Skip to main content

Posts

Showing posts from November, 2012

கவிதையெனப்படுவது யாதெனில்...

நொடிக்கு ஒரு முறை என்னைப் பார்.... கவிதைகளென்ற பெயரில் ஏதேனும் கிறுக்கு.... நிறைய பேசு... அவ்வப்போது மெளனமாயிரு... சண்டையிடு... கோபத்தில் கண்கள் சிவந்து போ... காற்றில் கலையும் கேசம் சரி செய்... நான் கடந்து போகையில் என்னை கவனிக்காதே... தூரமாய் சென்று திரும்பிப் பார்... சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்து போ... எதிர்பாராமல் எதிரே வா... எப்போதாவது புன்னகை செய்.. உன் தோழிகளோடு உரக்கப் பேசு... சப்தமாய் சிரி.... சோகமாயிரு... சந்தோசமாயிரு... பிடித்த புத்தங்களை நான் பார்க்கும் படி சுமந்து போ... பிடித்த பாடலை முணு முணுப்பாகவாவது பாடு.... மழையில் நனை... குளிரில் நடுங்கு... வெயிலை திட்டு.... வராத பேருந்துக்காய் முகம் சுழி... மணிக்கட்டு கடிகாரத்தை முறைத்துப் பார்... ஓவியமாய் தலை வாரிக் கொள்... கவிதையாய் பூச்சூடிக் கொள்.. ...... ...... ...... ........ எல்லாம் செய்து கொள்... என்னை தூரமாய் நின்று.... உன்னைப் பார்க்க மட்டும் விடு.... தேவா. S

அவள் அப்படித்தான்...1978!

ருத்ரையா போன்ற படைப்பாளிகள் மீது விழாத வெளிச்சங்கள் எல்லாம் வெளிச்சங்களே அல்ல, அவை, அடர் இருட்டு என்றே நாம் கற்பிதம் கொள்ள வேண்டும். 1978களின் வாக்கிலேயே திரைப்படங்கள் பொழுது போக்க மட்டுமல்ல அதையும் கடந்த வாழ்வியல் பார்வைகளைப் பதிவு செய்பவை என்று  உணர்ந்து, அதைப் புரியவைக்க முயன்ற ஒரு மாபெரும் கலைஞன்தான் இந்த ருத்ரைய்யா. எதார்த்தத்தை பதிவு செய்ய முயல்பவர்களை வெகுஜனம் எப்போதுமே புறக்கணித்தான் செய்திருக்கிறது. அது எழுத்துலகாய் இருந்தாலும் சரி, திரையுலகாய் இருந்தாலும் சரி, அரசியல் வாழ்க்கையாய் இருந்தாலும் சரி...! பிரமாண்டங்களைப் பற்றிய கனவினில் எப்போதுமே பரம ஏழையாய் வாழ பழக்கப்பட்டுக் கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு " அவள் அப்படித்தான் " என்னும் படத்தை புரிந்து கொள்ள காலம் அப்போது வாய்ப்பளித்திருக்கவில்லை. அதனாலேயே அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவி இருக்கக் கூடும். தற்போது தொழில்நுட்ப வசதிகள் பெருகிப் போயிருக்கும் சமகாலத்தில் கூட மாஸ் என்டெர்டெய்னர் என்று சொல்லக்கூடிய பொழுது போக்குச் சித்திரங்களை மட்டுமே ரீமேக் செய்யத் தமிழ் தயாரிப்பு  உலகமும் இயக்குனர் உலகமும் முண்டியடித்துக

தேம்பித் திரியும்.. வார்த்தைகள்...!

இந்தக் கணம் எழுதிச் செல்லும் சுவாரஸ்யமான நினைவுகளின் எல்லா பக்கங்களிலும் உன் பெயரே எழுதப்பட்டிருக்கிறது...! விடிவதற்கு முன்பாகவே எழுந்து விடும் உன் நினைவுகளை ஒரு குழந்தையாய் என் நெஞ்சில் சுமந்து கொண்டுதான் என் தினசரிகளைக் கடக்கிறேன்...! யாரோடும் பேசப் பிடிக்கமால் மீண்டும் மீண்டும் உன் ஞாபகங்களோடு நான் பேசிப் பேசியே கழிந்து கொண்டிருக்கும் என் பொழுதுகள் உன்னால்தான் நிரம்பி வழிகின்றன...! கைகோர்த்து நடக்கும் காதலர்களின் கைவிரல்களாய் நானும் நீயுமே இருப்பதாய் எனக்குள் தோன்றுவதும்... யாரோ யாருக்கோ தலை கோத.... கோதும் தலை எனதாகவும் விரல்கள் உனதாகவுமே கற்பிதங்கள் கொள்கிறேன்..! தாயின் முந்தானை பிடித்து... அலையும் குழந்தையாய்... உன் நினைவுகளை  பற்றிக் கொண்டு திரியும் என் காதலின் மொழியற்ற ... தேம்பல்களை நான் கவிதைகளென்று சொல்வதும்  உன்னால்தானே...?! எப்போதும் சுவாசிப்பது போல உன்னை நேசிக்கும் ஒருவனிடம் என் மீதான உன் காதல் எப்படியானது என்ற உன் கேள்விகான பதிலை எழுதத் தெரியாமல்.... இதோ ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்... எப்படி முடிப்பது என்று

இசையோடு இசையாக...தொகுப்பு 9!

காரணம் இல்லாமலேயே கண்ணீரை வரவழைத்து விடும் இந்தப்பாடல் இப்போது எனக்கு கண்ணீர் வரவைக்கும் காலச்சூழலில் எதையோ நான் தேடுகையில் எதேச்சையாய் என் முன் வந்து விழ....மனதை அழுத்தும் நினைவுகளை எப்படி நான்உள்ளுக்குள் வைத்துக் கொள்வது....? வலியை தாங்கிக் கொண்டு வாழ்வதெப்படி...? பிரிவைச் சுமந்து கொண்டு நகர்வெதப்படி என்று கை பிடித்து விளையாடிய காலங்களில் எனக்கு தெரியாமலேயே போயிற்று என் உயிர் அக்காவிற்கும் எனக்கும் இப்படி ஒரு தூரம் ஒன்று வந்து விழுமென்று.... கல்லூரி வரை கைப்பிடித்து அழைத்து சென்று... திருமணமென்னும் கப்பலில் ஏற்றி விட்டு தனியாய் கரை நின்று கை அசைத்த பிடிபடாத வாழ்க்கை கண்ணீராய் வந்து விழுந்தது. எத்தனை அழுதாலும் பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கா சொந்தம் அவள் எப்போதும் வாழப் போகும் வீட்டுக்கு நாம் வாரிக் கொடுக்கும் செல்வம் தானே...,  ஒரு வருடம் எனக்கு முன்னதாக பிறந்த அந்த உயிர் வாசம் செய்த பின் தானே கடவுள் எனக்கு கருவறையை பரிசளித்தான். வளர்ந்து இருவேறு வாழ்க்கைச் சூழலுக்குள் வந்து விட்ட பின்பே...அவ்வப்போது பேசிக் கொள்ளும் தொலைபேசி பேச்சுக்களையும் காலம் என்ற கத்த

துப்பாக்கி... A REAL GUN!!!!

துப்பாக்கி படம் நல்லா இருக்கு பாஸ். இளைய தளபதி ரொம்பவே சார்மிங்கா அழகா, கொடுத்திருக்கிற வேலைய கனகச்சிதமா செஞ்சு முடிச்சு இருக்கார். ஒரு பெரிய மாஸ் என்டெர்டெயினர் பாஸ்... துப்பாக்கி படம். வத்திக்குச்சிய கிழிச்சா மாதிரி கோர்வையான காட்சிகளும், செம த்ரில்லா நம்ம கைய பிடிச்சுக் கூட்டிக்கிட்டே ஓடுறமாதிரியான ஸ்கிரீன் ப்ளேன்னு ...எல்லாமெ ஜிவு ஜிவுன்னு அட்டகாசமா இருக்கு... முருகதாஸ் மாதிரி ஆளுங்களுக்குத்தான் மொக்கை கதைகளை எப்படி செதுக்கி எடுத்து அதை சாறாப் புழிஞ்சு,  ஸ்ரிஞ்ல ஏத்தி கிளு கிளு போதை ஊசியா மாத்தி, அதை படம் பாக்குற ஆடியன்ஸ்க்கு எல்லாம் போட்டு விடலாம்ன்ற வித்தை தெரியுது. ஒரு படைப்பாளியா அவரோட திறமைய நாம பாராட்டித்தான் ஆகணும். அதே மாதிரி எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தாலும் ரஜினிக்கு அப்புறமா  சின்னக் குழந்தைகள்ள இருந்து வயசானவங்க வரைக்கும் பிடிக்கிற ஒரு சூப்பர் ஹீரோவா விஜய் வளர்ந்து இருக்கார்ன்றதையும் நாம ஒத்துகிடத்தான் வேணும். லாஜிக் இல்லாம நிறையப் பண்றாரேன்னு கிண்டல் பண்ணிட்டு இருக்கவங்களையும் சேர்த்தேதான் விஜய் தன்னோட கிரேட் அட்ராக்சனால கரெக்ட் பண்ணி வச்சு

பொன்நிலவில் என் கனாவே....!

ஆதர்ஷன காதலியொருத்தியின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா நீங்கள்...? ஆம் என்றால் சபாஷ்....உங்கள் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. ப்ரியங்களை நெஞ்சோடு தேக்கிக் கொண்டு சிலிர்க்கும் அலைகள் மோதிச் சிதறும் அழகினை ரசிக்கும் ஒரு பாறையாய், குளுமையின் அரவணைப்பில் லயித்துக் கிடக்கும் சுகமும், அந்த ஆதர்ஷண காதலி பற்றிய நினைவுகளும் ஒன்றே...! பகிராத எல்லாமே பரம சுகமானது மட்டுமல்ல அவை தேவ ரகசியத்தை ஒத்தது. வார்த்தைகளுக்குள் வெளிப்பட்டு செவி சென்று சேரும் போது அது சாதரணமென்ற எல்லைக் கோட்டைத் தொட்டுவிடுகிறது. காதலிக்கும் ஒருத்தியே அறியாவண்ணம் அவளை மனதில் வரிந்து கொண்டு வாழும் சுகம் இந்த வாழ்க்கையோடு தொடர்பில்லாத  காந்தர்வ உறவாகிப் போகிறது. காதலிப்பவளிடம் சென்று காதலிக்கிறேன் என்று சொல்லி, அவளின் காதலை மறுமொழியாய்ப் பெற்றுக் கொள்ளும் வியாபாரத்தில் காதல் வென்று விட்டதாகத்தானே நீங்கள் நினைக்கிறீர்கள்...? நிஜத்தில் காதலில் வெல்லவும், தோற்கவும் ஒன்றுமில்லை என்பதை அறியாத பொதுபுத்திகள் போட்டுக் கொள்ளும் நாடகங்களே வெற்றி, தோல்வி என்ற மாயைகள்.  வென்றால் திருமணமென்னும் சடங்குக்குள்

சீனிச்சாமித் தேவர்...!

எங்கூரு நாடி ஊரூருக்கு மொளக்கூட்டுத் திண்ணையின்னு ஒண்ணு இருக்கும். மாரியாத்தா மேடயின்னும் சொல்லுவாய்ங்க.. கோயிலு திருவிழாக்கு மொளப்பரி கட்டி அந்த மேடையில வச்சிதான் தூக்குவாய்ங்க...இதுல பாருங்க கழுத வருசத்துக்கு ஒருவாட்டி வர திருவிழாவுக்கு அம்புட்டு பெரிய திண்ணைய கட்டி வச்சுருப்பாய்ங்க... திருவிழா முடிஞ்சு போனதுக்கப்புறம் பாத்தீயன்னா....காலேலயும் சாங்காலமும் அங்கனதேன்...ஒலக நீசு ஊரு நீசு அம்புட்டும் ஓடும். சீனிச்சாமி ஐயா வாட்ட சாட்டமான ஆளு, மறவூட்டு ஆளுகன்னா அப்டிதேன் இருப்பாகன்னு பொதுவாவே ஊருக்குள்ள பேசிக்கிருவாய்ங்க..... அதுவும் சீனிச்சாமி ஐயா குடும்பம் தலக்கட்டு நிறைஞ்ச குடும்பம், வயலு வெள்ளாமை, அடிதடி சண்டை பஞ்சாயத்துன்னு ஒரு காலத்துல மல்லுக்குன்னே நிக்கிற ஆளுகளாம்.. எம்புட்டு வருசம் ஆனா என்ன.. நாவரீகம் பெருத்துப் போயி அம்புட்டுப் பேரும் பேண்டும், சட்டையும் போட்டுக்கிட்டு வந்தாத்தேன் என்ன......தேவனும், பிள்ளைமாரும், நாடாரும், பள்ளனும், பறையனும்னு சாதிய வெளியச் சொல்லிப் பொசுக்குன்னு பேச ரோசிக்கிர இந்தக்காலத்துலயும்.. மொளக்கூட்டுத்திண்னையில வந்து ஒக

பாலுமகேந்திரா....என்னும் மெளனம்...!

ஆள் அரவமற்ற சாலையொன்றின் இரு புறங்களிலிருந்தும் வளர்ந்து சாலைக்கு குடை பிடிக்கும் மரங்களையும் கடந்து, தார்ச்சாலைகளில் பட்டு தெறித்து, கவிதை படைத்துக் கொண்டிருந்த கனமானதற்கும் மிதமானதற்குமிடையேயான ஒரு  மிருதுவான மழையில் நனைந்தபடியே நடந்து கொண்டிருப்பதை ஒத்த அனுபவத்தை நான் சுகித்துக் கொண்டிருந்தேன். அனுபவித்தலுக்கும் சுகித்தலுக்கும் கனமான,  அதிகனமான வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?  அனுபவித்தலெனும் போது அனுபவம் வேறு அனுபவிப்பவர் வேறென்றாகி விடுகிறது. இங்கே அனுபவம் நின்று போனால் அனுபவிப்பவனை வெவ்வேறு சூழல்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. சுகித்தல் அப்படியானது அல்ல.. சுகித்தலில்  பெரும் இன்பம் நம்மிடமிருந்தேதான் நமக்குக் கிடைக்கிறது.. அங்கே அனுபவங்கள் மலை முகட்டை உரசிச் செல்லும் மேகமாய் சென்று விட குளுமையில் நனைந்து கிடப்பது நாம் மட்டுமே....! தானே தானாய் கிடக்கும் பேறு நிலை... காமெரா கவிஞன் என்று அறியப்பட்ட தொப்பியணிந்த தொங்கு மீசைக்குச் சொந்தக்காரனான பாலு மகேந்திரா  தனக்குள் நிரம்பிக் கிடக்கும் வாழ்வியல் உணர்வுகளை க