Skip to main content

17M பாரிமுனை டு வடபழனி....!



அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விட்டது. ஓட்டுனரின் கவனக்குறைவுதான் காரணம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துக்கள் எல்லாம் திட்டம் போட்டு காய்களை நகர்த்தியா நிகழ்கிறது. ஒரு கணத்தில் ஏற்படும் சறுக்கல் அது. இங்கே யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

17M பேருந்து பாரிமுனையிலிருந்து வடபழனிக்கு நகரும் முன்பு அந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த பயணத்தின் முடிவில் பணி முடிந்து வீடு திரும்ப திட்டமிட்டு இருக்கலாம். இல்லை அப்போதுதான் வீட்டிலிருந்து வந்த அலை பேசியை எடுத்து பேசி விட்டு பிறகு அழைக்கிறேன் என்று கூறி விட்டு பேருந்தினை நகர்த்தி இருக்கலாம். அவசரமாக பலமுறை வந்த அழைப்பினைக் கண்டு வேறு வழியில்லாமல் அந்த வளைவில் வண்டியை திருப்புகையில் ஒரு அவசரத்தில் அலை பேசியோடு கவனம் சிதறி வண்டியை தடுப்புச் சுவற்றில் மோதி இருக்கலாம்...

ஆமாம் அது நிகழ்ந்து விட்டது..சட்டென்று..! சட்டென்று நிகழ்ந்தால் தானே அது விபத்து...!

தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த அந்த பேருந்தினைப் பார்த்த பொழுது மனம் ஸ்தம்பித்து எதுவுமே கருத்து சொல்ல முடியாமல் முற்றிலுமாய் உள்ளுக்குள் முடங்கிக் கொண்டு தேம்பிக் கொண்டிருந்த போது....

எது கிடைத்தாலும் தத்ததம் தன் முனைப்பினை செய்தியாக்கும் ஆவலுடன் அலையும் மானுடக்கூட்டத்தின் நிலைத்தகவல்கள் சமூக வலைத்தளங்களில்  அலை பாய்ந்து கொண்டிருந்தன. ஆமாம்..செய்திகள் எல்லாம் செய்திகளாகப் போய் விடுகின்றன அந்த செய்தியில் நமக்கும் நமக்கு வேண்டியவர்களுக்கும்  நேரடியான தொடர்பில்லாத போது....!

என் சித்தப்பாவும், பெரியப்பாவும், அத்தையும், தம்பியும் மாமனும்...ஆத்தவும் அப்பாவும்... நண்பர்களும் அந்தப் பேருந்தில் சென்றிருந்தால் அது எனக்கோ அல்லது அப்படியாய் சென்றவரின் உறவுகளுக்கோ அந்த நிகழ்வு வாழ்க்கையின் சோகமாகிப் போகிறது. அந்த பேருந்தில் பயணப் பட்டவர்களின் பிள்ளைகளும், மனைவிகளும், கணவன்களும், சகோதரர்களூம் உறவுகளும்...இவர்களை வழியனுப்பி வைத்திருக்கலாம்...அல்லது வருகைக்காக காத்திருந்து இருக்கலாம்....

யாருக்கு அது பற்றி எல்லாம் கவலை...? பேருந்து கவிழ்ந்தது...ஒரு செய்தி...! 

அதை வாசித்து முதலில் நிறையப் பேருக்கு நாம் பகிர்வதும்,  அதில் இருக்கும் ஓட்டை உடைசல்களை ஆராய்ந்து சரி தவறுகளைப் பற்றி விவாதித்து சட்டாம்பிள்ளைத் தனம் செய்வதுமாய் நமது தினத்தின் சராசரியோடு கொஞ்சம் பரபரப்பாய் பேசித் திரியலாம். போக்குவரத்து காவலர்களின் கண்காணிப்பு போதாது என்றும், வண்டி ஓட்டும் போது செல் போன் பேசுவது தவறு என்றும்....,  பேருந்து பராமரிப்பு சுத்த மோசம் அதனால் அரசுதான் இதற்கு பொறுப்பு என்றும்..., அந்தப் பாலம் சரியில்லை உறுதியாயிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என்றும்...

கோணங்கள் மாற்றி நாம் பேசிப் பேசி நமது அறிவு ஜீவித்தனத்தை ஏதோ ஒரு வகையில் வெளிகாட்டலாம்...ஒரு பிரச்சினையும் இல்லை. விவாதிக்கவும், அறிவுரை கூறவும் நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு அவசிப்பட்டுப் போகிறது அதற்கு ஏற்றார் போல ஏதோ ஒன்று தொடர்ச்சியாய் நடந்து கொண்டும் இருக்கிறது...அவ்வளவுதான்..!

40 பேருக்கு மேல் காயம்பட்டிருப்பதாய் கூறும் அந்த விபத்திற்கு முன்பு வண்டி பாலத்தின் தடுப்புச் சுவற்றை மோதி தலைகீழாக கவிழ ஆரம்பித்த அந்த நொடியில், அத்தனை மனிதர்களின் மனோநிலைகள் எப்படி இருந்திருக்க்கும்...? செய்வறியாது உயிர் போகும் சூழல் உள்ள ஒரு நிலையில் எத்தனை பேருக்கு தத்தம் பிள்ளைகள் பற்றியும் குடும்பம் பற்றியும் கலக்கம் ஏற்பட்டிருக்கும்....

அந்த பேருந்தினுள் நானிருந்தால் என்ன ஆகி இருப்பேன்...? என் தலை உடைந்திருக்குமோ...? கை கால் உடைந்து ஊனனாகி மூலையில் கிடக்கும் வாய்ப்பொன்றை சப்தமில்லாமல் அந்த சம்பவம் கொடுத்து அதனால் என் குடும்பம் வழியற்று சோகத்திற்குள் தூக்கி வீசப்பட்டிருக்குமோ...? கூச்சல்களுக்கும், இரத்தத்துக்கும் நடுவே....தப்பிப் பிழைக்க என்ன வழியென்று எல்லோரும் அங்கும் இங்கும் அலை பாயும் அந்த மரண நொடி.... எப்படி இருந்திருக்கும்...? 

வாழ்க்கை அழகானாது....ஆனால் அவ்வப்போது படு பயங்கரமானதும் கூட...!

இதையெல்லாம் யாரும் யோசித்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி யோசித்துப் பார்க்கவேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால் இது நாம் தொடர்புப்படாத ஒரு செய்தி...அவ்வளவுதான்....! 

வாழ்க்கையின் ஓட்டத்தில் நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை எல்லாம் செய்தியாய்ப் பார்க்கும் ஒரு அரக்க மனோநிலைக்கு நாம் மாறிப்போய் விட்டோம். அந்தப் பேருந்தில் போனவர்களின் உறவுகளாய், சொந்த பந்தங்களாய்,  நண்பர்களாய் நாம் இருந்திருந்தோமானால் என்ன செய்திருப்போம்......?

பேசவும், விமர்சிக்கவும்...ஆராய்ச்சிய செய்யவும் குற்றம் சொல்லவும் வார்த்தைகளின்றி..... ஓ.....கடவுளே.ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது..? என்று இல்லாத ஒரு கடவுளை நோக்கி மண்டியிட்டு...  கண்ணீர் விடுவோம்தானே....!

ஆமாம்...

திட்டமிட்டு, கவனமுடன் இருக்கும் போது நிகழ்வது எப்படி விபத்தாகும்...? கவனக் குறைவில் எதிர்பாராமல் நிகழ்வதுதானே விபத்து...! 

அந்தப் பேருந்தில் சென்ற அத்தனை பேரும் நலம் பெற்று வரவும்..., அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வலுவாய் திடமாய் இருந்து இந்த சூழலை எதிர் கொண்டு....மீண்டு வரவும் இல்லாத ஒரு கடவுளை பார்த்து வேண்டி நானும் கேட்கிறேன்....

ஓ.....கடவுளே.....ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது...?!!!!!


தேவா.  S

Comments

அந்தப் பேருந்தில் சென்ற அத்தனை பேரும் நலம் பெற்று வரவும்..., அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வலுவாய் திடமாய் இருந்து இந்த சூழலை எதிர் கொண்டு....மீண்டு வரவும் கடவுளை பார்த்து வேண்டி நானும் கேட்கிறேன்....
நாமும் பிரார்த்திப்போம்...எனக்கும் எப்பவாவது இது போல தோன்றும்.நாம் சம்பந்த படாத வரை இது ஒரு நிகழ்வே
Kousalya Raj said…
//தலைகீழாக கவிழ ஆரம்பித்த அந்த நொடியில், அத்தனை மனிதர்களின் மனோநிலைகள் எப்படி இருந்திருக்க்கும்...?//

விபத்து நிகழ்ந்ததை டிவியில் பார்த்தபோது எனக்கு இப்படி தோணியது, கூடவே மனதும் நடுங்க தொடங்கிவிட்டது. அந்த மரண நொடியை வாழ்நாள் முழுதும் அவர்களால் மறக்க இயலாது. :(

ஆனால் வேடிக்கை பார்க்கும் இடத்தில் இருக்கும் நமக்கு இது ஒரு செய்தி. நாளை வேறு ஒன்று வந்துவிட்டால் இது மறந்தே போய்விடும். உண்மைதான்.

நடந்த விபத்தை குறித்த உணர்வை உடனே பதிந்துவிட்டீர்கள். வருத்தத்தை,சஞ்சலத்தை எழுதிவிட்டால் ஓரளவு அமைதி அடைந்துவிடும் மனம்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மனம், உடல் இரண்டும் பூரண குணம் பெற்று நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.
Unknown said…
Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



www.tamilpanel.com







நன்றி
நலம்பெற எங்கள் பிரார்த்தனைகள்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த