Skip to main content

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I I


ஏதோ... சொந்த கதையை நான் சொல்வதற்காக இந்த பதிவை தொடராக இடவில்லை... அந்த அளவுக்கு பிரபலமானவனுமல்ல...அதானால் மிகைப்பட்டவர்களுக்கு அதீத ஆர்வம் எடுபட வாய்ப்பும் இல்லை....மிக முக்கியமான காரணம் என்னவென்றால்.....இது சமகாலத்தில் நடக்கும் பிரச்சினை அல்ல.. மேலும் முழுக்க முழுக்க....வாழ்வியலும், வாழ்வில் மிகைப்பட்டவர்கள் நினைக்கவே மறுக்கும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி....சரி... நாம் மேற்கொண்டு நகர்வோம்.....

இதுவரை..

பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html

பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html


இனி....

இரவு முழுதும் தூங்கமுடியாமல் ஒராயிரம் கேள்விகள் ஏவுகணையாய் என் மனதை துளைத்தது...இறக்கும் வரை கனவுகள்...ஆசைகள்.....பேச்சுக்கள்....சண்டைகள், காதல், காமம்...பதவி, அந்தஸ்து, பணம்...என்று நான் ... நான் .. நான் என்று வாழும் மனிதர்கள் சட்டென்று ஒரு நாள் போய் சேர்ந்த பின்னால்....இவர்களின் தேடல் எல்லாம் என்னவாகும்....?சடலமாய் ஒரு மனிதரின் உடலை நான் பார்த்தேன்... அந்த மனிதர் என்னிடம் பேசி சிரித்து....எதிர்கால திட்டங்களை கூறி... நன்றாக உடுத்தி...உண்டு..வாழ்ந்தவர்...! இன்று அந்த உடல் இருக்கிறது...மீதி எல்லாம் எங்கே...எங்கே....எங்கே? இது ஒரு பக்கம் என்றால்....

உயிரோடு இருந்த போது அந்த மனிதர் பிரச்சினைகளோடு வாழ்ந்த போது வாயளவில் ஆறுதல் கூட வக்கில்லாத...மானுட கூட்டம்...எங்கே தன்னிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று ஓடி ஒளிந்த மனிதர்கள்...இன்று குய்யோ முறையோ என்று அழுது கொண்டு....ஏன் உயிரோடு இருந்த போது ஏன் இந்த பச்சாதாபம் உஙகளிடம் இல்லை?

இந்த இடத்தில் ஒரு முக்கிய மான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்....உங்கள் சுற்றங்கள் அல்லது நட்பு வட்டாராத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்றால்....ஆறுதலாய் அவர் கரம் பற்றி நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லுங்கள்..... நீங்கள் பொருளாதர உதவி செய்வது எல்லாம் அப்புறம்... ! உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும். ஆனால் அதை செய்யக்கூட திரணி இல்லாத...மனிதர்கள் நமது சமுதாயத்தில் மிகைப்பட்டு போனது தான்.... ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை!


....இரவு நகர்ந்து செல்ல....மெல்ல மெல்ல சென்னை சோம்பல் முறித்து எழுந்தது..... அதிகாலை சென்னையில் சேவலின் கூவலில்லா குறையை...ஆட்டோ சைரன்கள் போக்கிவிடும். நேரம் நகரத்துவங்கி உச்சியையும் தாண்டிவிட்டது.....12 மணிக்கு சொன்னார்கள்....பரிசோதனை செய்கிறார்கள் என்று.....1:30க்கு சொன்னார்கள் முடிந்து விட்டது என்று....2:30 மணிக்கு வெள்ளை பொட்டலமாய்....மாமவின் உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவுகள் எல்லாம் காரிலும்...ஆட்டோவிலும் வீடு நோக்கி ( நந்தனம் சிக்னல் அருகே....) விரைய... என்னோடு சேர்த்து ஒரு 10 பேர் அங்கே நின்றோம்...! அமரர் ஊர்தியி... மாமாவின் உடல் ஏற்றப்படது....அன்றுதான் அமரர் ஊர்தியின் உள் அமைப்பை பார்த்தேன்..ஒரு பக்கம் மட்டும் நீளவாக்கில் இருக்கை....இருந்தது... மீதி இருந்த ஊர்தியின் தரைப்பகுதியில்.. ..உடல் வைக்கப்படது. 10 பேரில் 6 பேர் ஆட்டோ பிடித்து சென்று விட....

நான் அமரர் ஊர்தியினுள் ஏற எத்தனிக்க.....என் தந்தை ஒரு நிமிடம் என் தோள் தொட்டு மெளனமாய் எனைத்தடுக்க... நானு அதை தடுத்து ஏறியதை பார்த்து...அப்பாவும்.....சித்தப்பாவும் என் கூட ஏறி அமர்ந்தார்கள்....அமரர் ஊர்தி மெல்ல நகர ஆரம்பித்தது....பரபரப்பான சென்னை நகரின் சாலைகள் வழியே.......!


தேவா. S


(தொடரும்.....)

Comments

Chitra said…
உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும். ஆனால் அதை செய்யக்கூட திரணி இல்லாத...மனிதர்கள் நமது சமுதாயத்தில் மிகைப்பட்டு போனது தான்.... ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை!


....... வாழ்வே மாயம் என்ற தலைப்புக் கேற்ற கருத்துக்கள். எல்லோரும் இப்படி புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டால், கவலை ஏது? பின்னணி பாட்டும் பொருத்தம்.
யாரும் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. இதை அனைவரும் உணர்ந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்??
இன்று தான் உங்கள் பக்கம் வந்தேன்போலும்.......திறந்ததும் பாடும் பாடல் கனவு காணும் வாழ்க்கை யாவும்........இசையும் கதையும் கேட்பது போன்ற உணர்வு. நன்றாக் வாழ்க்கையை அசை போட்டு எழுதுகிறீர்கள் மீதி ரண்டு பாகமும் வசிக்க வில்லை வாசித்து விட்டு வருகிறேன். பாராடுக்கள் அருமையான் எழுத்தோட்டம்.
dheva said…
நன்றி...சித்ரா...உங்களின் தொடர்ச்சியான வருகையும் கருத்துகளுக்கும் நன்றி....! உங்களோட..பதிவுகள் கூட எல்லாமே...ரொம்ப அருமைங்க.....!
dheva said…
ரொம்ப நன்றி மாப்ஸ்.....வில்சன்!
dheva said…
vaangha.... nilaamathi....unghaLin muthal varukaikku mikka nanRi..! thodarnthu pinnuuttamidunghaL......!
dheva said…
வாங்க.... நிலாமதி....உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி..! தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்......!
Balaji.D.R said…
நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில் நிறைய மரணத்தை சந்திக்கிறோம். இருந்தும் மிகச்சிலரே அதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள். அச்சிலரில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்
//உங்கள் சுற்றங்கள் அல்லது நட்பு வட்டாராத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்றால்....ஆறுதலாய் அவர் கரம் பற்றி நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லுங்கள்..... நீங்கள் பொருளாதர உதவி செய்வது எல்லாம் அப்புறம்... ! உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும்//

ரொம்ப சரியான... எல்லாரும் கட்டாயமா செய்ய வேண்டிய விஷயம்..

சில சமயங்கள்ல.. ஆறுதலா சொல்ற ஒரு வார்த்தை எவ்வளவோ.. உதவியா இருக்கும்..
எழுதிய விதம் பிடித்துள்ளது..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த