Skip to main content

Posts

Showing posts from February, 2015

எழுதாத கவிதை...!

எழுதாத கவிதையொன்றை அனுப்பி வைக்கிறேன்... புரியாத விசயமொன்றை அதில் பூட்டி வைக்கிறேன்... அதி ரகசியத்தைச் சுமந்து வரப்போகும் அந்த கவிதையினில்... எது இல்லாததோ அது சிம்மமாய் கர்ஜிக்கும், எதை எல்லோரும் தேடுகிறார்களோ  அது ஒங்கே ஒளிந்து கொண்டிருக்கும்... பேசியதை பேசி,எழுதியதை எழுதி வாசித்ததை வாசித்து சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் தன்முனைப்பு முனையினை ஒடித்தெறிவது மட்டுமே அந்த கவிதையின் கருபொருளாயிருக்கும் தட்டிலிட்ட பிச்சையை என்னுடையது என்று சொல்லும் பிச்சைகாரனைப் போன்றல்லவா  இதை என் வாழ்க்கை என்று  எல்லோரும் மார்த்தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்...?! அந்த கவிதையை வாசித்து முடிக்கும் முன்பே உங்கள் சவப்பெட்டிகளின் மீது அறைந்து மோதும் சுத்தியின் சப்தத்தை நீங்கள் கேட்கப் போகிறீர்கள்... ப்ரியத்தை ஒருவேளை அந்தக் கவிதை  உங்களிடம் பகிரலாம்... அது உங்களுக்குள் நிரம்பிக் கிடக்கும் பேரன்பின் உயரத்தைப் பொறுத்தது... காதலையும் காமத்தையும் அந்தக் கவிதைகளில் நீங்கள் கண்டடையக் கூடும்.. அது உங்களின் திருப்தியின்மையைப் பொறுத்த்து கடலின் உயரத்தையும் காற்ற

தலைமுறைகள்...!

யாதொரு தொந்தரவுமில்லாத ஒரு ஓய்வு நாளில், வெகு நாட்களாய் காத்திருந்து தரவிறக்கம் செய்த பாலுமகேந்திரா என்னும் மகா கலைஞனின் கடைசித் திரைஓவியத்தை ஓட விட்டுத் திரைக்கும் விழுந்திருந்தேன்... இது பாலுவின் கடைசித் திரைப்படம், பாலுவே நடித்திருக்கும் திரைப்படமும் கூட. இந்த இரண்டு புள்ளிகளுக்கும் நடுவில் நின்று கொண்டுதான் படத்தைப் பார்க்க ஆரம்பித்திர்ந்தேன். அது திரைப்படமா அல்லது எங்கோ நடக்கும் நிகழ்வுகளை நாம் வேடிக்கைப் பார்க்கிறோமா என்று எண்ணுமளவிற்குத்தான் பாலுவின் எல்லா படங்களுமே திரைப்படங்களுகென்றே இருக்கும் செயற்கைத் தன்மைகளை எப்போதும் உறிஞ்சிக் கொள்கின்றன. " திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே....என்ற திருத்தாண்டகப் பதிகத்தோடு தலைமுறைகள் ஆரம்பித்தது....  பாலுமகேந்திராவின் மகனான சசி தனது அப்பாவின் விருப்பத்திற்கு எதிராய் காதலித்து தமிழ்ப் பேசத் தெரியாத பெண்ணான ரம்யா ஷங்கரை மணக்கிறார். இருவருக்கும் ஆதி என்றொரு மகன் பிறக்கின்றான். தமிழில் பேசிக் கொள்ளாத  பெற்றோர்கள், நகரத்தின் ஆங்கில மோகம் சூழ்  வாழ்வு இதற்கிடையில் வளரும் ஆதித்தியாவிற்கு இதனால் தமிழ் பேசவே தெரிய

காதல் மழை.....!

ஒரு மழை நாளில் யாரோ கதவைத் தட்டினார்கள். யார் இப்படி மழை நேரத்தில் புயல் போல கதவைத் தட்டுவது என்று கோபமாய் எழுந்து கதவைத் திறந்தால் அங்கே நின்று கொண்டிருந்தது தென்றல்... எந்தக் காலத்தில் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறது காதல் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே வரலாமா என்று கேட்டாள் எப்போதோ எனக்குள் வந்து விட்டவள், இந்தப்  பக்கமாய் வந்தேன் ..., மழை ஓவரா பெய்யுது அதான் அப்டியே அம்மாவைப் பாத்துட்டுப் போலாம்னு....... வீட்ல யாரும் இல்லையா...என்று வீட்டுக்குள் ஊருக்குப் போயிருந்த அம்மாவைத் தேடிய விழிகளின் வழி அடைக்காமல் நகர்ந்து நின்றபடி, வாங்க....என்று நாகரீகத்திற்கு தாவியது எனக்குள்ளிருந்த காட்டுமிராண்டி காதல்... தனியாவா இருக்கீங்க...?என்று கேட்டாள் எனக்குள் எப்போதும் சம்மணமிட்டு அமர்ந்திருப்பவள். ட்டு முடித்தவளிடம் எப்படி சொல்வேன் நான் எப்போதும் உன்னோடுதானே இருக்கிறேன் என்று... யாருமில்லேன்னா நான் கிளம்பவா........என்றவளிடம்... நான் வேணும்னா காஃபி போட்டுக் கொண்டு வரவா......குடிச்சுட்டுப் போங்களேன்.. என்று ஒரு கோப்பைக்குள் என் ஆசையை நிறைத்துக் கொண்டு வர ஒரு சம