Skip to main content

ஹாய்.....05.10.2011



















கொஞ்சம்..இல்லை இல்லை ரொம்பவே நாளாச்சு ஹாய் எழுதி...! ஏன்னு தெரியல. ஒரு மாதிரி அளாவளாவ மனசு கொஞ்சம் இளகி இருக்கணும் ஆனா அப்டி இல்ல எனக்கு கொஞ்ச நாளா. காரணம் என்னனு எதாச்சும் ஒரு விசயத்த சொல்ல முடியாது பட் நிறைய நிகழ்வுகளைக் ஒண்ணு சேத்து ஒரு மாதிரி இரிட்டேசன் அவ்ளோதான்...! ஓடிட்டே இருக்குற வாழ்க்கை எங்க போகுதுன்னு தெரியாது ஆனா இயங்கிக் கிட்டே இருக்கோமேன்னு ஒரு மாதிரி அலுப்பு தோண ஆரம்பிச்சுடுச்சு..! யெஸ்... வயசாகிடுச்சுன்னு கூட சொல்லலாம்.

வயசு என்பது வாழ்க்கையின் தொகுப்பு. அனுபவங்களின் சேர்மானம். பத்து வயசுல எது தேவையோ அது பதினைஞ்சு வயசுல மாறிப் போயிருக்கு, பதினைஞ்சு வயசுல எது தேவையோ அது இருபத்தஞ்சு வயசுல மாறிப் போயிடுது. ஆனா ஒவ்வொரு வயசும் ஒவ்வொரு வருசமும் சம்மட்டியால் அடிச்சு, அடிச்சு நம்மை செம்மை படுத்திக்கிட்டே இருக்கு. மொத்தத்துல பாத்தீங்கன்னா ஒவ்வொரு அனுபவமும் கூடக் கூட தனியா நிக்கணும் அப்படீன்ற ஒரு எண்ணம்தான் அதிகமா இருக்கு. கூட்டம் கூட்டமா சுத்தி அலைஞ்சது பேசுனது சிரிச்சது எல்லாம் ஒரு கட்டத்துல பொய் ஆகிடுது இல்லீங்களா?

பணம்தான் வாழ்க்கையை ஆளுதுன்னு என்னோட இந்த 34 வயசுல எனக்குத் தோணுது (எந்த வயசா இருந்தாலும் அதான் முக்கியம்ன்னு சொல்றீங்களா...சரி ரைட்டு....) கல்யாணாம் ஆகுறதுக்கு முன்னாடி அதாவது ஒரு 27 வயசுல பணம் எல்லாம் ஒரு மேட்டரா அப்டீன்ற மாதிரி தோணிச்சு. ஆமாம் பணம் எல்லாம் ஒரு மேட்டர் இல்லை எப்போ தெரியுங்களா? நம்ம பாக்கெட்டும் பேங்க் பேலன்ஸ்சும் புல்லா இருக்குறப்ப, ஆனா அதே கொஞ்சம் தலை கீழா மாறிடுச்சுன்னு வச்சுக்கோங்க....

நேத்து வரைக்கும் உங்களையும் என்னையும் ராஜான்னு கூப்பிட்ட இந்த ஊரும் சனமும் டேய்ன்னு கூட கூப்பிடும். காரணம் பணமே உலகை ஆள்கிறது. அன்பு ஆளும் இல்லைன்னு சொல்லலை பட் பணமே பிரதானம். அன்பு வச்சுகிட்டு கால் கிலோ கத்திரிக்காய் யாரும் கொடுக்க மாட்டங்கதானே? ஹா ஹா ஹா ! அதே மாதிரி அதிகாரம்னு ஒண்ணு அதை வச்சுகிட்டு அழிச்சாட்டியம் பண்ணி பணம் சம்பாரிக்கலாமே தவிர வெறும் அதிகாரத்த வச்சுகிட்டும் ஒண்ணும் பண்ண முடியாதுன்றதும் உண்மை.

அடிச்சு பிடிச்சு ஓடி ஓடி பணம் சேக்குறதுலயே உலகத்துல இருக்குற எல்லா மனுசங்களும் செய்றாங்க. நானும் செய்றேன் நீங்களும் செய்றீங்க....சரியா ! இங்கே வாழ்வின் மிச்சம் என்னனு ஒரு கேள்வி எல்லோருக்கும் தோணுறது இல்லை பட்..நமக்கு அடிக்கடி தோணுது...? மில்லியன் டாலர் பேங்க் பேலன்ஸ் வச்சிருந்தா நான் நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. பணம் சேக்குறதோட அடிப்படை பேஸ் எண்ணமே உயிர் பயம்னு நான் சொன்னா நம்புவீங்களா?

காசு பணம் இல்லாம சாப்பிடக் கூட ஒண்ணும் இல்லாம செத்துடுவோமோன்னு ஒரு பயம். இந்த உயிர் பயம் மட்டும் இல்லேன்னு வச்சுக்கோங்க.. கடவுளும் இல்லை காசும் இல்லை. இந்த ரெண்டையும் மனுசன் பிடிச்சுகிட்டு தொங்குறதுக்கு காரணமே மரண பயம்தானுங்க. ஒவ்வொரு மனுசனும் மரணம் வேண்டாம்னுதான் நினைக்கிறான் ஆனா அதான் ஏன்னு எனக்குப் புரியலை. உலகத்துல வாழ்ற வாழ்க்கை என்னமோ ரொம்ப சிறப்பா இருக்க மாதிரி.........ஹா ஹா ஹா வாழணும் அல்லது வாழ்றோம் என்பது எல்லாம் சரி ஆனால் மரணத்தை பாத்து பயந்தா எப்டிங்க?

இப்டி எழுதிட்டு இருக்க எனக்கும் ஒரு ஏழாவது மாடியில இருந்து தரைய பாத்தா பயமாத்தான் இருக்கு, கார்ல வேகமா போகும் பொது சர்ர்ர்ர்ர்னு ஒரு பெரிய ட்ரெய்லக்ர் க்ராஸ் பண்ணிப் போகும் போது, அடிச்சிருந்தா என்ன ஆகும்னு புத்தி கணக்குப் போட்டுப் பாக்குது. இப்டி பாக்கும் போதே சர்ர்னு ரத்தம் ஜிவ்வுன்னு உடம்பு பூரா பரவி இதயத்தை லபக் டபக்குனு துடிக்க வைச்சுகிட்டு இருகும் போதே டக்குனு ரெண்டு முகம் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகுது அதுவும் சிரிச்சுக்கிட்டே....

ஒண்ணு மனைவி, இன்னொன்னு என் பொண்ணு...

ஏன்? அப்பா அம்மா தம்பி உறவுகள் நட்புகள் எல்லாம் வரலையான்னு கேட்டீங்கன்னா வரலைன்னுதான் சொல்லுவேன். இன்னமும் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், கமலஹாசன், பாலகுமாரன் சார், இளையராஜா சார் எல்லாம் கூட எனக்கு ரொம்ப பிடிச்சவங்கதான்...ஆனா அந்த பிடிப்புக்கள் தேவையின் அடிப்படையில் புத்திக்குள்ள புகுந்து இருப்பது. மனைவியும் குழந்தையும் என்னைச் சார்ந்து இருப்பவர்கள்.

நான் இல்லேன்னா கூட தே வில் லிவ்...அவுங்க லைஃப் மூவ் ஆகும். பட் இட் மேக்ஸ் டிப்பரண்ட் இல்லையா? மனைவி கூட அடுத்த லேயர்தான் ஆனால் குழந்தை நேரடியாக பாதிக்கப்படுவாள். மே பீ பெட்டர் லைஃப் கூட வாழலாம், பட் ஸ்டில்... பாதிப்பு மனோதத்துவ ரீதியாய் அதிகம் தானுங்களே?

மேல நான் சொன்னது ஒரு உதாரணத்துக்குதான் சொன்னேன் சீரியசா எடுத்துக்காதீங்க..!!!! ஏன் சொன்னேன்னா? வாழ்க்கையில அலசி ஆராய்ஞ்சு பாத்தீங்கன்னா சில பற்றுக்கள்தான் நம்மை இழுத்துப் பிடித்து பூமியோட பந்தப்படுத்தி வச்சு இருக்கு. அந்த பற்ற நாம அறுத்தெரிய முடியாது, விட்டு ஓட முடியாது. அதை அழகா பூர்த்தி செய்துட்டுதான் போகணும் அந்த பூர்த்தி செய்தலை நிறைவு செய்ய வாழ்க்கை, லெளகீகம், பொருளாதாரம், ஓட்டம், திட்டம், அலுவலகம் வேலை, ட்ராபிக், பாஸ், டென்சன்....இப்டி எல்லாம் கடந்த்து போக வேண்டியிருக்குங்க..!

ஒவ்வொரு மனித வாழ்க்கையும் சம்திங்க் ஸ்பெசல்ன்னு நாம நினைச்சுக்கிறதுக்கு வேணும்னா சுவாரஸ்யமா இருக்கலாம். தப்பு இல்லை சுவாரஸ்யத்துக்காக அப்டீ நினைச்சுக்கோங்க, ஆனா ஒவ்வொரு வாழ்க்கையும் தனித்தனியா எடுத்துப் பார்க்காமா இதை ஒட்டு மொத்த பிரபஞ்ச சுழற்சியாத்தான் பாக்கணும். அதாவது இரண்டு மெயின் பாயிண்ட்சுக்காகத்தான் எல்லாமே நடக்குதுன்னு நான் சொல்லுவேன்....

1) அகண்டு விரிதல் (பல்கிப் பெருகுதல்)

2) சுருங்கிச் ஒடுங்குதல் (ஒற்றை புள்ளிக்குள் அடைதல்)

பிரபஞ்சம் பல்கிப் பெருகவே எங்கும் ஒரு ஈர்ப்பினை பரப்பி வைச்சுருக்குங்க. சூரிய குடும்பத்துல இருக்குற ஈர்ப்பும், தொடர்பும் போல எல்லா இடத்திலும் ஒரு விசை அழுத்திப் பிடித்தோ அல்லது அறுத்து எறிஞ்சுக்கிட்டோ வேலை செஞ்சுகிட்டு இருக்கு. விதையா, செடியா, மரமா, பூவா, காயா இப்டி... கல்லாய் மண்ணாய் மலையாய்......இது தொடர்ந்துகிட்டே வந்து மனுசனுக்குள்ள காமமா உக்காந்துகிட்டு இருக்கு. இந்த காமத்துக்கு மார்க்கெட்டிங் பண்றதாலேயே காதல்னு ஒண்ணு தனியா இல்லைன்னு நினைச்சுடாதீங்க.

இது காமத்துக்கு மார்க்கெட்டிங் பண்ணி பல்கிப் பெருகுதலுக்கு உதவிட்டு கூடவே அழகான ஆன்மப் புரிதலா, செயல்களைக் கடந்த தெளிவா, பால் கவர்ச்சி தீர்ந்த ஈர்ப்பாய், இசையாய், ஆழமான சுவாசித்தலாய், வயிற்றுப் பசியடக்கும், தாகம் தீர்க்கும் நிறைவாய் இருந்துகிட்டுதாங்க இருக்கு ....அதுக்கு பேரு காதல்னு சொல்லுங்க.. பக்தின்னு சொல்லுங்க கடவுள்னு சொல்லுங்க இல்லைன்.." சிங்வாகே" ன்னு கூட ஒரு புது பேரு வச்சுக்கோங்க...

மார்க்கெட்டிங் முடிச்சு ஒவ்வொரு விடயமா பூர்த்தியாகிப், பூர்த்தியாகி அடங்கி ஒடுங்குதல்ன்ற ஸ்டேஜ்ஜுக்கு ஒவ்வொரு நிகழ்வையா அனுப்பிக்கிட்டு இருக்கு இந்த சுழற்சி...இப்படி சுத்தி, சுத்தி போய்கிட்டு இருக்கே ஏன்னு தெரியுமா? சுத்தாம இருக்கத்தான்.... ! அட இது என்ன கொடுமை சுத்தாம இருக்கணும்னா டக்குனு நிக்க வேண்டியதுதானே இந்த பிரபஞ்சம் அப்டீன்னு கேக்குறீங்களா?

ரொம்ப சாதாரணமாவே ஒரு உதாரணம் சொல்றேன்,தப்பா எடுத்துக்காதீங்க, .... பூனைக்கு பாலு சுடணும்ங்க!!! சுட்டாதான் பால்னாலே பயப்படும். அதுமாதிரி வாழ்க்கையை முழுமையா எல்லாமே.. அனுபவிக்கணும்ங்க, அந்த அனுபவிப்பில் உணர்தல் தெளிதல் விசயங்கள் நடக்கணும்...., அப்போதான் இந்த சுழற்சி நிற்கும்.

அடடே இது ஒண்ணும் பிரமாதம் இல்லேன்னு மனுசங்க நினைச்சு ஓரமா உட்கார்ந்து உள்ள பாக்க ஆரமிச்சாங்கன்னா.. எல்லோருக்கும் வாழ்க்கைன்றது காலி டப்பான்னு தெரிஞ்சு போச்சுன்னா....

இன்னும் சொல்லப் போனா எட்டி, எட்டி ஒரு சுவத்துக்கு அப்புறம் என்ன இருக்குன்னு பாக்குற வரைக்கும் தான் உங்க மனசுல அந்த பக்கத்துல யானை இருக்கோ, டைனசர் இருக்கோன்னு கற்பனை தோணும்... ஒரு கட்டத்துல ஒண்ணுமில்லைன்னு தெரியும். அப்புறம் என்ன பண்ணுவீங்க...? ஒண்ணுமில்லைன்னு ஓரமா உக்காந்துடுவீங்க....அவ்ளோதான்!!!!

எம்பி எம்பி குதிச்சு பாத்துகிட்டு இருக்கவங்ககிட்ட போய் சொல்லுவீங்க...ஒன்றுமில்லையப்பா...இப்டித்தான் பட்டணத்தார் சொன்னாரு, வள்ளலார் சொன்னாரு, அருணகிரி நாதர் சொன்னாரு..கேளுங்கப்பான்னு சொல்லிட்டு நந்தனார் பாட்டாவே பாடுனார்ன்னு சொல்லி

" என்னப்பன் அல்லவா
என் தாயுமல்லவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவான்..
சத்தியமோ எந்தன்
அப்பன் திருவருள்" ன்னு சொல்லுவீங்க...!

இந்த உலகம் ஒண்ணு உங்களை கும்பிட்டு உங்களை கடவுளாக்கும், இல்லை பைத்தியக்காரன்னு பட்டம் கட்டும்...அம்புட்டுதான்...!

சரிங்க....! நான் வந்து ரொம்ப நேரமாச்சு....! நீங்க கேக்குறீங்கன்றதுக்காக நான் பேசிகிட்டே இருக்க கூடாது இல்லீங்களா...! வீட்ல இருக்குற எல்லோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நேசத்தையும் தெரிவியுங்க, அடுத்த ஹாய்ல சந்திக்கலாம்...!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா......!!!!!


தேவா. S

Comments

//ரத்தம் ஜிவ்வுன்னு உடம்பு பூரா பரவி இதயத்தை லபக் டபக்குனு துடிக்க வைச்சுகிட்டு இருகும் போதே டக்குனு ரெண்டு முகம் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகுது அதுவும் சிரிச்சுக்கிட்டே....

ஒண்ணு மனைவி, இன்னொன்னு என் பொண்ணு...

ஏன்? அப்பா அம்மா தம்பி உறவுகள் நட்புகள் எல்லாம் வரலையான்னு கேட்டீங்கன்னா வரலைன்னுதான் சொல்லுவேன். இன்னமும் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், கமலஹாசன், பாலகுமாரன் சார், இளையராஜா சார் எல்லாம் கூட எனக்கு ரொம்ப பிடிச்சவங்கதான்...ஆனா அந்த பிடிப்புக்கள் தேவையின் அடிப்படையில் புத்திக்குள்ள புகுந்து இருப்பது. மனைவியும் குழந்தையும் என்னைச் சார்ந்து இருப்பவர்கள்.//


உறவுகள் பரந்து இருந்தாலும் நம்மோடு நம்மாக இருப்பவர்கள் இவர்களே... அந்த ஏழாவது மாடி போல் நானும் யோசிப்பதுண்டு.

அவசியமான பகிர்வை உங்கள் நடையில் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
Mohamed Faaique said…
பணத்தை பற்றி சொன்னதென்னவோ அப்பட்டமான உண்மை அண்ணா...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த