Skip to main content

ஆகையால்....

அந்த கவிதையின் இறுதியில்
சூசகமாய் காதலைச் சொல்லியிருந்த
வரிகளை அவள் வாசித்துவிட்டு
என்னை காதலிக்கத் துவங்கியிருக்கலாம்;
வெறுக்கத் துவங்கியிருக்கலாம்
மெளனமாக இருக்கலாம்,
கோபமாக இருக்கலாம்,
சிரித்திருக்கலாம்;
புரியாமலேயே விழித்திருக்கலாம்;
எதிர்பார்த்திராமல் அழுதிருக்கலாம்;
மீண்டும் வேறு கவிதைக்காக காத்திருக்கலாம்;
அல்லது....
அந்த வரிகளை சாதாரணமாக
கடந்தும் போயிருக்கலாம்...;
ஆனால்...
நான் அவளுக்காக இன்னொரு
கவிதையை எழுதி விட்டு
மீண்டும் இறுதி வரியில்
அவள் என்னை காதலிக்கிறாளா..?
என்று அறிய முயலும்...
அர்த்தத்தோடு முடிக்க
முயன்று கொண்டிருக்கிறேன்...!


தேவா. சு


Comments

Shankar M said…
முயற்சி தொடரட்டும்...

நம்பிக்கையோடு இரு
அர்த்தத்தை அறிவாய்!

முயற்சியின் தொடரலில் அறிந்த அர்தத்தை தொலைத்துவிடாதே!!

Shankar M
ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பில் தோல்வி கிடைத்தாலும் சரி. வெற்றி கிடைத்தாலும் சரி. பரவாயில்லை. எதிர்பார்ப்பில்தான் இருக்கிறது ஆனந்தம். அருமையான பகிர்வு.
"ஆகையால்.... மானிடரே காதல் செய்வீர்....!! "

குட்டிக் கவிதை.... சூப்பர்..!! :-)
rishvan said…
nice lines.... thanks to share... http://www.rishvan.com
ஹேமா said…
காதலுக்காக காத்திருப்பது அலுப்பைத் தராது தேவா.ஆனால் நாள் செல்ல விடக்கூடாது !

Popular posts from this blog

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்தி

தேடல் - 1

காரணமின்றி காரியமில்லை எத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா தொடர்புடையது? சென்னைக்கு வேலைதேடி பெட்டியோடு பேருந்து ஏறிய போது பெட்டிக்குள் துணிமணியோடு பாலகுமாரனின் நாவல்களும் என்னோடு வந்தன. நிறைய பெட்டிகள் இப்படித்தான் பயணித்தன என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கடவுள் கடவுள் என்று பேய்ப்பிடித்து அலைந்த பொழுது பாலகுமாரனின் நாவல்கள்தான் பொறுமையாய் பாடமெடுத்தன. பாலகுமாரனை பார்க்க வேண்டுமென்றல்லாம் எனக்கு ஆசை கிடையாது. அடுத்தடுத்து வெளிவரும் அவரது பல்சுவை நாவல்களை வாங்கிப் படித்து விடவேண்டும் அவ்வளவுதான். ஒரு பிரதோஷ மாலையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின் வெளி மண்டபத்தில் தேமேவென்று உட்கார்ந்த்திருத பொழுது பாலகுமாரன் யாரோ இருவருக்கு பூம்பாவை கதை சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஓடிப்போய் உங்கள் வாசகன் சார் நான் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை. வெள்ளை வேட்டி சட்டை தாடி குடுமி சகிதமாய் அவர் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டிருந்த நேர

இறை....!

ஒரு மெளனத்தின்....உச்சத்தில் எல்லாம் உடைந்து... எல்லைகள் கரைந்து... விடையற்ற கேள்விகளின் மரித்தலில் ஜனிக்கும் பதில்களில்... நான் இருப்பேன்...! நகர்ந்து நகர்ந்து... தூரமாய் இடைவெளி...பெருகும் பொழுதுகளில்.. நான் மறைந்துவிட்டேன் என்று எண்ணும் நினைவுகளின் ஓரத்தில் மறையாமல் மறைந்திருக்கும் உருவமற்ற எனது இயல்புகள்...! இழத்தலின் அருகாமையிலிருக்கும் பெறுதலின் வீச்சுக்களில்... கரைந்து போன நினைவுகளை ஒன்று கூட்டி ஆராய்ந்ததின் எச்சத்தின் எல்லா பக்கத்திலும் நான்..! இருத்தலும் இல்லாமையும்... சேர்ந்து ஆடும் நாடகத்தின் உச்சத்தில் நான் நீ அது இதுவென்று எதுவுமில்லா உருவத்தில் எல்லா நினைவுகளும் சங்கமிக்கும் நிமிடத்தில் தோன்றும் அருவத்தில் அழிந்து போகும் வஸ்துகளில் அழியாமல் கரைந்திருப்பேன் நான்! கட்டிய வேசங்களின்... அரிதார பூச்சுக்களின் தடிமனுக்குள்... தவித்து தவித்து என்னின் சுயம் காணும் முயற்சிகளில் தோற்று தோற்று... ஜெயிக்கும் ஜென்மாந்திர கனவுகளில் மீண்டும் மீண்டும் ஜனிப்பித்தலில் சூன்யத்தை தழுவும் ஆசைகளின் விளிம்புகளில் ஏகந்த கனவுளில் ஒளிந்திருப்பேன் நான்..! உணரமுடியா மர்மங்க