Pages

Monday, March 29, 2010

குரு காணிக்கை!
எது நீ செய்யவில்லை...?
காதலாய்...கனத்தாய்....
காமத்தை வரையறுத்தாய்....!
பென்ணைடிமை பூட்டுக்களை தகர்த்தாய்!
வாழ்வியல் நெறிகளை...கதைகளாய்...
கரைத்து தந்தாய்....!

இரும்புக்குதிரைகளை...பூட்டி...
எல்லோர் மனதிலும் ஓடவிட்டாய்!
மெர்க்குரி பூக்களாய்...
மனிதருக்கு வழி காட்டினாய்....

உள் பார்க்கும் வித்தையினை...
வார்த்தைகளாக்கி...வாசகனின் நெஞ்சுக்குள்...
இறக்கி வைத்தாய்!

ஞானியர்கள் வாழ்க்கைகளை....
நாவலாக்கி கையில் தந்தாய்....
சாமனியனுக்கும்... சாமதி நிலையை...
சாதாரணமாய்... கற்றுக் கொடுத்தாய்!

உன் மூச்சை சீராக்க...சீராக்கா...
உன் வாசகனின்
வாழ்க்கை... சீரானது....!

உன்னுள் நீ அமிழ ....அமிழ....
உன் எழுத்துக்கள்...
படிப்பவருக்கு....தீட்சை கொடுத்தது!

நரை சடை முடி....
வெண்தாடி நீ கொண்டாய்....
எங்கள் வாழ்கை வெண்மையானது!

இன்று உடையாரை உயிராக்கி...
உலவவிட்டு விட்டு....
மரணத்திற்கு பின் என்ன என்று....
வாழ்வின் கருவை....உருவாக்கிக் கொண்டிருக்கிறாய்!

மொத்தமாய்...இன்று உனை...
மெளனமாய்...கரைத்துக் கொண்டிருக்கிறாய்!
இறுதியாய்... எங்கள் நெஞ்சங்களில்...
நீ நிறைந்து விட்டு...உன்னை ஒளிக்கப்பார்க்கிறாய்!
இதற்குத் தானே....ஆசைப்பட்டாய்...பாலகுமாரா......?

இந்த பதிவினை எத்தனை பேர் இதைப் படிக்கிறார்கள் என்பது கண்டிப்பாய் முக்கியம் இல்லை.....ஏனென்றால் இது பதிவு அல்ல குரு காணிக்கை!

காலமெல்லாம் உழைத்த உழவன்...கதிரவனுக்கும் எருதுக்கும் நன்றி சொல்லி விழா செய்கிறானே...அது ஒரு நன்றி நவிழல், கருணை....அன்பை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் ஏதேதோ செய்து....தன்னை திருப்திக்கொள்ளும் செயல். கதிரவனுக்கோ அல்லது எருதுகளுக்கோ மனிதனது நன்றியும் அன்பும் தெரியாது ஆனாலும் அவற்றின்...செயலோ இவனது நன்றிக்கும் கருணைக்கும் ஏற்ப கூடுவதும் குறைவதும் இல்லை, ஏனென்றால்...இயற்கையின் செயல் மனிதனை பொறுத்து அல்ல....அது பிரபஞ்ச நியதியின்...விருப்பு வெறுப்பில்லா வெளிப்பாடு!

எழுத்துச் சித்தரும் அப்படித்தான்....வாழ்வியல் சாரங்களை, நெறிமுறைகளை...காதலை, காமத்தை, மற்றும் கடவுளை....வார்த்தைகளாக்கி...எழுத்துகளுக்குள் அடைத்து...கொடுப்பவர். மிகைப்பட்ட பேருக்கு அவர் பிடிக்காமல் இருக்கலாம் இல்லை என்னுடைய வார்த்தைகள் மிகைப்பட்டும் தெரியலாம். ஆனால் என்னைப் போன்ற....சில பேர்களுக்கு அவரின் எழுத்துக்கள் வாழ்க்கையின் போக்கையும் அதன் நேர்த்தியையும், அழகையும்.... நிலையாமையையும் நிறையவே கற்றுக்கொடுத்துள்ளது.

மெல்ல மெல்ல கை பிடித்து தனது வாசகர் வட்டத்தை ஆத்ம விசாரணைக்கும்....உள் நோக்கும் தன்மைக்கும் அழைத்து சென்றுள்ளார். தன்னை சுற்றி எத்தனை இரைச்சல் இருந்தாலும் எல்லாவற்றையும் உள் வாங்கி வேடிக்கை பார்க்கு வித்தையை அவரின் வாசகர்களின் நெஞ்சுக்குள் விதைத்துள்ளார். மனைவியை, குழந்தையை, குடும்பத்தை, நண்பனை .....வாழ்க்கையை எப்படி காதலிப்பது என்று......உணரவைத்துள்ளார்.

வெறுமனே கதையை எதிர்பார்த்து பாலகுமாரனை படிப்பவர்களுக்கும், எப்போதும் ஸ்தூலாமாய் தன்னை நினைப்பவர்களுக்கும்...உணர்வு பூர்வமாய்...விளங்காமல் தத்துவ விவாதங்களை நம்புபவர்களுக்கும் பாலகுமாரன்....பிடித்தமானவர் அல்ல...! எந்த வித கட்டுக்குள்ளும் சிக்காமல் ஆராய்ச்சி நோக்கமும் இல்லாமல் இருந்தால்....பாலகுமாரனின் எழுத்துக்கள் உங்களுக்குள் நிச்சயம் தீ மூட்டும் அவர் மீது காதல் கொள்ளவைக்கும்.


காமத்தையும் , மரணத்தையும் பற்றி பேசும் எல்லா மனிதர்களையும்...இந்த சமுதாயமும், இந்த சமுதாயத்தின் தவிர்க்க முடியாத உச்ச அந்தஸ்தில் இருக்கும் மனிதர்களும் காலங்கள் தோறும் மறைத்தும் அதைப்பற்றி பேசுபவரோ எழுதுவரோ அறுவெறுப்பானவர் என்றும் இழித்தும் பழித்தும் பேசியிருக்கின்றன. வியாபார உத்தியை எல்லாம் புறந்தள்ளி விட்டு நான் இப்படித்தான் எழுதுவேன்...இது என் விதம்....என்று இருப்பவர் தான் பாலாகுமாரன்.....

பால குமாரன்....புரிந்து கொள்ளப்பட வேண்டியவர் அல்ல......உணரப்படவேண்டியவர்.......!

(புறத்தால் இந்த பதிவு இத்தோடு முடிந்தாலும்...மனதுக்குள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்....என் இறுதி வரை.....)


தேவா. S

4 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

நல்ல ஒரு பதிவு நன்றி...!

பலரது வாழ்க்கையில் நிரந்தர வழிகாட்டியாக இருப்பவர்...!

Chitra said...

அருமையானதொரு குரு காணிக்கை.

Priya said...

//பால குமாரன்....புரிந்து கொள்ளப்பட வேண்டியவர் அல்ல......உணரப்படவேண்டியவர்.......!//......உண்மைதான்!

நல்லா எழுதி இருக்கிங்க!.

எஸ்.கே said...

பாலகுமாரன் புத்தகங்கள் அறிமுகமான நாட்களில் அவர் நாவல்கள் போரடிப்பது போலத்தான் தோன்றின. ஆனால் அவர் புத்தகங்கள் அடிக்கடி படிக்க ஆரம்பித்த போது அதுவும் ஒரு உணர்வாக இருந்தது. அந்த பெரிய ஒரு கதையை படித்து முடிக்கும்போது ஏற்படும் உணர்வு பெரிய திருப்தியை அளிக்கும்.