Pages

Sunday, April 4, 2010

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I


இது வரை

http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
இனி....

நிறைய உடல்களை பார்த்த பின் ஒரு உடன் ஒரு உடலின் கையில் தழும்பு இருப்பதை கண்டு என்னை அவசரமாய் அழைத்தர்...அந்த தழும்பை பார்த்த உடனேயே.. என் கண்களில் கண்ணீர் அனிச்சையாய் வந்தது....

என் தாயிருந்த...இடத்திலே...
நீ இருந்தாய்...
இன்று நீ இருக்கும் இடம்..
எது மாமா?

என்ன கவலை தீருமுன்னு...
நீ மரிச்சே...
உடல ஒழிச்ச நீ...
உடனே பிறப்பாயோ...
மனச அலைய விட்டு...
மறு ஜென்மம் எடுப்பாயோ...?

என் அம்மாமனே...
உனை.. எந்த பிறப்பில்...
காண்பேனோ....
இல்லை இனி காணமலேயே போவேனோ...?


மாமவின் முகம் தெளிவாய்....முன் தினம் செய்யப்பட்ட சவரம்.. நன்றாகதெரிய.....சாந்தமாய்...எனைப்பார்த்து சிரிப்பது போல தெரிந்தது.....
! என்னிடம் விவரிக்க எந்த ஒரு வார்த்தையோ பயமோ இல்லை....மனம் ஒரு நிலைப்பட்டு தனித்து கிடந்தது....! எந்த ஒரு சலனமும் இல்லாமல்.. தனிமைப்பட்டு கிடந்தது....! ஏதோ ஒரு விசயம் மெலிதாய் புலப்பட்டு ஆத்மா அதை உணர்ந்ததை... மனமும் மூளையும் கிரகிக்க முடியாததால்.. அந்த அனுபவத்தை சொல்ல முடியவில்லை.

மாமா இல்லை.....இது மாமாவின் உடல்...சரி....மாமா எங்கே? அல்லது எது மாமா என்று என்னால் அழைக்கப்பட்டது? ரமண மகரிசியின் நான் யார் என்பதின் தத்துவ விளக்கம்...என் மர மண்டையில் எதார்த்த கேள்விகளாய் வெளியே வந்தது. ஏதோ ஒரு விசயம் புரிந்தும் புரியாமலும்....இருந்தது....

" தம்பி போகலாம்பா.... என்று வாட்ச் மேன் உலுக்கிய போது மீண்டும் நிதானத்துக்கு வந்தேன்......"

கண்ணீரோடு வாட்ச்மேனின் கரம் பற்றி... நன்றியை என் கண்களில் இருந்து அவரது கண்களுக்கு மாற்றியபடி...சலமின்றி மார்ச்சுவரி....கதவை அடைந்த போது.....திரும்ப ஒருதடவை.....மாமாவின் உடலை திரும்பி பார்த்தேன்....

சண்முகம்......ஆமாம் அது தான் அவர் பெயர்.....சிவகங்கை மாவட்டம்....காளையார் கோவிலை அடுத்த மறவ மங்கலம்....பேருந்து நிறுத்ததில் இறங்கி...."செல்லச்சாமி பிள்ளை...." வீடு எதுன்னு கேட்டா.....வீட்டு வாசல்ல கொண்டு போய் விடுவாங்க....ஜமீன் தாருடைய பேரன் தான் இவரு...100 ஏக்கர் நிலம் வீடு வாசல்னு எல்லாம்...சூதாட்டம் மாதிரி சூறாவளியா சுத்தி...சென்னையில் காய்கறி வியாபரத்துல வந்து விட்டுருச்சு....

எல்லா கனவுகளும் வாழ்க்கை.....சூழ் நிலை இந்த இரண்டுகும் நடுவே பந்தாடப்பட்டு....மனிதனின் சுய அடையாளத்தை தொலைத்து விடுகிறது.....

கதவை திறந்து வெளியில் வந்தேன்....உறவுகளின் ஒப்பாரி என்னை ஒன்றும் செய்ய வில்லை...ஒரு ஓராமாய் நான் அமர்ந்து இருந்தேன்....இரவு நேர சென்னையின் வானம் மட்டும் என் தொடர்பில் இருந்தது.....!


தேவா. S(தொடரும்)

6 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

நமது மரணம் அடுத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது ..! அப்படி நிகழும் மரணமானது ஒரு விடுதலை...! அல்லது அது ஒரு பரிசு...!

மங்குனி அமைச்சர் said...

லெட்டர்ஸ் எல்லாம் ரொம்ப சின்னதா இருக்கு , டிம் மாவும் இருக்கு சரிபண்ணுங்க

நிலாமதி said...

உடம்பு என்பது உண்மையில் என்ன ....கனவுகள் வாங்கும் பை தானே.......கதையும் பின்னணி பாடலும் அருமை. உங்கள் கதை சொல்லும் பாங்கு
ரொம்ப பிடித்திருகிறது ...சகோதரி நிலாமதி

dheva said...

thanks nilamathi.....!

dheva said...

Thanks manguni Amaichar....for ur suggestions and i changed it immediately!

Ananthi said...

//என் தாயிருந்த...இடத்திலே...
நீ இருந்தாய்...
இன்று நீ இருக்கும் இடம்..
எது மாமா? //

உங்க மாமாவின் மீது நீங்க கொண்ட அன்பின் வெளிப்பாடு, இந்த வரிகளில் வலியாய் தெரிகிறது..