Skip to main content

Posts

Showing posts from 2017

ஈஸ்வரா...

எல்லோரும் போன பின்பு சடலம் மட்டும் தனியாய் கிடந்தது. மாலை பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். நாலு ஆட்களை ஒன்றாய் அடித்து வீழ்த்தும் திடகார்த்தர உடம்பு. சவக்கு சவக்கு என்று வெற்றிலையை மென்றுகொண்டே  தலையில் போட்டிருந்த கட்டை அவிழ்த்துக் கொண்டே நிமிர்ந்தவள் என்ன தம்பி நீங்க போல இன்னும்? இன்னுமில் அதட்டல் அதிகம் இருந்ததது. இல்லங்க போகணும், யாரு இவுக உங்களுக்கு? மாம பயனுங்க, ஒரே செட்டு  தொண்டையை அடைத்த அழுகையை விழுங்கிக்கொண்டேன். நகராட்சி மின் மைதானம், மின் மைதானமென்றால் மின்சாரம் இல்லை. கேஸ் அடுப்பு வைத்து எரிப்பார்க்ள். அதேவிறகுதான் ஆனால் எரியூட்டுவது கேஸ் அடுப்பு. பூங்காவைப் போல சுற்றிலும் சுத்தமாய் அமைதியாய் இருந்த அந்த இடத்தை மயானம் என்று சொல்லவே முடியாது. சுடலையின் பொடி பூசி எரியும் பிணங்கள் முன்பு அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பானாம் சிவன். ரெளத்ரம் பொங்க யோசிக்கும் அந்த இரவுகளில் ருத்ரனை பார்க்கவே அகோரமாயிருக்குமாம். அந்த அகோரி விடியற்காலையில் எரிந்த பிணத்தின் கபாலம் ஏந்தி பிட்சை பெற ஊருக்குள் வருவானம். கபாலி, கபாலி என்று ஊரே  நடுங்கி ப

மெர்சல்...!

ராஜ் டிவியில் எனக்குள் ஒருவன் என்றொரு சிவாஜி படம் ஓடிக் கொண்டிருந்தது. இந்த சிவாஜி வீட்டிற்குள் அந்த சிவாஜியும் அந்த சிவாஜி வீட்டில் இந்த சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு மாறி டபுள் ஆக்சன்கள் நடிப்பது போல எவ்வளவோ படங்கள் வந்துவிட்டது என்றாலும் அவற்றை எல்லாம் திரைக்கதைகள் மறக்கடித்து விடுகின்றன. எத்தனையோ படங்களை இப்படி நாம் கொண்டாடி இருக்கிறோம். அதே வரிசையில் கொண்டாடவேண்டிய படம்தான் மெர்சல். எ ப்ளாக் பஸ்டர் கமர்ஷியல் மூவி ஃபார் காமன் ஆடியன்ஸ் & சூப்பர் டூப்பர் மெகா ஷோ ஃபார் அண்ணா ஃபேன்ஸ். பர்ஸுல காசு எல்லாம் இருக்காதுங்க வீ ஆர் ஃப்ரம் டிஜிட்டல் இந்தியா, கேஷ் லெஷ் ட்ரான்ஸாக்சன் என்று வடிவேலு பர்ஸை பிரித்துக் காட்டும்   இடத்தில் சூப்பர் ஜெட் வேகத்தில் ஆரம்பிக்கும் படம் இடைவேளை வரும் வரை அதகளமாய் நகர்கிறது. நீ பற்ற வைத்த நெருப்பொன்று…என்று கரகரகுரலில் ஆரம்பித்து ஏத்தனையோ மாடுலேஷன்களைப் பேசி அசத்தியிருக்கிறார் இளைய தளபதி….சாரி சாரி தளபதி. டாக்டர் மாறன் பேசியிருக்கும் அத்தனை அரசியல் வசனங்களுக்கும் விசில் பறக்க தியேட்டர் கைதட்டலால் அதிர்கிறது. வெஃரி போல்ட் டிசிஸன் பை

வீட்டுப் பூனை

வேகமாய் வந்து எனக்கு முன் இருந்த பார்க்கிங்கில் அந்தக் கார் நின்ற போது மணி இரவு 8 இருக்கும். அப்படியும் இப்படியுமாய் நடை பயிற்சி செய்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். கார் நின்று கொஞ்ச நேரம் யாரும் இறங்கவில்லை. பொதுவாய் வாக்கிங் போக வருபவர்கள் காரை நிறுத்திவிட்டு சடாரென்று இறங்கி ஓடவோ நடக்கவோ ஆரம்பித்து விடுவார்கள் அதே வேகத்தில் திரும்ப கிளம்பியும் போய்விடுவார்கள். என்னைப் போன்ற சில அவதாரங்கள்தான் இப்படி வந்து காருக்குள்ளேயே அமர்ந்து பிராக்கு பார்த்து விட்டு, பிறகு போகும் போதும் இப்படி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்... யார் அந்த பிராந்தன் அல்லது பிராந்தி என்று நினைத்துக் கொண்டிருந்த போதே கார் கதவை மெதுவாய் திறந்து கொண்டு உயரமான அந்த மனிதர் இறங்கினார். கருப்பு டிசர்ட் போட்டிருந்தவரைப் பார்த்தால் வாக்கிங் போக வந்தவர் போலத் தெரியவில்லை. சார்ஜா யுனிவர்சிட்டி ஏரியா எல்லா நேரத்திலும் அமைதியாகத்தான் இருக்கும். ஒரு சில கார்களும் மனிதர்களையும் தவிர பெரிய நசநசப்பு அங்கு இருக்காது. அப்போதுதான் கவனித்தேன் இறங்கியவர் கையில் ஒரு கருப்பு கலர் பூனைக்குட்டி (பெரிய பூனையைக் கூட பூனைக்குட்டின்னுத