ளோ ஜெயிச்சு இருக்காரு அல்லது இவ்ளோ தோத்து இருக்காரு இவரு மேல மண்ணு போடாதீங்க, இவரு பெரிய் கோடிஸ்வரன் இவர எரிக்காதீங்கன்னு சொன்னா அதுல லாஜிக் இருக்கா?////

அதாவது அம்மணமா பொறந்தோம்...அம்மணமா சாக போறோம்-நு சொல்ல வரீங்க.....

////கண்ணு இருட்டுதே, தொண்டை வரளுதே, பேச முடியலையேன்னு, ////

நமிதாவ enjoy பண்ண முடியலையே :) [நான் நமிதா நடிச்ச படத்த சொன்னேன் ]
///அப்போ போய் சிக்கன் பிரியாணி சாப்பிடலையே...இப்போ இருந்தாலும் சாப்பிட முடியாதே....!///


பல்லு இருக்கரப்பே பக்கோடா சாப்பிடுக்கணும்...:)

........ இருக்கரப்பே எல்லாத்தையும் அனுபவிசிடனும் அப்படி தானே :)



////சாகுறதுக்கு முன்னால ஒரு மனுசனோட அந்திமத்துல கண்ண மூடினா, அங்கே மனமற்ற ஒரு தியான நிலையில் உடல் கடந்த ஒரு பேரனுபவம் வரவேண்டும். ////

வாழும் போது உடம்பை கடக்க வில்லை எனில் சாகும் போதும் மட்டும் எப்படி ? :)

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா!!!! :)
vasan said…
பண்ப‌ட்ட‌ நெகிழ்வான ப‌திவு.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த