Skip to main content

பாபாஜியும்...பாட்டாளிமக்கள் கட்சியும்...!



மகா அவதார் பாபாஜி புகைப்படத்தில் புன்னகைத்தபடியே இருக்கிறார். பாபாஜியை தனது திரைப்படத்தின் மூலம் அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்திய ரஜினியும் இப்போது மெளனமாய் வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆமாம் பாபா திரைப்படம் வெளிவந்து இப்போது 9 வருடங்கள் முடிந்திருக்கிறது. பாபா திரைப்படம் சரியாக ஓடவில்லை. வாங்கிய பணத்தை ரஜினி திருப்பிக் கொடுக்குமளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது. ரஜினியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் பட்ட அத்தனை பேரும் ரஜினியை வசைபாட அது ஒரு தகுந்த தருணமாயிருந்தது. நிஜத்தில் ரஜினி அப்போது விழுந்திருந்தார் என்பதும் உண்மையே.

லெளகீகத்தின் மொழியாக்கத்தில் அது தோல்விப்படம் என்று சொல்லிக் கொள்ளலாம்....ஆனால் ஆன்மீகப்பார்வையில் மகாஅவதார் பாபாஜி ரஜினிக்கு மிகப்பெரிய ஆன்மீக உயரத்தைக் கொடுத்த திருப்பங்கள் நிறைந்த சூழல் அது.  இந்த ஒரு படத்தால் ரஜினி யாருமில்லை, அழிந்து விட்டான் என்று சொன்னால் இத்தனை வருடம் தான் நடித்துப் பெற்ற புகழ் எனக்குத் தேவையில்லை என்று ரஜினியே பேட்டிக் கொடுக்கவேண்டிய சூழல் கூட ஏற்பட்டது.

மகாஅவதார் பாபாஜியை ரஜினி மூலம் அறிந்து கொண்ட, ஆன்மீகத் தேடலில் இருந்த சாமனியர்களுக்கு பாபா திரைப்படம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். ரஜினியின் வாழ்க்கையை இன்னும் மெருகேற்ற இந்தப் படத்தை ஒரு மையப்புள்ளியாய் மகாஅவதார் பாபாஜி பயன்படுத்திக் கொண்டார். ப்ரியமுள்ள சீடர்களை ஒரு குரு எப்போதும் கைவிடுவதில்லை என்பதோடு மட்டும் இல்லாமல் ஆன்மீகத்தை அவ்வளவு எளிதாய் கமர்சியலாய் கொண்டு சேர்த்துவிடவும் முடியாது என்ற பாடத்தையும் அந்தப் படத்தின் மூலம் தனது சீடனுக்கு உணர்த்தவும் செய்தார். சத்தியத்தை உணர்ந்த ஞானியர்கள் கூட ஆன்மீகத்தை கமர்சியலாக்கும் இடத்தில் சறுக்கி விழுந்து அவமானப்பட நேரிடுகிறது.

பாபா திரைப்படம் வணிகரீதியாய் வெற்றி பெறாமல் இருந்தால்தானே பாபாஜியை ரஜினி இன்னும் நெருங்க முடியும். படத்தின் தோல்வியை விமர்சித்த 10ல் ஒருவர் பாபாஜியை மட்டும் மேலதிகமாக தெரிந்து கொள்ள முடிந்ததே அன்றி அந்தப்படத்தில் ரஜினியைப் பற்றி பேச ஒன்றுமே இல்லாமலும் போனது. இதுதான் அந்தப் படம் வெளி வந்ததின் விதி. ரஜினிக்கு இந்த அனுபவம் வேண்டும் என்று மகாஅவதார் பாபாஜி நினைத்தது தூய உள்ளம் கொண்ட ஒரு சீடனுக்கு குரு கொடுத்த பரிசு.

இப்படியான ஒரு ஆன்ம நியதியில் பாபாஜி தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஆன்மத்தேடல் உள்ள மனிதனுக்குள்ளும் புகுந்து அதிசயங்கள் நிகழ்த்த ரஜினையை கருவியாக்கிக் கொண்டிருக்கையில் கடந்தகால கர்மபலன்களின் விளைவாக இந்த நிகழ்வின் இடையில் வந்து விழுந்தவர்கள்தான் பாட்டாளி மக்கள் கட்சியினரும், ஐயா ராமதாஸும், அண்ணன் அன்புமணி ராமதாசும்...

புகை பிடிக்கும் காட்சி இருக்கிறது அதை வெட்டி விடுங்கள் என்று ரஜினியிடம் அழுத்தம் திருத்தமாக கூறி அதன் சமூக நலனை தெரிவித்து இருப்பார்களேயானால், ரஜினி சர்வ நிச்சயமாய் அந்த காட்சிகளைக் கத்தரித்துப் போட்டுவிட்டு படத்தை ஓடவிட்டிருப்பார். வீரப் பரம்பரையில் வந்த அண்ணன்கள் அப்படி செய்யவில்லை. திரைப்படம் ஓடுவதை தடுத்தனர்.  தியேட்டர்களை உடைத்தனர். ரஜினி ரசிகர்ளை அடித்தனர். எந்தவித காழ்ப்புணர்ச்சிகளும் கருத்து மாறுபாடுகளும் கொண்டிராத பாபாஜியின் பக்தரான, ஆன்ம விழிப்பு கொண்ட ரஜினியை நிந்திக்கவும் செய்தனர்.

ஆன்மீக விழிப்பு கொண்டு தனது வேலையைப்பார்த்துக் கொண்டு ஒதுங்கி வாழும் சாது இந்த ரஜினிகாந்த் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதை சொல்லும் போதே அவரது கடந்தகாலத்தை பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து விவாதிக்க நீங்கள் நினைத்தால் ஐயம் சாரி....ஐயம் நாட் யுவர் கப் ஆஃப் டீ...தோழர். உங்களிடம் விவாதிக்க நான் தயாரில்லை. நீங்கள் வேறு கடை பார்க்கலாம். ரஜினி ஒரு சாது. அவர் ஒரு போதும் அரசியலுக்கு வரவிரும்பவில்லை. ரசிகர்களின் பெரு விருப்பத்தை ஏற்று அவர் 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸோடு இணைந்து  நின்றிருந்தால் ஒருவேளை தமிழக முதல்வர் கூட ஆகி இருக்கலாம்.

ஆனால்....

ரஜினி மறுத்தார். ஏன் தெரியுமா? அவர் பேரமைதியை, பிரபஞ்சத்தில் படர்ந்திருக்கும் ஆழமான அன்பை, நிம்மதியை ருசிக்கத் தொடங்கி வெகுநாள் ஆகி விட்டிருந்தது. புகழின் உச்சத்தில் இருந்த ரஜினிக்கு முன்னால் இயற்கை வைத்த கேள்வி....அடுத்தது என்ன...? என்பது...., பணம், புகழ், குடும்பம், வாழ்க்கை, நண்பர்கள், ரசிகர்கள், என்று எல்லாவற்றிலும் நிறைவைக் கொண்ட ஒருத்தனுக்கு அடுத்து என்ன வேண்டும்....?

அடுத்தது ஒன்றும் இல்லை. இந்த லெளகீகத்தில் எதைத் தொட்டாலும் அது மேலும் இரண்டு மடங்கு பிரச்சினையைக் கொண்டுவந்து மனநிம்மதியைக் கெடுக்கும் என்பதை அவர் உணர்ந்தவராயிருந்தார். அடுத்தவருக்கு உதவி செய்வதை வெளியில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெளிந்தவராயிருந்தார். மொழி, நாடு, மதம் என்ற கட்டமைப்புகளை எல்லாம் கடந்த ஒரு மனிதன் தான் என்று அறிந்திருந்தார். அவர் நிம்மதி என்னும் புலிவாலைப் பிடித்திருந்தார். அது அவரை முழுதுமாய் ருசி பார்க்கத் தொடங்கி இருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் ரஜினி எதிர்ப்பு பாபா திரைப்படத்தில் அமைந்திருந்த காட்சிக்கான எதிர்ப்பாய் மாறி மறைமுகமாய் பாபாஜிக்கான எதிர்ப்பாய் மாறி இருந்ததை அப்போது ரஜினி உள்பட யாரும் உணர்ந்திருக்கவில்லை. அந்தக்காட்சியை பின் வெட்டுவதற்கு ரஜினி ஒத்துக் கொண்டதோடு, இனிவரும் திரைப்படங்களில் புகைபிடிக்கமாட்டேன் என்றும் ரஜினி அறிவித்து அப்போதைய பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தார்.

ரஜினி அதை ரஜினியின் பிரச்சினையாய் நினைத்து அதற்கு அடுத்து வந்த பாரளுமன்றத் தேர்தலில் பாட்டாளிமக்கள் கட்சியினர் போட்டியிட்ட 6 தொகுதியிலும் அவரது ரசிகர்களை பாமகவினருக்கு எதிராய் களம் இறக்கிவிட்டார் ஆனால் ரஜினியின் பாமக  எதிர்ப்பு அப்போது செல்லுபடியாகவில்லை. 6 தொகுதிகளிலும் பாமக வென்றது. காலம் மேலும் ரஜினியை சப்தமில்லாம இருக்கும்படி கட்டளையிட்டது.

ஆமாம்....ரஜினிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் என்ன பிரச்சினை...? அது பாபாஜிக்கும் பாட்டாளிமக்கள் கட்சியைச் சேர்ந்த தோழர்களுக்குமான பிரச்சினை அல்லவா? இடையில் ரஜினி ஏன் கோபப்படவேண்டும். பாபாஜி ரஜினியை மெளனமாக்கி விட்டு அவர்கள் சொன்ன சத்தியத்தை மட்டும் நீ பின்பற்று என்ற கட்டளையோடு அந்த சூழலை முடித்துவைத்தார்.

பாபாஜி என்று நான் இங்கே அடிக்கடி குறிப்பிட்டிக் கொண்டிருப்பது ஒரு முழு சத்தியத்தைப் பற்றி, பிரபஞ்சத்தின் மூல உண்மையைப் பற்றி, சிவத்தைப் பற்றி..

பாபாஜியின் கணக்கு....அது. பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிவதற்கு முன்னால் ரஜினியைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்த அன்பு மணி ராமதாஸ் ஐயா அவர்களே தனது வாயால் ரஜினையை வாயரப் புகழவைத்த அந்த பெருஞ்சக்தி சுமார் ஒன்பது வருடங்கள் கழித்து இப்போது சப்தமில்லாமல் ஆணவக்காரர்களை துவம்சம் செய்யத் துவங்கி இருக்கிறது. வாழ்க்கையில் கணக்கு என்ற ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை. கொடுத்தவன் திரும்பப் பெற்றே ஆகவேண்டும். வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்குமே காரணம் உள்ளது. என்ன ஒன்று நாம் சந்தோசத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும் போது எதனால் இது நிகழ்கிறது என்று ஆராய முற்படாமல் கொண்டாட்டத்திலோ அல்லது துக்கத்திலோ மூழ்கிவிடுகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி என்னும் சாதிக்கட்சியின் இன்றைய அசாதாரண சூழலுக்கும், அந்த கட்சியினை சார்ந்தவர்களின் மன உளைச்சல்களுக்கும் பல்வேறு கடந்த கால முறையற்ற செயல்கள் காரணமாய்  இருக்கின்றன. எப்போதுமே இறை என்னும் பெருஞ்சக்தி நமது வாழ்வில் நிகழும் எல்லா செயல்களுக்கும் காரணத்தை நமக்குள் மனசாட்சியாய் நின்று உணர்த்தத்தான் செய்கிறது. சப்தமற்ற மனோநிலையும் ஆழமான பார்வைகளும் கொண்டவர்களுக்கு தங்களுக்கு நிகழும் எல்லா செயல்களுக்குமான காரணங்கள் தெளிவாய் புரிந்துவிடுகின்றன...

தடிமனான மனத்தைக் கொண்ட அகங்காரம் கொண்ட மனிதர்களுக்கு சூட்சுமமாய் பழைய வழக்குகள் தூசு தட்டி எடுக்கப்பட்டு அதனால் சிறையிலடைக்கப்பட்டு இப்போதாவது என்னைப் புரிந்து கொள் என்று சத்தியம் மார் தட்டி மீசை முறுக்கி உணர்த்தவும் செய்கிறது. 2004ல் செய்த தவறு மீண்டும் 2013ல் விழித்துக் கொண்டு பழி வாங்குகிறது என்றால் இங்கே எல்லாம் வல்ல ஒரு சக்தியின் ஆட்டத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கர்மபலன் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டுதான் இன்றைக்கு பாமகவின் மீது புலிப்பாய்ச்சலாய் பாய்ந்திருக்கும் பல  வழக்குகளும்....

இது எல்லா மனிதர்களுக்கும்,  எல்லா சூழல்களுக்கும் பொருந்தும். 

பாபா படத்தின் போது பதியப்பட்ட வழக்கு இப்போது ராமதாஸ் ஐயாவை  உள்ளே தள்ளும் என்று ரஜினி நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். அவர் மெளனமாய் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆமாம்....

ரஜினிக்கும் பாமகவிற்கும்  பிரச்சினையா என்ன...? 

கிடையவே கிடையாது....

காலங்காலமாய் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும்தான் பிரச்சினை.....!

 " யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
  அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் "


தேவா. S




Comments

IlayaDhasan said…
அந்தப் படம் வர்றப்ப இப்படி தான் ஆ.வி இதழ் , ரஜினி ஜாதகம் கோடில ஒன்னு அப்படி இப்படின்னு நல்லா கல்லா கட்டிச்சு ...இந்த பதிவு அதோட தொடர்ச்சி மாதிரியே இருக்கு ...என்னமோ போடா பாபா உன் சித்து விள்ளயாட்டே தனி ....விட்டா இந்த பதில கூட நீ தான் என்ன எழுதவச்ச அப்படின்னு சொல்லிடுவாங்க போல ....பாவாடை சாமியே நமக...
கர்ம பலனை அனுபவித்தே ஆக வேண்டும்
அருமையான பதிவு! வினை விதைத்தவன் வினை அறுப்பான்! பகிர்வுக்கு நன்றி!
Jayadev Das said…
ஐயா "பாபா" ஆன்மீகப் படமுங்களா? நல்லதுங்க. வாயில பீடியை வச்சிக்கிட்டு ஆன்மிகம் பேசலாமுங்களா? இதை இராமதாஸ் சொல்லித்தான் உங்களுக்கு இறைக்கனுமா? ஐயோ..........ஐயோ...........
dheva said…
விவேகானந்தர் புகைத்திருப்பதையும், மாட்டிறைச்சி உண்டிருப்பதையும் அறிவீர்கள்தானே தோழர்?

கண்ணப்பநாயனார் எப்படி பூசை செய்தார் என்று நான் சொல்லத்தான் வேண்டுமா?

சத்குரு யோகிராம் சூரத்குமார் கூட புகைப்பவர்தானே...

புறக்குறியீடுகளை அளவீடுகளாய் கொள்ளும் சுத்தபத்தமான பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் காததூரம் நண்பரே!
ப.ம.கவின் அடாவடி செயல்கள் தர்மபுரியில் துவங்கி அதன் தொடர்ச்சியாக மாமல்லபுர வாய்ச்சொல்லில் போய் முடிந்ததே யதார்த்தமான சூழல்.

சிவனின் வாரிசுகள் என்று ப.ம.க பிதற்றுவதற்கும்,பாபாஜி நின்று தண்டித்தார் என்ற கூற்றுக்கும் அதிக வித்தியாசமில்லை.மாறாக தூசி தட்டி எடுத்த அரசின் ப.ம.கவிற்கு எதிரான வன்மமே வெளிப்படுகிறது.

When you open a tea stall it can be anybody's cup of tea:)
dheva said…
செயல்களுக்கான விளைவை அவர்கள் பெற்றுதான் ஆகவேண்டும்

அந்த விளைவை வெறும் விளைவு என்று நீங்கள் கூற உங்களுக்கு எப்படி பரிபூரண சுதந்திரம் இருக்கிறதோ...

அதேபோல அந்த விளைவை பிரபஞ்ச சக்தி என்றும் பாபாஜி என்றும் சொல்லும் சுதந்திரம் எங்களுக்கும் இருக்கிறதுதானே...தோழர்!

ஜெயலலிதாவின் வன்மம்...ஆமாம்....

வன்மத்தை வன்மத்தால் மட்டுமே வெல்ல முடியும்....அன்றி வன்மத்திடம் சாந்திமந்திரம் சொல்லி தீட்சையா கொடுக்க முடியும்...தோழர்!
அரசு அதிகாரத்திடம் வன்மம் தோற்றுப்போய் விட்டதென்பதே உண்மை.

வன்மம் vs வன்மம் என்றால் இன்னும் ஆபத்தில் போய் முடியும்.இப்படி வைத்துக்கொள்வோமே!

ராமதாஸ் vs திருமா = வன்மம்.

சிறை பாடம் கற்பிக்கிறதா அல்லது இன்னும் வன்மத்தை தூண்டுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

வன்மத்தை எப்படி திருப்பி போடலாமென்றால் ராமதாஸை விட்டு மறுபடியும் திருமாவளவனுக்கு ஸ்டெதாஸ் வச்சால் போதும்.நடக்குமா?

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த