Skip to main content

Posts

Showing posts from January, 2015

அடையாளம்...!

எங்கிருந்து தொடங்கியது இந்த இராட்சச வாழ்வின் முதல் முடிச்சு? கனவுகளை செரித்து செரித்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் ஒரு மலைப்பாம்பைப் போல எங்கேதான் ஊர்ந்து செல்கிறது? அடையாளம் தொலைத்துக் கொள்ளும் முயற்சிகளெல்லாம் கிணற்றிலேறி வழுக்கி விழும் தவளையைப் போல் மீண்டும் மீண்டும் அதல பாதாளத்திற்குள் செல்வதும் மீண்டும் மனம் அதை மீட்டெடுத்து மேலேற்றுவதுமாகவே முடிந்து போகுமோ இந்த வாழ்க்கை...?   அடையாளமற்றுப் போகவேண்டும். இந்த பெயரை நான் தொலைக்க வேண்டும். இன்னார் இன்னாரென்ற உறவுமுறைகளையும் பந்தச் செருக்குகளையும் எப்போது எரிக்கப் போகிறேன் நான்? படாரென்று வீட்டின் கதவை அறைந்து மூடிவிட்டு உள் சென்று தாளிட்டுக் கொள்வதைப் போல அடிக்கடி சராசரி வாழ்க்கையின் கதவுகளை நான் அடித்து மூடிவிடுகிறேன்.. இந்த வாழ்க்கையின் பெரும் அபத்தம்.. அடையாளம். யாரும் எதற்காகவும் வேண்டாம். சரி என்றோ தவறென்றோ சொல்லிக் கொண்டிருக்க ஒரு மனிதரும் தேவையில்லை. வாசலில் நிற்கும் மரத்தினைப் போல வெறுமனே நின்று கொண்டிருக்க வேண்டும். இலைகளை உதிர்த்து  மொட்டையாய் நின்றாலும், பூத்துச் சிரித்து குலுங்கினாலும் தான் யாரென்ற

இப்படிக்கு... வாசகன்...!

வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவிற்கு எனக்கு வாழத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று அடித்துப் பிடித்து மேலேறி குமுதம், விகடன், குங்குமம், கல்கண்டு, கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, ராணி, தேவி என்று பயணித்து சரக்கென்று க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்று பயணித்து, விவேக் ரூபலாவிடமும், பரத் சுசியிடமும், நரேன் வைஜயந்தியிடமும் சுற்றிக் கொண்டிருந்தது. கதைகள் படிக்க ஆரம்பித்த போது பிடி சாமியின் திகில் கதைகளை வாசிப்பதென்பது ஒரு மிகப்பெரிய மிரட்டல் அனுபவமாயிருந்தது எனக்கு. வாரமலரில் அப்போது ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. அப்போது என்று நான் குறிப்பிட்டுச் செல்வது 1987 அல்லது 1988 ஆயிருக்கும் என்று நினைக்கிறேன். தினமலர் செய்தித்தாளை என் எதிர் வீட்டில்தான் வாங்குவார்கள். ஞாயிற்றுக் கிழமை அன்று மட்டும் அவர்கள் வீட்டில் என்னைப் போன்ற அரை டிரவுசர்கள் விடுமுறை நாளின் எல்லா அவரச(!!!!!) வேலைகளையும் தெருவிலேயே விட்டு விட்டு போய் வாரமலரைப் படிக்க க்யூவில் நிற