Skip to main content

பதிவு எனப்படுவது யாதெனில்....!



முன்னாடி எல்லாம் விகடன் எப்படா வரும் அதுல விமர்சனத்துக்கு எத்தனை மார்க்கு போட்டு இருக்காங்களோன்னு பார்க்க அடிச்சு பிடிச்சு காத்துட்டு இருப்போம். 100க்கு 40 மார்க்குக்கு மேல போட்டு இருந்தாங்கன்னா ஓரளவுக்கு படத்தைப் பார்க்கலாம் போலடான்னு  கூட்டாளிங்களுக்குள்ள பேசிக்குவோம். விகடன் விமர்சனக்குழுவுக்கு அவ்ளோ ஒரு மரியாதை கொடுத்து பார்த்த காலம் அது...

பெரும்பாலும் எனக்குத் தெரிஞ்சு ரஜினி படத்துக்கு அவுங்க 45ஐ தாண்டி மேல மார்க் கொடுத்தது கிடையாது, அப்போ அப்போ ஏதாச்சும் ஒரு படம் 50க்கிட்ட வர்றதுல என்னைய மாதிரி ரஜினி ரசிகர்களுக்கு எல்லாம் விகடன் மேல செம கடுப்புன்னு வச்சுக்கோங்க... கூடவே கமல் படத்துக்கு எப்பவுமே விகடன் ஒரு ஹைப் கொடுத்துட்டே இருக்கறது  இன்னமும் டென்சன் ஆகும், ஆனாலும் விகடன் விமர்சனம்ன்னு சொன்னா எல்லோருமே ஒரு ரேஞ்ச்லதான் பார்த்துட்டு இருப்போம்...

குமுதம், ராணி, குங்குமம்,  இன்ன பிற அஸ்கா பிஸ்கா மேகஸீன்ஸ் எல்லாம் ஒரு ஒப்புக்கு வாங்கி விமர்சனம் படிக்கிறதும் உண்டு. அப்போ எல்லாம் சினிமா வெளிவந்த உடனேயே எப்படா விமர்சனம் வரும்னு காத்துக்கிட்டு இருக்கறது ஒரு அலாதியான சுகம்னு வச்சுக்கோங்களேன்...அட.. நீ பாட்டுக்கு அப்போன்னு சொல்றியே அப்போன்னோ எப்போடான்னு கேக்குறீங்களா? ஒரு குத்து மதிப்பா  1987ல இருந்து 1996  வரைக்கும் வச்சுக்கோங்களேன்...

அப்போ எல்லாம் விமர்சனங்கள் எல்லாம் நிச்சயமா படத்தை பத்தி சரியா சொல்றமாதிரிதான் இருக்கும். அதை எல்லாம் படிக்கவும் ஒரு ஆர்வம் இருக்கும். ஆனா இப்போ எல்லாம் ஒரு படம் ரிலீஸ்  ஆவுதுன்னாலே செம டென்சனா இருக்கு.....! படம் ரிலீசுக்கு முன்னாடியே டிக்கெட்ட ரிசர்வ்  பண்ணி வச்சுக்கிட்டு தியேட்டர்ல கிட்டத்தட்ட லேப்டாப்ப கொண்டு போகாத குறையா ஜிவு ஜிவுன்னு உக்காந்து படத்த பாத்துட்டு குடு குடுன்னு வீட்டுக்கு வந்து விமர்சனத்தை நான் முந்தி நீ முந்தின்னு போட்டி போட்டு பிளாக்குறத பார்த்து ச்ச்சும்மா மெரண்டுதான் போக வேண்டி இருக்கு.

அட என்னங்க இது அநியாயமா இருக்கு.. எதைப்பத்தியுமே பேசக்கூடாதுன்னா எப்டி...? நமக்குத் தோணுறத சொல்லக்கூட முடியலேன்னா ப்ரீயா ஒரு பிளாக் கிடைச்சு என்ன பிரயோசனம்  சொல்லுங்க...? தங்களுக்கு இருக்குற எல்லா தொழில் நுட்ப அறிவையும் மொத்தமா கொட்டி, வாசிக்கிற வாசகனுக்கு என்ன சொல்ல வர்றோம்ன்றதயே மறந்துடுறங்க பாஸ்...

இதுல என்ன கொடுமைன்னா தமிழ் கூறும் நல்லுலகத்துல வாயை பிளந்துகிட்டு வேடிக்கைப்பார்க்க ஒரு கூட்டம் இருக்கறது இவுங்களுக்கு எல்லாம் பெரிய ப்ளஸ் ஆகிடுது. சினிமா படம் ரிலீசாகி மறுநாளே இந்தப்படம் குப்பைன்ற ரேஞ்ச்சுக்கு அலசுற அத்தாரிட்டிய யார் இவுங்களுக்கு எல்லாம் கொடுத்திருப்பான்னு யோசிச்சு யோசிச்சு அது பாமர அறிவுக்கு எட்டவே மாட்டேங்குது....

பாமரன்னு சொன்ன உடனேயே இந்த எழுத்தாளர் பாமரன், சின்னக்குத்தூசி, ஞானி மாதிரி பத்திரிக்கைகள்ல  எழுதுற சார்ங்க எல்லாம் எனக்கு நியாபகத்துல வர்றாங்க. இந்த சார்ங்க எல்லாம் எல்லா பிரச்சினையிலும் மூக்கை நுழைச்சு ஒரு பார்வைய பதிஞ்சு வச்சுட்டு போயிடுவாங்க. அப்படி  எல்லாவற்றையும் அலசி ஆராய்ஞ்சு விருப்பு வெறுப்பு இல்லாம ஒரு சமூகத்தைப் பத்தின பார்வைய பதியவோ, ஒரு சினிமாவ அலசவோ அவுங்களுக்கு ஒரு விதமான கூர்மையான பார்வை இருந்துச்சு. எந்த சூழ்ல் நிலையிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்காம பாக்குற, பிரச்சினையில இருக்குற சரி தவறுகளை சீர் தூக்கி பாக்குற ஒரு நடுநிலைமை இருந்துச்சு....

இப்போ எல்லாம் தடுக்கி விழுந்தா தெருவுக்கு நாலு பத்திரிக்கையாளனும், நான் யார் தெரியுமானு  எழுத்துலயே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கிற அதிமேதாவிகளும் நிறஞ்சு போய் கிடக்குற ஒரு அசாதரண சூழலை சோ..கால்ட் பதிவுலகம்....( பதிவுலகம்ன்ற பேர சூஸ் பண்ணிக்கலாமா நான்...இல்ல ஏதாச்சும் ரைட்ஸ் வாங்கணுமா?)தாராளமா விதைச்சு வைச்சிருக்கு.

இங்க எல்லாம் ஒரு குறிப்பிட்ட சில பேர்தான் பேசணும், பாக்கி இருக்கவன் எல்லாம் கையக்கட்டிக்கிட்டு வேடிக்கை பாத்துட்டு போகணும்ன்ற ரேஞ்சுல பல பக்கீஸ் பல்லாங்குழி ஆடிட்டு  இருக்கறதை பார்க்கும் போதே எலே....மக்காஸ் நீ எவ்ளோ உயரமோ அவ்ளோ நீளத்துக்குதான் உன்னால படுக்க முடியும் அதுக்கு மேல ஒரு தப்படி இடம் நினைச்சாலும் கிடைக்காதுன்னு சொல்ல தோணுது. என்ன ஒண்ணு இதையெல்லாம் சொல்லி எதுக்கு சும்மா ஜல்லி அடிக்கிறவங்க லிஸ்ட்ல நாமளும் சேர்ந்து, நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்னு கொடி பிடிக்கணும்னு சொல்லிட்டு நாம கண்டுக்கறதே இல்லைங்க...

எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டோட, அதுவும் திரும்ப திரும்ப செஞ்சா நீங்க அதுல ஸ்பெலிஸ்ட்டுங்கண்ணா...அதுவும் அது பத்தின விசயங்கள கூடுதலா தெரிஞ்சுக்க கணிணியைக் தட்டி விட்டாலும் சரி தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டாலும் சரி...நாம கடை பிடிக்க வேண்டிய ஒரே விசயம் அர்ப்பணிப்பு மட்டும்தானுங்கண்ணா...

அப்டி இருந்துட்டா கன்னுக்குட்டி கூட  ஏரோப்ளேன் ஓட்டும்...., காண்டாமிருகம் கூட கவிதை எழுத ஆரம்பிச்சுடும்....(அடங்கொய்யால என்ன ஒரு ப்ளோ..அப்டீன்றீங்களா?!!!!!) நல்ல விசயத்துக்கு கூடாத கூட்டம் கருமாந்திரம் புடிச்ச எல்லா அக்கப்போருக்கும் ஒண்ணா சேரும்ன்றது...ஒலக விதிங்கண்ணா....இது நம்மூர்ல மட்டும் மாறிடவாப் போகுது...

எலேய்.. ரோட்ல எச்சித் துப்பதடேய்..., கண்ட கண்ட இடத்துல சுவர் ஓரமா நின்னு....சுவத்தைக் கரைக்காதடேய்....பொது இடத்துல ஒழுக்கமா இருங்கடேன்னு சொன்னா, அட இதை நீ ஏன் துபாய்ல ஒக்காந்துக்கிட்டு சொல்ற.. நீ களப்பணி ஆற்றி இருக்கியா, கொடி புடிச்சு இருக்கியா, போராட்டம் பண்ணி இருக்கியான்னு ஒரே போராளிங்களா நம்மள பாத்து கேள்வி கேக்கவும் செய்றாங்கண்ணா...!!!!

ஏதோ நமக்குத் தெரிஞ்சத சொல்லி, தெரியாததை கத்துக்கிட்டு போறதுதானுங்கண்ணா வாழ்க்கை..! எனக்கு மட்டும்தாண்டே தெரியும் கையக் கட்டிக்கிட்டு கேளுங்கடா பயலுவளான்னு சொல்ற படுவாக்கள எல்லாம் பாத்து எதுக்குங்கண்ணா நாம பயப்படணும்...? இணையத்துல சீறுற புலிகள எல்லாம் நேரா பாத்து ச்ச்சூ ச்ச்சூ  ஓடிப் போன்னு கையக்காட்டி விரட்டுனா ஓடித்தானுங்கண்ணா போயிடும். ஆரோக்கியமான உலகமா பதிவுலகம் இருக்கவே இருக்காதுங்கண்ணா.. ஏன்னா அல்லக்கைஸ்ன்றது காலம் காலமா கூட்டம் கூட்டமா சேர்ந்தே தானுங்கண்ணா நம்ம கூடவே பயணிச்சுட்டு இருக்குங்க....

வெட்டிநாயம் பேசுறதுக்காக ஒரு கட்டுரை கூட எழுதலன்ற குறைய இந்தக் கட்டுரை (மேதாவிங்க மன்னிச்சுக்கோங்க...) தீத்துகட்டும்ங்கண்ணா...! கட்டுச் சோத்த கட்டிக்கிட்டு ஆன்லைன்ல வந்து ஒக்காந்துகிட்டு ஒனக்கு எழுத தெரியுமா, கிழுதத் தெரியுமான்னு சவுடால் உடுற சாகித்ய அகாடமி வாங்குன அண்ணன்களுக்கு எல்லாம் நமஸ்காரமுங்க...


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா...!


தேவா. S


Comments

Shankar M said…
ஆதங்கத்தின் வெளிப்பாடை அழகாய் பதிவு செய்திருக்கிறாய் தோழா...குறை குடம் தளும்பும்... அதை முழுக் குடமாய் மாற்ற நம்மால் முடிந்த அளவு தண்ணீர் ஊற்றுவோம்...முடியவில்லை என்றால் இருக்கும் நீரை கீழே கொட்டுவோம்.... ஒன்றும் இல்லாத குடமும் தளும்பாதே!!
அவங்கவங்களுக்குத் தோனுதத அவங்கவங்க எழுதுதாங்க.. நமக்கு என்ன தோனுதோ அதை எழுதுதோம்ல தேவா, அந்த மாரி :)

அதுசரி அதென்ன /அஸ்கா பிஸ்கா/ அனுஸ்கா ஹன்சிகா மாரியா????
இந்தப்பேட்டை அல்லாருக்கும் சொந்தம்,நீ சும்மா பூந்து வெளையாடு வாத்தியாரே!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த