Skip to main content

யாமிருக்க பயம் ஏன்?















வாழ்க்கையில பயம் இருக்கலாம், ஆனா வாழ்க்கையே பயமா போயிடுச்சுன்னா என்ன பண்றது....(கொஞ்சம் சிவாஜி ஸ்டைல்ல படிச்சுக்கோங்க..)! எல்லாத்துக்கும் பயம், எல்லோருக்கும் பயம், எதைப்பத்தியாச்சும் பயம்...ஏன்? ஏன்? ஏன்? இம்புட்டு பயம்...(தளபதி ரஜினி ஸ்டைல்ல படிச்சுக்கோங்க...)?

வாழ்க்கை மேல பயம், அவன் என்ன சொல்லுவானோ இவன் என்ன சொல்லுவானோ பக்கத்து வீட்டுக்காரன், எதித்த வீட்டுக்காரன்னு இப்டி மாத்தி, மாத்தி பயந்து எல்லோருக்கும் நல்லவனா இருக்கணும்னு முயற்சி பண்ணி நடிச்சு, கோபப்பட்டு, அலைஞ்சு திரிஞ்சு ஓடிக்கிட்டு இருக்க வாழ்க்கைய ஒரு நிமிசம் நிறுத்தி கொஞ்சம் அதை முறைச்சுப் பாருங்களேன்...ஹா ஹாஹா! நம்மள பாத்தா நமக்கே காமடியா இருக்குல்ல...

சரி.. இப்டி முறைச்சுப் பார்க்கும் போதே கொஞ்சம் சிரிச்சுகிட்டே பாத்தீங்கன்னா, வாழ்க்கையும் நம்மளையும் பாத்து கொஞ்சம் புன்னகை செய்ய ஆரம்பிக்கும். நிறைய தேவையில்லாத பயங்களை நமக்குள்ள மனுசங்க கால காலமா திணிச்சு வச்சு இருக்காங்க அதை விடாம கெட்டியா பிடிச்சுக்கிட்டு நாமளும் பயந்து பயந்து வாழவும் செய்றோம்.

பொதுவா நம்ம சமுதாயத்துலன்னு இல்லை உலகத்துலயே அதிகமான பேரு ஒரு விசயத்தை செஞ்சாலோ அல்லது நம்பினாலோ அதை நாமளும் ஒரு வார்த்தை கூட கேக்காம அது சரியாத்தாண்டா இருக்கும்னு நினைச்சுக்குவோம்...மனசோட மயக்கம் அதுன்னு கடைசி வரைக்கும் நமக்கு தெரியாமலேயே போய்டும்...

செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டாண்டான்ற ரேஞ்ச்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நம்பிக்கைய வச்சுகிட்டு இது இப்டித்தான், அது அப்டிதான்னு எல்லாத்தையும் லிமிட் பண்ணிக்கிற காமெடியும் அடிக்கடி நடந்து தொலைக்கும். இன்னும் சில பேர் நான் இப்டித்தான் இருப்பேன்...இது என்னோட பிரின்ஸிப்பிள்னு சொல்லுவாங்க ஒரு பிரஸ்டிஜ் பத்மநாபனா ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பாங்க..கேட்டா கொள்கை, மண்ணாங்கட்டின்னு....ஏதாச்சும் சொல்லுவாங்க...

ஒரு விசயத்தை செஞ்சு அந்த விசயம் மனசுக்கு நிறைவு கொடுக்காம இருந்துச்சுன்னா யோசிக்காம அதை விட்டு வெளில வந்துடணும். மனசுக்கு சந்தோசம் கொடுக்குற மாதிரி நிறைய விசயம் தேவைப்படும். நம்ம சந்தோசத்தை திருப்தி கூட சேர்த்து கொழப்பிக்காதீங்க..திருப்தி என்பது வேறு சந்தோசம் என்பது வேறு.

மகிழ்ச்சியின் மூலமா பல நேரங்கள்ள திருப்தியை நோக்கி நாம நகர முடியும் ஆனா சில நேரங்கள்ள மகிழ்ச்சின்னு நாம செய்ற விசயங்கள் திருப்தின்ற ஊருக்குப் போகாம யு டர்ன் பண்ணி துன்பம்ன்ற ஊருக்கு கூட்டிட்டுப் போய்டும்....அப்போ என்ன செய்வீங்க...? அச்சச்சோ நான் ஏதாச்சும் சொல்லி பயமுறுத்திட்டு இருக்கேனோ என்ன....?! எல்லா கட்டுரையும் படிங்க.... இந்த உலகத்தில் எழுதப்படும் எல்லா கட்டுரைகளும் கருத்து கந்தசாமிகள்தான்...., (ஹி ஹி இந்தக் கட்டுரை உள்பட...)

கட்டுரையோ கதையோ படிச்சு முடிச்சுட்டு அதையே மொத்த வாழ்க்கைக்கும் கெய்டா வச்சுக்கிடாதீங்க....படிச்ச விசயத்தோட சாரத்தை எடுத்துகிட்டு அது நமக்கு யூஸ் ஆகுமா ஆகாதான்னு யோசிச்சு நம்ம ரூட்ல பைக்கை விரட்றதுதான் புத்திசாலித்தனம். இதை ஏன் சொல்றேன்னு கேக்குறீங்களா?

நம்ம ஊர்லனு இல்ல, இந்த உலகம் பூராவே வெளியிடப்பட்டிருக்க நல்ல கருத்துக்கள் எல்லாத்தையும் எல்லோரும் கேட்டு இருந்தாலோ அல்லது அப்டி எழுதுறவங்க முழுசா பின்பற்றி இருந்தாலோ உலகத்துல நல்லவங்க மட்டும்தான் இருப்பாங்க இல்லையா...? இந்த உலகத்துல 99.99% எல்லோருமே ஹிப்போகிரேட்தான்..., மிச்ச இருக்குற 0.001% ஹிப்போகிரேட்டா இல்லாம எப்டி இருக்கறதுன்னு முயற்சி பண்ணிகிட்டு இருக்கவங்கன்னும் புரிஞ்சுக்கணும்..!

ஆக மொத்தம் 100 சதவீதமும்....மேடை நாடகம்தான்..! இல்லேன்னு சொல்லி என்கிட்ட ஆர்க்யூ எல்லாம் பண்ண வேணாங்க....இல்லேன்னு நீங்க நினைச்சா சரி இல்லேன்னுச் சொல்லிட்டு போய்கிட்டே இருங்க...(க்ரேட் எஸ்கேப்...ஹா! ஹா!)

என்னிக்கு டி.வில போடுற பேரண்ட் லவ்லி விளம்பரம் பாத்து நாம செகப்பாயிடுவோம்னு நினைச்சு அதை வாங்க வச்சு, கருப்பா இருப்பதை விட சிவப்புதான் பெஸ்ட்ட்னு நம்மள நம்ப வச்சானோ அன்னிக்கு ஆரம்பிச்ச பொது புத்தி இன்னிக்கு பல கோணத்துல நம்ம வாழ்க்கைய சீரழிச்சுகிட்டு போய்கிட்டேதான் இருக்கு.

ஒரு பொண்ண பாத்துட்டு எல்லாமே ஓ.கே .. கலர் மட்டும் கொஞ்சம் தூக்கலா இருந்தா பரவாயில்லைன்னு சொன்ன உடனேயே அந்த பொண்ணுக்கு நாம அழகாயில்லன்னு ஒரு பயம் வந்து உடனே அம்மாகிட்ட ஓடிப் போயி அம்மா ஏன் நீங்க நான் வயித்துல இருக்கும் போதே குங்குமப்பூ சாப்பிடலை....? இப்போ பாத்தீங்களான்னு சொல்லிக்கிட்டே சிணுங்கும்....உடனே ஒரு பேர்னஸ் க்ரீம்..ப்ளாஸ் ஆக அதை போட்டுகிட்டு...அந்த பொண்ணு கலர் ஆகி மறுபடி காதலன் அதை பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போவான்...

என்ன இது...?விளம்பரமா...? உண்மையச் சொல்லி வர்த்தகம் பண்ணுங்கய்யா...? ஒரு பொய்யைச் சொல்லி அந்த பொய்யை பொது புத்தியாக்கி, ஒரு பெண்ணுக்கு தான் அழகா இல்லைன்ற பயம் வர்ற மாதிரி காட்டி டி.வி பாக்குற அம்புட்டு பொண்ணுகளுக்கும் ஒரு பயத்தை உண்டு பண்ணி...போலியான பயத்தை வியாபரம் ஆக்குற தந்திரம் என்பது சுத்த மொள்ள மாறித்தனம்...

நான் தேவையில்லாத பயம்னு ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா இது ஒரு உதாரணம் அதுக்கு. அதே மாதிரிதான் நாட்டமைகள் எல்லாம் நல்லவன் வேசம் போட்டு போட்டு மிச்ச இருக்கவனை எல்லாம் கெட்டவனாக்கி காட்டுறதும்....! ங்கொய்யாலா நான் நல்லவனா எல்லோர்கிட்டயும் காட்டிக்க ஒட்டு மொத்த ஊரையும் கேவலமா காட்டுறது ஒரு மாதிரியான சைக்கோ மனோபாவம்தானே....

எங்க மாமா ஒருத்தர் இருக்காரு..செல்வமணின்னு அவர் கேட்டாரு எங்கிட்ட..., ஏன் மாப்புள ஊர்ல இருக்க அம்புட்டு பயலுவளும் நல்லவனா பேசுறாய்ங்களே...அப்புறம் யாருதான் மாப்புள கெட்டவன்னு... ...? நெசம்தானுங்களே...! இன்னமும் சொல்லப்போனா நான் நல்லவன்னு காட்டிக்க நாலு பய தப்பு பண்ணியே ஆகணும்டா சாமின்னு வேண்டிகிட்டு பழனிக்கு பாத யாத்திரையாகவே போயி அலகு குத்தி காவடி எடுக்க கூட ஆளுக ரெடி....

மொத்ததுல அப்டி, இருக்கக் கூடது இப்டி இருக்கக் கூடாதுன்னு நாம சொல்லிக்கிறதுக்காகவாச்சும் நாலு பேரு இங்க தப்பு பண்ணியே ஆகணும் போல...!!!!

நிஜத்துல தனி மனுசன் அவன் அவன் வாழ்க்கைய ஒழுங்கா பாத்து வாழ ஆரம்பிச்சுட்ட நிறைய பேருக்கு இங்க வேலை இல்லாம போய்டும். என்னை பொறுத்த வரைக்கும் அதுதான் என்னோட ஆசை...! தேவையில்லாத பயங்களை எல்லாம் தூக்கிக் குப்பையில போட்டுட்டு.....

தனக்கும் அடுத்தவங்களுக்கும் உதவுற மாதிரி ஒரு சுமூகமான மனிதநேயத்தோட வாழும் போது கிடைக்குற திருப்தியும் புரிதலும் மரணத்தைக் கூட பெரிய பயமா காட்டாது. இதுதான் வாழ்க்கை....இப்டி என்ட்ரி ஆகி...இப்டி எக்ஸிட் ஆகப் போறோம்ன்ற புரிதல் வந்துடுச்சுன்னா....

ஆயிரம் உபதேசங்களும், கொள்கை முழக்கங்களும், அறிவுரைகளும்...இந்த மாதிரி வெட்டிக் கட்டுரைகளும் தேவையே இல்லை...! சுமூகமான இயங்கு தன்மைக்கு தன்னையறிதல்ன்ற மந்திரமும், மனிதநேயமும் மட்டுமே போதும்ன்றது என்னோட....கருத்து..(அவ்வ்வ்வ்வ்வ்வ் கருத்து சொல்லாம முடிக்க முடியலையே.....! கண்டுக்காதீங்க பாஸ்....பொது புத்தி...)

நம்ம கூட நம்ம உணர்வு நிலை விழிப்பா இருக்கும் போது பயம் எதுக்கு பாஸ்...?

யாமிருக்கப் பயம் ஏன்..?

அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா....!


தேவா. S


Comments

யதார்த்தமான பதிவு........ வாழ்த்துக்கள்.
Anonymous said…
எல்லாம் சரி:))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த