Pages

Tuesday, April 20, 2010

வார்த்தைகளற்ற...வார்த்தைகள்....!
அலுத்துதான்.. போகிறது...
வார்த்தைகளின்இரைச்சலை
நித்தம்...கேட்டு கேட்டு...
சப்தங்கள் இல்லா...
என் தனியுலகத்திற்குள்...
ஏன் அத்து மீறி.. நுழைகின்றன...?
தத்துவங்களும்..விளக்கங்களும்...

எத்தனை முறை உச்சரித்தாலும்
தவறாய்...கற்பிதங்கள் கொடுக்கும்...
வெற்று வார்த்தைகளை..
வைத்துக் கொண்டு...
நான் என்னதான் செய்வது?

இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!
விவரிக்கும் ஆசையில்...
நான் மட்டும்...
ஏன் சிக்கவேண்டும்...
சப்தங்களின்... நெரிசலுக்குள்!

எல்லா ஓசையும் நிறுத்தி விட்டு...
சப்தங்களை உள் நோக்கி..
திருப்பும் கணங்களில் மட்டும்...
கிடைக்கிறது...வெளியே
தொலைந்து போன... நிம்மதி!

சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

எப்படி பார்த்தாலும் எழுத்தாக்கும் முயற்சியும்...சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியும் பயனற்றது. ஓரயிரம் முறை முயன்று...ஒரு கருத்தை புரியவைக்க நினைத்தாலும் அது அவ்வளவு எளிதாய் நடந்து விடுவது இல்லை அப்படியே அது நிகழ்ந்தாலும் அது புரிந்து கொள்பவரின் பக்குவ நிலைக்கு ஏற்ப வேறு ஒரு தளத்தில் தான் விளங்கிக் கொள்ளப்படுதிறது.

சென் கதையில் சொல்வது போல ஒரு அழகான ரோஜா மலரை நான் பார்க்கிறேன்...அதை உங்களிடம் சொல்லி விளக்க்க முற்படும் போது உங்களின் கற்பனையில் ஒரு ரோஜா மலர் மலர்ந்து விடுகிறது. நீங்கள் கற்பிதம் கொண்ட ரோஜா மலருக்கும் நான் பார்த்த ரோஜ மலருக்கும் கண்டிப்பாய் எந்த ஒற்றுமையும் இல்லை..... என் உணர்தலை உங்களிடம் விளக்குவது சாத்தியமில்லை...அல்லது நீங்கள் போய் அந்த ரோஜாவை பார்த்து உணர்தால் சரியான விடயமாக இருக்கும். நீங்கல் நேரே பார்க்கும் போது உங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அது உங்களை வசிகரீக்கமலும் போகலாம்...

இதுதானே...உண்மை ...விளக்கி ஒருத்தர் புரிந்து கொண்டார் என்றால்...அது ஒன்று நடிப்பு.....அல்லது அவர் விளங்கிக்கொண்டது வேறு ஏதோ.....சரி....சரி..... நான் மேலும் மேலும் ஏதேதொ எழுதி...உங்களை குழப்ப விரும்பவில்லை..உங்களின் அறிவின் நிலைக்கேற்ப விளங்கிகொள்ளுங்கள்...இந்த பதிவில் எந்த வலியுறுத்தலும் இல்லை.....! ஒரு மெல்லிய காற்று வீசியது...போல அவ்வளவே....!


தேவா. S

17 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

///இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!///

;;))) arumai ...!

Dr.Rudhran said...

காதுகளை அடைத்துக் கொள்வதைவிட கண்களை மூடிக் கொள்வது சுலபம்.
வாழ்த்துகள்.

VELU.G said...

//
எத்தனை முறை உச்சரித்தாலும்
தவறாய்...கற்பிதங்கள் கொடுக்கும்...
வெற்று வார்த்தைகளை..
வைத்துக் கொண்டு...
நான் என்னதான் செய்வது?
//

super

V.S.SUNIL KUMAR PILLAI said...

ஒரு அழகான ரோஜா மலரை நான் பார்க்கிறேன்...அதை உங்களிடம் சொல்லி விளக்க்க முற்படும் போது உங்களின் கற்பனையில் ஒரு ரோஜா மலர் மலர்ந்து விடுகிறது. நீங்கள் கற்பிதம் கொண்ட ரோஜா மலருக்கும் நான் பார்த்த ரோஜ மலருக்கும் கண்டிப்பாய் எந்த ஒற்றுமையும் இல்லை...

இது முட்ரிலும் உண்மை

kaipulla said...

சொலுங்க தல.

எவ்ளோ ஒரு நல்ல விசயத்தை சொல்லி இருக்கீங்க

Chitra said...

எல்லா ஓசையும் நிறுத்தி விட்டு...
சப்தங்களை உள் நோக்கி..
திருப்பும் கணங்களில் மட்டும்...
கிடைக்கிறது...வெளியே
தொலைந்து போன... நிம்மதி!


.... nice one.

இன்னைக்கு நான் லேட் attendance போட்டுருக்கேன். சாரி.

முனைவர்.இரா.குணசீலன் said...

இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!


அருமை நண்பரே உண்மைதான்.

senthil1426 said...

இதுதானே...உண்மை ...விளக்கி ஒருத்தர் புரிந்து கொண்டார் என்றால்...அது ஒன்று நடிப்பு.....அல்லது

அவர் விளங்கிக்கொண்டது வேறு ஏதோ


முற்றிலும் உண்மை

சௌந்தர் said...

இந்த அழமான வரிகள் ஒளிந்து இருந்தது நான் எடுத்து வந்து விட்டேன் உங்களுக்காக

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு அண்ணா..
ஏன் எப்பொழுதும் விரக்தி அடைந்தது போல் அலுத்கிறீர்கள்..

dheva said...

திரட்டியில் இணைக்கப்படாமலிருந்த பழைய இடுகையை தூசு தட்டி எடுத்து எல்லோர் பார்வைக்கும் கொண்டு வந்த தம்பி செளந்தருக்கு நன்றிகள்...!

Jey said...

பங்காளி நல்லாருக்கு...:)

கே.ஆர்.பி.செந்தில் said...

ம்..

இராமசாமி கண்ணண் said...

என்னத்த சொல்ல... அருமைண்ணே... நீங்க ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க :)

Balaji saravana said...

ஏதோ ஒரு எண்ணக் கதவு திறந்துகொண்டது அண்ணா!
A Special Thanks to Soundar :)

TH said...

சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

Dear DEVA
NAAM PESIKKONTATHU

Anonymous said...

சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

DEAR DEVA
SUPER.........