
' எல்லாம் தான் பெண்ணே செய்தேன்..! எதார்த்த உலகத்தில் உன்னிடம் ஏகாந்தக் கனவுகளைப் பரப்பினேன்..! சராசரி சாலை என்று நடக்கவே பயந்தாய், உனக்கு என் கவிதைச் சிறகுகளைப் பூட்டி பறந்து வா என்றேன். ஒரு நாள் உன் கண்ணில் தூசு விழுந்த பொழுதில் கண் கலங்கி நின்றாய் அதை கண்களில் இருந்து எடுத்து அந்த சிறு தூசியை ஒரு அரக்கனை எரிப்பது போல எரித்துப் போட்டேன்...!!!
அன்றாட தினசரி காலண்டரை கிழித்து அதை தூக்கியெறியாமல் நித்தம் உனக்கொரு கவிதை எழுதி கொடுத்தேன். என் சுட்டு விரல் உன் மேல் பட்டால் கூட எதன் பொருட்டோ என் காதல் வந்ததென்று நீ எண்ணி விடக் கூடாது என்று எப்போதும் என் காமத்தை தூரங்களில் விலக்கியே வைத்துதான் உன்னோடு நடப்பேன்.
ஒரு சந்தோசமென்றால் கூட நீ நன்றாக சிரித்த பின்புதான் நான் சிரித்தேன். நீ சிரித்து முடிக்கும் முன்னால் நான் சிரிப்பை நிறுத்தி விடுவேன். நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன். உன் அனுமதிகளோடேதானே பெண்ணே எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தது.. இன்று எட்ட முடியா தூரமாய் நீ நகர்ந்து போனது ஏனோ?
நீர் வேண்டாம் என்று...
பூமி சொன்னால்...
எங்கேதான் பெய்யும் மழை?
நீ அழைக்காத என் அலைபேசி இறந்து போய் கிடக்கிறது.....என் கவிதைகள் எல்லாம் உன் வாசித்தலின்றி சுவாசம் தப்பிய மீனாய் துடி துடித்துக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் தான் பெண்ணே ரசித்தாய் ஆனால்...........என்னை மட்டும் நீ ரசிக்கவேயில்லையே ஏன்...? '
இப்படியாக நீண்டு கொண்டிருக்கும் வரிகளில் காதல் ஒன்று தொலைந்து போனதை ஒரு கவிதையாய் சொல்லும் இந்தப் பாடலின் தாக்கம் கொள்ளை கொள்ளையாய் இருக்கிறது. எப்பவுமே எனக்கு விஜய் பிடிக்கும் ஐ யூஸ்ட் டு சே நெக்ஸ்ட் தமிழ் சினிமாவ ரூல் பண்ணப் போறது விஜய்தான்னு....! இப்போ வேணா டைமிங்க் ஒரு மாதிரி இருக்கலாம்....பட் ஒழுங்கா கதை ச்சூஸ் பண்ணி நடிச்சா....கண்டிப்பா இன்னொரு ரஜினி.. !!!அப்டி ஒரு பக்கா பக்கத்து வீட்டுப் பையன் முகம்.
சரி.. விஜய் பிடிக்கதவங்க இங்க வந்து ஒழிக கோசம் போட்டுடாதீங்க..!!! இந்த பதிவு பாட்டுக்கு... மேலே இருக்கும் சூழலுக்கு அட்டகாசமாய் விஜய் ரிஆக்ட் பண்ணியிருப்பாங்க....மணி சர்மாவோட சாரோட இசை இனிமைக்கு வைரமுத்து சார் வரிகள்...சரியா பொருந்தியிருக்கும். பாடலின் ஜீவன் ஹரிஸ் ராகவேந்திரர்.
" காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை "
இனிய இசை அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்....!
அப்போ.........வர்ர்ர்ட்ட்டா...!!!!
தேவா. S
பின் குறிப்பு: அப்போ அப்போ இது மாதிரி பாடல்களை கேட்டுட்டு...அப்போ தோணுறத டக்கு டக்குனு எழுதிடலாம்னு இருக்கேன். பாடல் விமர்சனம் கிடையாது...விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நமக்கு புத்தி பத்தாது....! இது ச்ச்சும்மா....அட..ச்ச்சுமன்னா என்னவா? ச்ச்சுமான்னா சும்மாதான்...!
Comments
//நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன்.//
//என் கவிதைகள் எல்லாம் உன் வாசித்தலின்றி சுவாசம் தப்பிய மீனாய் துடி துடித்துக் கொண்டிருக்கிறது. //
பிடித்த பாடல் இது... உங்களின் வரிகளுடன் பாடலை கேட்கும் போது பாடல் இன்னும் அழகாகி விட்டது.
இது போன்று இசையோடு இசையாக நிறைய வரவேண்டும் உங்களின் கவி வரிகள் தாங்கி...!!
உண்மைதான். இது முற்றிலும் இனிய இசை அனுபவம்.
வாழ்த்துக்கள்